இறுதிவரை களத்திலிருந்து விலகாமல் மக்களோடு மக்களாக, போராளிகளோடு போராளியாக தன்னையும் குடும்பத்தையும் ஈழ விடுதலைக்காக அர்ப்பனித்த தங்கள் தலைவனை கொச்சைப்படுத்திய இனமாக தமிழினம் உள்ளது.
மாவீரர் நாள் புலம் பெயர் நாடுகளில் காலத்தின் தேவையை உணர்ந்து நடத்தப்படுமா?
கடந்த வருடங்களில் இடம் பெற்ற மாவீரர் தினத்திலும் இவ் வருடத்தில் இடம் பெற இருக்கும் மாவீரர் தினம் தொடர்பான அதிக அக்கறை ஸ்ரீலங்கா அரசிற்கும் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை உற்று நோக்குவோருக்கும் உள்ளது.
விடுதலைப் புலிகள் என்றொரு அமைப்பு இருந்ததற்கு ஆதாரம் கூட இருக்கக் கூடாது என்பது தான் சிங்கள பேரினவாத அரசின் நோக்கம். அதனால் தான் விடுதலைப் புலிகளின் தலைவர் உள்ளிட்ட போராளிகளின் ‘உடல்களை யாரிடமும் கையளிக்கமாட்டோம் இவைகளை வைத்துக் கொண்டு அஞ்சலி அது இது என்று நினைவுபடுத்துவதற்கும் விரும்பத்தகாதவர்கள் இங்கு வருவதை நாம் விரும்பவில்லை” என்று இராணுவப் பேச்சாளர் உதயநானயக்கார ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ‘நாடுகடந்த தழிழீழ அரசு” என்ற புதிய நிலைப்பாடு, புதிய தலைவராக அறியப்பட்ட செல்வராசா பத்மநாதனின் கைது, மற்றும் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் இல்லை என்ற சர்ச்சை, உரையை யார் செய்வார்? என்ற கேள்வி, தற்போதைய புலம் பெயர் தமிழர்களின் ஈழம் தொடர்பான நிலைப்பாடு? என பல சந்தேகங்களுக்கு விடைகாணவும், புலம் பெயர் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை இனம் காணவும் இம் மாவீரர் தினம் உதவும் என எதிர்பார்க்கப்டுகின்றது.
தலைமைப் பீடத்தின் இழப்புக்களையடுத்து அதிகார பூர்வமான செய்தி தளங்களான இயங்க முடியாமலிருக்கையில் நாடுகடந்த தமிழீழ அரசு எந்தளவிற்கு செயற்படும் இதற்கு தமிழ் மக்கள் எந்தளவிற்கு கைகொடுப்பார்கள் என்ற மதிப்பீட்டினை இம் மாவீரர் தினம் வெளிப்படுத்தும்."
1990 களிலிருந்து மாவீரர் நாள் மிகவும் உணர்வு பூர்வமாக தமிழர் தாயக பிரதேசம் எங்கும் நினைகூரப்பட்டுவந்தது. தற்போது விடுதலைப் புலிகள் இல்லாத நிலையில் இம் மாவீரர்களுக்கு தாயகத்தில் அஞ்சலி செலுத்தப்படுகின்றதோ இல்லையோ? புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் வழமைபோன்று இம் முறையும் மாவீரர்களை நினைவுகூர்வார்கள் என்பதில் ஐயமில்லை
.
மண்ணில் விழைந்த முத்துக்களே...
ஒட்டுமொத்த இழப்பின் பின்னரும் இடைத்தங்கல் முகாம் என்று கூறப்படும் முகாம்களில் அனுபவிக்கும் துயரத்திலிருந்தாவது சிறிது நிம்மதி கிடைக்குமா? என ஏங்கித் தவிக்கும் மக்களை தனது அரசியல் இலாப செயற்பாட்டில் அரசு ஈடுபடுத்திவருகின்றது.
- முன்னாள் புலிகளுக்கு மறுவாழ்வு என்ற போர்வையில் அவர்களை புலனாய்வாளர்களாக வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்தல்.
- மீள்குடியேற்றம் என்ற போர்வையில் வன்னியிலிருக்கும் மக்களை கட்டம் கட்டமாக வெளியேற்றும் நடவடிக்கையின் முதற் படியாக அங்கு தமது வாழ்வை ஆரம்பித்த மக்களை பிறந்த இடங்களை மையமாக வைத்து பிற மாவட்டங்களில் குடியமர்த்தியது.
- சர்வதேச நெருககடிகளில் தப்புவதற்கென முன்னாள் புலி சிறார்களுக்கு கல்வி, வன்னிப் பகுதியில் மீண்டும் குடியேற்றம்
- மீள்கட்டுமானம் என்ற போர்வையில் வன்னியில் இராணுவ கட்டுமானங்களை மேற்கொள்ளல்
என சர்வதேசத்திற்காக நாடகமாடும் வேலைகளில் மகிந்த அரசு அக்கறையாக இருந்து கொண்டு தமிழர்களின் உணர்வுகளையும் இச் செயற்பாடுகள் மூலமாக திசைதிருப்புவதிலும் எதிர்கால அரசியல் ஸ்திரத்திற்காகவும் மிகவும் நூதனமான தந்திரங்களை கையாளுகின்றது. புலிகளின் இராணுவ கட்டுமானம் முற்றாக தகர்ந்துள்ள இச் சூழ்நிலையில், மீண்டும் போராட்ட உணர்வுகள் தளைத்திடாதிருக்க வன்முறையற்ற அடக்குமுறை உள்ளிட்ட மனித வன்முறைகளை மகிந்த அரசு கையாள்கின்றது.
- ஈழ ஆதரவாளர்கள் என்று அடையாளம் காணப்பட்ட தமிழக அரசியல்வாதிகள் தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் கோமாளிக்கூத்திற்கு விலைபோதல்.
- செய்தியாளர்களை மறைமுகமாகவே நேரடியாகவே அச்சுறுத்தி உண்மைகளை மறைத்தல்.
- எது கிடைத்தாலும் போதும் என்ற மன நிலைக்கு மக்களை பணிய வைத்து தனது பிரசாரத்திற்காக செற்ப தேவையை நிறைவுசெய்தல்
போன்ற விடயங்கள் வெளிப்படையாக உள்ளன.
இது போன்ற பல சவால்களின் மத்தியில் தான் புலம் பெயர் தமிழர்கள் தாம் நினைவு கூரவுள்ள மாவீரர் தினத்தை எதிர் நோக்க வேண்டியுள்ளது.
தன்னையும் குடும்பத்தையும் ஈழ விடுதலைக்காக அர்ப்பனித்த தங்கள் தலைவனை கொச்சைப்படுத்திய இனமாக தமிழினம்
இதற்கிடையில் தலைவர் பிரபாகரனின் வீரச்சாவை மக்களுக்கு உரிய முறையில் அறிவிப்பதற்கு தமிழ் ஊடகங்கள் பூரண ஒத்துழைப்புக்களை வழங்காமையினால் தமிழர்களிடையே பிரிவுகளை ஏற்படுத்தியதுடன், இறுதிவரை களத்திலிருந்து விலகாமல் மக்களோடு மக்களாக, போராளிகளோடு போராளியாக தன்னையும் குடும்பத்தையும் ஈழ விடுதலைக்காக அர்ப்பனித்த தங்கள் தலைவனை கொச்சைப்படுத்திய இனமாக தமிழினம் உள்ளது.
இதைவிட புலி எதிர்ப்பாளர்களின் பிரசாரம் சிறந்தது என்றே கூறவேண்டும்.
- ‘சுமார் முப்பதாயிரம் மக்களையும் ஏனைய போராளிகளையும் பறிகொடுத்துவிட்டு எம் தலைவன் வெற்றிகரமாக தப்பிவிட்டார்”,
‘தலைவர் உயிர் தப்புவது தான் எம் போராட்டத்தின் இலட்சியம்”, என்றது போலும் ‘போரட்ட ஆரம்ப நாட்களில் அச்சுவேலி வங்கி கொள்ளையடிப்பு சம்பவத்திற்காக தேடப்படுபவர் என்று ஸ்ரீலங்கா அரசு கூறியது. ஆகவே கொள்ளைக்காரன் தான் தப்புவதற்காக போராட்டத்தை நடத்தினான்” என்று பொருள்படும் படியான செயற்பாட்டைத்தான் புலம் பெயர் தமிழ் சமூகம் வெளிப்படுத்தியது, இதைவிடவும் பெரிய துரோகம் ஒன்றுமில்லை. - அன்புக்குரியவரின் இழப்பை ஏற்பது கடினம் தான் எனினும் தமிழ்மக்கள் இவ்விடயத்தில் கவணமாக செயற்பட்டிருக்க வேண்டும்.
- இவ்வாறு தவறுக்கு மேல் தவறான செயற்பாடுகள் தடுமாற்றத்தையே உருவாக்கும்.
வன்னியில் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் காரணமாக உளவியல் தாக்கத்திற்குள்ளான பலரும் உறவுகளின் இழப்பினால் உதவிகளற்றுள்ள(பாதுகாப்பு) பலரும் வன்னி தவிர்ந்த பிறமாவட்டங்களில் மீளக் குடியமர விருப்பம் தெரிவித்துள்ளனர். உறவினர்களின் பிணையின் அடிப்படையிலேயே அவ்வாறு பிறமாவட்டங்களுகளில் மீள் குடியேற்றப்பட்டுள்ளனர். இது மக்களை வன்னியிலிருந்து அப்புறப்படுத்துவதற்கான இலகுவழியை அரசிற்கு ஏற்படுத்தியுள்ளது.
உளவியல் தாக்கத்திற்குள்ளான மக்களின் அவலம் தொடர் கதையாகத் தான் உள்ளது, மேலும் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட பகுதி என கூறப்படும் பகுதிகள் பெருமளவானவை உயர் பாதுகாப்ப வலயங்கள் என்ற போர்வையில் அபகரிக்கப்பட்டுள்ளது.
தொடரும் பயண அனுமதி மற்றம், பொலிஸ் பதிவு நடைமுறைகள், தடுப்பு முகாம்களில் உள்ள அப்பாவிகளின் அவலம், என்ற உள்ளக கவலைகளின் மத்தியில் வாழும் தமிழ் மக்கள் மாவீரர்களின் நாளை மறந்துவிட பல காலங்கள் தேவை.
இதே வேதனையுடன் தான் முன்னைய நாட்களிலும் தாயகத்தில் மாவீரர்கள் நினைவு கூரப்பட்டார்கள், தமது பிள்ளைகளின் கல்லறைகளை கட்டியணைத்து கதறும் காட்சி எதிரியையும் கண்கலங்க வைக்கும். சாதாரண நாட்களில் பூங்கா போல காட்சியளிக்கும் மாவீரர் துயிலும் இல்லம் அமைதியான பல நினைவுகளை மீட்டும். மன அமைதிக்கென்றே கல்லறைகளை நாடிச் செல்லுவோரும் உள்ளனர்.
- எனினும் தாயகத்தில் நினைவுகூரப்படும் மாவீரர் தினம் போன்ற உணர்பூர்வமான நிகழ்வாக புலம் பெயர் நாடுகளில் காணமுடியாது, தாயகத்திலிருந்து ஒருவர் நேரடியாக இந்நிகழ்வில் பங்குபற்றினால் இதனை களியாட்ட நிகழ்வு என்று தான் கூறுவர்.
இவை எல்லாவற்றுக்கும் எதிர்மாறான உணர்வை ஏற்படுத்தும் புலம் பெயர் மாவீரர் தினம் இம் முறை காலத்தின் தேவையை உணர்ந்து நடத்தப்படுமா? இம்முறை தமிழர்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் மாவீரர் தினமாக அமையுமா?
"ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண் மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது." எமது மாவீரர்களின் வீரம் செறிந்த போராட்ட வாழ்வையும், எமது மண்ணின் விடுதலைக்காக அவர்கள் புரிந்த மகத்தான தியாகங்களையும் நினைவுகூரும் இப்புனித நாளில், எத்தகைய இடர்களையும் எத்தகைய துன்பங்களையும் எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு எமது தாயகத்தின் சுதந்திரத்தை வென்றெடுப்போமென உறுதிபூணுவோமாக.
தேசியத்தலைவர்
மண்ணில் விழைந்த முத்துக்களே... | |||
மாவீரர் புகழ் பாடுவோம்... | |||
மாவீரர் யாரோ என்றால் - மரணத்தை வென்றுள்ளோர்கள்... |
Comments