எமக்கு எதிரான இன்போதமிழின் எதிர்வினை

படங்கள் சொல்லும் செய்தி என்ன ?

என்ற ஆக்கத்திற்கு பதிலாக அல்லாமல் ஒரு ஈகோ எதிர்வினையாக ஒரு ஆக்கம்
குழுமத்தால் இடப்பட்டிருக்கின்றது --


எமக்கு விளக்கம் அளிக்கும் முகமாக எழுதியதில் எங்கேயாவது விளக்கம் இருக்கின்றாதாக எனக்குத் தெரியவில்லை இருந்தால் சுட்டிக்காட்டவும்

உங்கள் ஈகோ -பதிலுக்கு நன்றிகள்

இவர்களின் ஈகோவிற்கு பதிலளிக்க முன் நீங்களே படியுங்கள்

விட்டுக்கொடுத்தவர் கெட்டுப் போனதில்லை!
[ புதன்கிழமை, 13 சனவரி 2010, 12:04.56 பி.ப | இன்போ தமிழ் ]

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!
இழிவாக வாழோம்! எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம்

தூற்றுவார் தூற்றட்டும்........

  • ஊர் இரண்டு பட்டால் கூத்தாடுபவர்களுக்கு கொண்டாட்டம் என்று சொல்லப்படுவதை நிரூபித்தபடி இருப்பவர்கள்தான் இவர்களும்! தமிழ்த் தேசியம் என்ற போர்வையில் பகைமையையும் வெறுப்பையும் தொடர்ந்து பேணுவதன் மூலமே தங்கள் உணர்ச்சிகர அரசியலைச் செய்ய முடியும் என்று கருதுகிறார்கள். அந்த உணர்ச்சியாவேச நெருப்பில் கருகி அழிந்துபடும் நம்மைப் பற்றியும் சமூகத்தின் சிதைவு பற்றியும் இவர்களுக்கு எந்த அக்கறையுமில்லை. இவர்கள் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதையே தங்கள் அரசியலாக வைத்திருக்கிறார்கள். இவர்கள் முதலில் விடுதலைப்போராட்டத்துக்கு வழிகாட்டியான பாதையை திறக்கடும் விமர்சனம் செய்யட்டும் அது ஆரோக்கியமானதாக அமைவதே காலத்தின் தேவையாகிறது. உண்மையில் அதைவிடுத்து..........?

இன்போதமிழ் குழுமம்

விட்டுக்கொடுத்தல், பொறுத்துப்போதல், மதித்தல் இவையெல்லாம் தனக்கு ஒவ்வாத மாறுபட்ட ஒன்றை பிறருக்காக மனம் உவந்து செய்யப்படும் செயல்கள். விட்டுக்கொடுத்தவர் கெட்டுப் போனதில்லை என்றே சொல்லுவார்கள். ஒரு சின்ன மனத்தாங்கலிள் கூட உணர்வுகளை ஈகோவுக்கு இரையாக்கிவிட்டு, 'தான் மிகவும் கோவக்காரன்' என்று சொல்வதெல்லாம் பெருமையா ? பத்து ஆண்டுகள் பழகியவராக இருந்தாலும் 10 நிமிடத்தில் இருவருக்கும் ஏற்படும் சினம் எல்லாவற்றையும் கெடுத்துவிடும். 'என்னை' எப்படி சொல்லலாம் என்ற தன்னைப் பற்றிய மிதமிஞ்சிய பெருமதிப்பில் ஆண்டுக்கணக்கில் ஒருவரை ஒருவர் எதிரே சந்தித்தாலும் வெப்பமூச்சையோ, பெருமூச்சையோ வெளி இட்டுச் செல்வார்கள், சண்டைப் போடுவதற்காகக் கூட பேசுவோம் என்று இருவருமே நினைக்க மாட்டார்கள். ஒருவர் நல்லமனதுக்காரராக இருந்துவிட்டால் நிலைமைகள் சரியாகும்.

பொதுவாக சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி அந்த நிமிடத்தின் நிகழ்வுகளை மட்டுமே திரும்ப திரும்ப ஞாபகப்படுத்திக் கொண்டு இருக்கும், அந்த கெட்ட நிகழ்வுக்கு முன்பு வரை இருவரும் ஒரே தட்டில் உண்டவர்களாகவோ, ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து தூங்கியவர்களாகவோ, ஒருவரின் அன்பில் மற்றவர்கள் உருகிய எண்ணற்ற நிகழ்வுகள் நடந்திருக்கலாம், அதையெல்லாம் ஈகோ நினைத்துப் பார்க்க வழிவிட்டுவிடவே விடாது. 'ச்சே.....அவனும் நானும் எப்படி எல்லாம் இருந்திருக்கிறோம்...' என்று நினைக்கும் அதே நொடியில் 'நான் ஒன்னும் அவனைக்காட்டிலும் எந்தவிதத்திலும் குறைந்தவன் இல்லை' என்ற மற்றொரு நினைப்பு பழைய நிகழ்வின் நினைவுத் தொடர்ச்சியை உடனடியாக துண்டித்துவிடும். இன்னும் கொஞ்சம் இளாகிய மனதுகாரராக இருந்தால், 'நாம அப்படி நினைக்கிறோம்...அவர் அப்படி நினைக்கணுமே...நம்ம நல்ல மனது அவனுக்கு வராது...நினைச்சுப் பார்ப்பதே வேஸ்ட்' என்று ஈகோவை மீறிய சிந்தனையை மீண்டும் ஈகோவில் மெல்லப் புதைப்பார்கள். மிகச் சிலர் மட்டுமே... 'தப்பாக நினைத்தாலும் பரவாயில்லை...எதிரே வரும் போது கண்டிப்பாக பேசி தம்மீது தவறே இல்லை என்றாலும் புரிந்துணர்வின் மலர்ச்சிக்காக மன்னிப்புக் கேட்கலாம்...ஏற்றால் பார்ப்போம்' என்று நல்ல பொழுதிற்காக காத்திருப்பார்கள்.

வாழ்க்கை முழுவதுமே எதோ ஒரு மேலான உணர்ச்சிக்கு தன்னை அடகு வைத்து அதனால் கிடைக்கும் சொற்ப சுகத்திற்கு ஈடாக மகிழ்வையெல்லாம் வட்டியாக செலுத்தி வாழ்ந்து வருவதே பெரும்பாலான மனிதருக்கு இனிப்பாக இருக்கிறது. உடல சதையாலும் இரத்தத்தாலும் இருப்பது உண்மை. மனதை அப்படி வரையறுத்துவிட முடியாது. ஆனால் அதில் வரையறை செய்து கட்டுபோட்டு வைப்பது, நல்ல எண்ணங்களை சிறைவைப்பது இவையெல்லாம் ஈகோவால் நடப்பவை.

தன்னைப் பற்றிய பிறரின் புகழ்ச்சிக்கு ஏங்குபவர்கள் பலரும் கூட அதற்கு தங்களின் பங்காக எதையும் செய்வதில்லை என்பதே உண்மை, விதை விதைக்காமலே அறுவடை நடந்துவிடுமா ? தத்துவங்கள், பேருண்மைகள் வாழ்க்கைக்கு உதவாது என்று இயல்பில் இருந்து விலகி வாழ்வை தள்ளி வைத்துக் கொள்பவர்களே மிகுதி. இரு கைகளின் விரல்கள் வேறு வேறு திசை நோக்கி இருந்தாலும் இருகைகளும் ஒன்றை ஒன்று தழுவும் போதும் திசை வேறாக இருந்தாலும் ஒன்றை ஒன்று பார்க்கும் என்பது புரிந்து கொள்ளப் படுவதே இல்லை.

550 கோடி மக்கள் வாழும் உலகில் நம்மை அறிந்தவர்கள் என இருப்பவர்கள் மிகக் குறைவே. நம்மை அறிந்தவர்கள் நம்முடைய போற்றுதலுக்கு உரியவர்கள், இவர்களைத் தவிர்த்து நாம் யாரைப் போற்றப் போகிறோம் ? அதனால் பயன் தான் என்ன ? நமக்கு தொடர்பே இல்லாத நடிகனையும், தலைவர்களின் மீது பற்று வைத்துப் போற்றுபவர்கள், தனக்கு நன்கு தெரிந்தவர்களின் மீது சின்ன சின்ன கருத்துவேறுபாட்டிற்காக விலகி இருப்பதென்பது நமக்கு தெரிந்தவர்களில், நாம் நேசிக்கக் கூடியவர்களில் ஒருவரை (மனப் படுகொலையால்) இழப்பதும் கொடுமையான ஒன்றே. சேர்த்து வைத்தப் பணத்தில் 10 ரூபாய் காணாமல் போனால் கூட கலங்கும் மனது பிரிவிற்காக கலங்கவேண்டும் அல்லவா ? நாம் சேர்த்துவைத்ததில் நண்பர்களும் உறவுகளும் அடங்கும் அல்லவா ?

சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், பொறுத்துப்போதல், மதித்தல் போன்ற செயல்களில் வழி நிமிட நேரத்தில் தீர்ந்துவிடும் பகையெல்லாம் ஈகோவின் கட்டுப்பாட்டில் மரணம் வரையில் கூட நீடித்துவிடும். ஈகோவுக்கு அத்தகைய ஆற்றல் உண்டு

சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், பொறுத்துப்போதல், மதித்தல் இவை நான்குமே ஒருவர் ஈகோ வசப்படும் போது அப்படி நடந்து கொள்வது கோழைத்தனம் என்றே புரியவைக்கப்பட்டு ஒட்டாமல் ஆயுள் சிறை வைத்துவிடும்.

சேரத்துடிக்கும் கரங்களை பூட்டி இருக்கும் ஈகோ என்னும் மாய விலங்கு உடை(க்கப்)பட வேண்டும்.

  • ஊர் இரண்டு பட்டால் கூத்தாடுபவர்களுக்கு கொண்டாட்டம் என்று சொல்லப்படுவதை நிரூபித்தபடி இருப்பவர்கள்தான் இவர்களும்! தமிழ்த் தேசியம் என்ற போர்வையில் பகைமையையும் வெறுப்பையும் தொடர்ந்து பேணுவதன் மூலமே தங்கள் உணர்ச்சிகர அரசியலைச் செய்ய முடியும் என்று கருதுகிறார்கள். அந்த உணர்ச்சியாவேச நெருப்பில் கருகி அழிந்துபடும் நம்மைப் பற்றியும் சமூகத்தின் சிதைவு பற்றியும் இவர்களுக்கு எந்த அக்கறையுமில்லை. இவர்கள் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதையே தங்கள் அரசியலாக வைத்திருக்கிறார்கள். இவர்கள் முதலில் விடுதலைப்போராட்டத்துக்கு வழிகாட்டியான பாதையை திறக்கடும் விமர்சனம் செய்யட்டும் அது ஆரோக்கியமானதாக அமைவதே காலத்தின் தேவையாகிறது. உண்மையில் அதைவிடுத்து..........?

எம்மீது இப்படியும் ஒரு வன்மம் .............

புதன்கிழமை, 13 சனவரி 2010

Comments