மாறாத வடுக்களுடன் புலம்பெயர் தமிழர் குறித்த பிபிசியின் பார்வை -ஒலிவடிவம்

மாறாத வடுக்களுடன் புலம்பெயர் தமிழர்

இலங்கையில் மோதல்கள் முடிந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அங்கு ஏற்பட்ட இழப்புக்கள் குறித்து புலம்பெயர் தமிழர்கள் இன்னும் மன வலியுடனேயே இருக்கிறார்கள்.

இலங்கையின் தற்போதைய நிலை, அங்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் கதி ஆகியவை குறித்து புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் இன்னமும் குழப்பமான நிலையே காணப்படுகின்றது.

அதேவேளை இலங்கை தமிழர்களின் மீது அவர்கள் கொண்ட அக்கறை காரணமாக சில அரசியல் நடவடிக்கைகளிலும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் ஈடுபடுகின்றன.

இவை குறித்து ஆராய்கின்ற எமது பெட்டகத்தொடரின் மூன்று பாகங்களையும் நேயர்கள் இங்கு கேட்கலாம்.

பாகம் 1
இதில் எஞ்சியிருக்கும் புலிகளின் தளபதி நகுலன் என்று சொல்லி அவரின் பேட்டி எங்கிருந்து வழங்கப்பட்டது ?
காட்டில் நகுலனுக்கு முகவரி இருக்கின்றதா தொடர்பு கொள்ள ?

பாகம் 3

ராகவன் --இவர் அரசாங்கத்தின் கைப்பாவையாக இருக்கும் ஒருவரிடம் எப்படி மக்கள் தமது விருப்பை கூறுவார்கள் ??

இவர் சிரிக்க முடியாமல் சிரித்து ஏளனம் செய்கின்றார் ??

கிருஸ்ணா அம்பலவாணர்
சுவிஸ் புலிகளின் பரப்புரை பிரிவு என்று சொல்லி மீண்டும் மீண்டும் ஒரே பல்லவியைச் சொல்லிக்கொண்டிருக்கின்றார்

சந்ததி சாக்கில் எல்லாவற்றையும் சாடுகின்றார் ?

Comments