அத்தோடு அண்மைய காலமாக ஊடகங்களின் முக்கிய செய்திகளாகவும் ஆய்வுகளாகவும் இலங்கைத்தமிழர்களின் அவலம் இடம்பெறுகிறது.
அவுஸ்திரேலியா நோக்கிய அகதிகளின் அதிகரித்த வருகை என்பது பல்வேறு ரீதியான தாக்கத்தினை அவுஸ்திரேலிய உள்விவகார கொள்கையிலும் வெளிவிவகார கொள்கையிலும் சாதகமான பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் ஊடகங்களின் கவனத்தை தம் பக்கம் திருப்ப பல்வேறு ரீதியான முன்னெடுப்புகளை அவுஸ்திரேலிய தமிழ் சமூகம் எடுத்திருந்தது.ஆனால் அதற்கெல்லாம் முழுமையான விளைவு கிடைக்கவில்லை.அதன் பின்னர் இந்த வருடம் நிகழ்ந்த மிகப்பெரிய மனித பேரவலம் தமிழ்ச்சமூகத்தின் செயற்படும் வேகத்தினை மந்தப்படுத்தியது.இருப்பினும் ஒரு சில தமிழ்ச்செயற்பாட்டாளர்களின் நம்பிக்கையுடனான பயணம் தொடர்ந்தது.
“அவுஸ்திரேலிய தமிழர் பேரவை” உருவாக்கம் மிகத்தேவையான ஒரு விடயமாக எல்லோராலும் நோக்கப்பட்டது.அதன் பின்னர் இந்த பேரவையின் செயற்பாடுகள் முனைப்பு பெற்றன.பல காத்திரமான செயற்பாடுகளின் மூலம் அவுஸ்திரேலிய ஊடகங்களின் மெளனத்தை கலைத்தார்கள்.
அதன் பயனாக அவர்கள் “தமிழர்களின் அவலங்களினை” பேசத்தொடங்கிவிட்டனர்.அது அவுஸ்திரேலிய ஊடகங்களை பொறுத்த வரை வர்த்தக ரீதியான இலாபங்களை அவர்களுக்கு பெற்றுத்தந்தது.இருப்பினும் இதன் பயன் தமிழர்களின் உண்மையான அவலம்,பிரச்சினை அவுஸ்திரேலிய மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது.இது மிக முக்கியமான விட்யம்.
“அவுஸ்திரேலிய தமிழர் பேரவையின்” ஊடக பிரிவினரின் செயற்திறன் பாராட்டப்படவேண்டிய விடயம்.அவர்களின் காத்திரமான முற்போக்கான ஊடகங்களை கையாளும் விதம் பல்வேறு ரீதியான நல்ல மாற்றங்களினை ஏற்படுத்தியுள்ளது.
கீழே உள்ள இந்த நேர்காணல் அவுஸ்திரேலிய தமிழர் பேரவையின் திரு.ராஜ் ராஜேஸ்வரன் அவர்களால் வழ்ங்கப்பட்டுள்ளது.மிகவும் நேர்த்தியாக திறமையாக சொல்ல வேண்டிய விடயங்களை தெளிவாக கூறியிருக்கிறார் ராஜேஸ்வரன்.
Comments