தமிழர்களிற்காய் அரசியல் தாயக உரிமை கேட்டு போராடிய மக்களை நாம் கைவிடலாமா..??!

சிங்கள சிறையில் கோர வதை படும் போராளிகள் அப்பாவிகள் கண்ணீர் காட்சி


இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது செய்யபட்டு சிறைகளில் வதை படும் போராளிகள் அவர் சாந்த உறவுகள் அப்பாவி பொதுமக்கள் ஆதரவாளர்கள் என பல தரப்பினரையும் சிறையில் அடைத்து கோர சித்திர வதை செய்யும் சிங்கள அரசை கண்டித்தும் அந்த மக்களை காக்க மனித உரிமை மையங்கள் முன்னாள் தொடர் ஆர்பாட்ட பேரணிகளை நடத்துமாறு மானம் உள்ள தமிழர்களை வேண்டி கொள்கின்றோம் .இதனையே அந்த சிறைகளில் உள்ளவர்களும் வேண்டி உள்ளனர் .

கண்ணீருடன் தத்தளிக்கும் இந்த உறவுகளை காக்க புலம் பெயர மானம் உள்ள தமிழர்களே நீங்கள் முடிவெடுங்கள். இவர்களை காப்பது யார்..?

இறுதி யுத்தத்தின் போது வீதி இறங்கி போராடிய உங்களால் ஏன் இப்போது மனித உரிமை மற்றும் அந்தந்த நாடுகளின் பாராளுமன்றங்களை முற்றுகை இட முடியவில்லை ..?

இன்று இவர்கள் சிறைகளில் வதைபட்டு தவிக்கின்றனர் . நாளை மீள் குடியேற்றம் என்கின்ற போர்வையில் குடியேற போகும் நமது சொந்தங்கள் காணாமல் போகவும் கற்பழிக்க பட்டு மாளப் போவதையும் விரும்புகின்றீர்களா ..?

பல மூத்த போராளிகள் உட்பட பல ஆதரவாளர்கள் நிலை என்ன ..? இவர்களை நாம் இவ்வாறே விடுவதா ..?

நாளைய எம் சந்ததியும் முகவரி அற்ற சிங்களத்தின் அடிமைகளாய் வாழ்வதா..?

போக்கிடம் அற்ற சாதியாய் தமிழினம் வாழ்வதா...?

சிங்களத்து வீட்டு நாயும் எம்மை சீண்டி விளையாட நாம் விடுவதா ..?

துரோகிகள் எட்டபர்கள் என்கின்ற பட்டம் சூட்டும் விழாக்களை நிறுத்தி ஒன்று பட்டு போராடி எமது வாழ்வாதார சுதந்திர உரிமையை மீட்போம் ...

தமிழின விடுதலையின் தேச பிதாக்கள் என கூறும் சிலரின் வழி நடத்தல்கள் மேலும் திசை மாறி போகுமேயானால் உங்களை வராலாறு மன்னிக்காது .

நாம் வீதி இறங்கி மனித உரிமை மையங்களை முற்றுகை இட தவறுகின்ற ஒவ்வரு தடவையும் சிங்களம் வெற்றி களிப்பில் திளைக்கும் .

எதிர் வருடம் இலங்கை தேர்தலுடன் பல உண்மைகள் வெளி வரலாம்
பல காட்சி பதிவுகளும் வெளி வரலாம் அவை உலகத்தின் இதயங்களை உலுப்பும் என்பதில் சந்தேகமில்லை.

முடிவெடு உலக தமிழினமே !

இந்த படங்களில் உள்ளவர்களின் உறவுகள் யாரவாது இருந்தால் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள். (இந்த படங்களில் உள்ளவர்களை இனங்காட்டும் செயலை உங்களுக்கு நம்பிக்கையானவர்கள் தவிர்ந்த வேறு எவருடனும் செய்யாதீர்கள். எதிரியின் உளவுத் தமிழ் கூலிகள் கூட இப்படங்களூடு தகவல்கள் திரட்ட முனையலாம்..!எனவே அவதானமாகச் செயற்படுங்கள்..!)

இந்த காட்சிகளின் பின் மக்களே உங்கள் கருத்தை கூறுங்கள் நாம் வீதி இறங்கி போராட வேண்டுமா இல்லையா என்பதனை.


-குண்டுமணி-

Comments