இலங்கை - இந்திய உறவும் ஈழத் தமிழினவிடுதலைப் போராட்டமும் - 3


அண்மையில் வெளியான இரு செய்திகள் ஈழத் தமிழர் நோக்கியதாக உள்ளன. இவை இரண்டும் இரு வேறு தளங்களில் இருந்து நேரெதிர்த் தரப்புகளால் வெளியிடப்பட்டவை. எனவே இரண்டும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாக உள்ளன.

முதலாவது ஜே.வி.பி. கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அநுர திசநாயக்காவால் தெரிவிக்கப்பட்ட கருத்து. புலிகள் இயக்ததையும்; அதன்ஆதரவாளர்களையும் பயங்கரவாதிகள் என்றும் பாசிச வாதிகள் என்றும் கீறல் விழுந்த பழைய கிராமபோன் தட்டுப் போல் வசை பாடும் இரயாகரன் போன்ற [தமிழ் புத்தி இல்லா ஜீவிகள்] அழுது வடிந்து கொண்டிருக்கும் வேளையிலும் அநுர தெரிவித்துள்ள கருத்து மிகவும் பெறுமதி வாய்ந்த ஒன்றாக உள்ளது.

இதுதான் அவரது கூற்று, 'நடந்து முடிந்த யுத்தம் பிரபாகரனின் உருவாக்கம் அல்ல. வரலாற்றைப் பிரபாகரன் நிர்மானிக்கவில்லை. வரலாறுதான் பிரபாகரனை உருவாக்கியது." தூரத்தே இருந்து பார்த்த அநுரவுக்குத் தெரிந்த இந்த உண்மை

அருகில் இருந்து போராட்டத்தின் அங்கமாக விளங்கிய இரயாகரன் போன்றோரிடம் இல்லாமல் இருப்பதுதான் புத்திஜீவித்தனமோ ,[சிங்கள விசுவாசமோ, விபச்சாரமோ ]என நினைக்கத் தோன்றுகிறது.

இந்த இரயாகரன் என்ற சிங்கள விபச்சாரியை புத்திஜீவியாக நினைத்து அதற்கு ஒரு விமர்சனம் எழுதுவது ஆய்வாளரின் குறைபாடு

இரண்டாவது சேதி தமிழகத்தில் சூறாவளிப் பிரச்சாரம் செய்த அகில இந்தியக் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் செயலரும் ராஜீவ், சோனியா காந்தி ஈன்றெடுத்த இந்தியாவின் அரசியல் வாரிசுமான ராகுல் காந்தி தெரிவித்த கருத்து.

ஈழத் தமிழர் பற்றிய பிரச்சினை பற்றிப் பத்திரிகை நிருபர் ஒருவரின் கேள்விக்குப் பதிலாக விழுந்த முத்துக்கள் அவை. 'பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிடுவது போல் ஈழத் தமிழருக்குச் சகலவிதமான அரசியல் உரிமைகளும் பெற்றுக் கொடுக்கப்படும். அதற்கு மேல் எதுவும் கிடைக்காது."

இந்தப் பதிலில் 1987 ஆம் ஆண்டில் இந்தியத் தூதுவர் டிக்சிட் காட்டிய திமிர்த்தனம் இளையோடி நிற்பதைக் கவனிக்கலாம். அதுவும் எமது பத்து வருடத்துக்கும் மேலாகப் பல வெளிநாட்டவர்களால் புகழ்ந்து போற்றப்பட்ட தனி அரசு நோக்கிய அரசையும் அதன் கட்டுமானங்களையும் அந்தப் பெருமைகளுக்குக் காரணமான புலிகள் அமைப்பையும் பல்லாயிரம் அப்பாவிப் பொதுமக்களைக் கொன்றொழித்தும் மேலும் 3 இலட்சம் வரையான பொதுமக்களை வதை முகாம்களுக்குள் வைக்கப்பட்டுள்ள நிலையிலும் தெரிவிக்கப்பட்ட கருத்து இதுவாக இருக்கிறது.

நடத்தப்பட்ட, இன்னும் தொடருகின்ற துயரங்களுக்கான நிவாரணமோ இழப்பீடோ பரிகாரமோ, நேர்மையான நீதி விசாரணை கூட இடம்பெறாதவாறு இலங்கை அரசின் அடியாளாக இந்திய செயற்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தெரிவிக்கப்பட்ட மனிதாபிமானம் சிறிதளவேனும் இல்லாத கருத்து. இப்படியான ஈழத் தமிழருக்குப் பாதகமான கொடுமைகளைச் செய்தபடியே ஈழத் தமிழரின் தலைவிதியை முடிவு எடுக்கும் உரிமை இந்தியாவுக்கு எங்கிருந்து கிடைத்தது? எங்கள் மீது நாட்டாண்மை காட்ட இவர்கள் யார்?

எமது சகோதர இனமான சிங்கள மக்களின் மக்களால் தெரிவான அரசியல் கட்சிப் பிரதிநிதியான அநுர திசநாயக்க மிகத் தெளிவாகச் சிந்தித்துக் கருத்துத் தெரிவிக்கும் வேளையிலும், எந்த மக்களாலும் தெரிவு செய்யப்படாத மன்மோன் சிங்கும், இத்தாலி நாட்டுக்காரி சோனியாவும் அவர்களின் தயவில், உயிர் வாழும் இந்தியக் காங்கிரஸ் கட்சியும் எங்கள் மக்களின் பிணக் குவியல் மீது நின்று அதிகாரம் செலுத்தி ஆணையிட நாம் எப்படி அனுமதிப்பது?

1920 ஆம் ஆண்டு முதலே ஈழத் தமிழர் தமது தன்னாட்சி இறைமைக்கான குரலை எழுப்பி வருகின்றனர். வரலாற்றில் இந்திக்காரனுக்கும் சிங்களவனுக்கும் முன்பே தனி அரசும் படையும், கொடியும் முடியும் கெண்டிருந்த எமது இனத்தின் மீது நாட்டாண்மை செய்ய இவர்கள் யார்?

தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொய்யாகப் பயங்கரவாதிகள் எனச் சித்தரித்து உலக நாடுகளின் ஆதரவுடன் தமிழீழ விடுதலைப் போரின் தளத்தையும் தலைமையையும் அழித்து விட்டுள்ளமை மறுக்க முடியாத உண்மைகளே. அதற்கான தமிழர் தரப்பின் பிரச்சனைகள் தீர்ந்து விடவும் இல்லை, அவற்றுக்கான போராட்டத் தேவை அதிகரித்து உள்ளதே அல்லாது நீங்கி விடவும் இல்லை.

3 இலட்சம் தமிழ் மக்கள் மீதான திறந்தவெளிச் சிறைச் சித்திரவதையை செய்தபடியே தமிழ் மக்களின் வாழ்விடங்களைச் சிதைத்து அவர்களின் தாயகக் கோட்பாட்டை மறுதலித்து தமிழினத்தை அரசியல் அநாதைகளாக்கி அடிமைப்படுத்துவதில் சிங்கள அரசு சிரத்தை காட்டி வருகிறது. அதன் தமிழ் இன அழிப்புக்குத் துணை நிற்கும் இந்திய அரசுக்கு எமக்கான தீர்வு பற்றிப் பேசவோ தீர்மானிக்கவோ என்ன யோக்கியதை இருக்கிறது?

மனித நேயமும் ஜனநாயக விழுமியங்களையும் பேணிப் போற்றும் நாடுகள் தடுப்பு முகாம்களில் உள்ள மக்களுக்கான மனிதாபிமான வசதிகளும் வாழ்வாதாரங்களுடன் கூடிய விரைவான மீள்குடியேற்றமும் வழங்கப்பட வேண்டிய அவசியத்தை ஐ.நா.விடம் வலியுறுத்தியும் போர்க் குற்ற விசாரணை கேட்டும் நெருக்குதலை இலங்கை அரசின் மீது செலுத்தி வருகின்றன.

இலங்கை - இந்திய அரசுகள் எத்தகைய விசாரணைக்கும் இடம் அளிக்க மறுப்பதோடு மக்களின் அடிப்படை வசதிகள் உரிமைகளைக் கூட மறுப்பதில் உறுதியாக உள்ளன. அதன் பொருட்டுத் தமிழர் தரப்பு அரசியல் பிரதிநிதிகளையும் மனித உரிமை ஆர்வலர்களையும் கொன்றும் நேரடி மறைமுக கொலை மிரட்டல்களாலும் பொய்யான ஜனநாயகத் திரை கொண்டு தமிழர் தரப்பின் 100 ஆண்டுகால அரசியல் அபிலாசைகளை அழித்துத் தமிழரை மீள முடியாத அரசியல் வனாந்தரத்தில் வைத்துவிடத் துடிக்கின்றன.

இத்தகைய செயற்பாடுகளுக்கு எதிராகப் புலம்பெயர் தமிழ் மக்கள் மட்டுமே செயற்பட வேண்டிய நிலையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகளின் கையறு நிலை மிகத் தெளிவாக உணர்த்துகிறது. இவர்கள் ஒவ்வொருவரும் விடுத்து வரும் அறிக்கைகள் முரண்பாடுகளும் கழுவிற நீரில் நழுவுகிற மீனின் தன்மை போன்றும் உள்ளன.

எனவே இந்த ஒரு விடயத்தில் மட்டும் கூட்டமைப்புக்கும் ஏனைய அரசு சார்பு அமைப்புகளுக்கு இடையிலும் அதிக வேறுபாடு காண முடியாது உள்ளது. சிலருக்கு 5 வருடப் பூர்த்தி ஓய்வூதியம் பெறத் தேவையாக உள்ளது. இன்னும் சிலர் மதில் மேல் பூனையாகக் கால நேரம் பார்த்து இருக்கின்றனர். மொத்தத்தில் தமிழரின் அரசியற் செயற்பாடு ஈழத்தில் இலங்கை - இந்திய அரசுகளின் தயவில் தங்கி உள்ள நிலையே உள்ளது. அத்தகைய அரசியல் தமிழினத்தின் அபிலாசைகளைப் பிரதிபலிக்க முடியாது.

தமிழ் மக்களின் ஓரே தெரிவாக ஒட்டுமொத்த ஈழத் தமிழினத்தின் வாழ்வும் சாவும் புலம்பெயர் தமிழரின் கைகளில் மட்டுமே தங்கி இருக்கிறது. கடந்த மூன்று மாத காலமாகப் புலம் பெயர் தமிழரின் தலைமையின் போக்கு பெரும் விசனத்தைத் தருவதாக உள்ளது. அது பற்றிய பார்வை அடுத்த தொடரில் பார்ப்போமே!

-த.எதிர்மனசிங்கம்-

முன்னைய கட்டுரைகள்

இலங்கை - இந்திய உறவும் ஈழத் தமிழின விடுதலைப் போராட்டமும் - 2

இலங்கை - இந்திய உறவும் ஈழத் தமிழின விடுதலைப் போராட்டமும் - 1

Comments