ஜனாதிபதித் தேர்தலை வசமாக தமிழர் பயன்படுத்த வேண்டும்


ஜனாதிபதித் தேர்தலை இரண்டு வருடங்கள் முற்கூட் டியே நடத்தும் முடிவுக்குத் தாம் வந்தமைக்கான காரணம் என்ன என்பதை நேற்று அலரிமாளிகையில் பத்திரிகைகள், இலத்திரனியல் ஊடகங்கள் போன்றவற்றின் வெளியீட்டா ளர்கள் மற்றும் ஆசிரியர்களைச் சந்தித்தபோது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விளக்கியிருக்கின்றார்.

"கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது வடக்கு, கிழக்கில் கணிசமான மக்கள் அதில் பங்குபற்ற விடாமல் தடுக்கப்பட் டனர் என்றும், அவர்கள் தங்களின் ஜனாதிபதியைத் தெரிவு செய்ய இயலாமல் போய்விட்டது என்றும் அப்போது முதல் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது. அந்தக் குற்றத்தைக் களைவதற்காக எனக்கு மீண்டும் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் வந்தவுடன் இரண்டு ஆண்டு கள் முற்கூட்டியே மீண்டும் அத் தேர்தலை நடத்துகிறேன். இம்முறை வடக்கு, கிழக்கு மக்களும் முழுமனதாகப் பங்குபற்றித் தமது ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்துக் கொள் ளட்டும்." என்று விளக்கமளித்திருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

நல்லது. வடக்கு, கிழக்கு மக்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பங்குபற்ற முடியாமல் போனமையால் அல்லது பங்குபற்றாமல் விட்டமையால் ஏற்பட்ட தவறைச் சீர் செய்வதற்கான வாய்ப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவே வழங்க முன்வரும்போது அதை வடக்கு கிழக்கு மக்கள், குறிப்பாகத் தமிழ் மக்கள், சரியான முறையில் பயன்படுத்தாமல் விடலாமா?

கடந்த தடவை ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக் குத் தமிழர்கள் வாக்களிக்கத் தவறியமையால் முதலில் நேர்ந்த மாற்றம் வித்தியாசம் என்னவென்பது வெளிப் படையானது; அப்பட்டமானது.

கடந்த தடவை ஆட்சியில் இருந்த அரசின் ஜனாதி பதியின் கட்சியும் தரப்புமே ஆட்சியில் தொடர வகை செய்யும் தேர்தல் முடிவாக அது அமைந்தது. அதாவது, தமிழர்களின் பங்குபற்றுதல் இல்லாத காரணத்தால் ஆட்சி மாற்றம் சாத்தியமாகவில்லை.

இந்தத் தடவை அத் தேர்தலில் பங்குபற்றுவதன் மூலம் ஆட்சி மாற்றத்துக்கு வழிகோலுவதா என்பது குறித்துத் தமிழர்கள் சிந்திக்கவேண்டியவர்களாக இருக்கின்றார்கள்.

வடக்கு கிழக்குத் தமிழர்களுக்காகவே இந்தத் தேர் தலை முற்கூட்டியே தாம் நடத்துகின்றார் என்ற தோற ணையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கின் றமையால், அந்த வழி உபாயத்திலேயே அது குறித்துச் சிந் தித்து நல்ல முடிவை எடுக்கவேண்டியவர்களாக இருக்கின் றார்கள் தமிழர்கள்.
நேற்றுப் பத்திரிகையாளர்களுடன் நடந்த சந்திப்பின் போது இன்னொரு விடயத்தையும் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ கூறியிருக்கின்றார்.

"ஒரு தடவையே உங்களது பதவிக் காலத்தில் அதி காரத்தைச் செலுத்துவீர்கள் என்றும், அதற்குப் பின்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப் பீர்கள் என்றும் தங்களுக்கு எழுத்து மூலம் எழுதி, உடன் பாடு செய்துகொண்ட பின்னரே அதன் மூலம் தங்களது ஆதரவைப் பெற்றே நீங்கள் கடந்த தடவை ஜனாதிபதியானீர்கள் என ஜே.வி.பி. கூறுகின்றது. அந்த உடன் பாட்டை உறுதி மொழியை மீறி, நீங்கள் அடுத்த ஜனாதி பதித் தேர்தலை நடத்த முயல்வது பெரும் அநீதி என்று ஜே.வி.பி. குற்றம் சுமத்துகின்றதோ?" என்ற சாரப்பட பத்திரிகை ஆசிரியர் ஒருவர் கூறியபோது, "அது அநீதி என் றால் ஜே.வி.பியைப் போய் உயர்நீதிமன்றத்திடம் முறைப் பாடு செய்து நீதியைக் கேட்கச் சொல்லுங்கள். அதற்கு யாரும் தடை இல்லையே!"என்று பதிலளித்தார் ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ.

நல்லது. உயர்நீதிமன்றத்திடம் செல்வதிலும் பார்க்க, அதிலும் உயர்ந்த மன்றமான மக்கள் மன்றத்திடம் முறையி டுவதற்கு ஜே.வி.பிக்கு இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தல் மூலம் வாய்ப்புக் கிடைத்திருக் கின்றது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை நீடிப்பதா, இல்லையா என்ற விவகாரத்தை ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலின்போதும் கிளப்பி, "ஜவ்வு' மிட்டாய் மாதிரி அதையே தொடர்ந்து இழுத்துப் பறித்துக் கொண்டிராமல் இது விடயத்தில் இலங்கைத் தீவு ஒரு முடி வைக் கட்டவேண்டிய தீர்மானத்தை எட்டவேண்டிய வேளை வந்துவிட்டது என்றே கருதவேண்டிய சூழல் காணப்படுகின்றது.

உலகமே பார்த்துப் பரிதவிக்கும் மிக மோசமான மிக அவலமான மிகப் பின்னடைவான திசையில் தமிழர் தாயகம் உள்ளது.
இந்தத் துன்ப , துயரங்களுக்கு எல்லாம் மூலகாரணம், நாடாளுமன்ற ஆதரவுப் பலத்துடன் கூடிய நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி நிர்வாகமே என்பது தமிழர்களின் பட் டறிவு; அனுபவம்.

எனவே, ஜே.வி.பி. கூறுவது போல நிறைவேற்று அதி கார ஜனாதிபதி முறைமையை அடியோடு ஒழிப்பது குறித்த தீர்மானத்தில் தமது பங்களிப்பையும் காத்திரமாக வழங்க வேண்டிய வரலாற்றுக் கடப்பாடு தமிழர்களுக்கு இப்போது வந்துள்ளது.

வடக்கு, கிழக்குத் தமிழர்களும் வாக்களிப்பதற்கு விசேட மான ஏற்பாடாக இந்தத் தேர்தலை ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ முன்வைத்திருப்பதால் அதை வசமாக வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வதுதான் தமிழர் களுக்கு நல்லது.

நீதிமன்றத்தை நம்பியிராமல் மக்கள் மன்றத்தில் விட யத்துக்கு முடிவு கட்டவும் வாய்ப்புக் கிட்டியிருக்கின் றது. சட்டம், நீதி, நீதிமன்றம் ஆகியவற்றின் பெயரால் தமிழர்கள் இழந்த பல விடயங்களுக்குச் சரியான பரிகாரம் தேடுவதற்கான சந்தர்ப்பமாகவும் கூட இந்த வாக்களிப் பைப் பயன் படுத்த முடியும் என்பதையும் தமிழர்கள் மறந்துவிடக் கூடாது.

Comments