தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பமான 1976ம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகள் அறிக்கைகள் மூலம் தமது செயல்பாடுகளை முன்னெடுக்கவில்லை என்பதை மக்கள் அறிந்திருந்தனர். மாறாக பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மூலம் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர் புலிகள். வெறுமனவே அறிக்கைகளை வெளியிட்டு மக்களை கவர முயற்சிக்கவில்லை புலிகள், மாறாகத் தமிழ் மக்கள் விடிவிற்காய் போராடினர்.
சி.ஜ.டி ஒருவர் 1976ம் ஆண்டும் கொல்லப்பட்டார். அவரைத் தொடர்ந்து, ஜூலை 2 1976 அன்று நடராஜா என்பவரும், பெப்ரவரி 14, 1977 அன்று பொலிஸ் கான்ஸ்டபிள் கருணாநிதி, மே18 1977 இரண்டு பொலிசார், ஜனவரி 27, 1978 கனகரட்னம் (தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்ப்பாளர்), ஏப்பிரல் 7, 1978 பஸ்ரியாம்பிள்ளை என்போரை விடுதலைப் புலிகள் களைபிடுங்கிய பின்னர், ஏப்பிரல் 28, 1978 அன்று முதல் முதலாக விடுதலைப் புலிகள் தமது அறிக்கையை வெளியிட்டனர் ஒரு செயல் வீரராக. மேற்படி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தாமே உரிமையும் கோரி இருந்தனர். பல தேசத் துரோகிகள் களையப்பட்டனர். இதனால் தமிழ் மக்களிடம் விடுதலைப் புலிகளுக்கு மிகுந்த செல்வாக்கு காணப்பட்டது.
தான் ஒரு தலைவன் என தேசிய தலைவர் எப்போதுமே தன்னை குறிப்பிட்டது இல்லை. அப் பதவி, தலைமைத்துவம் என்பன அவரை தானாகவே நாடி வந்தது. உலகளாவிய ரீதியில் தமிழர்களின் வீரம்சொரிந்த தன்நிகரில்லாத் தலைவனாக விளங்குகிறார், மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள். புலிகள் பலமாக இருந்த கால கட்டத்திலும் சரி, பலவீனமடைந்த கால கட்டத்திலும் சரி அவர்கள் அறிக்கைகளை விட்டு தமிழ் மக்களை கவர நினைக்கவில்லை. தமிழர்கள் அவர்களின் தாக்குதல் திறன் பற்றி அறிந்திருந்தார்கள், பல போராட்ட அமைப்புகள் இருந்தும் பெருவாரியான மக்கள் புலிகளையே ஆதரித்தார்கள்.
ஆனால் மே 18ம் திகதி முதல் பாரிய மாற்றங்கள் உருவாகியுள்ளன, புலத்திலும், தாயகத்திலும் இருந்து பல அறிக்கைகள் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் உள்ளன. சிலர் குழுக்களாகப் பிரிந்து தம்மை விடுதலைப் புலிகள் என்று அடையாளப்படுத்தி அறிக்கைகளை வெளியிடுவதும், மற்றைய குழுக்களின் அறிக்கைகளை வெளியிடக் கூடாது என்று கட்டுப்பாடுகளை விதிப்பதும், மாறாக சிலரை இராணுவத்துடன் சேர்ந்து இயங்குவதாகக் கூறுவதும் தற்போது அன்றாடக் காட்சியாகிவிட்டது.
தற்காலிகமாக புலிகள் தமது துப்பாக்கிகளை மொளனிக்கிறோம் என அறிவித்தபின்னர், புலத்தில் உள்ள தமிழர்கள் அரசியல் ரீதியாகப் போராடி தமது சுய நிர்ணய உரிமையை வென்றெடுக்க திடமாக உள்ள வேளையில், ஈழத்தில் இருந்து எந்தவகையான போராட்டங்கள் முன்னெடுக்கப்படப்போகின்றது என்ற அறிக்கை இன்னமும் வெளிவரவில்லை. மாறாக இதில் தலைமைப் பொறுப்பை ஏற்க்க சிலர் முழு பிரயத்தனம் செய்வதே மிக வேதனைக்குரிய விடையமாகும். அறிக்கைகளை வெளிவிடுவதும், போதாக்குறைக்கு அவற்றை ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொண்டுவர பல பிரயத்தனங்களை மேற்கொள்ளும் இவர்கள், ஆக்கபூர்வமாக என்ன நடக்கப் போகிறது, அல்லது தமது நிலைப்பாடு என்ன என்பதை இதுவரை தெளிவாக வெளியிடவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்கது.
புலம்பெயர் மக்கள் போராடத் தயாராக உள்ள நிலையில் அவர்கள் மனதையும் குழப்பி, தங்கள் நிலையையும் தெளிவுபடுத்தாமல், மாவீரர் புனித நாளில் பலப்பரீட்ச்சை ஒன்றை நடத்த நினைப்பவர்கள் எத்தனைபேர் ? தமிழீழமே எமது கேரிக்கை என துணிந்து இவர்களால் சொல்ல முடியுமா ? அதற்கான உறுதிமொழிகளை அவர்கள் தரத் தயாரா? போராட்டம் தொடரும் நாம் சிங்கள இராணுவத்துடன் கொரில்லா யுத்தத்தில் ஈடுபடத் தயார் என்று யாராவது இதுவரை அறிவித்துள்ளார்களா ?
இந்த நிலையில் வெறுமனவே அறிக்கைகளை விடுவதன் மூலம் என்ன லாபம். ஏற்கனவே பலவீனப்பட்டுள்ள எமது இனத்தை இன்னும் பலவீனபப்படுத்தும் அறிக்கைகள் தேவையா ? பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டிய சில விடையங்களை அரங்கேற்றி, வீட்டிற்குள் நடக்கும் பிரச்சனையை வீதிக்கு ஏன் இழுக்கவேண்டும்? இதற்காகவா 38,000 மாவீரர்கள் தமது இன்னுயிரை ஈந்தார்கள் ? அவர்கள் நினைவு நாளை ஒரு அறிக்கைக் களமாக மாற்றி அதில் ஒரு யுத்தம் செய்ய யார் முணைவது?
உண்மையாகப் போராடவும், இலங்கை இராணுவத்தை கண்ட இடத்தில் தாக்க, வெறிகொண்டு பதுங்கியிருக்கும் உண்மையான விடுதலைப் புலிகள் இன்னமும் மீதம் உள்ளனர் என்பதில் சந்தேகம் இல்லை. மனதில் விடுதலை என்னும் நெருப்புடன், தமிழீழமே இறுதித் தீர்வு என்பதில் இருந்து சற்றும் விலகாமல், தலைவனின் ஆணையை நெஞ்சில் சுமந்து போராடும் உண்மையான விடுதலைப் புலிப்போராளிகள், மீதமுள்ளனர், சில வேளைகளில் அவர்கள் மறைவிடத்தை விட்டு வெளியே வரமுடியாத புறச்சூழல் காணப்படலாம். அதனால் இச் சந்தர்ப்பத்தை யாராவது பயன்படுத்த நினைத்தால் அதன் பின் விளைவுகள் பாரதூரமாகவும் இருக்கலாம்.
25,000 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதை புலம்பெயர் தமிழர்கள் மறக்கவில்லை. கொல்லப்பட்ட தமிழர்களின் பிணக்குவியலுக்குமேல் தீராவகத்தை(அசிட்) ஊற்றி அடையாளங்களைச் சிதைத்து, மண்ணோடு மண்ணாக மக்கும் அளவிற்கு இலங்கை இராணுவம் செய்ததை புலம்பெயர் மக்கள் இன்னமும் மறக்கவும் இல்லை, மன்னிக்கவும் இல்லை. அதனால் போராட முடியும் என்றால் அதனை அறிவித்து போராட்டத்தை ஆரம்பிக்கலாம். அதைவிடுத்து அரசியல்ரீதியாகப் போராட இருக்கும் புலம்பெயர் தமிழர்களை குழப்பவேண்டாம். உண்மையான விடுதலைப் புலிகள் எங்கோ தம்மை வெளிக்காட்ட முடியாத நிலையில் இருக்கலாம். அவர்கள் தம்மை அடையாளப்படுத்தும் நாள்வரை நாம் எமது அரசியல் போராட்டத்தை தொடருவோம் !
புலத்தில் நடக்கும் அரசியல் போராட்டமும், ஈழக் களத்தில் நடக்கவிருக்கும் ஆயுதப்போராட்டமுமே தமிழீழம் அடைய ஊந்துகோலாக அமையும். போராடாத இனம் வெற்றிபெற்றதாக சரித்திரம் இல்லை என்றான் எமது தலைவன். நாம் எமது தலைவனை நேசிப்பது உண்மை என்றால் போராடுவோம் ! இதுவே அவர் பிறந்தநாள் ஆகிய இன்று நாம் எடுத்துக்கொள்ளும் சபதமாகும் !அதுவே எமது வெற்றிப் படிக்கல்லாக அமையும் என்பதில் ஜயமில்லை.
உங்கள் கருத்துகள் வரவேற்க்கப்படுகின்றது
athirvu@gmail.com
Comments