எப்படி என்னால் மனமகிழ்சியோடும் மன நிறைவோடும் வாழ முடியும்?

பார்த்து அறியா வயதில் இழந்த என் பாசமிகு தாயின் நினைவைவிட, நான் பார்த்து கதறிகொண்டிருக்கும் போது என் கண் முன்னால் உயிர்விட்ட‌ என்னை பொத்தி பொத்தி வளர்த்த அன்பு சகோதரியின் ஆசை கனவை நிறைவேற்றி விட்டேன் உயிர் துறப்பெதென முடிவெடுத்து மூன்று நாள் தொடந்து எழுதிய கடிதத்தொகுப்பின் ஒரு பகுதியில் எனக்காக எழுதிய அந்த வரிகளை இப்போதும் இல்லை எப்போதும் நினைத்துகொள்வேன்.

"என் தம்பி பின்னாளில் பொறியியல் பட்டம் படிக்க வேண்டும் என்பதெ எனது ஆசை" பதினேழு ஆண்டுகள் வளர்த்த உறவினை கருத்து வேறுபாட்டினால் பிரிய நேர்ந்த போழுதுதான், பசியினையும் உணவின் அருமையையும் புரிந்து கொண்டேன். வழிகாட்டி உதவியொடு நடக்க வேண்டிய வயதில், தனிமனிதனாய் அர்த்தமில்லா இந்த வாழ்க்கையின் அர்த்தத்தை தேடிக்கொண்டிருந்தேன். விடியாதா? எனக்கு இரவு என விடிய விடிய தேடி கொண்டிருந்தென். கனல் மிக்க நூறு இளைஞர்களை கொடுங்கள் இந்த தேசத்தை மாற்ற என விவேகான‌ந்தர் கேட்ட நூறு இளைஞர்களில் ஒருவனாக என்னையும் என் திறன்களையும் வளர்த்த முயற்சிக்கிறேன்.

வாய்ப்பு காலம் கடந்துதான் வந்தது என்றாலும், முயற்சியால் போதிய ஆங்கில அறிவே இல்லாமல் முதல் வகுப்போடு Distinction சேர்த்து முதுநிலை கனினியியல் பயன்பாடு பட்டமும் (MCA-First class with Distinction), முதுநிலை வணிகவியல் நிர்வாகம்(நிதி) பட்டமும்(MBA-Finance) பெற்றுவிட்டேன். பட்டம் படிக்கக் சென்னை வருவதற்கு ஓராண்டு முன்னால் என் நிலையை பற்றி ஒருமுறை திரும்பி பார்த்துக்கொள்ள என் மனம் ஆசை படுகின்றது. ஆம் இன்றைய நாளிலிருந்து, நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் ஆட்டு பண்னை வைத்து ஆடு மேய்த்து கொண்டிருந்த இளைஞன், ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் அதிகாலையில் காய்கறி விற்பனை செய்து கொண்டிருந்த இளைஞன், இன்று கனினியில் இணையம் முலம் தகவல் திரட்ட ,தொடர்பு கொள்ள,பணி மேற்கொள்ள முடிவதை நினைத்து மனமகிழ்சி கொள்ள இயலாது.

லட்சகணக்கில் என் தமிழ் உயிர்கள் வண்ணி மண்ணில் மண்ணோடு மண்ணாக மாய்க்கப்பட்டிருக்கும்போது, கண் முன்னெ என் தமிழீழ தேசம் தாயக கனவுடன் கண்ணிரில் மிதக்கும் போது, முள்வேலி கம்பிகளுக்குள் என் உறவுகள் முடக்கி வைக்கப்பட்டிருக்கும் போது எப்படி மனமகிழ்சியோடு வாழ முடியும்? என்னாலும், என் தமிழீழ சமுகத்தாலும் என்னாளும் பிச்சையாக கிடைக்கும் எதையும் ஏற்றுகொள்ள இயலாது!!அகிம்சையாகவோ அல்லது ஆயுதம் மூலமாகவோ ,சுதந்திரம் என்பது எங்களால் போராடி கிடைக்கபட வேண்டுமே தவிரவே பிச்சையாக அல்ல!! எந்த இலட்சியதிற்காக ஒன்றுமே அறியாத அப்பாவி குழந்தைகளை பலி கொடுத்தோம்??

எந்த இலட்சியதிற்காக தன்னலமில்லா பல நல்ல தலைவர்களை பலி கொடுத்தோம்??எந்த இலட்சியதிற்காக ஆயிரமாயிரம் வீரர்களை பலி கொடுத்தோம்?? எந்த இலட்சியதிற்காக லட்சக்கணக்கான நம் மக்களை பலி கொடுத்தோம்?? என் சகோதரி என் கண்முன்னால் துடிக்க துடிக்க உயிர்விட்டபோது என்னால் அவளை காப்பாற்ற முடியாவிட்டாலும் அவளின் ஆசை கனவான என் பொறியியல் பட்டத்திற்க்கு இணையான பட்டத்தை பெற்ற சந்தோசத்தை விட தினந்தோறும் உயிர் விட்ட என் ஆயிரமாயிரம் தமிழீழ உயிர்களின், ஒன்றுமே அறியாத பிஞ்சி குழந்தைகளின் ஆசை கனவான தமிழீழ தேசத்தின் விடுதலையில் என்பங்கு என்ன?? நீ என்ன கொடுத்தாய் என பிறரை கேட்கும் முன் நாம் என்ன கொடுத்தோம் நம் தமிழீழதேசத்திற்க்கு என நம்மை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்.

முதலில் நான் என்ன சேய்தேன் என என்னை கேள்வி கேட்டுத்தான் தினம் தொறும் என் தமிழீழ தேசத்தினை பற்றி அதன் விடுதலையை பற்றி பரப்புறை மேற்கொள்கிறேன். ஒரு தமிழ்நாட்டில் வாழும் தமிழனாய் இதை செய்கிறேன். நீங்கள் சொல்லுங்கள் அதையும் செய்கிறேன். பத்து முறை துவண்டு கீழே விழுந்தவனை பாசத்தோடு முத்தமிட்டு சொன்னாளாம் பூமித்தாய் "நீ கடந்த ஒன்பது முறை வெற்றிகரமாய் எழுந்தவனல்லவா இம்முறையும் உன்னால் முடியும் என்று"!!இது போலத்தான் நம் விடுதலை போரும். ஒவ்வொரு முறை தோற்கும் போது விடுதலை பாதையை விட்டு விலகி நின்றோமா?? போராடித்தான் பல வெற்றிகளை கண்டோம்.

தாயக கனவுடன் சாவினை தழுவிய சந்தன பேழைகளுக்கு தீபஓளி ஏற்றுவதோடு மட்டுமல்லாமல் அந்த தீப ஒளி வெளிச்சத்தில் நம் வேற்றுமை என்னும் வெறுமையை எரித்து அந்த சந்தன பேழைகளின் கனவுகளை நிறைவெற்றுவோம் அதிகாலை இருளின் அடர்த்தி அதிகமாக இருக்கும் என்பது அறிவியல் நியதி.

அதிகாலை முடிந்தபின் வெளிச்சம் பிரகாசிக்கும். ஒவ்வொரு விடுதலை போர்களின் வெற்றிக்கு முன்னால் உள்ள நாட்களில் வேதனைகளும் வலிகளும் தோல்விகளும் அதிகம் இருக்கும். நாம் நம் சுதந்திரத்தை, விடுதலையை நோக்கி பயணத்தை தொடருவோம்.

அகிம்சை வழியா, ஆயுதம் ஏந்துவதா என்பதை காலம் தீர்மாணிக்கட்டும்! உலகம் தீர்மாணிக்கட்டும்!

ஏன் அந்த சிங்களதேசமெ தீர்மாணிக்கட்டும்!

நம் நோக்கமெல்லாம் விடுதலையை நோக்கி மட்டுமெ தொடரட்டும்! அதோ கண்ணுக்கு எட்டும் துரத்தில் நம் தாய்தேசமாம் தமிழீழதித்தின் விடுதலைதீபம்

கில்லிவேலு-முத்துவேல் குமரன்

ராசிபுரம்

Comments