ஈழத் தமிழ்ர்களது அபிலாசைகளை உலக்குக்கு எடுத்துக்கூற டிசம்பர் 19ல் அணிதிரள்வோம்

“இலங்கைத் தீவின் வடக்குஇ கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட தமிழர் தாயகம் வேண்டும். அதில் ஒரு தேசிய இனமாக தமிழரின் அரசியல் இலக்கை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் தன்னாட்சி உரிமை வேண்டும்.

அதற்காக முழுமூச்சான பயணத்தை அஞ்சாத அர்ப்பணிப்புக்களோடு நாம் முன்னெடுக்கவேண்டும்” ஆகிய மூன்று முக்கிய அம்சங்களை வலியுறுத்திஇ 33 வருடங்களுக்கு முன்னரே ஈழத் தந்தை எனப்படும் செல்வநாயகம் தலைமையில் அன்றைய அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து 1976ம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இத் தீர்மானத்தை முன்வைத்து தனித் தமிழீழம் வேண்டி தேர்தலில் நின்ற தமிழ்த் தலைவர்கள் மக்கள் ஆதரவுடன் வெற்றியீட்டியதன் மூலம் தமிழீழமே தமிழருக்கான இறுதித்தீர்வு என ஈழத் தமிழர்கள் உலகுக்கு எடுத்துக்காட்டியிருந்தார்கள்.

இந்நிகழ்வானது ஈழம்வாழ் தமிழரரின் வரலாற்றில் ஓர் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக காணப்படுகின்றது. ஜனநாயக வழியிலான வட்டுக்கோட்டை தீர்மானம் தொட்டு போராட்ட வழியிலான முள்ளிவாய்க்கால் வரை தமிழர்களது போராட்டம் பல்வேறுபட்ட பரிணாமங்களுக்குள்ளாக்கப்பட்டு எமது விடுதலைபோராட்டமானது மாவீரர்களின் உச்ச தியாகங்களினால் உலகறிய பறைசாற்றிநிக்கின்றது எமது தேசியத்தலைவரின் எதிர்வுகூரலுக்கேற்பஇ மீண்டும் ஓர் ஜனநாயகஇ இளையோர் போராட்டமாக பரிணமித்திருக்கின்றது

போர் முடிந்துவிட்டது என கொக்கரிக்கும் சிங்களவர்களும் சிங்கள அரசும் தமிழர்களை கொத்தடிமைகள் போல் வெவ்வேறு வதைமுகாம்களுக்கு நகர்த்தி உலக அரசுகளுக்கு பூச்சாண்டி காட்டி வருகின்றனர். உண்மையாகவே போர்க்காலகட்டத்தில் நடந்த படுகொலைகள் பற்றிய தகவல்களை பதவிச் சண்டைகளின்போது வெளியிட்டு நடந்த கோரப்படுகொலைகளை சிங்கள அரசும் அதனை ஆளும் போர்க்குற்றவியலாளரான ஆட்சியாளர்களும் வெளிச்சம் போட்டுக்காட்டிவருகின்றனர். இதன் பின்னரும் தமிழரான நாம் உறங்குநிலையில் இருக்காது எமது சுயநிர்ணைய உரிமையை உலகம் ஆதரிக்கவைக்கவேண்டும்!

இதன் முதற்கட்டமாக உலகெங்கும் தமிழர் வாழும் நாடுகளில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்கெடுப்பு நடாந்து வருகின்றது. கனடா நாட்டில் நாடுதழுவிய அளவில் இவ் ஜனநாயக வாக்கெடுப்பானது மார்கழி 19ம் திகதி நடைபெறவுள்ளது.

கனடா வாழ் அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து இவ் வாக்களிப்பில் கலந்துகொள்வதன்மூலம் எமது ஒற்றுமை மற்றும் ஜனநாயக வழியிலான எமது போராட்ட வரலாற்றை உலகுக்கு எடுத்துக்காட்டமுடியும். இதன்மூலம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பதோடு மட்டுமில்லாது இற்றைய எமது இளம் சந்ததியினருக்கும் எமது ஜனநாயகப் போராட்டம் பற்றிய படிப்பினையூட்டலாம்.

ஆகவே கனடாவாழ் தமிழீழ மக்களே இளையோரே கனடாத்தமிழர் வரலாற்றிலும் ஓர் முக்கிய திருப்புமுனையாக இருக்கப்போகும் வட்டுக்கோட்டை தீர்மான மீள்வாக்கெடுப்பில் பங்கேற்று ஈழத் தமிழ்ர்களது அபிலாசைகளை உலக்குக்கு உரத்த எடுத்துக்கூறுவோமாக!

-கனடா தமிழ் மாணவர் சமூகம்!

Comments