விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தின் ஆணிவேரும் வட்டுக்கோட்டை தீர்மானம் தான்: தேசியத்தலைவர்-காணொளி

இன்றும் நாளையும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு மூன்று நாடுகளில் நடைபெறவுள்ளது. இன்று சனிக்கிழமை (23) மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை (24) சுவிஸ் இலும், நாளை ஞாயிற்றுக்கிழமை (24) ஜேர்மன் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் இந்த வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

ஏற்கனவே நோர்வே, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் நடைபெற்று பெரும் வெற்றியை அடைந்த இந்த கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பை தமது நாடுகளிலும் வெற்றிபெறச் செய்வது அந்த நாடுகளில் வாழும் மக்களின் கடமையாகும்.

அன்னியாரின் ஆட்சியுடன் தொலைந்து போன எமது உரிமைகளை பெறுவதற்காக நாம் அரசியல் வழிகளிலும், ஆயுதம் கொண்டும் போராடிய போதும் அந்த இரண்டு பாதைகளினதும் ஆணிவேராக வரையப்பட்டது வட்டுக்கோட்டை தீர்மானமே. அதனை எமது தமிழீழ தேசியத்தலைவர் கூட 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார்.

அதாவது தமிழ் மக்களை அணிதிரட்டி விடுதலைப்புலிகள் இயக்கம் ஆயுதம் ஏந்திபோராடியது வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு மக்கள் வழங்கிய ஆணையை பெறுவதற்கே என அவர் தெரிவித்ததும் இங்கு கவனிக்கத்தக்கது. சிறீலங்காவின் இனவாத சிங்கள ஆட்சியாளர்களிடம் இருந்து தமது அரசியல் உரிமைகளை பெறுவதற்காக தமிழ் இனத்தினால் வரையப்பட்ட அரசியல் யாப்பாகவே வட்டுக்கோட்டை தீர்மானம் போற்றப்படுகின்றது.

அந்த அரசியல் யாப்பை மக்கள் தமது ஆணைமூலம் அங்கீகரித்திருந்தனர். விடுதலைப்போர் ஆயுதப்போரான பரிணமித்து பெரும் இழப்புக்களை எதிரிக்கு ஏற்படுத்தி நாமும் பேரழிவுகளை சந்திப்பதற்கு முன்னரே வட்டுக்கோட்டை தீர்மானமே எமக்கு கிடைக்கவேண்டிய அரசியல் உரிமைக்கான ஒரே வழியென தமிழினம் ஒருங்கிணைங்து 1977 ஆம் ஆண்டு குரல் கொடுத்திருந்தது.

ஆனால் அதன் பின்னர் நகர்ந்து சென்ற வரலாற்றின் 33 வருடங்களில் நாம் மக்களின் ஆணையை பெற்றுக்கொள்வதற்காக தொடர் இழப்புக்களை சந்தித்த போதும் விடுதலைத் தாகம் உலகின் திசையெங்கும் பரந்து விரிந்துள்ளதே தவிர அடங்கிப்போகவில்லை.

தற்கால உலகின் இராஜதந்திர நகர்வுகளுக்கு ஏற்ப நாமும் எமது போராட்டத்தின் பாதையை மறுசீரமைத்துக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். ஜனநாகயம், மனித உரிமைகள், அகிம்சை, அரசியல் வழிமுறை என கூறிவரும் மேற்குலகத்தின் அசைவியக்கத்தின் ஊடாக எமது விடுதலைக்கான ஆணையை அங்கிகரிக்க கோரும் ஒரு நகர்வே வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பாகும்.

அதனை வெற்றிபெறச் செய்வதன் மூலம் தான் எமக்கான அரசியல் தீர்வு எதுவாக இருக்க வேண்டும் என்ற காத்திரமான ஆதராங்களுடன் அனைத்துலக சமூகத்தின் அசைவியங்கங்களை எமது பக்கம் திருப்ப முடியும்.

எனவே முன்னர் நடைபெற்ற கருதுக்கணிப்பு வாக்களிப்புக்களை போல இன்றும் நாளையும் நடைபெறும் வாக்களிப்புக்களை சுவிஸ், ஜேர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் வாழும் மக்கள் வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பது

http://tamiljugend.ch/ta/images/stories/wkr.jpgசுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசு என்பதே ஈழத்தமிழரின் அரசியல் அபிலாசை என்ற தமிழீழக் கோரிக்கைக்கான மக்கள் ஆணை பெறப்பட்ட அரசியல் தீர்மானம். விரிவாக

Comments