இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக என்ற @நாக்கத்துடன் உருவாக்கப்பட்ட அனைத்துக் கட் சிப் பிரதிநிதிகள் குழு அதற்கான தனது சிபாரிசின் இறுதி நகல் வடிவத்தைத் தயாரித்து விட்டதாகக் கூறப்படுகின்றது.
தனது யோசனைத் திட்டத்தின் இறுதி வடிவத்தை வெளியிடுவதற்கு முன்னர், அது தொடர்பில் அனைத் துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவில் பங்குபற்றும் கட்சி களின் சம்மதத்தைப் பெறுவதற்காக அந்த நகல் வடி வம் சம்பந்தப்பட்ட கட்சிகளின் தலைவர்களிடம் கைய ளிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
அந்த வகையில் அரசுத் தலைவரும், ஆளும் கூட் டமைப்பின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட் சியின் தலைவருமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடமும் அந்த நகல் வடிவத்தின் ஒரு பிரதி வழங்கப் பட்டிருப்பதாகத் தெரிகின்றது.
அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு இத் தகைய சிபாரிசு வடிவங்களை ஜனாதிபதியிடம் ஏற்க னவே கையளித்த அனுபவம் உண்டு.
கடந்த ஜனவரியிலும் இதேபோன்ற இடைக்கால சிபா ரிசு ஒன்றை ஒப்படைக்கும்படி அனைத்துக் கட்சிப் பிரதி நிதிகள் குழு கோரப்பட்டிருந்தது.
இலங்கை இந்திய ஒப்பந்தம், 1987 இல் உருவாக் கப்பட்ட காலம் முதல், அதற்கு இசைவாக இலங்கை யில் அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்ளும் வகை யில் அரசமைப்புக்குக் கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தத்தை அடியோடு எதிர்த்து வந்தது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி. அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் முழு அளவில் நடைமுறைப்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டமைக்குப் பல காரணங்கள் இருந்தாலும், அதனை ஐ.தே.கட்சி அரசு சட்டரீதியாக நாடாளுமன்றில் நிறைவேற்றிய காலம் முதல் அதற்கு ஸ்ரீலங்கா சுதந்தி ரக் கட்சி காட்டிவந்த கடும் எதிர்ப்பும், அக்காரணங்களுள் ஒன்றாகும்.
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான "சிறந்த தந்திரோபாய மார்க்கம்"அந்த அரசமைப்பின் 13 ஆவது திருத்தம்தான் என்ற "ஞானோதயம்"இதுவரை காலமும் அதனை அடி யோடு எதிர்த்து வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வுக்கும் அவரது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் கடந்த ஒரு வருடத்திற்குள்தான் பிறந்தது. அதனையடுத்து, இனப்பிரச்சினைத் தீர்வுக்கான இடைக்கால ஏற்பாடாக அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப் படுத்தவேண்டும் என்ற கோரிக்கையைத் தமது இடைக் கால சிபாரிசாக முன்வைக்கும்படி அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு கேட்கப்பட்டது.
அரசுத் தலைமை கோரியதும் அதை சிரமேற்கொண்டு நிறைவு செய்வதே தமது பணி என்ற நிலைப்பாட்டில் இந்த இடைக்கால ஏற்பாட்டு சிபாரிசுடன் அலரி மாளி கைக்கு காவடி தூக்கிய பட்டறிவு அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைமைக்கு உண்டு. விரிவாகத் தயாரிக்கப்பட்ட அந்த இடைக்கால சிபாரிசு அறிக்கை பக்கம், பக்கமாக வெட்டிக் குறைக்கப்பட்டு, எவ்வாறு நீர்த்துப் போகப் பண்ணப்பட்டது என்பது பற்றிய செய்திகள் அப்போது அம்பலத்துக்கு வந்தன. நான்கு சுற்று வெட் டுக்குப்பின்னர் "உலக்கை தேய்ந்து உளிப்பிடியான"கதை யாக "கழுதை தேய்ந்து கட்டெறும்பானமை"போன்று அந்த இடைக்கால சிபாரிசு செறிவு குறைந்து குறுகிப் போனது.
அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் இடைக் கால சிபாரிசு அறிக்கையின் நகல் வடிவம், இறுதியாக் கப்பட முன்னர் எவ்வாறு துரும்பாக இளைத்துப் போனதோ, அதுபோன்ற கதி இப்போதும் அதன் இறுதி வடிவத்துக்கும் ஏற்படுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
சுமார் மூன்றாண்டு காலம் நூற்றியிருபத்தியைந்துக் கும் அதிகமான அமர்வுகளை நடத்தி, விரிவாக ஆராய்ந்து, கூடிப் பேசிக் கலைந்து குறுகச் சொல்வதானால் மலையைக் குடைந்து எதையோ பிடித்தமாதிரி தனது இறுதி சிபாரிசின் நகல் வடிவத்துக்கு அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு வந்திருக்கின்றது. இன்னும் அந்த நகல் வடிவம் செறிவு குறைக்கப்பட்டு, காரம் இறக் கப்பட்டு, வெறும் பொத்தலாகிப் போக வகை செய்யப் படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஏற்கனவே இப்பத்தியில் நாம் சுட்டிக்காட்டியபடி அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு என்பது, அரசுக் கூட்டமைப்பில் பல்வேறு பெயர்களில் இயங்கும் பதி னொரு கட்சிகளையும், அரசுக்கு வெளியே ஆக இரண்டு கட்சிகளையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியவற்றையும் மட் டுமே கொண்டு இயங்குகின்றது.
இந்தப் பின்புலத்தில் அரசுத் தலைமை மேற்படி பதினொரு கட்சிகளையும், அனைத்துக் கட்சிப் பிரதி நிதிகள் குழுவைப் பகிஷ்கரித்து நிற்கும் வேறு சில கட்சி களையும் ஒன்றாகக் கொண்டிணைத்து வழி நடத்தும் கூட்டமைப்புத் தலைமை மேற்படி அனைத்துக் கட் சிப் பிரதிநிதிகள் குழுவின் இறுதி சிபாரிசை நீர்த்துப் போகச் செய்யுமாறு கட்டளையிடுமானால், அதைப் பின்பற்றி அதனை முன்னெடுப்பதைத் தவிர, அனைத் துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவினால் வேறு என்னதான் செய்யமுடியும்?
இந்த யதார்த்தப் புறநிலையை சீர்தூக்கிப் பார்க்கும் போது, அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் இறுதிச் சிபாரிசின் நகல் வடிவத்தில் சிறுபான்மை யினரான தமிழர்களுக்கு நியாயம் செய்யும் ஒரு சில அம்சங்கள் இருந்தாலும் கூட, அவைதன்னும் தடைகளைத் தாண்டி செயலுறுப் பெறும் நடைமுறைக்கு வரும் என்று நம்பு வதற்கு இடம் ஏதுமில்லை என்பதுதான் உண்மை.
Comments