தமிழர் தாயகப் பகுதியில் இரு முக்கிய தேர்தல்களின் வாக்களிப்பு இன்னும் ஒரு வாரத்தில் அடுத்த எட்டாம் திகதி இடம்பெறப் போகின்றது.
தேர்தல் என்னவோ இரண்டே இரண்டு உள்ளூராட்சிச் சபைகளுக்குத்தான். யாழ்.மாநகரசபைக்கும் வவுனியா நகரசபைக்கும் இரண்டு சிறிய தேர்தல்கள் என்றாலும் இன்றைய கட்டத்தில் தமிழினத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகின்ற முக்கிய விவகாரமாக அவை மாறி யிருப்பதுதான் விசேடமாகக் கவனிக்கத்தக்கதாகும்.
தமிழர் தரப்பின் உரிமைக்காக கடந்த மூன்று தசாப் தகாலமாக முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தைக் கடந்த மே மாதம் நடுப்பகுதியுடன் வெற்றிகரமாகத் தோற் கடித்து, தனது ஆணையை இலங்கைத் தீவின் ஒவ்வொரு அங்குலத்திலும் உறுதியாக நிலைநாட்டி விட்டதாக அறி வித்த கொழும்பு அரசு, அதன் தொடராக, அந்த யுத்த முடி வின் கையோடு, இந்தத் தேர்தல்களையும் அவசர அவசர மாக அறிவித்து முன்னெடுக்கின்றது.
ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்களின் கருத்து நிலைப்பாடு என்னவென்பதை "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்ற மாதிரி அளவீடு செய்யும் அமிலச் சோதனையாக இந்தத் தேர் தலை அர்த்தப்படுத்துவதில் சகல தரப்புகளும் இப்போதே முனைந்து தீவிரமாக நிற்பது வெளிப்படை.
எனவே, தமது இரண்டு உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக யாழ்.மாநகர சபைப் பிரதேசத்திலும், வவுனியா நகரசபைப் பிரதேசத் திலும் உள்ள மக்கள் குறிப்பாகத் தமிழ் மக்கள் இத் தேர்தலிலும் வாக்களித்தாலும் கூட
ஒட்டுமொத்தமாகக் கட்சிகளுக்கும் அணிகளுக்கும் கிடைக்கும் வாக்குகளின் அடிப்படையில் ஒட்டுமொத்த தமிழினத்தின் நிலைப்பாடு இதுதான் என வரையறை செய்யும் நிலைமை இப்போதே தயாராகிவிட்டது என்பது தான் உண்மை.
இந்த வகையில் பார்த்தால் இந்த இரு உள்ளூராட்சி சபைத் தேர்தல்களிலும் வாக்களிக்கும் தமிழ் மக்கள், அந்த சபைகளுக்கான தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்கின்றார்கள் என்பதைவிட, ஒட்டுமொத்த இலங்கைத் தமிழினத்தின் தலையெழுத்தையே நிர்ணயிக்கின்றனர் என்று கூறுவதே சரியானதாக இருக்கும்.
இந்த வாக்களிப்பில் பங்குபற்றித் தமது கருத்து நிலைப்பாட்டை நெறிப்படுத்துவதன் மூலம், தமிழினத் தின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது தொடர்பான முக்கிய நாணயக் கயிற்றைப் பற்றிப் பிடித்து அந்தப் பாதையை வகுப்பதில் முக்கிய பங்காளிகளாகத் தாங்கள் செயற்படு கின்றார்கள் என்பதை சம்பந்தப்பட்ட தமிழ் வாக்காளர் கள் உணர்ந்திருக்கின்றார்களா என்பதே கேள்வியாகும்.
இந்தத் தேர்தல் தொடர்பாக மாற்றுக்கொள்கைக்கான மையமும் மனித உரிமைக்கான இல்லமும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு மற்றும் புள்ளிவிவரத் திரட்டு தருகின்ற தகவல்கள் இவ்விடயத்தில் தமது பொறுப் புணர்வை யாழ்.நகரசபைப் பிரதேசத்தின் பதிவு செய்யப் பட்ட வாக்காளர்கள் இன்னும் புரிந்துகொள்ளவேயில்லை என்பதைத்தான் உணர்த்தி நிற்கின்றன.
அந்தப் புள்ளிவிவரங்களின்படி யாழ்.மாநகரசபை வாக்காளர்களில் 44.7 வீதத்தினர் எந்தக் கட்சிக்கு வாக்க ளிப்பது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவேயில்லை யாம்.
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை விடயத்தில் தமிழர்களின் ஒட்டுமொத்த நிலைப்பாடாக யாழ்.மாநக ரசபைத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தப்படலாம் என்ற நிலையில் நாம் அங்கு பதிவு செய்யப்பட்ட வாக் காளர்களில் ஆக 13.4 வீதத்தினருக்கே தேசிய அரசிய லில் ஈடுபாடு உள்ளது என்றும் 42.9 சதவீதமானோ ருக்கு இலங்கை அரசியலில் ஈடுபாடேயில்லை என்றும் கூறப்படுகின்றது.
இத்தகைய தேசிய அரசியலில் ஈடுபாடேயில்லாத 42.9 வீத வாக்காளர்களைக் கொண்டுள்ள வாக்காளர் தொகையின் முடிவுதான் ஒட்டுமொத்த இனப்பிரச் சினை விடயத்தில்தேசியப் பிணக்கு சம்பந்தப்பட்ட சமாச்சாரத் தில் தமிழினத்தின் ஒரே நிலைப்பாடாக அர்த்தப்படுத் தப்படும் துர்ப்பாக்கியம் இங்கு நேர்ந்திருக்கின்றது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலுக்கு முனைப்பாக முழுமும்முரமாக தீவிரமாகத் தேர்தல் பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றது.
ஆனால் யாழ்.மாநகரசபை வாக்காளர்களில் 79.3 வீதத்தினர் அதாவது ஐந்தில் நான்கு பங்கினர் இந்தத் தேர் தல் பிரசாரத்துடனேயே சம்பந்தப்படுவதில்லையாம்....!
இதேசமயம், இது தமிழர்களின் எதிர்கால நலன் தொடர்பான வாழ்வா, சாவா என்ற பிரச்சினையைத் தீர்மா னிக்கும் தேர்தலாக முன்னிறுத்தப்பட்டுள்ள போதிலும் இந்த வாக்காளர்களில் 27.5 வீதத்தினர் கணிசமான தொகையினர் தனிப்பட்ட நலன்களைப் பெறும் நோக் கத்துடன் இந்த வாக்களிப்பில் பங்குபற்றப் போகின்றார் களாம். சமூக நன்மையைக் கருத்திலெடுத்து அதனடிப் படையில் இந்தத் தேர்தலை அணுகப் போகின்றவர்கள் ஆக 51.7 வீதத்தினர் மட்டும்தானாம்.
இந்தப் புள்ளி விவரங்களும் தகவல்களும் வரலாற்றுத் திருப்புமுனையில் தடுமாறிக்கொண்டிருக்கும் தமிழினத்தின் எதிர்காலப் போக்குக் குறித்து நடைபெறும் முக்கிய தேர்தல் ஒன்றின் வாக்களிப்பில் அந்த முக்கியத்துவத்தை கடப்பாட்டைபொறுப் புணர்வைஉணராமல் தமிழ் மக்கள் பங்குபற்றப் போகின்றனர் என்ற விரக்தி நிலையையே நம் மத்தியில் உருவாக்கி நிற்கின்றன.
Comments