ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கு உலகத் தமிழர் பிரகடனம் வெளியீட்டு நிகழ்ச்சி

ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்காக உலகத் தமிழர் பிரகடனம் வெளியிடும் நிகழ்ச்சி வரும் 20ம் தேதி சென்னையில் நடக்கிறது. இதற்கு தடைவிதித்திருப்பதாக பல செய்திகள் வெளியாகியுள்ளன, நாம் அண்ணன் வைகோ அவர்களைத் தொடர்புகொண்டு இதுபற்றிக் கேட்டபோது...

இலங்கை தமிழர் பாதுகாப்பு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், பா.ம.க நிறுவுனர் மருத்துவர் ராமதாஸ், மதிமுக தலைவர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில தலைவர் தா.பாண்டியன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது. இலங்கையில் சிங்கள அரசின் வெறியாட்டத்தால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் தடுப்பு முகாம்களில் அடைகப்பட்டுள்ளனர். அவர்களுக்கு போதிய உணவு மருந்து இல்லாமல் நாள்தோறும் நூற்றுகணகாணவர்கள் உயிர் இழக்கின்றனர்.

மேலும் போராளிகள் எனக் குற்றம் சாற்றப்பட்டு கைது செய்யப்பட்டவர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படுவதில்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என்பது மர்மமாகவே உள்ளது. உலகம் கண்டிராத மாபெரும் அவலம் இலங்கை மண்ணில் நடந்து வருகிறது. சிங்கள இனவெறி படுகொலையில் இருந்து தப்பிய ஈழத் தமிழர்களை பாதுகாக்கும் பொறுப்பு தமிழகத்தை சேர்ந்த 6.5 கோடி தமிழர்களுக்கு உண்டு என்பதை உணர்ந்து செயல்பட முன்வருமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

ஈழத் தமிழர்கள் தங்கள் தாயகத்தை விடுவிக்கும் போராட்டத்தில் அளப்பரிய தியாகங்களை செய்துள்ளனர். உலகில் எந்த ஒரு தேசிய இனமும் சந்திந்திராத வெங்கொடுமைகளுக்கும் பேரிழப்புகளுகும் ஆளாகியிருகிறார்கள். இந்த இழி நிலையை நாம் மாற்றி அமைக வேண்டும். ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டு எடுக்கும் போராட்டத்தில் எண்ணற்ற தியாகங்களை செய்வதற்கு உலகத் தமிழர்களாகிய நாம் அணியாக வேண்டும். இதன் மூலம் மட்டுமே ஈழத் தமிழர்களின் விடுதலை போராட்டத்தை முன்னோகி நகர்த்த முடியும். அதனால் உலகத் தமிழர் பிரகடனத்தை சர்வதேச சமுதாயத்தின் முன் வெளியிடுவதற்காக வரும் 20ம் தேதி நாம் ஒன்று கூடுகிறோம்.


இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Comments