நாம் மௌனித்திருக்கின்றோமே தவிர மரணிக்கவில்லை


அன்பான தமிழீழ மக்களே!
தேசப்பற்றாளர்களே! மண்காத்த வீரர்களே!

வணக்கம்தமிழீழ தேசத்தின் விடிவுக்காய் நீண்ட நெடிய எமது விடுதலைப் போராட்டத்தில் நாம் பல இழப்புக்களையும், அழிவுகளையும் சந்தித்திருக்கின்றோம்.

இதுவரை காலமும் இத்தகைய இழப்புகளும் அளப்பரிய சாதனைகளையும் நிலைநிறுத்திய மாவீரர்களின் தியாகங்களும் எம்மை எமது இலட்சிய உறுதியில் திடம் மிக்கவர்களாக உருவாக்கியது. அன்பான உறவுகளே சமகால சூழ்நிலையில் நாம் இராணுவரீதியாக ஒரு பின்னடைவை சந்தித்துள்ளோம். ஆனாலும் இப்பின்னடைவிற்கு பின்னால் ஏறக்குறைய இந்தியா சீனா ஈரான் பாகிஸ்தான் போன்ற நான்கு வல்லரசுகளின் இராணுவ அரசியல் ராஐதந்திர ரீதியிலான நேரடியான செயற்பாடுகள் முக்கியம் பெற்றிருந்தன. இவை தவிர பயங்கரவாதம் என்ற சொற்பதத்தை பயன்படுத்தி தமிழின அழிப்பை நியாயப்படுத்திய சிறீலங்காவை சரியாக இனங்கானத்தெரியாத அனைத்துலக சமூகத்தின் பாராமுகமும் எமது பின்னடைவிற்கான முக்கிய காரணிகளாக இடம் பெற்றுள்ளன.

இரண்டாவது தடவையாக எமது தமிழீழ விடுதலைப்போரில் இந்தியாவின் தலையீடு மிகப்பெரிய இருண்ட யுகத்திற்குள் எம்மை இட்டுச் சென்றுள்ளது. மிக இடர்பாடான இக்காலத்தில் தான் எம் தாய் தேசம் தன் கருவறையில் சுமந்து வந்த துரோகிகளையும் நாம் சரியாக இனங்கான வேண்டிய காலப்பகுதியாகும். நாம் நேசிக்கும் எமது மக்களே நாம் எமது நிலங்களை முழுமையாக இழந்திருக்கின்றோம். எமது பலம் சிதைக்கப்பட்டிருக்கின்றது ஆனாலும் எமது போரிடும் வலு அழிக்கப்படவில்லை. காலநீட்சியில் எமக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் இவ் வஞ்சகமான சம்பவங்களில் இருந்து ஒன்றை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

எம்மைச்சுற்றியுள்ள பிராந்திய வல்லரசுகளின் மீது ஓர் தெளிவான பார்வையுடன் பாதுகாப்புடனுமே எமது எல்லா விதமான போராட்டத்தினையும் முன்னெடுக்கவேண்டும். திறந்த வெளிச்சிறைச்சாலைகளில் துப்பாக்கி முனையில் எமது உறவுகள் சிக்கித்தவிக்கின்றனர். இந் நிலை மானமுள்ள ஒவ்வொரு தமிழனையும் வேதனை கொள்ள வைக்கும் விடயம்தான். ஆனால் விடுதலைக்காக அல்லும் பகலும் தம்மை உறுத்தியும், வருத்தியும் போராடிய போராளிகளே இன்று எம்கனவுகள் நனவாகப்போகவில்லை என்று உள் மனதுக்குள் வாடிவதங்கி, நம்பிக்கையற்று, மனஉழைச்சலாகி, பாதைமாறி பயணிக்க வேண்டாம்.

எமது பெயரையும், நாம் கூடிவாழ்ந்தும், ஒன்றாக கதைபலபேசி படுத்துறங்கிய நண்பர்கள் சாவடைந்து அவர்கள் வரும்போது நாளும் பொழுதும் நாம் அடைந்த துன்பமும் வேதனைகளும், நினைக்கும் போது இன்று எமக்கு தாங்கமுடியாததொன்றாகவல்லவா இருக்கின்றது. அவற்றை நாம் கண்மூடி கொஞ்சம் நேரம் சிந்திப்போம். இன்று எங்களையும் எங்கள் புனிதப்பயணத்தையும் தமது சுயநலத்திற்காக பயன்படுத்தி புலம் பெயர் மண்ணில் அமைப்பைக்களங்கப்படுத்த சிலர் முனைகின்றனர். எல்லோரையும் மன்னிப்போம், அவர்களும் அம்மண்ணின் மைந்தர்கள் என்பதை எமது பண்பால் உணரவைப்போம். இறுதிச்சமர் வரை இலட்சியக் கனவு சுமந்த ஏக்கத்தை எம் கைகளில் தந்துவிட்டு சென்ற மாவீரர்களினதும் ஐம்பதினாயிரத்திற்கு அதிகமான மக்களும் எந்த இலட்சியத்திற்காக தம் உயிர்களை அர்ப்பணித்தார்களோ அந்த உயரிய இலட்சியத்திற்காக நாம் தொடர்ந்து போராடுவோம்.

எமது போராட்டத்தின் செல்லும் பாதைமட்டுமே மாறியுள்ளது எமது இலட்சியம் ஒன்றுதான். ஒருங்கிணைந்த உலக வல்லரசுப்படைகளோடு மட்டுப்படுத்தப்பட்ட ஆயுதங்களோடு இறுதி வரை போராடி வீரகாவியம் எழுதிச்சென்ற மாவீரர் தடம் வழி தொடர்வது தான் மானமுள்ள ஒவ்வொரு தமிழ் மகனின் மகாத்தான சிந்தனையாகும் நாம் மௌனித்திருக்கின்றோமே தவிர மரணிக்கவில்லை எமது இலட்சியப்பாதையில் குறுக்கிட நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நாம் மன்னிக்கப்போவதில்லை எம்தேசம் மலரும் நாள் வரை விடுதலைப்போர் தொடரும். தொடரப்போகும் எமது அரசியல் போருக்கு வலுவான மக்கள் குரலும், தகுதிவாய்ந்தவொரு அரசியல் அமைப்பும் தேவைப்படுகின்றது. அதை ஐனநாயக வழியில் உலகம் எதிர்பார்க்கின்றது எமது டிசெம்பர் 12,13 களில் பிரான்ஸ்ல் அமையப்போகும் ஐனநாயக வழித்தேர்தல் ஒரு படிக்கல்லாகவே அமையப்போகின்றது. இதில் அனைவரும் பங்களித்து உங்கள் வாக்குகளை அளித்து எங்கள் அனைவரின் கனவை நனவாக்க பலம் கொடுப்போம்வலிமையே தமிழனின் வாழ்வு

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

போராளி

Comments