மாவீரர்நாள் நிகழ்வுகளில், பல்லாயிரக்கணக்கான மக்களால் எடுக்கப்பட்ட"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்" உறுதிமொழி
உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்களால், மாவீரர்நாள் நிகழ்வுகள் வரலாற்றில் என்றும் இல்லாதவாறு உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது. இந்நிழ்வில் கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான மக்களால் இறுதியில்:
தமிழீழ தாய் நாட்டிற்க்காக
தமது இன்னுயிரை ஈய்ந்த மாவீரர்களை
நினைவு கூரும் இப்புனித நாளில்.
நான்மேற் கொள்ளும் உறுதிமொழியாவது
ஈழத்தமிழனாகிய நான்
உலகின் எத்திசையில் வாழ்ந்தாலும்
தமிழீழமே எனது இலட்சியம்!
இந்த இலட்சியத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்பதுடன்
சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழ தனியரசான
எனது வரலாற்று மண்ணின் மீட்சிக்காக அயராது உழைப்பேன் என
இந்நாளில்உறுதி மொழி எடுத்துக்கொள்கிறேன்!
'தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"
எனும் உறதி மொழி எடுக்கப்பட்டு பின் தமிழீழ தேசியக்கொடி இறக்கப்பட்டு "தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்" எனும் எம் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைபெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments