நவம்பர் 27 மாவீரர் தினம் - இணையத்தில் தீப அஞ்சலி செலுத்துவோம்



தமிழ மக்களின் விடிவுக்காய் தமது இன்னுயிரை அர்ப்பணித்தவர்கள் மாவீரர்கள். தேசியத்தலைவர் அண்ணன் பிரபாகரனின் தமிழீழ இலட்சியம்
கனவாகிவிடாமல் அதனை நனவாக்கப் புறப்பட்டு எதிரியுடன் மறப்போர் புரிந்து மண்ணிலும், கடலிலும் தம் உடல்களை வித்தா-க்கிவிட்ட இளைஞர்களும்
யுவதிகளும் தமிழ மக்களால் என்றும் நினைவு கூரப்பட வேண்டியவர்கள்.

இது தமிழ் மக்களுக்கான வரலா-ற்றுக் கடமையும் கூட. 27.11.1982 ல் தனது இன்னுயிரைத் தமிழ் மண்ணுக்காய் ஈந்த முதலாவது மாவீரர் சத்தியநாதன்
என்னும் லெப்ரினன்ட் சங்கரின் உயிர் தியாகம் பெற்ற நாளை மாவீரர் தினமாக தலைவர் பிரகடனம் செய்து கார்த்திகை 27 ஐ தமிழ் மக்களின் பொதுப்
பிரார்த்தனை தினமாக தமிழ் மக்கள் அனுஸ்டத்து வருவது அவர்கள் மாவீரர்களில் கொண்ட மதிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இந்த இணையத்தில் பிரவேசிப்பவர்கள் விரும்பினால் நீங்களும் ஒரு தீபத்தை
ஏற்றலாம்.



http://november27.net/

Comments