புதிய இந்தோ லங்கா பாதுகாப்பு ஆலோசகர் அடி[யாள் ]கள் ஜெகத்

கஸ்பர் அடியாளாரே!, நாளை வரலாறு உங்களை மன்னிக்காது
பாதர்[ கனிமொழியில் சொன்னால் அப்பா ??? ] மன்னிக்காது...


சமீபத்தில் தாய்லாந்தில் தரையிறக்கப்பட்ட விமானம் பற்றி பல சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், அதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ஒரு கதையை எழுதித் தள்ளியுள்ளார் திரு ஜெகத் கஸ்பர். அந்த விமானத்தில் ஆர்.பி.ஜி, விமான எதிர்ப்பு ஏவுகணை, மற்றும் துப்பாக்கிகள் இருந்ததாக தாய்லாந்து அதிகாரிகள் பட்டியலிட்டுச் சொல்லிவிட்டனர், ஆனால் அதில் கடுமையான நச்சு வாயு அடங்கிய ஆயுதங்கள் இருந்ததாகவும், அது இலங்கைக்கு கொண்டு செல்லப்பட இருந்ததாகவும் கஸ்பர் அவர்கள் ஒரு கப்ஸா விட்டிருக்கிறார், நக்கீரனில்.

இதற்காக ரூம் போட்டு யோசிப்பாரோ என்னமோ தெரியாது, கற்பனை வளம் இவரிடம் நிறையவே உண்டு. இந்த நச்சுவாயுக் குண்டுகளை இலங்கை அரசாங்கம் காடுகளில் எஞ்சியிருக்கும் புலிகளை அழிக்க பயன்படுத்த இருந்ததாக இவர் சொல்லியிருப்பது கோத்தபாய ராஜபக்ஷவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும். என்னடா எனது திட்டத்தில் இது இல்லையே என கோத்தபாய மிரண்டிருப்பார். அவ்வளவு விசுவாசமாக இவர் வேலைசெய்கிறார். யாருக்கு என்று தமிழர்களுக்குப் புரியாதா என்ன?

இதில் தளபதி ராமுக்கு என்ன பங்கு என யோசிக்கவேண்டாம், அவர் தான் கதாநாயகன், இயக்கம் கஸ்பர் அடிகளார் தான். அதாவது வன்னிக் காடுகளில் பல தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக , வெளிப்படையாகச் சொல்கிறார் கஸ்பர். அத் தாக்குதல்களை கட்டுப்படுத்த முடியாமல் இராணுவம் திணறுவதாகவும் எழுதியுள்ளார் கஸ்பரடிகளார், மற்றும் தளபதி ராம் உருவாக்கியுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பை (புது அமைப்பை) நிர்மூலமாக்கவே இந்த நச்சு வாயு ஆயுதங்களை இலங்கை தருவிக்க இருந்ததாக நக்கீரனில் எழுதித் தள்ளியுள்ளார்.

“துரோகி ராமின் அடுத்த நடவடிக்கை என்ன?”
தற்போது எமக்கு கிடைத்த புலனாய்வு தகவல்களின்படி பனாகொட சிறீலங்கா இராணுவ முகாமில் சொகுசாக இருக்கும் ராம், தனது சர்வதேச கூலிகளுக்கு ஓர் கட்டளை அறிவித்திருப்பதாக அறியப்படுகின்றது
“புலிகளின் கிழக்கு தளபதி ராம் கைது” – நாடகம்
“கேணல் ராம்” – துரோகம்!

சுருக்கமாகச் சொல்லப் போனால் தளபதி ராம் காட்டில் யுத்தம் நடத்துகிறார், அவரை அழிக்க இலங்கை நச்சுவாயு ஆயுதங்களைக் தருவிக்கிறது என்று விளக்கம் சொல்கிறார் கஸ்பர் அடிகளார்.

தளபதி ராம் இலங்கை இராணுவத்தின் பிடியில் சிக்கியிருப்பதாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதால் அதனை உடைத்து ராமிற்கு ஒரு களம் அமைத்துக் கொடுக்க முயல்கிறார் கஸ்பர் அடிகளார் என்பதே யதார்த்தம்.

உண்மையாகவே ராம் தனியாக காடுகளில் செயற்பட்டு வருகிறார் என்று ஒரு உதாரணத்திற்கு வைத்துக் கொண்டாலும், எப்படி இவரால் உறுதிப்படுத்த முடியும். இலங்கை சென்று நேரில் பார்த்தாரா கஸ்பர்?, தொலைபேசி மூலம் பேசிவிட்டு எதனை உண்மை என்று நம்புவது.

தற்போது உள்ள சூழ்நிலையில் நாம் ஒவ்வொரு அடியையும் மிகவும் அவதானமாக எடுத்துவைக்க வேண்டிய கால கட்டத்தில் உள்ளோம். இலங்கை புலனாய்வுத் துறையின் சவால்களை முறியடிக்கும் கட்டாயத்தில் நிற்கின்றோம். இப்படியான சூழலில் இவரைப் போன்ற சிலரால் எமது போராட்டம், அதன் பாதை மற்றும் நம்பகத்தன்மை என்பன கேள்விக்குறியாக்கப்படக் கூடாது. இவரைப் போல மக்களை பிழையான பாதையில் தனது சுயநலம் காரணமாக வழிநடத்திச் செல்வோர் இனம் காணப்படவேண்டும். கதை எழுத ஆர்வம் இருந்தால் சினிமாவில் கதை எழுதலாம். தமிழர்களின் போராட்டத்தை, போராட்டப் பாதையை திசை திருப்ப கதைகளை எழுதவேண்டாம்

கஸ்பர் அடியாளாரே!, நாளை வரலாறு உங்களை மன்னிக்காது பாதர்[ கனிமொழியில் சொன்னால் அப்பா ] மன்னிக்காது...

பின் குறிப்பு:

அதிர்வு இணையம் இந்த மர்ம விமானம் இலங்கைக்கும் சென்று எரிபொருள் நிரப்ப இருந்தது என்று செய்தி வெளியிட்டிருந்தது. அத்துடன் அது விடுதலைப் புலிகளின் ஆயுதங்களாக இருக்கலாம் என்றும், அதனைக் கைப்பற்றி தேர்தல் நேரத்தில் இலங்கை கொண்டுவர அரசு முயற்சிக்கிறதா என்ற கோணத்திலும் செய்திகளை வெளியிட்டிருந்தது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறோம். தற்போது புலிகளின் கப்பல் ஒன்றையும் இவ்வாறு இலங்கை அரசு கொழும்பு கொண்டு வந்தது யாவரும் அறிந்ததே. சற்று முன் கிடைத்த தகவல் படி இந்த மர்ம விமானத்தின் மர்மம் தீர்ந்தது, இது வடகொரியாவில் இருந்து , தாய்லாந்து சென்று எரிபொருள் நிரப்பி, பின்னர் இலங்கை வந்து மீண்டும் எரிபொருள் நிரப்பி, அங்கிருந்து அதன் கடைசி இலக்கான ஈரானுக்குச் செல்லவே இந்த விமானம் திட்டமிட்டிருந்தது என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

வடகொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு சிறியரக ஆயுதம் முதல் கனரக ஆயுதங்களை விற்கக் கூடாது என ஐ.நாவின் பாதுகாப்புச் சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், வடகொரியாவில் உற்பத்தியாகும் ஆயுதங்களையும் வடகொரியா விற்க முடியாது. எனவே ஆயுதங்களைக் கடத்தும் சில தாதாக்களைப் பயன்படுத்தி வடகொரியா தனது ஆயுதங்களை விற்றும் தருவித்தும் வருகின்றது. இதனை மிக உஉன்னிப்பாக அவதானித்து வருவது அமெரிக்கா. அதன் அடிப்படையில் இந்த விமானத்தை அமெரிக்க உளவு நிறுவனம் வடகொரியாவில் இருந்து புறப்பட்டது முதலாக கவனித்து எரிபொருள் நிரப்பும் வேளையில் ஆப்புவைத்தது. இதுவே நடந்த உண்மை.

தொடரும் துரோகிகளின் பயணம்



மறக்க முடியுமா ? ஜெகத் கஸ்பாரின் மறு பக்கம்

தமிழீழப்போராட்ட விழிப்புணர்வை மங்க வைக்கும் செயல்பாடாகவே அவை வெளிவரும். தமிழகத்தில், போராட்டத்தில் மிகத் தெளிவாக இருக்கும் பழ.நெடுமாறன், வை.கோ, சீமான், குளத்தூர்மணி போன்றோரை அப்புறப்படுத்தும் அல்லது அவர்களை விமர்சிக்கும் அளவிற்கு இவர் வருவார்.

Comments