இடம்பெயர்ந்த மக்களைத் தடுத்து வைத்துள்ள வவுனியா முகாம்களின் நிலைமைகளை பகிரங்கப்படுத்தும் கையடக்க தொலைபேசி வீடியோ ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவானது சாட்சிகளில்லா போர் (War Without Witness) என்ற குழுவால் இரு வாரங்களுக்கு முன்னர் படம்பிடிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் நிதியுதவி அளித்துவரும் இந்த முகாம்களின் படு மோசமான நிலமைகளை இந்த வீடியோ எடுத்துக் காட்டுகிறது. ஊசி மூலம் மருந்து ஏறிக்கொண்டிருக்கும் நோயாளி ஒருவர் வெறுந்தரையில் படுத்திருக்கிறார். மிகவும் சோர்வடைந்துள்ள அவர் தமது முகத்தில் இருக்கும் இலையான்களைக் கூட விரட்டும் திராணியற்று படுத்திருப்பது போல ஒரு காட்சியும் அந்த வீடியோவில் இடம்பெறுள்ளது.
இனி வரப்போகும் மழை காலத்தில் அங்குள்ள மக்கள் மிகுந்த இடர்களுக்கு ஆளாகப் போகிறார்கள் என்பதே இப்போதுள்ள கவலையாக உள்ளது. இதற்கிடையில், தமிழ் சிறுவர்களின் இன்னல்கள் பற்றி குரல் கொடுத்து வந்த யுனிசெஃப் அமைப்பின் பேச்சாளர் ஜேம்ஸ் எல்டெரையும் நாட்டை விட்டு வெளியேறுமாறு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.
Comments