நமது நாட்டின் பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே. நாராயணன், சமீபத்தில் டெல்லியில் நடந்த காவல் துறை இயக்குனர்கள், தலைமை ஆய்வாளர்கள் மாநாட்டில் பேசிய பேச்சின் ஒரு பகுதி தமிழர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
“தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நிதி உதவி செய்துவந்த புலம் பெயர்ந்த தமிழர்கள் உலகளாவிய அளவில் பரவியுள்ளதால், அந்த இயக்கம் மீண்டும் தலைத்தூக்கும் அச்சுறுத்தல் உள்ளது. புலம் பெயர்ந்த தமிழர்களிடையே உள்ள அதிருப்தியுற்ற சக்திகள் ஒன்றிணைந்து அந்த பயங்கரவாத அமைப்பிற்கு ஆயுதம் வழங்கி மீண்டும் உயிரூட்டும் சாத்தியம் உள்ளது” என்று எம்.கே. நாராயணன் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, “அவர்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும், அப்படி நிகழ்ந்தால் அதனை எதிர்கொள்ள தயாராக வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.
இந்தியாவின் தேசப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்துகொண்டு நாராயணனும், அயலுறவுச் செயலராக இருந்த சிவ் சங்கர் மேனனும், சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச சகோதரர்களான கோத்தபய ராஜபக்ச, பசில் ராஜபக்ச ஆகியோருடன் இணைந்து, ஒவ்வொரு நாளும் பேசி, திட்டமிட்டு ஈழத் தமிழர்கள் இனப் படுகொலையை கச்சிதமாக நிறைவேற்றியவர்கள் என்பதை தமிழ்நாட்டுத் தமிழர்களும், ஈழத் தமிழர்களும், புலம் பெயர்ந்த தமிழர்களும் நன்கு அறிந்துள்ளனர்.
தங்களை இன ரீதியாக ஒடுக்கும் சிங்கள பெளத்த இனவாத அரசிடமிருந்து விடுதலைப் பெற ஈழத் தமிழர்கள் முன்னெடுத்த விடுதலைப் போராளிகளை - தமிழீழ விடுதலைப் புலிகளை -பயங்கரவாத இயக்கம் என்று முத்திரை குத்தி, அதனை ஒடுக்குவதாகக் கூறி, இந்திய மக்களையும், உலக நாடுகள் பலவற்றையும் ஏமாற்றி, இரண்டரை ஆண்டுகளில் ஒன்றரை இலட்சம் தமிழர்களை அழித்தொழித்த மாபெரும் இனப் படுகொலையின் காரணக் கர்த்தாக்களில் ஒருவரான எம்.கே. நாராயணன் இவ்வாறு பேசியிருப்பது தமிழ்நாட்டுத் தமிழர்கள் மட்டுமின்றி, உலகில் வாழும் எந்தத் தமிழருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்காது.
ஆனால், “அந்த இயக்கம் மீண்டும் தலையெடுத்து விடக்கூடாது, உன்னிப்பாக கவனியுங்கள், எதையும் எதிர்கொள்ள தயாராகுங்கள்” என்று அவர் கூறியிருப்பது, உலகத் தமிழர்கள் அனைவரையும் கோபம் கொள்ளச் செய்துள்ளது.
தன்னை மறந்து ஒப்புக் கொண்ட உண்மை!
மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட விடுதலைப் புலிகளின் பன்னாட்டு விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதனை இன்றுவரை சித்ரவதை செய்து, அவரிடம் இருந்து அவர்கள் பெறத் துடிக்கும் தகவல், புலம் பெயர்ந்த தமிழர்களின் நிதி மூலத்தை கண்டறிவதுதான்.
ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க பெரும்பாடுபடும் சிறிலங்க அரசு மேற்கொண்டிருக்கும் அந்த முயற்சிக்கு நீங்களும் உதவுங்கள் என்றுதான் டெல்லியில் இருந்து நாராயணனனும் காவல் துறைத் தலைவர்களுக்கு அறிவாலோசனை வழங்கியுள்ளார்.
விடுதலையின் வேர் நிதியில் இல்லை!
அதனால்தான் கோத்தபயவலிருந்து நாராயணன் வரை குழம்புகிறார்கள். வன்னியின் மீது இரத்தக் களரியை கட்டவிழ்த்து மக்களையும் அவர்களுக்காக நின்ற புலிகளையும் துடைத்தெறிந்த பின்னரும் விடுதலைச் சிறகுகள் விரிகிறதே என்ற ஆச்சரியம் அவர்களுக்கு! முன்னெப்பொழுதையும் விட, தமிழீழத்தின் விடுதலைக்கான வேர் இப்போதுதான் வலிமையாக படர்கிறது.
இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய இராணுவ வல்லமைகளின் பேராதரவோடு மே இரண்டாம் வாரம் வரை நடத்திய இனப் படுகொலை வன்னியில் போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வந்திருக்கலாம், ஆனால் உலக நாடுகளின் கண்களை அது திறந்துவிட்டது. இப்போது எல்லா நாடுகளும் ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை உணரத் தொடங்கிவிட்டன. அதுவே இவர்களை இப்படித் தறிகெட்டுப் பேசச் செய்கிறது.
இப்பேச்சுகளை தமிழினம் சட்டை செய்யத் தேவையில்லை.
சீன ஊடுறுவலிற்கு பதிலென்ன?
இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதிசெய்ய கூட்டப்பட்ட காவல் துறை மாநாட்டில் இப்படி சம்மந்தமில்லாமல் பேசிய இந்திய தேச ஆலோசகர் நாராயணன், ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் லே பகுதியில் சீனப் படைகள் ஒன்றரை கி.மீ. தூரம் ஊடுறுவி வந்தது மட்டுமின்றி, அது தங்களுக்குச் சொந்தமான பகுதி என்று சிகப்பில் குறியிட்டுவிட்டுச் சென்றது எப்படி? என்று இன்று அனைவரும் எழுப்பும் கேள்விக்கு பதில் கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
ஈழத் தமிழர்களின் பாதுகாப்பு அரணாகத் திகழும் தமிழீழ விடுதலைப் புலிகளை இந்தியாவின் அச்சுறுத்தலாகக் காட்டும் இந்த பாதுகாப்பு ஆலோசகருக்கு சீனா என்ன நட்பு நாடா? அப்படி ஒரு ஊடுறுவலே நடக்கவில்லை என்று இவர் கூறி, அதனை அயலுறவு அமைச்சகம் கூற, நாடே சிரித்தது. எல்லையைக் காக்கும் இராணுவத்திற்கல்லவா தெரியும் எவ்வளவு தூரம் உள்ளே வந்த சீனன் கோடு போட்டுவிட்டு போயுள்ளான் என்று. இலங்கைப் பிரச்சனையில் அடுக்கடுக்காக பொய் கூறி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசையும், இந்திய மக்களையும் ஏமாற்றியது போல, சீனா ஊடுறுவலையும் ‘நடக்கவே இல்லை’ என்று கூறி பூசி மொழிகிடப் பார்த்தார், நடக்கவில்லை.
எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காண சீனாவுடன் 13 சுற்றுகள் பேச்சுவார்த்தை நடத்தி கண்ட பலன் இது. எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காண சீனா துணை அமைச்சர் தாய் பிங்குவாவுடன் இந்தியப் பிரதிநிதியாகப் பேச்சுவார்த்தை நடத்தியது இந்த நாராயணன்தான். “13வது சுற்றுப் பேச்சு சுமூகமாக நடந்து முடிந்துள்ளது. நாங்கள் பல வரைபடங்களை கையளித்துள்ளோம். அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் அவர்கள் (சீனா) இறுதித் தீர்வுக்கான திட்டத்தை அளிப்பார்கள், அதன் மீது பேச்சுவார்த்தை நடக்கும்” என்று கூறினார்.
இதுதான் 5 ஆண்டிற்கு மேலாக நமது நாட்டின் தேச பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் எம்.கே.நாராயணின் ‘சாதனை’.
இந்திய நாட்டிற்கு ஆதரவாக என்றென்றும் திகழ்ந்த ஈழத் தமிழ் மக்களைக் கொன்று குவிக்க ராஜபக்சவிற்கு உதவி, அந்நாடு இன்று சீனத்தின் வலிமையாக கூட்டாளியாகிவிட்டது! இந்துமகா சமுத்திரத்தில் தனது வல்லாண்மையை நிலைநாட்ட அம்பாந்தோட்டாவில் துறைமுகம் நிறுவி்க்கொள்ள சீனாவிற்கு இடமளித்துள்ளது சிறிலங்க அரசு! இதன் மூலம் இந்தியாவின் தென் முனை கடல் வழியில் தனது மேலாதிக்கத்தை வலிமையாக நிறுவப்போகிறது சீனா. இதனால் அச்சமுற்ற இந்தியா மாலத் தீவில் தனது கடற்படை தளத்தை நிறுவும் முயற்சியில் அவசர அவசரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த இராஜ தந்திரப் பிலிகளின் சாமர்த்தியத்தால் சீனா வலிமையாக கால் பதித்துவிட்டது. விடுதலைப் புலிகளையும், ஈழத் தமிழ் மக்களை கொன்றொழித்து இந்தியா கண்ட பலம் இதுதான்.
இந்திய நிறுவனங்கள் சிலவற்றிற்கு வணிக வாய்ப்புகள் கிடைத்ததைத் தவிர, இலங்கைக்கான அயலுறவுக் கொள்கையில் இந்தியாவிற்கு வேறென்ன கிடைத்தது? தமிழர்களை விரோதித்துக் கொண்டதுதான் மிச்சம்!
தங்களுடைய இரகசியத் திட்டங்களை மறைத்துக் கொள்ள இவர்கள் எப்போதும் ஊதிவிடும் புகைதான் விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் என்பது. இதுநாள் வரை இவர்கள் மேற்கொண்ட இராஜ தந்திரக் கூத்துக்களின் ‘பலன்களை’ இந்தியா அனுபவிக்கும் காலம் நெருங்குகிறது அப்போது தெரியும் இவர்கள் எந்த நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர்கள் என்று.
வெப் உலகம்
FILE
அதுமட்டுமின்றி, “அவர்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும், அப்படி நிகழ்ந்தால் அதனை எதிர்கொள்ள தயாராக வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.
இந்தியாவின் தேசப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்துகொண்டு நாராயணனும், அயலுறவுச் செயலராக இருந்த சிவ் சங்கர் மேனனும், சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச சகோதரர்களான கோத்தபய ராஜபக்ச, பசில் ராஜபக்ச ஆகியோருடன் இணைந்து, ஒவ்வொரு நாளும் பேசி, திட்டமிட்டு ஈழத் தமிழர்கள் இனப் படுகொலையை கச்சிதமாக நிறைவேற்றியவர்கள் என்பதை தமிழ்நாட்டுத் தமிழர்களும், ஈழத் தமிழர்களும், புலம் பெயர்ந்த தமிழர்களும் நன்கு அறிந்துள்ளனர்.
FILE
ஆனால், “அந்த இயக்கம் மீண்டும் தலையெடுத்து விடக்கூடாது, உன்னிப்பாக கவனியுங்கள், எதையும் எதிர்கொள்ள தயாராகுங்கள்” என்று அவர் கூறியிருப்பது, உலகத் தமிழர்கள் அனைவரையும் கோபம் கொள்ளச் செய்துள்ளது.
தன்னை மறந்து ஒப்புக் கொண்ட உண்மை!
நாராயணின் பேச்சில் அவர் தன்னை அறியாமலேயே ஒரு உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். ‘உலகெங்கிலும் வாழும் தமிழர்களை மிரட்டி நிதிச் சேர்த்தே விடுதலைப் புலிகள் ஆயுதங்களை வாங்கி வைத்துள்ளனர்’ என்று கூறிவந்த இவர், இப்பொழுது, “அவர்களுக்கு முக்கிய நிதி ஆதாரமாக உள்ள புலம் பெயர்ந்த தமிழர்கள்” என்று கூறியுள்ளார்! இதன் மூலம் விடுதலைப் புலிகள் மிரட்டிப் பணப் பறித்து ஆயுதம் வாங்குகிறார்கள் என்ற பொய்யுரைப்பை தனது வாயாலேயே உடைத்து உண்மையைக் கூறியுள்ளார்.நாராயணனின் வார்த்தைகள் புதியதல்ல, இவை யாவும் வேறொரு நாளில் கோத்தபய ராஜபக்ச பேசியதுதான்! விடுதலைப் புலிகளின் மூல பலம் அவர்கள் எந்த மக்களின் விடுதலைக்காக போராடுகிறார்களோ அவர்கள்தான் என்பதை முழுமையாக உணர்ந்துள்ள காரணத்தினால்தான், புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒற்றுமையை உடைக்க எல்லாவிதமான பகீரத முயற்சியிலும் கோத்தபய ராஜபக்ச ஈடுபட்டு வருகிறார்.
FILE
ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க பெரும்பாடுபடும் சிறிலங்க அரசு மேற்கொண்டிருக்கும் அந்த முயற்சிக்கு நீங்களும் உதவுங்கள் என்றுதான் டெல்லியில் இருந்து நாராயணனனும் காவல் துறைத் தலைவர்களுக்கு அறிவாலோசனை வழங்கியுள்ளார்.
விடுதலையின் வேர் நிதியில் இல்லை!
ஓர் இனத்தின் நிதி மூலத்தை அழித்துவிட்டால், அதன் விடுதலைப் போராட்டம் செத்துவிடும் என்று இந்த இனப் படுகொலை கர்த்தாக்கள் கணக்கு போடுகின்றனர்!தங்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிக்கு சாத்வீக வழிகளில் நீதி பெற முடியாத நிலையிலேயே, அநீதிக்கு எதிரான நீதியாக விடுதலை வேட்கை பிறக்கிறது. அந்த வேட்கையே விடுதலை உணர்வின் வேர். அது துளிர்விட்டு, கிளைவிட்டு தழைக்கும்போது போராட்ட வடிவத்தை பெறுகிறது. அதற்குப் பிறகுதான் நிதி, பன்னாட்டு ஆதரவு என்பதெல்லாம். இது மக்களுக்காக வாழ்பவர்களுக்குப் புரியும், நாட்டின் பாதுகாப்பை அன்னிய நாட்டிற்கு அடிமைப்படுத்துபவர்களுக்கு எப்படித் தெரியும்?
FILE
இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய இராணுவ வல்லமைகளின் பேராதரவோடு மே இரண்டாம் வாரம் வரை நடத்திய இனப் படுகொலை வன்னியில் போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வந்திருக்கலாம், ஆனால் உலக நாடுகளின் கண்களை அது திறந்துவிட்டது. இப்போது எல்லா நாடுகளும் ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை உணரத் தொடங்கிவிட்டன. அதுவே இவர்களை இப்படித் தறிகெட்டுப் பேசச் செய்கிறது.
இப்பேச்சுகளை தமிழினம் சட்டை செய்யத் தேவையில்லை.
சீன ஊடுறுவலிற்கு பதிலென்ன?
இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதிசெய்ய கூட்டப்பட்ட காவல் துறை மாநாட்டில் இப்படி சம்மந்தமில்லாமல் பேசிய இந்திய தேச ஆலோசகர் நாராயணன், ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் லே பகுதியில் சீனப் படைகள் ஒன்றரை கி.மீ. தூரம் ஊடுறுவி வந்தது மட்டுமின்றி, அது தங்களுக்குச் சொந்தமான பகுதி என்று சிகப்பில் குறியிட்டுவிட்டுச் சென்றது எப்படி? என்று இன்று அனைவரும் எழுப்பும் கேள்விக்கு பதில் கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
ஈழத் தமிழர்களின் பாதுகாப்பு அரணாகத் திகழும் தமிழீழ விடுதலைப் புலிகளை இந்தியாவின் அச்சுறுத்தலாகக் காட்டும் இந்த பாதுகாப்பு ஆலோசகருக்கு சீனா என்ன நட்பு நாடா? அப்படி ஒரு ஊடுறுவலே நடக்கவில்லை என்று இவர் கூறி, அதனை அயலுறவு அமைச்சகம் கூற, நாடே சிரித்தது. எல்லையைக் காக்கும் இராணுவத்திற்கல்லவா தெரியும் எவ்வளவு தூரம் உள்ளே வந்த சீனன் கோடு போட்டுவிட்டு போயுள்ளான் என்று. இலங்கைப் பிரச்சனையில் அடுக்கடுக்காக பொய் கூறி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசையும், இந்திய மக்களையும் ஏமாற்றியது போல, சீனா ஊடுறுவலையும் ‘நடக்கவே இல்லை’ என்று கூறி பூசி மொழிகிடப் பார்த்தார், நடக்கவில்லை.
எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காண சீனாவுடன் 13 சுற்றுகள் பேச்சுவார்த்தை நடத்தி கண்ட பலன் இது. எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காண சீனா துணை அமைச்சர் தாய் பிங்குவாவுடன் இந்தியப் பிரதிநிதியாகப் பேச்சுவார்த்தை நடத்தியது இந்த நாராயணன்தான். “13வது சுற்றுப் பேச்சு சுமூகமாக நடந்து முடிந்துள்ளது. நாங்கள் பல வரைபடங்களை கையளித்துள்ளோம். அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் அவர்கள் (சீனா) இறுதித் தீர்வுக்கான திட்டத்தை அளிப்பார்கள், அதன் மீது பேச்சுவார்த்தை நடக்கும்” என்று கூறினார்.
ஆனால் பேச்சுவார்த்தை முடிந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை, இந்தியாவை துண்டு துண்டாக சிதறடிக்க வேண்டு்ம் என்று சீன அரசு ஆதரவு இணையத்தளத்தில் கட்டுரை வந்தது.இதுநாள்வரை, அருணாசலப் பிரதேசத்தின் ஒரு மாவட்டத்தை (தவாங்) மட்டும் கேட்டுக் கொண்டிருந்த சீன அரசு, இப்போது அருணாசல பிரதேச மாநிலமே எங்களுடையது என்று கேட்கிறது! அங்குள்ள மக்கள் தேர்தலில் வாக்களித்து தேர்வு செய்ய முதலமைச்சர் அதற்கு மறுப்புத் தெரிவிக்கிறார். அந்த மாநிலத்தில் நிறைவேற்றப்படும் திட்டத்திற்கு ஆசிய மேம்பாட்டு வங்கி கடன் அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது சீன அரசு. 13 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தி எட்டிய ‘சுமூக நிலை’ இவ்வளவுதான்!
இதுதான் 5 ஆண்டிற்கு மேலாக நமது நாட்டின் தேச பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் எம்.கே.நாராயணின் ‘சாதனை’.
FILE
இந்திய நிறுவனங்கள் சிலவற்றிற்கு வணிக வாய்ப்புகள் கிடைத்ததைத் தவிர, இலங்கைக்கான அயலுறவுக் கொள்கையில் இந்தியாவிற்கு வேறென்ன கிடைத்தது? தமிழர்களை விரோதித்துக் கொண்டதுதான் மிச்சம்!
தங்களுடைய இரகசியத் திட்டங்களை மறைத்துக் கொள்ள இவர்கள் எப்போதும் ஊதிவிடும் புகைதான் விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் என்பது. இதுநாள் வரை இவர்கள் மேற்கொண்ட இராஜ தந்திரக் கூத்துக்களின் ‘பலன்களை’ இந்தியா அனுபவிக்கும் காலம் நெருங்குகிறது அப்போது தெரியும் இவர்கள் எந்த நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர்கள் என்று.
வெப் உலகம்
Comments
உண்மையில் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பாகிஸ்தான்,சீனாவின் ஊடுருவல்களை தடுக்க இவருக்கு துப்பில்லை,இன்னும் புலிப்புராணம் பாடியே ஊரை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்..
புலம்பெயர் தமிழர்கள் அரசியல் ராஜதந்திர ஜனநாயக ரீதியாக போராடி ஈழத்தமிழரின் நியாய பூர்வமான அரசியல் உரிமைகளைப் பெறத்தீர்மானித்து விட்டார்கள்..,இனிமேலும் பயங்கரவாதம் என்று சொல்லியும் புலிப்பூச்சாண்டி காட்டியும் இவர் போன்றோரும் சிங்கள அரசும் உலக மக்களையும் உலக நாடுகளையும் ஏமாற்ற முடியாது. .
அது சரி புலம்பெயர் மக்கள் இந்நாளில் பல மேற்கு நாடுகளின் பிரஜைகள் ,,அவர்கள் முன்னாள் இந்தியப் பிரஜைகளும் அல்ல ,அவர்களின் அரசியல் நிலைப்பாடுகளுக்கு சவால் விடுவதற்கு இவர். யார்?