சேனல் 4 வெளியிட்ட மறுப்பு, சிறிலங்கா அரசு கூறிய சாட்சியங்களும் போலியானவை

சிறிலங்காவின் கடும் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும், தாம் வெளியிட்ட போர்க்குற்ற வீடியோ ஆதாரங்கள் பற்றி சேனல் 4 தொடர்ந்து வாதாடிவடுகிறது. அத்துடன், அடுத்தடுத்து, இடைத்தங்கல் முகாம்கள் பற்றிய ஆவணங்களையும், தமது பக்க நியாயங்களைடும் அடுக்கிகொண்டே வருகிறத் சேனல் 4.

அண்மையில் சிறிலங்கா இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்படும் தமிழர்கள் பற்றி சேனல் 4 ஒளிபரப்பாக்கிய வீடியோவானது, ஜனநாயக சுதந்திரத்திற்கான ஊடகவியலாளர் அமைப்பிடம் இருந்து பெறப்பட்டது எனவும், அதில் அங்கம் வகிக்கும் பெரும்பாலோனோர், பெரும்பான்மை இன சிங்களவர்கள் எனவும், அவர்கள் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது சேனல் 4. மேலும்,

  • சிறிலங்கா அரசினால் இவ்வீடியோ போலியானது என நிரூபிப்பதற்கு முன் வைக்கப்பட்ட ஆதாராங்கள் இவை
  • வெள்ளை நிறத்தினால் ஆன டீ ஷேர்ட் அணிந்திருக்கின்றனர்.
  • அவர்களுடை சீருடையில் சிங்க இலட்சினை பொறிக்கப்பட்ட, அடையாளச்சின்னமேதும் காணப்படவில்லை.
  • தலை முடி நீளமாக வளர்க்கப்பட்டுள்ளது.
  • சுடப்பட்ட பின்னரும் உடல் அசைகிறது.


ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சேனல் 4 ஊடகம், வெள்ளை நிற டீஷேர்ட்டுக்களுடன் நிற்கும், சிறிலங்கா இராணுவ அதிகாரிகளின், புகைப்படங்களையும், சிங்க இலட்சினை பொறிக்கப்படாத ஆடையுடன், ஜனாதிபதியின் அருகிலேயே நிற்கும் இராணுவ வீரர்களினதும், நீளமான முடியுடன் இருக்கும் இராணுவவீரர்களினதும் புகைப்படங்களை வெளியிட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தி,சிறிலங்கா அரசு கூறுவது தான் பொய் என்பதை நிரூபித்திருக்கிறது.




Comments