வெளிவிவகாரக் கொள்கை யென்பது மத்திய அரசுக்குரியது என்று மாநில அரசுகள் கூறுவது தற்கால உலகில் வெறும் நொண்டிச் சாட்டாகும். ஒரு சமஸ்டிக் குடியரசில் மத்திய அரசு தான் வெளிவிவகாரக் கொள்கையில் தோல்வியடையும் போது அது மாநில அரசுகளை வெகுவாகப் பாதிக்கும். முதன் முறையாக தமிழ் நாடு அரசின் குழு சிறிலங்கா சென்றிருப்பது ஒரு மாநில அரசின் நாடு கடந்த வெளிவிவகார நடவடிக்கைக்கு ஒர் திறவுகோலாக அமைகின்றது. மகிந்த ராஐபக்சாவின் அரசின் ராஐதந்திரத் திட்டமிடல்கள் ஒரு வகையில் தன்னைப் போர்க்குற்றங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வதோடு தனது நாட்டின் வளங்களை கையூட்டாக துணை நாடுகளுக்கு வழங்குவதன் மூலம் தன்னைத் தண்டனையிலிருந்தும் தப்பித்துக் கொள்ள வைக்கிறது.
இவர்களின் துணையோடு தமிழர்களைக் கொன்றொழிக்கும் தன் இனவழிப்பைத் தொடரந்து நடாத்தி சிங்கள மக்களின் பேராதரவையும் தக்கவைத்துக் கொள்கிறது. போரிற்கு ஆதரவளித்த சக்திகள் பாரட்டப்படும் பங்கு கொடுக்கப்படும் வோளையிலும், இந்திய வியாபார பொருளாதார ஸ்தாபனங்கள் பெரும் தொகையாக சிறிலங்காவிற்குள் நுழைந்திருக்கும் வேளையிலும் தமிழ் நாட்டுக் குழுவினரின் வருகை போரின் தமிழ்நாடு அரசிற்கான பங்கைப் பெற்றுச் செல்வதற்குத்தானே என்ற ஐயம் தமிழ் மக்களிடையே தோன்றியுள்ளது. குழு அமைக்கப்பட்ட விதம் அவர்கள் நிகழ்ச்சிகளிருந்து இதை வலுப்படுத்துகின்றன. இவர்கள் யாருமே உடனடியான மீள் குடியேற்றத்தை விவாதித்து சிறிலங்காவை நிர்பந்திக்கக் கூடிய அதிகாரங்கள் எதுவும் அற்ற வெறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
இவர்கள் செயற்திறன், அதிகாரம் பற்றி புலத்திலும் புலம் பெயர் தேசங்களிலும் தமிழர் ஊடகங்கள் கேள்வியயழுப்பியுள்ளன. யாழ் நகரில் வெளியாகும் உதயன் நாளிதல் இவர்கள் மிருகக் காட்சிச் சாலையைப் பார்வையிட வரும் உல்லாசப் பயணிகள் என வர்ணித்திருந்தார். இக் குழுவிலுள்ள சிலர் மகிந்த ராஐபக்சாவின் நிகழ்சி நிரலுக்கேற்ப தடுப்பு முகாமிலுள்ளவர்களின் சிறைவைப்பை ஆதரித்து நியாயம் கற்பிற்க முயல்கின்றனர். எற்கனவே துன்பங்களுக்கும் மன உளைச்சலுக்கும் ஆன மக்கள் இவர்களுக்கான திருவிழா வரவேற்புக்கள் மூலம் மேலும் நோகடிக்கப்பட்டுள்ளனர். சில பாரளுமன்ற உறுப்பினர்களாலும் இந்திய தூதரக அதிகாரிகளாலும் இவர்கள் மனங்கள் நோகடிக்கப்பட்டுள்ளனர். யாழ் நகர் எங்கும் சோனியாவினதும், கருனாநிதியினதும், ராஐபக்சாவினதும், டக்ளசினதும் உருவப்படங்கள் பாரிய அளவில் வைக்கப்பட்டு சோடனை செய்யப்பட்டு மக்களின் மனங்களை நோகடித்தே இந்தக் கூட்டக் குழுவிற்கு வரவேற்பு செய்யப்பட்டது.
இந்திய அரசின் நேரடிப் பங்களிப்பில் கொன்றொழிக்கப்பட்ட தமிழினப் படுகொலைக்காக குறைந்தபட்சம் இக்குழுவினர் பொறுப்பேற்று வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். தம் கையோடு ஒர் அடையாளமாக வெறும் நிவாரனாப் பொருட்கனைக் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் எதுவுமே செய்யப்படவில்லை. இதே இந்தியாவிற்கு போட்டியாக இந்தியாவின் எதிரி சீனா தமிழர் போரை நசுக்குவதில் இறுதிநேரத் தீர்மானம் எடுக்கும் சக்தியாக இருந்திருக்கிறது. எத்தனை தாக்குதல் ஆயுதங்களும் வழங்கப்பட்டது. போரின் பின்னரான சர்வதேச ராஐதந்திர நகர்வுகளிலும் சிறிலங்காவிற்குப் பாதுகாப்பு அரணாக விளங்கியது. இதற்கு ஈடு கொடுக்கும் விதமாக இந்தியா தனது பங்களிப்பைத் தமிழர் இனவழிப்பில் சளைக்காமல் வழங்கியது. ஆனால் போட்ட முதலுக்கு மோசம் போல் சிறிலங்காவின் நன்றி சீனாவின் பக்கமே அதிகம் சாய்ந்தது.
போரின் ஆரம்பத்திலிருந்து இந்தியா தனது ஆயுத ,இராணுவ, கடற்படை உதவிகளை எந்த விதக் கட்டுப்படும் இல்லாமல் வழங்கியது. சிறீலங்கா கடற்படை தளபதி வசந்த கர்ணா கொட போரின் முடிவில் வழங்கிய அறிக்கையில் , இந்தியக் கடற்படை வழங்கிய உளவுத் தகவல்களின் ழூலமே தாங்கள் புலிகளின் ஆயுத விநியோகக் கப்பல்களை அழித்ததாகவும் அந்த நடவடிக்கையே போரின் திருப்பு முனையாக மாறி சிறீலங்காபடையினர் அடைந்த வெற்றிக்குக் காரணம் என்று இந்தியத் துரோகத்திற்குச் சாட்சியம் கூறியிருந்தார். இந்த உதவிகளைப் பெறும் போது சிறீலங்கா இந்தியாவிற்கு புது டெல்லியில் தங்கள் தேவைக்குரிய ஆயுதங்கள் தர இயலாமல் போனால் மட்டுமே வேறு ஆயுத முகவர்களை அணுகுவோம். அது தவிர இந்தியாவிடம் இருந்து மட்டுமே ஆயுதம் பெறுவோம் என உறுதி கூறியிருந்தது.
ஆனால் வழமைபோல் யாருக்குமே நேர்மையாக இருந்து பழக்கப்படாத சிறீலங்கா அரசு இந்திய அரசிற்குத் தெரியப்படுத்தாமலே சீனாவுடனும் பாகிஸ்தானிடமும் ஆயுதம் பெற்றுக் கொண்டது. இந்தியா பிராந்திய வல்லரசு என்ற நிலையைக் கேலிக் குள்ளாக்கி இந்தியாவின் எதிரி நாடுகளைத் தன்பக்கம் சேர்த்துத் தனது இராணுவ வெற்றியை ஈட்டியது. சிறீலங்கா தான் எவ்வளவுக் கெவ்வளவு இந்தியாவின் எதிரிகளோடு கூட்டுச் சேர்கிறோமோ, அந்தளவுக்கு இந்தியா சிறீலங்காவிடம் வலிய நெருங்கி வந்து உதவி செய்கிறது என்பதைப் புரிந்து காய்நகர்தியது. அது மட்டுமல்லாமல் இந்தியாவின் கொல்லப்புறத்தில் இந்தியாவின் எதிரிகளுக்கு ஒரு இயங்கு களத்தையும் உருவாக்கிக் கொடுத்துள்ளது.
தமிழர்களுக்குத் துரோகம் செய்தது மட்டும் மல்லாது தமிழர்களின் மீது செய்யப்பட்ட இனவழிப்பு இரத்தக்களரியில் சிறீலங்காவோடு கைகோர்த்து நின்று நேரடிப் பங்கையும் வகித்துள்ளது இந்தியா தனது தமிழர்கொதிரான நிலைப்பாட்டை 80 களிலேயே எடுத்து விட்டது. தம் பிராந்திய நலனுக்காக ஆயுதம் கொடுத்து வளர்த்து விட்ட போரைட்டத்தை, அமைதிப்படையயன்ற பெயரில் அழித்தொழிப்பதற்கு முயன்றது, காரகில் எல்லைப் போரில் இழந்ததை விடப் பல மடங்கு அதிகமானது. இராணுவத்தையும் இழந்து தன் மூக்கையும் உடைத்துக்கொண்டுள்ளது. இந்தியா தனது வளங்களை இன்று சீன பாகிஸ்தான் ஆதிக்கத்தçச் சிறீலங்காவில் உடைப்பதற்குப் பறன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டவில் பில்லியன் டொலர் பெறுமதியான துறைமுகத்தைச் சீனா கட்டிக்கொண்டிருப்பது இந்தியக் கடலில் சீனாவால் இந்தியாவுக்கு விடப்பட்டிருக்கும் ஒரு கேந்திர சவாலாகும்.
ஜே.ஆர். ஜெயவர்த்தனா ராஜீவ்காந்தியின் மனதில் ஒரு நஞ்சைவிதைத்து தமிழீழத் தனியரசு அமைந்தால் அது இந்தியாவில் வாழும் தமிழ் நாட்டுமக்களையும் தனநாடு பிரிக்கவைத்து மாபெரும் தமிழீழம் அமைந்து விடும் என்று பதிவு செய்துவிட்டார். அரசியல் அனுபவங்களும் வெளிவிவகார அறிவுத்திறனும் அற்ற ராஜீவ்காந்தி இதை முழுமையாக நம்பியிருந்தார் அல்லது நம்ப வைக்கப்பட்டார். இதனாலேயே தாயாரல் தோற்றுவிக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்ட தமிழர் விடுதலைப்போராட்டத்தை எதிர்க்கத் தன் இராணுவத்ததை ஏவினார். ஆனால் பங்களாதேஷ் பிரிக்கப்பட்டபோது இந்தியாவில் வாழும் வங்காளிமக்கள் தொடர்ந்தும் இந்தியப்பிரஜைகளாகவே இருப்பதைக் கவனிக்கத் தவறிவிட்டார். இதுவே இந்தியாவின் தமிழர்க்கெதிரான வரலாற்றுத் துரோகத்திற்கு அடிகோலியது.
சிறீலங்காவில் தமிழர்கள் சிங்கள பெளத்த பேரினவாதத்தால் நசுக்கப்பட்டபோதே அவர்களின் விடுதலைப் போராட்டம் ஆரம்பமாகியது.ஆனால் இந்தியாவில் தமிழ்நாட்டில் வாழும் தமிழர்கள் அத்தகைய அடிமைத்தனம் எதற்குள்ளும் சிக்காமல் தேசிய நீரோட்டத்தில் முழுமையாகக் கலந்துள்ளனர். ஆகவே அவர்கள் பிரிவதென்பது அடிமுட்டாளும் நம்பமுடியாத உண்மையாகும். ஆனால் முன்னைநாள் இந்தியப்பிரதமருக்கும் இன்றைய கொள்கைவகுப்பாளர்களுக்கும் இந்தத் தெளிவு ஏற்படவில்லை. இந்தத் தவறிலிருந்து மீளமுடியாது இன்று இந்தியா பெரும விலைகளைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றது. இந்தியாவிற்கான எதிரிகள் அதன் கொல்லைப்புறத்திலேயே வளர்வதற்கு வாய்ப்புகளை வழங்கிவிட்டது. பூட்டானை மட்டுமே தன் ஆதிக்கத்தில் தக்கவைத்துக் கொண்டு ஏனைய எல்லைகளைப் பாதுகாப்பற்றதாக்கிவிட்டது.
இந்தியாவை வெறும் வர்த்தக முதலீட்டாளர்களாக மட்டுமே நிறுத்தித் தன் அரசியல் எல்லைக்கு வெளியிலேயே சிறீலங்கா நிறுத்தியுள்ளது.இந்த அரசியல் குறுக்குச்சுவரை உடைப்பதற்கான ஒரு முயற்சியாகவே இந்தியத் தூதுக்குழுவை அனுப்பியுள்ளனர். போருக்குப் பின்னான மத்திய அரசினதும் தமிழ்நாட்டு அரசினதும் நடவடிக்கைகள் ஒரு போலித் தன்மையுள்ளதாகவே இருக்கின்றது. கருணாநிதி, தமிழர் விடுதலையைக் கொச்சைப்படுத்தியதற்காகவும், இனவழிப்புக் கூட்டத்துடன் கூட்டுச்சேர்ந்து கொண்ட தமிழீழத் தேசிய விடதலையை எதிர்த்ததன் மூலமும் தன்மீது பெரும்கரும்புள்ளியைத் தானே குத்திக்கொண்டுள்ளார். தமிழ் நாட்டின் சில புல்லுருவிகள் மத்திய அரசோடுசேர்ந்து நின்றாலும் பெரும்பான்மையான தமிழ்நாட்டு மக்களும் தமிழக அரசியல்வாதிகளும் தமிழீழத் தேசிய விடுதலையின் ஆதரவாகவேயுள்ளனர்.
உண்மையில் இன்றைய தமிழீழ எதிர்ப்புப்போர் தென்னிந்தியாவில் இரு மாநிலங்களுக்கிடையே உள்ளது. தமிழ்நாட்டிற்கும் கேரணாவிற்கும் இடையேயான போராகவே இது மாற்றம் அடைந்துள்ளது. தென்னிந்தியாவின் நான்கு மாநிலங்களும் தங்கள் புவிசார் அரசியல் இலாபங்களுக்காகவும் முக்கியத்துவத்திற்காகவும் விழித்துக்கொள்ளவேண்டிய வேளைவந்துவிட்டது. அவர்களின் பாதுகாப்பும் பலமும் ஒரு நட்புநாடாகத் தமிழீழ அரசை நிறுவுவதன் மூலமே தக்கவைக்கப்படும். இது தவறவிடப்படின் அரவ்களுக்குத் தேவையில்லாத தலையிடியை அயலில் சந்திக்க நேரிடும்.
இந்த நான்கு மாநிலங்களும் தம்முள் ஒற்றுமையை வளர்த்துத் தமது பலத்தையும் தமது ஒன்றிணைந்த வளங்களையும் சர்வதேசத்திற்கு நிரூபிப்பதன் மூலம் தமது அரசியல் நுட்பங்களை முன்னிறுத்தி சர்வதேச உறவுகளைப் பலப்படுத்தித் தங்களை திடப்படுத்திக் கொள்ளவேண்டும். மாநில அரசுகள் வெளிவிவகாரச் செயற்பாடுகளில் ஈடுபடுவதை மத்திய அரசும் வால் பிடிக்கும் கருணாநிதியும் ஆரம்மித்து வைத்துள்ளனர். இதைப் பயன்படுத்தி இம்மாநிலங்களும் செயற்பாடுகளை ஆரம்பிக்கவேண்டும். ஈழவிடுதலைக்காக இவர்கள் இணைகிறார்களோ இல்லையோ தங்களுக்காக இணையவேண்டும். ஒன்றுபட்ட பலம் மட்டுமே இந்தியாவிற்குள்ளும் சர்வதேசத்திலும் இவர்களை அடையாளமிழக்காது காத்துக்கொள்ள உதவும்.
சோழ.கரிகாலன்
நன்றி:ஈழமுரசு
Comments