யாழில் மக்களை ஏமாற்றியதற்காக தகுந்த பாடம் கற்பிக்கப்படும் - மக்கள் சூழுரை

யாழ் குடா நாட்டுக்கான மகிந்தவின் பயணத்தை ஒட்டி நடாத்தப்பட்ட பரப்புரைக் கூட்டங்களுக்கு மக்களை திரட்டும் முகமாக பல பொய் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளமை பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் மகிந்தவின் வரவை ஒட்டி அரசியல் லாபம் தேடும் ஒரு சில தமிழ் ஒட்டுக்குழுக்கள் மக்களை ஒன்று திரட்டி மகிந்தவின் மனதை குளிர்விக்க எண்ணிய போதும் அவர்கள் எண்ணியவாறு மக்களை திரட்ட முடியவில்லை.

இதையடுத்து உயர் பாதுகாப்பு வலயம் என சிறீலங்கா அரசால் பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களை மகிந்த மீண்டும் அவர்களின் பிரதேசங்களுக்கு அழைத்து செல்வார் எனவும் அதற்கான தயார்ப்படுத்தல்களுடன் யாழ் பொதுவிளையாட்டு மைதானத்தில் ஒன்று கூடும் படி வாகன ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்திதுள்ளனர்.

இதை நம்பிய வலி வடக்கு மக்கள் சிலர் மற்றும் நாவற்குழி மக்கள் அவர்கள் அனுப்பிய பேருந்துகளில் ஏறி சென்று காத்திருந்ததும் மாலை ஆகியும் அது பற்றிய எந்த நடவடிக்கைக்கான அறிகுறியும் காணப்படாது ஏமாற்றத்துடனும் ஆத்திரத்ணதடனும் வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன் இவ்வாறு ஏற்றிச் செல்லப்பட்ட மக்கள் குடிநீர் கூட வழங்கப்படாது வெறும் வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்ட கொடுமையும் நடந்தேறியுள்ளதுடன் அழைத்துச் சென்ற குறிப்பட்ட மகிந்தவின் வால்பிடிகள் மகிந்தவின் வாலைப்பிடித்துக் கொண்டு யாழ்ப்பாணத்தை வலம் வந்தது மக்களை மேலும் ஆத்திரப்படவைத்துள்ளது.

இதே போல் மக்களை செயற்கையாக திரட்ட விளையாட்டுக்கழகங்கள் மற்றும் மாதர் சங்கங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் பணப்பெறுதிகள் வழங்கப்படும் எனக் கூறியும் சிலர் அழைத்து செல்லப்பட்டு வெறுங்கையுடன் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இதேவேளை நாகவிகாரைக்கு அண்மையில் உள்ள உயர் கல்வி நிலையம் ஒன்றிற்கு மகிந்த சென்ற போது அங்குள்ள மாணவர்கள் அவரின் வருகைக்கு எதிர்பபு தெரிவிக்கும் கோசங்களை எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிந்தவிற்கு யாழ்பபாணத்தில் வாக்குகள் கிடைகாது கொழும்பிற்கே திரும்ப சென்று விடு! என்பது போன்ற கோசங்களை மாணவர்கள் எழுப்பியுள்ளனர்.

மேற்படி சம்பவங்கள் சிறீலற்காவின் சிங்கள அரசியல் எந்த அளவில் உள்ளது, தமிழ் புல்லுருவிகளின் அரசியல் எந்த அளவில் உள்ளது என்பதை தமக்கு கற்றத் தந்துள்ளதாக கூறும் பாதிக்கப்பட்ட மக்கள் இவற்றிற்கு தகுந்த பாடம் கற்பிக்கப்படும் என சூழுரைத்துள்ளனர்.

Comments