சுமார் 200 ஆண்டுகளுக்குமுன் பல லட்சம் தமிழர்களை தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்ய ஆங்கிலேயர் இலங்கைக்குக் கொண்டுபோனார்கள்.அத்தொழிலாளர்கள் அங்கேயே பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்தார்கள். இலங்கைக் குடியுரிமையுடன், வாழ்ந்தார்கள். 1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்றது. 1949 இல் இலங்கையின் அரசியல் சட்டம் அமலுக்கு வந்தது. அச்சட்டப்டி, தோட்டத் தொழிலாளர் தமிழர் அனைவரது இலங்கை குடியுரிமையும் பறிக்கப்பட்டது. அவர்கள் “நாடற்ற மக்கள்” (Stateless people ) என அறிவிக்கப்பட்டார்கள். இந்தக் கொடுமை உலகத்தில் யாருக்குமே நடைபெறவில்லை.இதனை இந்திய அரசு கண்டுகொள்ளவேயில்லை.
தமிழகத்தில் திராவிட இயக்கத்தினர் எதிர்ப்புத் தெரிவித்தார்கள், பாராளுமன்றத்தில் பேசினார்கள். இதன் பின்னர் 1964 இல் இலங்கைக்கும் - இந்தியாவுக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டது. 'சிறிமாவோ பண்டார நாயகா - சாஸ்திரி ஒப்பந்தம்' என்பது இதன் பெயர். இதன்படி 1,50,000 தோட்டத் தொழிலாளர் தமிழர்கள் நாடற்றவர்களாக இலங்கையில் விடப்பட்டனர். இவர்கள், இவர்களுக்குப் பிறந்தவர்கள் என சுமார் 4 இலட்சம் தமிழர் இன்றும் குடியுரிமை அற்றவர்களாக இலங்கையில் வாழ்கின்றனர். இந்த ஒப்பந்தம் 'மானிடத்தன்மைக்கு இழைக்கப்பட்ட துரோகம்' (A Betrayal of Human Dignity) என அண்ணா கூறினார். (Anna Speaks at the Rajya Sabha - Page 145). உலக நாடுகளின் நடைமுறைப்படி மூன்று தலைமுறைகள் தொடர்ந்து ஒருநாட்டில் வாழும் மக்களுக்கு அந்நாட்டின் குடியுரிமை வழங்கப்பட வேண்டும். ஆனால் தமிழ்மக்களுக்கு இன்றும் வாக்குரிமை, சொத்துரிமை எதுவும்கிடையாது. இந்தத் துரோகத்தினைச் செய்ததும் காங்கிரஸ் அரசுதான்.
'இன்று இலங்கையில் வாழும் தோட்டத் தொழிலாளர் - தமிழர் என்கிற இந்திய வம்சாவழியினர் சுமார் 15இலட்சம் பேர். இவர்களில் 90 விழுக்காடு பேருக்கு சொந்தமாக வீட்டுமனை இல்லை. பெரும்பாலோர் ஆங்கிலேயர் கட்டிக் கொடுத்த 12' X 10' தரக் குடிசையிலேயே வாழ்கிறார்கள்....' (வே. ஆனை முத்து - தமிழீழத் தமிழரை, மலையகத் தமிழரை நீங்களும் பாருங்கள்! நீங்களும் பேசுங்கங்கள்! - பக்கம் 163)
தமிழகத் தமிழரின் பாரம்பரியச் சொத்து கச்சத்தீவு, இந்திய எல்லைக்குள் ஒரு பகுதி. இதனை இலங்கை அரசு கேட்டது. இந்தியாவின் காங்கிரஸ் அரசு பட்டயம் போட்டுக் கொடுத்தது - 1974இல்.
பாராளுமன்றத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தன. தமிழகத்தின் அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும், தமிழக சட்டமன்றத்திலும் இதனை எதிர்த்துத் தீர்மானம் போடப்பட்டது. எதுவும் எடுபடவில்லை
இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பறிபோயிற்று. இதுபற்றி தமிழக காங்கிரசார் எவரும் கவலைப்படவில்லை. கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 400க்கும் அதிகமானோர் சிங்களக் கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட மீனவர்களுக்கும், கொள்ளையடிக்கப்பட்ட மீன்களுக்கும் இழப்பீடு கூட கேட்கவில்லை இந்திய அரசு. ஏனென்றால் தழிழரின் உயிரைவிட, இலங்கை சிங்களரின் நட்பே பெரிதென கருதுகிறார்கள்.
பாராளுமன்றத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தன. தமிழகத்தின் அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும், தமிழக சட்டமன்றத்திலும் இதனை எதிர்த்துத் தீர்மானம் போடப்பட்டது. எதுவும் எடுபடவில்லை
இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பறிபோயிற்று. இதுபற்றி தமிழக காங்கிரசார் எவரும் கவலைப்படவில்லை. கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 400க்கும் அதிகமானோர் சிஙிகளக் கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட மீனவர்களுக்கும், கொள்ளையடிக்கப்பட்ட மீன்களுக்கும் நஷ;டஈடுகூட கேட்கவில்லை இந்திய அரசு. ஏனென்றால் தழிழரின் உயிரைவிட, இலங்கை சிங்களரின் நட்பே பெரிதென கருதுகிறார்கள்.
1949 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து ஈழத்தமிழர்க்கு எதிரான நடவடிக்கைகளை சிங்களர் தொடங்கினார்.
- 1956 ஆம் ஆண்டு 'சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி' என அரசியல் சட்டம் திருத்தப்பட்டது. இதனால் இலங்கை வாழ் தமிழர் அனைவரும் இரண்டாம்தர மக்களானார்கள். இதனை இந்திய அரசு கண்டிக்கவில்லை.
- 1972 ஆம் ஆண்டு 'புத்த மதம் மட்டுமே இலங்கை அரசின் வழிகாட்டும் மதம்' என அரசியல் சட்டத்தில் எழுதப்பட்டது. இந்துக்களான பெரும்பான்மைத் தமிழர்களும், தோட்டத் தொழிலாளர் தமிழர்களும், ஈழத்தமிழர்களும் இதனால் பாதிக்கப் பட்டார்கள். சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்கு எதிரான சிங்கள அரசின் செயலை இந்திய அரசோ, காங்கிரஸ் கட்சியோ கண்டிக்கவில்லை.
- பாரம்பரியமாக ஈழத்தமிழர் 30,000 ஆண்டுகளுக்மேலாக வாழ்ந்துவரும் பகுதிகளில் இலங்கை அரசு 1972 முதல் பல சிங்களர் குடியிருப்புப் பகுதிகளை ஏற்படுத்தி அங்கு சிங்களரைக் குடியமர்த்தியது. இதனால் இலங்கையில் வடக்கு-கிழக்குப்பகுதிகளில் - சொந்த ஊரிலேயே தமிழர் சிறு பான்மையினராக மாறினார்கள்; இதனையும் காங்கிரஸ் அரசு கண்டிக்கவில்லை. அப்போதெல்லாம் தமிழர் அறவழியில் தான் போராடினார்கள். ஆயுதங்களைத் தொடவே இல்லை, ஆயினும் இந்திய அரசு - காங்கிரஸ் அரசு தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவளிக்கவில்லை. இந்தநிலையில்தான் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கினார்கள்.
- 1983 ஆம் ஆண்டு நடந்த இனப்படுகொலையின்போது பல ஆயிரம் தமிழர்கள் சிங்கள வெறியர்களால் கொல்லப்பட்டார்கள். இந்தியத் தமிழர்கள் கொதித் தெழுந்து போராடினார்கள். ஆயினும் அப்படுகொலைகளைக் கண்டித்து இந்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிடவில்லை. கவலைப்படுவதாகத் தெரிவித்தார்கள்;; இந்திரா காந்திதான் பிரதமராயிருந்தார்.
- 1983 ஆம் ஆண்டு நடந்த இனப்படுகொலையைக் கண்டித்து அர்ஜன்டினா நாடும் மொரிசியஸ் நாடும் ஐ.நா. பொதுச் சபையில் இலங்கைக்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டுவருவதாக அறிவித்தார்கள். உடனேயே இந்திய அரசினர் அங்கெல்லாம் சிறப்புத் தூதர்களை அனுப்பி, அந்நாடுகளின் முயற்சியைத் தடுத்தார்கள்.
- 1983இல் தமிழகத்தமிழ் மக்களின் போராட்டம் தீவிரமடையவே, ஐ.நா. சபையில் பேசப்போகிறோம் என பிரதமர் இந்திராகாந்தி அறிவித்தார். அதற்கென தமிழக அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனை அனுப்பவும் செய்தார். ஆனால் நடந்த தென்ன? 'இனப்படுகொலை' என புகார் செய்யாமல் 'அகதிகள் பிரச்சினை' என மாற்றியமைத்து, அகதிகள் மறுவாழ்வுக்கான விவாதத்தில் இந்தியப்பிரதிநிதியாக பண்ரூட்டி ராமச்சந்திரன் பேசினார். அதாவது, 'இலங்கையில் நடக்கும் கலவரத்தினால் பலர் அகதிகளாகி இந்தியாவுக்கு வந்துள்ளார்கள்.; அது இந்தியாவில் அரசியல் - பொருளாதாரப் பிரச்சினைகளை உருவாக்குகிறது; இது தடுக்கப்பட வேண்டும்' என்பது இந்தியாவின் கோரிக்கையாகியது! கொல்லப்பட்ட தமிழர்களைப் பற்றிய பேச்சே எழவில்லை. இப்படி இலங்கைக்குச் சாதகமாக நடந்து தமிழர்களை ஏமாற்றியதும் காங்கிரஸ் அரசுதான்
- 1985 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பூட்டான் தலைநகர் திப்புவில் இலங்கை அரசுக்கும், ஈழத்தமிழர் போராளிக் குழுக்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடபெற்றது. பேச்சுவார்த்தையை முன்னின்று ஏற்பாடு செய்த இந்திய வெளியுறவுச் செயலாளர் ரமேஷ; பண்டாரி 'சுயநிர்ணய உரிமை கோரிக்கையைக் கைவிடுமாறு' ஈழத்தமிழர் குழுக்களை வற்புறுத்தினார். அவர்கள் மறுக்கவே அத்தனைத் தலைவர்களையும் இந்தியாவை விட்டும் நாடுகடத்தினார்கள். அதாவது, இலங்கை அரசிடம் அதிக உரிமைகள் கேட்டார்கள் என்பதற்காக இந்திய அரசு தமிழர் தலைவர்களை நாடுகடத்தியது.
- 1986 - செப்டம்பர் மாதம் இங்கிலாந்தும், ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளும் ஐ.நா. பொதுச் சபையில் இலங்கைத் தமிழர் சிக்கல் பற்றிப் பேசின. இந்த விவாதத்தின் போது இந்தியா இலங்கை அரசுக்கு ஆதரவாகப் பேசியது. அதற்கு இலங்கை அமைச்சர் அமீது ஐ.நா. சபையிலேயே இந்தியாவின் உதவிக்கு நன்றி தெரிவித்துப் பேசினார். (The Hindu 28.09.1986).
- 1987 - மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்குழுவில் அர்ஜென்டினா, கனடா, நார்வே மற்றும் செனல் நாடுகள் இலங்கைக்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டுவந்தன. இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் இந்தியா கலந்து கொள்ளாமல் ஒதுங்கியிருந்தது. அப்போதும் காங்கிரஸ் ஆட்சிதான்; ராஜிவ் காந்திதான் பிரதமர்.
- அப்போதெல்லாம் நடந்தது போலவே இப்போதும் (2009) மெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, ஜப்பான போன்ற நாடுகள் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து புகார் செய்தனர். இந்தியா இலங்கை அரசின் தீர்மானத்துக்கு ஆதரவாக செயல்பட்டது அனைவரும் அறிந்ததே!
- இலங்கை இந்திய ஒப்பந்தம் (1987) : இலங்கை அரசுக்கும், ஈழத்தமிழர்க்கும் இடையே பிரச்சினை. பேச்சுவார்hத்தை, ஒப்பந்தம் எல்லாம் அவர்களுக்குள் நடக்க வேண்டும். இந்தியா அதற்கு உதவ வேண்டும. இதுதானே நமது எதிர்பார்ப்பு! உலகின் நடைமுறை! ஆனால் 1987 இல் 'இலங்கைக்கும் - இந்திய அரசுக்கும் இடையே ஒப்பந்தம்' ஏற்பட்டது ஏன்? என்ன நியாயம்? அந்த ஒப்பந்தத்தை ஈழத்தமிழர் ஏற்க வேண்டும் என கட்டாயப்படுத்தியது எப்படிச் சரியாகும்?
- 1987ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி இலங்கைக்கு இந்திய ராணுவம் சென்றது. அமைதிப்படை என்பது போர் நடத்தும் இரு பிரிவுகளுக்கிடையே மோதல் நடக்கமால் தடுக்கும் படையாகும். ஆனால் இந்திய ராணுவம் விடுதலைப்புலிகளை மட்டும் ஆயுதங்களை ஒப்படைக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியது. அவர்கள்மீது கடும் தாக்குதல் நடத்தியது. இது சிங்கள அரசுக்குத் துணைபோகும் செயல் அல்லாமல் வேறென்ன? இப்படி சிங்களர்க்கு ஆதரவாகவும், தமிழர்க்கு எதிராகவும் செயல்பட்டது காங்கிரஸ் அரசு தான்.
- 'அமைதிப்படை' எனச் சொல்லிக் கொண்டே சுமார் 4000 தமிழர்களைக் இந்திய ராணுவம் கொன்று குவித்தது. அவர்களது வீடுகளையும் தரைமட்டம் ஆக்கியது, இதற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியும், தமிழக காங்கிரசாரும் என்றாவது வருத்தம் தெரிவிக்கவில்லை.
- 1987 ஆம் ஆண்டின் இலங்கை-இந்திய ஒப்பந்தப்படி தமிழர்க்கு கிடைத்த ஒரே நன்மை, ஈழத்தமிழர் பாரம்பரியமாக வாழும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை இணைத்து ஒரே மாநிலமாக உருவாக்கியது தான்! ஆனால் 2004இல் மகிந்த ராஜபட்சே ஆட்சிக்கு வந்தவுடன், இந்த இணைப்பினை ரத்து செய்தார். வடக்குமாவட்டங்கள், கிழக்குமாவட்டங்கள தனித்தனியாயின. இந்தியாவிடம் போட்ட ஒப்பந்தத்தை மீறி இலங்கை செயல் பட்ட போதும் இந்திய அரசு அதனைக் கண்டிக்கவில்லை. தமிழக காங்கிரசாரும் அதனைக் கண்டிக்கவில்லை!
- 2009 சனவரி முதல் சிங்கள ராணுவம் பெருந்தாக்குதலைத் தொடுத்து இந்தியாவில் நடக்கவிருந்த பாராளுமன்றத் தேர்தலைப் பயன்படுத்திக்கொண்டு முப்படைத்தாக்குதலை முடுக்கி விட்டனர். தமிழக அரசியல் தலைவர்கள் பல்வேறு வகையினில் முறையிட்டனர். இலங்கை அரசின் கொலை வெறியைத்தடுத்திட இந்திய அரசு எதுவும் செய்யவில்லை. போராளிகள், முதியோர், குழந்தைகள் என சுமார் 50,000 பேர் கொல்லப்பட்டனர். மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சிங்கள ராணுவத்திடம் சரணடைய நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இன்றும் சுமார் மூன்று லட்சம் பேர் முகாம்களில் வாழுகின்றனர்.
- ஆக எந்த நிலையிலும், எத்தனைத் தமிழர் கொல்லப்பட்டாலும், இந்திய அரசு சிங்கள அரசுக்கு - இலங்கை அரசுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது என்பதுதான் உண்மை!!!
1949 முதல் 2009 வரையிலும் இதுதான் நடக்கிறது. நேரு, இந்திராகாந்தி, ராஜிவ்காந்தி, நரசிம்மராவ், மன்மோகன் சிங் என அனைவரது ஆட்சிக் காலத்திலும் சிங்கள - இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் தமிழர்க்கு எதிராகவுமே காங்கிரஸ் அரசும், காங்கிரஸ் கட்சியும் செயல்பட்டு வந்துள்ளமை புரிகிறது. 1991க்கு முன் ஈழத்தமிழர்க்கு ஆதரவாகச் செயல்பட்டது போலவும்ஈ ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட பின்தான் எதிராகச் செயல்படுவது போலவும் காங்கிரஸ் கட்சியினர் பிரச்சாரம் செய்கிறார்கள். இது உண்மையல்ல.
முழுக்க, முழுக்கப் பொய்ப் பிரச்சாரம். தமிழக மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கச் செய்த தந்திரமே யாகும்!!
போர் நடக்கும் போதும், நடந்துமுடிந்தபோதும் பத்திரிகையாளர்கள், உலக செஞ்சிலுவைச்சங்கம், ஐ.நா. மனித உரிமைக் கழகம் என எவரையும் தமிழர் பகுதிக்குள் இலங்கை அரசு அனுமதிக்கவில்லை. சுமார் மூன்று இலட்சம்பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு கட்டாந்தரையில் கூட்டம் கூட்டமாக தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் நிலைமை எப்படி உள்ளது என்பதனை அறிய இந்தியாவிலிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களையோ, சேவைநிறுவனங்களையோ அனுப்பியிருக்கலாம். ஆனால் சிங்கள அரசுக்கு உதவ இந்திய ராணுத்தினரை அனுப்பப் போகிறது. அப்படியானால் இவர்கள் செய்யப்போகும் மறுவாழ்வுப் பணி என்ன?
இன்று தென்னிலங்கையில் பல இடங்களில் கிளை அமைத்துள்ள டாடா, பஜாஜ், டி.வி.எஸ் போன்ற நிறுவனங்களுடன் இந்திய ஆயில் நிறுவனங்கள், இந்திய வங்கிகள் எல்லாம் வட இலங்கையில் பலநூறு இடங்களில் கிளைகள் திறக்கும். கட்டுமானத் தொழில் புரியும் நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்புகிடைக்கும். இவற்றில் பல ஆயிரம் இந்தியர்களுக்கு கொழுத்த சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.
ஈழத்தமிழர்க்கு என்ன கிடைக்கும்?
நாஞ்சில்
Comments