வட்டுக்கோட்டையும் திம்புவும்..


இலங்கையின் வடக்கையும் கிழக்கையும் சுதந்திரமான, அரச கௌரவம் மிக்க தமிழீழமாக்குவதற்கான அழைப்பாக 1976 இல் மேற்கொள்ளப்பட்ட வட்டுக்கோட்டைப் பிரகடனமானது மலைநாட்டு தமிழர்களின் ஐக்கிய அரசியல் கட்சியாக இப்போது விளங்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உட்பட அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளினதும் ஒன்றுபட்ட அதிகாரப்பூர்வ அறிவித்தலாக இருந்தது. இப்பிரகடனத்தை வடக்கு கிழ்க்கிலிருந்த ஈழத் தமிழர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து 1977 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அழிக்கமுடியாதவாறு தெரிவித்திருந்தனர். ஆகவே இதுவே தமிழர்களின் தீர்மானமான ஜனநாயக ஆணையாகும், இன்று வரைக்கும் தமது உள்ளத்திலுள்ளதைத் தீர்மானமாகத் தெரிவிக்க தமிழர்களுக்குச் சந்தர்ப்பமே கிடைக்கவில்லை.

1985 இல் வெளியிடப்பட்ட திம்பு கோட்பாடுகள் என்பவை வட்டுக்கோட்டை பிரகடத்திலிருந்து அதிகாரம் குறைக்கப்பட்ட ஒரு பதிப்பாகும். தன்னதிகார சுதந்திரத்தையும், கௌரவத்தையும் நீக்கிவிட்டு தமிழ் இனம், சொந்த நாடு மற்றும் சுய தீர்மானம் என்பவற்றுடன் மட்டும் அது நிறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பை சமரசப்படுத்தும் நோக்கில் அதிகாரங்கள் குறைக்கப்பட்ட இந்த திம்பு கோட்பாடுகளானது அந்த கால கட்டத்தில் இருந்த அனைத்து தமிழ் இயக்கங்களாலும் ஒன்று சேர்ந்து முன்னெடுக்கப்பட்டது. இதில் மக்கள் கொடுக்கப்பட்ட ஆணை எதுவுமே உள்ளடக்கப்படவில்லை. கவனத்தில் எடுக்கப்படவேண்டிய மிக முக்கியமான விடயம் என்னவென்றால், இது இந்தியாவால் நிர்மாணிக்கபப்ட்டது, தமிழர்களுக்குக் கொடுக்க வேண்டிய சுதந்திரத்தை இல்லாமல் செய்வதே இதன் உள்நோக்கமாக இருந்தது. சமரசத்துக்காக தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளக்கூடிய அடிமட்ட கொள்கைகள் மட்டுமே இதில் உள்ளடக்கபப்ட்டுள்ளன.

1987 இல் கைச்சாத்திடப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தமானது அதிகார பூர்வமாக தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டது. இதில் சொந்த நாடு என்ற பதம் மட்டும் கூறப்பட்டிருந்தது, அதுவும் தற்காலிகமாகவே. இது கூட அண்மையில் கொழும்பு அரசால் உடைக்கபப்ட்டு விட்டது. விடுதலைப்புலிகள் பகிஸ்கரிப்பு செய்ததால் அங்கே எதுவித நம்பிக்கையான நோக்கமும் இருக்கவில்லை, பலவந்தமாக இந்திய ராணுவத்தின் பிரசன்னத்துடன் தேர்தல் நடத்தப்பட்டது. இருந்தபோதும், இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாகாணசபை அரசானது தேர்ந்தெர்டுக்கப்பட்டது. எனினும் இந்திய ராணுவம் இருக்கும்போதே, சுதந்திரமான கௌரவ தனி ஈழம் ஒன்றைப் பிரகடனப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவானது.

பின்னர் 2002 இல் நடந்த ஒஸ்லோ அறிவிப்பானது வேறொரு வழியில் வட்டுக்கோட்டை பிரகடனத்தின் அதிகாரம் குறைக்கப்பட்ட வடிவமாகும். இதில் "ஒரு இலங்கைக்குள்ளேயே சுய அதிகாரம்" என்ற பதம் கண்டுபிட்க்கப்பட்டது. இந்த ஒஸ்லோ தீர்மானத்துடன் புலிகளை சமாதானப்படுத்துவதற்கான பரீட்சார்த்த பேச்சு வார்த்தைகளில் நோர்வேயும் சில பிற நாடுகளும் முயற்சித்தன. இதிலும் கூட மக்கள் கொடுத்த ஆணையானது உள்ளடக்கபடவில்லை.

2004 இல் வந்த இடைக்கால தன்னாட்சி அதிகார சபை (ISGA) ஆனது வட்டுக்கோட்டை பிரகடனத்தைத் தழுவியது ஆனால், திம்பு கோட்பாட்டை உள்ளடக்கவில்லை.இது மட்டுமே மேற்படி நோர்வே நாடுகள் அனுசரணையுடன் வந்த சமாதான காலத்தில் வந்த இடைக்காலத் திட்டமாகும். உண்மையில், ஒஸ்லோ பிரகடனத்தைத் தள்ளி வைப்பதற்காக விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட காய்நகர்த்தலே இது. அரசியல் யாப்பின் 6 ஆவது திருத்த்ச் சட்டமூலத்துடன் தேர்தல்கள் நடந்தமையானது தமிழ் மக்களிடம் இருந்து பெறப்பட்ட இந்த ஆணையில் உள்ள குறைபாடாகக் கருதப்பட வேண்டியுள்ளது. இந்த தேர்தலே இன்று தமிழர் தேசிய கூட்டணியை அரசியலில் இணைத்து வைத்துள்ளது.

இதன் பின்னர் கூட வட்டுக்கோட்டை பிரகடனத்தின் அபிலாஷைகளை கணிசமான அளவுக்கு குறைத்து இந்தியாவும், மற்றைய தலைமை நாடுகளும் தமது நிலவியல் அரசமைப்பு நிகழ்ச்சி நிரல்களுக்குப் பொருத்தமாக அமைக்க முயற்சி செய்தும் இந்த பரீட்சார்த்த அரசியல் தீர்வுகளுக்கு இலங்கை அரசை ஏற்றுக் கொள்ளச் செய்வதில் தோல்வியைத் தழுவின.

அது வெற்றியளித்திருந்தால், வேறுபட்ட மார்க்கமான நிகழ்வுகள் இருந்திருக்கக்கூடும், ஐக்கிய இலங்கைக்குள் இருப்பதையே தமிழ் மக்கள் விரும்புகிறார்கள் என்று அவர்கள் கூறியிருக்கக் கூடும். ஆனால், மிருகத் தனத்துக்கு ஆதரவளிக்கும் அல்லது மிக மோசமான துன்புறுத்தலின்மூலம் ராணுவ தோற்கடிப்பை அனுமதிக்கும் ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்தனர், அதோடு இலங்கையிலுள்ள ஒட்டுமொத்த தமிழினத்தையும் முள்வேலிக்குள் தடுத்து வைக்கும் கலாச்சாரத்தையும் திறந்துள்ளனர்.,

அரசியல் ரீதியாக புதிதாக தம்மை ஒழுங்குபடுத்தும் ஒரு நிலைப்பாட்டுக்கு ஈழத்தமிழர்கள் கொண்டு வரப்பட்டு விடப்பட்டுள்ளனர்.

ஈழத் தமிழ அரசியலின் ஜனநாயக அமைப்பின் தற்போதைய எழுச்சிமிக்க தோற்றத்தில், திம்புவுக்கு ஒரு இடமுமே கிடையாது. ஒஸ்லோ அல்லது பிற எவையாகட்டும் அவை அதிகாரச் சிறையின் கீழேயே உள்ளன.

அங்கு ஜனநாயகம் இருந்தால், பின்னர் மக்கள் கடைசியாகக் கொடுத்த ஆணையை நோக்கிச் செல்வதற்கு தடை செய்ய வேண்டி ஒன்றுமே இருக்காது. இப்பொழுது என்னவென்றால், தமிழ் மக்கள் தமக்கான தேவை இப்போது அதிகம் என எண்ணும் நிலை வந்துள்ளது, எனவே இப்புள்ளியிலிருந்து தமக்கான சமரசங்களை ஆரம்பிக்கவும் அரசியல் செயல்பாட்டை ஆரம்பிக்கவும் வேண்டிய நிலை வந்துள்ளது.

இருப்பினும், தமிழ் மக்கள் மீதான ராணுவ வெற்றியை திணித்த மிகுந்த சக்திகள் எல்லாம் கைது செய்தல்கள், கொள்ளையடிப்புகள் அல்லது தமிழ் மக்களின் ஜனநாயக அரசியலை மீறுதல் என்பவற்றின் மூலமாக, அரசியல் ரீதியாக அவர்களைத் தோற்கடிக்க வெளியேறிவிட்டன.

இந்த செயற்பாட்டில், முரட்டுத்தனமான அதே நேரம் தரமுயர்ந்த முறைகளில் இந்தியாவும், மேற்குலகமும் மிகவும் தந்திரமன முறையில் போட்டியிடுகின்றன. தமிழ் மக்கள் மீது ராணுவ தோற்கடிப்பைத் திணிப்பதற்கு எண்ணியிருந்தவர்களுக்கு இப்போது அது கைவிட்டுப்போன முடிவாக இது இருப்பதால், தயார்படுத்தல்கள், நிறுவன ஒழுங்கமைப்புகள், மற்றும் ஆட்சேர்ப்புகள் என்பவற்றை அவர்கள் நீண்ட காலம் முன்னரே செய்து விட்டனர்.
இனத்தை மையப்படுத்தாமல் செயல்படும் தமிழ் பிரமுகர்களின் நல்லொழுக்கத்தை அல்லது காலனித்துவ காலத்திலிருந்தே தமிழர்களிடம் விதைக்கப்பட்டிருந்த பலவீனமாகிய பிறரின் விருப்பங்களுக்கு ஏற்ப தமது அரசியல் அமைப்புகளை நிர்மாணித்துக் கொள்ளும் தன்மையை மேற்குறிப்பிட்ட நாடுகள் நன்கு அறிந்து வைத்துள்ளன.

அதாவது பிரிட்டன் காலனித்துவ விருப்பங்கள், கொழும்பு மத்திய அரசின் விருப்பங்கள், இந்தியாவின் ஆசைகள், மேற்குலக விருப்பங்கள் ஆகிய அனைத்துக்கும் தமிழ் பிரமுகர்கள் விட்டுக் கொடுத்து வந்துள்ளனர். மேலும் ரஷ்யா மற்றும் சீனாவின் எண்ணங்கள் சிலவற்றுக்கு விட்டுக்கொடுத்த காலமும் உள்ளது.

அறிவாளிகளான ஈழத் தமிழ் அரசியல்வாதிகள் பலரும் எப்போதுமே மற்றவர்களுக்குப் பயந்து கொண்டு தமது எண்ணங்களை மறைத்து வந்துள்ளார்கள் அதோடு தமது கருத்து நியாயங்களைச் சிந்திக்காது பிறருக்காக சிந்தித்து வந்துள்ளனர். இதில் விதிவிலக்கானது வட்டுக்கோட்டை பிரகடனம், இதுகூட இளைஞர்களின் துணிச்சலால் வெளிப்பட்ட ஒன்று என்றே கூறப்படுகிறது.

அதிகார வர்க்க நாடுகள், பிரச்சாரங்கள் மற்றும் கருணாநிதிகளால் செல்வாக்குச் செலுத்தப்பட்டு சோர்வடையச் செய்யப்பட்டார்கள் நமது தமிழ் அரசியல்வாதிகள். இப்போது சில பிரமுகர் வட்டாரங்களிடையே, சக்தி வாய்ந்த ஆயுதப் போராட்டமே தோல்வியுற்றுள்ளதால் ஜனநாயக அரசியலால் எதை அடைய முடியும், இதயத்துக்கு இப்போது வேண்டியது துணிச்சலே என்பது போன்ற முணுமுணுப்புக்களைக் கேட்க முடிகிறது.

நீங்கள் என்ன வேண்டும் என நேர்மையாக எண்ணுகிறீர்களோ அந்த கோரிக்கையைப் பதிவு செய்து, பின்னர் அதற்காக வாதாடுங்கள் அல்லது ஏற்றுக் கொள்ளக்கூடிய முடிவு கிடைக்கும் வரை அதற்கான பேச்சுக்களில் ஈடுபடுங்கள். அவ்வாறு ஜனநாயக நாடு ஒன்றில் கிடைக்கும் பலமான தீர்வானது கூடிய சட்டபூர்வமானது, அதோடு கூடுதலாக இயங்கக்கூடியது. இதனை அறிந்து கொள்ள இவர்கள் தவறிவிட்டார்கள்.

முதலில் நாங்களாகவே எங்கள் அரசியலை உறுதியாக சுதந்திரமாக அமைப்பதற்கான மனோதிடம் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். இவ்வாறு அமைத்ததன் பின்னர் மட்டுமே இதை பிறருடன் தொடர்பு படுத்தலாம். பிறருடைய மனங்களின் ஊடாக எங்கள் விடயங்களைக் கவனிக்க ஆரம்பிக்கும் போது இது கூட சாத்தியமாகாது. இவ்வாறான மனப்போக்கு இருப்பதே எங்கள் அரசியல் அமைப்புக்கு மிகப் பெரிய தடைக்கல்லாக உள்ளது.

முள்ளிவாய்க்கால் தோற்கடிப்பானது உண்மையான தோற்கடிப்பல்ல. இதை கொழும்பு அரசும் அறியும். தமிழ் மக்களின் அபிலாஷகளை அரசியல் ரீதியாக அவர்கள் பகிரங்கப்படுத்தும் போதே உண்மையில் அவர்களுக்கு வெற்றி கிட்டும். இந்த வெற்றியை மிக இலகுவாக அடையும்பொருட்டு, தமிழ் மக்களை அவர்களுடைய இன அபிலாஷைகளைக் கைவிடும்படி வற்புறுத்தும் முயற்சியில் ஈடுபடுத்துவதற்காக முகவர்களைத் தேடித் திரிகிறது அரசு.

தமிழ் மக்களின் மனவுறுதியை அரசியல் ரீதியாக சோர்வடையச் செய்யலாம் என்ற நம்பிக்கையில் அரசானது பயங்கரமான பாதகமான ஒரு நிலமையைத் தோற்றுவித்துள்ளது. ஆனால், தமிழர்களுக்காக அன்றி, தமது சொந்த அபிலாஷைகளுக்காகவேனும் அரசானது மிகக் கூடிய விரைவில் தீர்வைக் கண்டு கொள்ள வேண்டும் என்பதை உணர ஒருவரும் தவறக்கூடாது. நிலமைக்கு முகம்கொடுக்க தமிழர்கள் தமது சொந்த அரசியலுடன் தயாராக வேண்டும்.

கடந்த காலங்களில், தமிழ் மக்களின் அபிலாஷகளைக்கு ஏற்ப நடக்கத் தவறியமையும், மிதமிஞ்சிய அதிகார வர்க்கத்துடன் தமது தேவைகளைக் கேட்டுப் பேச முடியாத தன்மை இருந்தமையுமே ஆயுத போராட்டம் ஒன்றை உருவாக்கவும் ஏற்றுக் கொள்ளவும் வழியமைத்துக் கொடுத்தது.

எனவே, ஜனநாயகத்தைத் தாங்கிப் பிடிக்கவும், இன்னுமொரு ஆயுத போராட்டம் தோன்றுவதைத் தவிர்ப்பதற்கும் விரும்பினால், தமிழர்களின் அபிலாஷைகளையும் தேவைகளையும் திடமாக எடுத்துக் கூறி வாதாடக்கூடிய உண்மையான அரசியல் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதில் தமிழர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிகார வர்க்கத்தினரும் தமது பயத்தைப் பகிர்வதால், அவர்கள் இந்த உண்மைநிலைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கூற வேண்டிய அவசியம் இல்லை.தமிமீழ தேசிய ஜனநாயக அரசியல் உருவாக்கத்துக்கான விஷப்பரீட்சையே இப்போது நடக்கிறது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்க புலம் பெயர் தமிழர்கள் எடுக்கும் நடவடிக்கையானது, இலங்கைத் தமிழர்களின் சுதந்திரம், விடுதலை என்பவற்றுக்காக மட்டுமன்றி, உலகளாவிய ஒற்றுமைக்கு, பண்பாட்டு அடையாளத்துக்கு, புலம் பெயர் தமிழர்களின் அபிவிருத்தி மற்றும் உலகளாவிய மதிப்பு என்பவற்றை நிலைநிறுத்திக் காட்டுவதற்குமான ஒரு அரசாங்கமாகும்.

இந்த அரசைப் பிரகடனப்படுத்தும் நடவடிக்கையானது தமிழீழ மக்களின் சுதந்திரம், கௌரவம் பற்றி அதிகார பூர்வமாக அறிவிப்பதிலும், புலம்பெயர் நாடுகளிலுள்ள மக்களின் கருத்துகளைப் பெறுவதிலும் ஒன்றைப் பற்றியும் கவலை கொள்ள வேண்டியதில்லை, சமகாலத்தில் புரிந்து கொள்ளப்பட்ட சுய தீர்மானம் என்ற பதமானது, மக்கள் அல்லது இனங்களுக்குப் பிரயோகிக்கும்போது கருத்துத் தெளிவில்லாத ஒரு பதமாக இருக்கிறது. ஐ.நா சாசனம் 1(2) இன்படி, நாட்டிலிருந்து நாட்டுக்கு உள்ள உறவில் மட்டுமே உள்ளது. சட்டப்படி, இது நாடுகளை மட்டுமே பாதுகாக்கிறது.

புலம்பெயர் தமிழர்கள் இதை முக்கியமாக மிகக் கவனத்துடன் ஆராய்ந்து, இனிவரும் திட்டங்களில் இதைச் சரி செய்து கொள்ள வேண்டும். கொழும்பு மற்றும் இந்தியாவின் பல சிக்கல்கள், கட்டுப்பாடுகளின் கீழ் இயங்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர், அவர்களாக ஈழத் தமிழர்களின் சுதந்திரத்தை வெளிப்படையாக கண்டனம் தெரிவிக்கவோ, பிரிந்து போகும் அதிகாரத்துடன் கூடிய ஐக்கிய நாடு ஒன்று தவிர வேறொரு பரீட்சார்த்தங்கள் எதற்குமே அவர்கள் உடன்படக் கூடாது என்பதே புலம்பெயர் மக்களின் பலத்த கருத்தாக உள்ளது.

உருவாகும் தமிழ் அரசியலானது தூர நோக்குடன் செயற்பட வேண்டும். இப்போதுள்ள நிலவியல் சம்பந்தப்பட்ட அரசியலானது இவ்வாறே தொடர்ந்து நீடிக்க மாட்டாது. இப்போது மிகவும் கடினமான ஒன்றாக உள்ள சுதந்திரம் மற்றும் தனி அரசுக்கான தேசிய அபிலாஷையானது, சிலவேளை மீண்டும் வரைவிலக்கணப்படுத்தப்படலாம். பிராந்திய ரீதியாகவோ அல்லது உலகளாவிய ரீதியாகவே பகிரப்பட்ட அரசின் எதிர்காலச் சாத்தியத்தில், கடந்த காலங்களில் ஈழத் தமிழர்கள் சந்தித்த எந்தவொரு பாதிப்புகளும் இல்லாமல் சுமுகமான முறையில் அவர்கள் தமக்குரிய நிலையைக் கண்டறியக் கூடியதாக இருக்க வேண்டும்.

தம்மிடையே உள்ள சில மார்க்சிஸ்ட்களை ஈழத்தமிழர்கள் சோகத்துடன் பார்க்கிறார்கள் குறிப்பாக முன்னாள் 'பெக்கிங் விங்' ஈழத்தமிழர்களுக்கு தனித்த தேசியம் இருப்பதை பகிரங்கமாகக் குற்றம் சாட்டியவர். இதேபோன்றாதொரு கருத்தையே இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கொண்டுள்ளது.

இனவாத அடிப்படையில் ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலையானது நசுக்கப்பட்டு, 'ஈழம்' என்பது அவர்களுக்குரிய ஒரு அரசியல் பிரிவாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றால், அவர்களால் தாங்கிப் பிடிக்கப்படும் அரசியல் பிரிவான ஒன்றுபட்ட இலங்கை தேசியமும், இலங்கையும் கொள்கைகள் ரீதியில் எந்த வழியில் சரியானது என்பதை அறிந்து கொள்வது மிகவும் கடினமாக இருக்கும். ஏகாதிபத்தியத்தால் ஏற்படும் பிரச்சனைகளே தமிழ் மக்களின் போராட்டம் என பார்க்கும்போது, போராட்டங்களைப் பலமிழக்கச் செய்வதன் மூலம் அவர்கள் நடைமுறை ரீதியில் சிறந்த ஏகாதிபத்தியமாகச் செயல்படுகின்றனர்.

அர்த்தம் கொடுக்கக் கூடிய வகையில், பல சிங்கள மார்க்சிஸ்டுகள் நீதி நியாயத்தைப் பார்த்து தமிழ் மக்களின் போராட்டத்தை அடையாளப்படுத்துகிறார்கள்.

கடந்த காலங்களில் ஈழத் தமிழர்களின் சமூக வளர்ச்சிக்கு மார்க்சிஸ்டுகள் பங்களிப்பு நல்கியுள்ளனர். சமூக சமத்துவத்தை அடைவதன் மூலம் தமிழ் மக்களை ஒன்றுபடுத்தி பலமாக்கியதிலும் அவர்களுக்கு கடமை உள்ளது. அரசியலின் ஜனநாயகமானது அவர்களுக்கு சாதகமான சூழலாக அமைந்தது. ஆனால், தமிழ் மக்களின் விடுதலையைப் பற்றிப் பேசாமல் இருந்துகொண்டு, தமிழ் மக்களின் பங்களிப்பைப் பெற வேண்டும் என்பதற்காக அவர்கள் தமிழர்களைக் கவரக் கூடாது.

தமிழ் மக்களின் எண்ணங்களை பிரயோகிக்கவும் இதை தாய் நாட்டிலும் சரி, நாடுகடந்த அரசாங்கத்திலும் சரி மெருகூட்டி வடிவமைக்கவும் தமிழ் மக்களை ஒரு பிரிவாக ஏற்றுக் கொள்வதன் மூலம் தமிழர்களின் குறிக்கோள்களை அடையச் செய்யலாம் என்பதை மார்க்சிஸ்டுகள் ஏற்க வேண்டும்.

Comments