கோப்பன்ஹேகன் பருவநிலை மாநாட்டில் முள்ளிவாய்க்காலில் சிங்களத்தினால் ஏற்பட்ட மனித பேரழிவு பற்றிய 13 நாட்கள் புகைப்படக் கண்காட்சி

உலக சமாதானத்திற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும் கடந்த 23 வருடங்களாக உலகை வலம் வந்துக் கொண்டிருக்கும், தமிழகத்தைச் சேர்ந்த த.சீனுவாசராவ் மற்றும் இரா.ஞானசேகரன் இருவரும் தற்போது ஏழாவது உலகப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.


புவி வெப்ப உயர்வை தடுக்க அனைத்து நாடுகளும் ஒன்றுபட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி ஹ_ண்டாய் டுசான் என்ற வாகனத்தில் இந்தியாவிலிருந்து 80,000 கிலோமீட்டர்கள் ஆசியா மற்றும் ஐரோப்பாவில் பயணம் செய்து தற்போது டென்மார்க்கில் நடந்துகொண்டிருக்கும் பருவநிலை மாற்ற மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தற்போது இலங்கையில் சிங்களர்களால் சர்வதேச கோட்பாடுகளுக்கு எதிரான நிலையில், அப்பாவித் தமிழ் மக்களை பலமாதங்களாக, முள்வேலிக்குள் தடுத்து வைத்திருப்பதையும் மற்றும் கடந்த மே மாதம் முள்ளிளவாய்க்கால் பகுதியில் 50,000 மக்கள் சிங்கள இராணுவத்தினால் கொன்றுக் குவிக்கப்பட்டதை எதிர்த்து தாங்கள் செல்லும் நாடுகளிலெல்லாம் குரல் எழுப்பி வருகின்றனர். அதற்கு காரணமான ராஜபக்ஷேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க உலகம் முழுதும் பரப்புரைச் செய்து வருகின்றனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

20ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் விஞ்ஞான வளர்ச்சியின் உச்சக்கட்டமாக வளர்ந்து வரும் உற்பத்தி தொழில் நுட்ப முன்னேற்றம் என்பன உலகின் இயற்கைச் சூழலுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறிவருவதனைக் காணமுடிகின்றது. இதனால் அழிக்கப்படுகின்ற அல்லது குழப்பமடைகின்ற இயற்கைச் சூழலின் எதிர்வினை காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தவல்லது.

இதனால் புவியின் வெப்ப அதிகரிப்பு ஏற்பட்டு வடதுருவப் பனிப்பாறைகள் உருகுவதனால் உலகின் சில நாடுகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால்தான் சமூக ஆர்வலர்கள் 21ஆம் நூற்றாண்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பினை உறுதிப்படுத்த பெரும் பிரயத்தனம் மேற்கொண்டிருக்கின்றனர் இந்த வகையில், உலக சமாதானத்திற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும் கடந்த 23 வருடங்களாக உலகை வலம் வந்துக் கொண்டிருக்கும், தமிழகத்தைச் சேர்ந்த த.சீனுவாசராவ் மற்றும் இரா.ஞானசேகரன் இருவரும் தற்போது ஏழாவது உலகப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

புவி வெப்ப உயர்வை தடுக்க அனைத்து நாடுகளும் ஒன்றுபட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி ஹ_ண்டாய் டுசான் என்ற வாகனத்தில் இந்தியாவிலிருந்து 80,000 கிலோமீட்டர்கள் ஆசியா மற்றும் ஐரோப்பாவில் பயணம் செய்து தற்போது டென்மார்க்கில் நடந்துகொண்டிருக்கும் பருவநிலை மாற்ற மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்.

இவர்களுடன் சீனுவாசராவின் மனைவி தாமரை மற்றும் எட்டு வயது மகன் கோகுலவாணன் ஆறு வயது மகள் கயல்விழி ஆகியோரும் பயணம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. தங்களது Global Warming Awareness பிரச்சாரத்தினூடே, தற்போது இலங்கையில் சிங்களர்களால் சர்வதேச கோட்பாடுகளுக்கு எதிரான நிலையில், அப்பாவித் தமிழ் மக்களை பலமாதங்களாக, முள்வேலிக்குள் தடுத்து வைத்திருப்பதையும் மற்றும் கடந்த மே மாதம் முள்ளிவாய்க்கால் பகுதியில் 50,000 மக்கள் சிங்கள இராணுவத்தினால் கொன்றுக் குவிக்கப்பட்டதை எதிர்த்து தாங்கள் செல்லும் நாடுகளிலெல்லாம் குரல் எழுப்பி வருகின்றனர்.

அதற்கு காரணமான ராஜபக்ஷேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க உலகம் முழுதும் பரப்புரைச் செய்து வருகின்றனர். இங்கு கோப்பன்ஹேகனில் நடந்துவரும் பருவநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்க சர்வதேச நாடுகளிலிருந்து அரசு சார்பற்ற அமைப்புகள் (Nபுழு) அனைத்தும் ஆயிரக்கணக்கில் ஐ.நா நடத்தும் ஊழுP15 மாநாட்டிற்கு வருகை புரிந்துள்ளனர்.

நமது தமிழக இளைஞர்களும் கோப்ன்ஹேகன் மாநாட்டில் கலந்துக் கொண்டு, அங்கு, இலங்கை சிங்கள இராணுவத்தினால் நமது தமிழினம் கொன்றுக்குவிக்கப்பட்ட அவலத்தையும், தடை செய்யப்பட்ட நாசகாரக் குண்டுகளைப் பயன்படுத்தி மக்களும் மரம் செடிகொடிகளும் நிலங்களும் நீர்ப்பரப்பும் எவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை விளக்கும் வகையில் ஒரு புகைப்படக் கண்காட்சியை நடத்தி வருகின்றனர்.

உலக நாடுகள் ஒன்றினைந்து 1948ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் சபையின் வாயிலாக இனஅழிப்பிற்கெதிராக உருவாக்கப்பட்ட ஜெனிவா ஒப்பந்தத்தை மீறும் விதமாக இலங்கையின் சிங்கள அரசு, குழந்தைகளையும் அப்பாவித் தமிழ் மக்களையும் தடுப்பு வதை-முகாமில் வைத்திருப்பது அப்பட்டமான இனஅழிப்பு வேலை என்பதையும் இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் நடைபெற்ற கடைசிகட்ட இனஅழிப்பு வேலையில் சிங்கள இராணுவம் 50,000 அப்பாவித் ஈழத் தமிழ் மக்களைக் கொன்று குவித்ததையும் விளக்கும் வகையில் பரப்புரை செய்து வருகின்றனர்.

ஞானசேகரனும், சீனுவாசராவும் அவரது மனைவி மற்றும் குழந்தைகளும் கொட்டும் பனியிலும் கடுங்குளிரிலும் அரங்கத்தின் வெளியே நின்றுக் கொண்டு குறிப்பேடுகளை பருவநிலை மாநாட்டிற்கு வருகைதரும் அனைவருக்கும் கொடுத்துவருவது குறிப்பிடத்தக்கது. புகைப்படக் கண்காட்சிக்கு வருகை புரியும் அனைத்து நாட்டு மக்களுக்கும், பத்திரிகைகளுக்கும் மற்றும் ஊடகங்களுக்கும் நமது ஈழத் தமிழினமும், ஈழமும் எப்படி இலங்கை அரசாலும் அதன் இராணுவத்தாலும் அழிக்கப்பட்டு வருகின்றது என்பதை விளக்கி வருகின்றனர்.

இந்த புகைப்படக் கண்காட்சி பிரித்தானியா தமிழர் பேரவையும் டென்மார்க் தமிழர் பேரவையும் இணைந்து இந்த புகைப்படக் கண்காட்சியை ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் மாநாடு முடிவடைந்தவுடன், இவர்கள், இங்கிருந்து இங்கிலாந்திற்கு பயணம் செய்து பின்னர் அங்கிருந்து வட அமெரிக்க கண்டத்திற்கு செல்ல உள்ளார்கள்.

முடிவாக 2010 ஏப்ரல் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் அதன் பொதுச் செயலாளர் திரு பான் கீ மூன் அவர்களைச் சந்தித்து அவர்களது பயண அறிக்கையை சமர்பிக்க உள்ளார்கள். இப்பயணத்திற்கு முன்னர் அவர்கள் ஆறு முறை உலகப்பயணம் மேற்கொண்டுள்ளார்கள். முதல் பயணம் 1986 முதல் 1989 வரை சைக்கிளிலியே உலக பயணமும் இரண்டாவது பயணம் 1990 முதல் 1993 வரை மாருதி ஜிப்சி வாகனத்திலும், மூன்றாவது உலகப் பயணம் 1996 முதல் 1998 வரை மாருதி சென் காரிலும், நான்காவது உலகப் பயணம் 2000 முதல் 2002 வரை மாருதி ஜிப்சி வாகனத்திலும், ஐந்தாவது உலகப் பயணம் 2002 முதல் 2004 வரைமாருதி ஜிப்சி வாகனத்திலும் பயணம் செய்திருக்கின்றார்கள்.

ஆறாவது உலகப் பயணத்தை ஹ{ண்டாய் அசெண்ட் காரில் 2005 முதல் 2007 வரையும் பயணம் செய்திருக்கின்றார்கள். இதுவரை 120 நாடுகளுக்கும் அனைத்து கண்டங்களின் வழியாக 6,00,000 கிலோமீட்டர்கள் தரை மார்க்கமாக பயணம் செய்திருக்கின்றார்கள். ஒவ்வொரு பயணத்தையும் ஐக்கிய நாடுகள் சபையில் அதன் பொதுச் செயலாளர்களைச் சந்தித்து வெற்றியுடன் அவர்கள் முடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments