Questions by TamilNet and responses from the organisers in Tamil follow:
- இலங்கைத்தீவில் சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசு அமையவேண்டும் என்பதே ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசை என்பதை அளப்பரிய பெரும்பான்மையில் பிரான்சு வாழ் ஈழத்தமிழர்கள் ஜனநாயக ரீதியில் மீளுறுதிப்படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாக, முள்ளிவாய்க்காலில் ஆயுதரீதியான நான்காவது ஈழப்போர் சிறிலங்கா அரசினாலும் அதற்குத் துணைபோன சர்வதேச சக்திகளின் பல வலிமையாலும் முடிவுக்கொண்டுவரப்பட்டு ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டுள்ள சூழலில் ஈழத்தமிழர்கள் இந்த அபிலாசையை மீள வெளிப்படுத்தியிருப்பது குறித்து இந்த வாக்குக்கணிப்பை முன்னெடுத்தவர்கள் என்ற வகையில் உங்கள் கருத்து என்ன திரு. திருச்சோதி அவர்களே?
- இந்த வாக்குக்கணிப்பை முன்னெடுக்கும் போது, குறிப்பாக இப்போது மக்கள் மத்தியிலுள்ள ஒரு சோர்வு நிலையில் அவர்களின் பங்களிப்பு ஏதேனும் ஒரு விதத்தில் குறைவாக நடந்து அதனால் எதிர்பாராத விளைவுகள் ஏற்பட்டுவிடலாம் என்ற அச்சம் உங்களுக்கு இருந்ததா? அதை எவ்வாறு எதிர்கொண்டீர்கள்?
- இந்த வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த முன்னெடுப்பை பல நாடுகளில் முன்னெடுக்கும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்ற இந்தவேளை, பிரான்சு நாட்டைச் சேர்ந்த தாங்கள் இதை துணிகரமாக நடாத்திக்காட்டியிருக்கிறீர்கள். இதை முன்னெடுத்தவர்கள் என்ற வகையில், அதாவது செயற்பாட்டாளர்கள் என்ற வகையில், நீங்கள் செயற்பட்ட முறை எந்த வகையில் இதன் வெற்றிக்குக் காரணமாக அமைந்திருந்தது என்பதை சொல்லமுடியுமா, திரு பிரதீப் அவர்களே?
- எந்த ஒரு வேலைத்திட்டமும் நிதிச்செலவை அடிப்படையாகக் கொண்டிருக்கும். குறிப்பாக வேறு நாடுகளிலும் இதை மேற்கொள்பவர்களுக்கு உங்கள் அனுபவத்தின் மூலம் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன? இவ்வாறான முயற்சி பெரும் நிதிச்செலவோடு திட்டமிடப்படவேண்டுமா? அல்லது வேலைத்திட்டத்தை முன்னெடுத்தவாறே மக்கள் பங்களிப்பூடாக இதை உங்களால் செய்யமுடிந்ததா, பிரதீப்?
- வாக்காளர் இடாப்பு செய்வது உகந்ததா இல்லையா என்ற விவாதத்தில் உங்களுடைய அனுபவத்தை சொல்ல முடியுமா? தனிநபர் பெயர்கள், முகவரிகள், தொலைபேசி இலக்கங்கள் போன்றவை பதிந்தே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லாமல் இதை எவ்வாறு நீங்கள் செய்தீர்கள்?
- பிரான்சு தேசத்தவர்களையே இந்த வாக்குக்கணிப்பை நடாத்துபவர்களாகவும், முடிவுகளை அறியத்தருபவர்களாகவும் ஒழுங்குசெய்திருந்தீர்கள், இந்த ஒழுங்குகளை எவ்வாறு செய்திருந்தீர்கள் என்பதைப் பற்றி இந்த ஒழுங்குகளை நடாத்திய இளைய தலைமுறையினரான சாளினி அவர்களே நீங்கள் சிறிது விளக்கமாகச் சொல்லமுடியுமா?
- இந்த வாக்களிப்பை நடாத்திய பிரான்சு நாட்டு உள்ளூராட்சியைச் சேர்ந்தவர்கள் எவ்வாறான அனுமானத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றி சொல்ல முடியுமா, சாளினி?
- வாக்குக்கணிப்புக்கான தகவற்பரப்பு வேலைகளிலும் வாக்கெடுப்பில் பங்குபற்றுவதிலும் இளையோரின் பங்களிப்பு எவ்வாறிருந்தது என்பது பற்றி சொல்லமுடியுமா, அகல்யா?
- சரி, வாக்குக்கணிப்பை வெற்றிகரமாகவும் நம்பகமாகவும் பிரான்ஸில் நடாத்தியாயிற்று. இதைக் கொண்டு அடுத்த கட்ட அரசியற் செயற்பாடுகள் எவ்வாறு அமையலாம் என்று நினைக்கிறீர்கள்?
Comments