நேற்றும் நேற்றுமுன்தினமும் பிரித்தானியா முழுவதும் நடைபெற்ற வட்டுக்கோட்டைப் பிரகடனத்தின் மீதான மீள் வாக்குகணிப்பின் முடிவுகள் லண்டனில் அமைந்துள்ள Park Lane நட்சத்திர விடுதியில் இன்று இரவு உத்தியபூர்வமாக ஊடகவியளார் மற்றும் பார்வையாளர் முன்னிலையில் தேர்தல் குழுவினரால் அறிவிக்கப்பட்டது.
இதில் 99.33 வீதமான பிரித்தானியாவாழ் தமிழ்மக்கள் இறைமையுள்ள தனித் தமிழீழ அரசினை நிறுவுவதற்கு தமது விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியா முழுவதும் வாக்களித்த 64,692 வாக்காளர்களில் 64,256 வாக்காளர்கள் தனித் தமிழீழ அரசினை நிறுவுவதற்கு ஆம் என்றும் 185 வாக்காளர்கள் இல்லை என்றும் 251வாக்குகள் செல்லுபடியாகாத வாக்குகளாகவும் பதிவாகியுள்ளன.
இதன் படி வட்டுக்கோட்டைப் பிரகடனத்தின் அடிப்படையில் இறைமையுள்ள தனித் தமிழீழ அரசினை நிறுவுவதற்கு 99.33 வீதமான மக்கள் ஆம் என்றும் 0.29 வீதமான மக்கள் இல்லை என்றும் வாக்களித்ததுடன் 0.38 வீதமான வாக்குகள் செல்லுபடியாற்றதாக பதிவாகியுள்ளதாக தேர்தல்குழு தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது
Comments