விடுதலைக் கனலை அணைக்க முயல்கிறதா நாடு கடந்த அரசு?

நாடு கடந்த அரசு உருவாக்கும் ஆலோசனைக் குழு தமது அறிக்கையினை மக்கள் பார்வைக்கு கடந்த வெள்ளியன்று வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையானது, சுதந்திர தமிழீழ தனியரசை அமைக்கும் நோக்கத்தை இலாவகமாகக் கைவிட்டுள்ளது.

இந்த அறிக்கையின் வடிவமானது, இது ஒரு நாடு கடந்த அரசு என்பதைவிட வேறு சக்திகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு நாடு கடந்த கூட்டுறவு நிறுவனமாக அல்லது வெறுமனே ஒரு அரச சார்பற்ற நிறுவனமாகவே தோற்றம் காட்டுகின்றது. இவர்கள் ஒரு கூட்டாட்சிக்கும் படிப்படியான பேச்சுவார்த்தைக்குமே தம்மைத் தயார் படுத்துகின்றார்கள். இவர்களது பக்கம் சார்ந்த அரசியலானது மக்களால் அதற்குரிய தந்திரங்களாலும், பலத்தாலும் பதிலளிக்கப்பட வேண்டியவை. இவர்கள் கொடுத்திருக்கும் அந்த வழிகாட்டிக் கோட்பாடானது, இந்தக்குழுவினரின் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட மக்கள் பங்குபற்றாத ஒரு கோட்பாட்டு அலகையே கொண்டுள்ளது.

ஒவ்வொரு நாட்டிலும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளும் தமது சொந்தக் கருத்துக்களைக் கூறமுடியாது இந்த வழிகாட்டிக் கோட்பாட்டின் எல்லைக்குள் அடங்கியே செயற்பட முடியும். ஏனெனில் ஏற்படுத்தப்படும் கண்காணிப்புக்குழு இவர்களை இவர்களுக்காக அடைத்துக் கொடுக்கப்பட்ட வேலிக்குள் கொடுக்கப்பட்ட வேலைகளைச் செய்ய மட்டுமே அனுமதிக்கும். இங்கு இவர்களுக்கான ஜனநாயகம் இவ்வளவே. அத்தோடு வேறு விதமான ஜனநாயக நகர்வுகளையும் ஆதரிப்பதை இது தவிர்த்துள்ளது. இவர்களைக் கட்டுப்படுத்தும் இந்த வழிக்காட்டிக் கோட்பாடு வெறும் உள்ளக சுயநிர்ணயத்தையே தன்னுள் வைத்து வேலி போடுகின்றது.

மேயப்போகின்றவர்கள் எல்லாம் ஒஸ்லோவில் பேசிப்பேசி தோல்வி கண்ட அந்த உள்ளக சுயநிர்
ணயத்தின் உள்ளேயே மேய அனுமதிக்கப்படுவார்கள். தாங்களே உருவாக்கிய மக்கள் பார்வைக்கு வைக்கப்படாத ஒரு வழிகாட்டல் கோட்டபாடு அதன் கண்காணிப்புக் குழுவால் நாடுகடந்த அரசின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த பயன்படப்போகின்றது. அண்மையில் இணையத் தளங்களுக்கும், ஊடகங்களுமக்கும் அனுப்பி வைக்கப்பட்ட உருத்திரகுமாரனின் அறிக்கையில், சில தினங்க
ளுக்கு முன்பு இணையத் தளங்களில் வந்த செய்திக்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில், இந்த வழிகாட்டிக் கோட்பாடும் நாடு கடந்த அரசுக்கான மதியுரை அறிக்கையும் ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டு மொழிபெயர்க்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

இவ் அறிக்கையானது எதற்காக ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டது? ஆகவே இத் தயாரிப்பின் பின்னணியில் சர்வதேச சமூகத்தின் பின்னணியும், தயாரிக்கப்பட்ட அறிக்கை சர்வதேச நலன்களுக்கு உட்படுத்தப்பட்ட அறிக்கையுமாகவே பார்க்கப்படல் வேண்டும். ஆகவே இம்முறையும் தமிழரின் அரசியல் எதிர்காலம் தமிழரின் கண்கள் கொண்டு பார்க்கப்படவில்லையா..? இங்கு தமிழர்களின் நலன்களைவிட நாடு கடந்த அரசு சர்வதேச சமூகத்திடம் நல்ல பெயர் வாங்கவும் அவர்கள் இடும் கட்டளைகளுக்காக இயங்குவதுபோலுமே உள்ளது. தனது அறிக்கையில் மேலும், இவ் அறிக்கையானது மக்கள் பார்வைக்கும், பகிரங்க விவாதத்திற்கும் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

ஆனால், ஐரோப்பிய நாடுகளில் மூடிய அறைக்குள் தெரிந்தெடுக்கப்பட்ட தங்கள் கொள்கை ஆதரவாளர்களோடும் போராட்டக் காலங்களில் ஒதுங்கி இருந்துவிட்டு இன்று நான்தான் பொறுப்புபென்று தலையெடுத்து திரிபவர்களோடு மட்டுமே நடைபெறுகின்றது. இந்த விவாதத்திற்கு மக்களோ மக்களைப் பிரிதிநிதித்துவப் படுத்தும் அமைப்புக்களோ, தமிழர்களை ஒருங்கிணைக்கும் கிளைகளோ அழைக்கப்படவில்லை, அறிவிக்கப்படவுமில்லை. ஊடகங்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. இப்படியான ‘ஜனநாயகத்தில்’தானா நாடு கடந்த இந்த அரசும் நடாத்தப்படப் போகின்றது? யாரைத் திருப்திப் படுத்துவதற்காக அல்லது யாரின் கட்டளையில் இப்படிப் பட்டோரை அரவணைத்து இந்த நாடுகடந்த அரசு உருவாகப் போகின்றது.

இவர்களின் இந்த மதியுரை அறிக்கை வெறும் சுயநிர்ணய உரிமை பற்றியே திரும்பத் திரும்ப பேசுகின்றது. இந்த சுயநிர்ணய உரிமை என்பது பிரிந்து செல்லும் உரிமையற்றது. என்பதை ஐ.நா தெளிவாகக் கூறுகின்றது. அப்படியாயின் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு காண்பதற்காகவா இந்த அமைப்பும் ஏற்படுத்தப் போகின்றது. அதையும்தாண்டி இந்த முப்பது வருட ஆயுதப் போராட்டமும் சுயநிர்ணய உரிமையை அறிந்துகொள்வதற்காகவே நடத்தப்பட்டது என்று புலிகளின் அரசியல் நோக்ககங்களையே இவர்கள் மாற்ற முயல்கின்றனர். இந்த சுயநிர்ணய உரிமையை மட்டுமே கோரி என்றோ முயற்சி செய்து தோற்றுவிட்ட கொள்கைகளைக் காவி
வந்து சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் புலம்பெயர்ந்த தமிழர்களை இழுத்துவருவதே இவர்களின் திட்டம்.

இவர்கள் அறிக்கையில் தாம் தமது தீர்மானங்களை சர்வதேச சமூகத்தை கோபப்படுத்தாது, அவர்களது செயற்பாடுகளுக்கு பங்கம் விளைக்காததாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அன்று எப்படி கருணாநிதி சிங்கள அரசைக் கோபப்படுத்தாமல் தமிழர்களுக்காக பிச்சை எடுக்க வேண்டும் என்றாரோ அதே பிச்சைப் பாத்திரத்தை இவர்கள் கொஞ்சம் முன்னேறி சர்வதேச சமூகத்திடம் ஏந்துகின்றனர். உரிமையும் சுதந்திரமும் போராடிப் பெறப்படல் வேண்டும். பிச்சைகேட்டு அல்ல. இதனை மக்கள் இவர்களுக்கு உணர்த்த தலைப்படவேண்டும். இவர்கள் சொல்லும் படிப்படியான அங்கீகாரம், சர்வதேச அங்கீகாரத்தோடு படிப்படியான சுயநிர்ணயம் என்பன இவர்களால் தமிழர்களின் போராட்ட நெருப்பை விடுதலைக் கனலை படிப்படியாக அணைக்க முயல்வதாகவே தோன்றுகின்றது.

இவர்கள் அறிக்கையில் அபிவிருத்தி பற்றிப் பேசியுள்ளனர். சுதந்திரத் தனியரசு இல்லாத நாட்டிற்கு அபிவிருத்தி செய்ய முற்படுவது இதை ஒரு நாடு கடந்த கூட்டுறவுச் சங்கம்போல் எண்ண வைக்கின்றது. இங்கு எமது தேசத்தின் விடுதலை சுதந்திரத் தமிழீழத் தனியரசு என்
பன முற்றாக விட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களின் சொல் விளையாட்டுக்களுக்காக எமது இன விடுதலையை பரிசோதிக்க முடியாது. இதே பார்வையில் இவர்கள் தொடர்ந்து போனால் வேறு அரசாங்கங்களோடு மக்கள் போராடுவது போல் நாடு கடந்த அரசோடும் ஈழத் தமிழர்கள் போராட வேண்டிய நிலை வரும். இந்தக் கூட்டுறவு, அபிடூவிருத்தி மாதிரிகளை விட்டுவிட்டு எமது தேச விடுதலையை நோக்கிய பணியில் இவர்கள் இறங்கியாகவேண்டும்.

இவர்கள் இராணுவக் கொலைகள் எனும் பதத்தோடு மட்டும் நின்றுகொண்டு எமக்காக இன்று அனைத்துலக மனிதாபிமான அமைப்புக்களும் மக்கள் நீதிமன்றங்களும் உரத்துச் சொல்லும் இனப்படுகொலை என்ற சொல்லை யார் நலனுக்காகவோ தவிர்த்துவிட்டனர். இங்கு இந்த நாடு கடந்த அரசு உருவாக்கக் குழு பற்றியோ அல்லது அவர்களின் செயற்பாடு பற்றியோ தெளிவுபடுத்தப்படவில்லை. இது தவிர ஒவ்வொரு நாட்டிலும் இயங்கும் நாடுகடந்த அரசின் செயற்பாட்டாளர்களின் செயற்பாடு இன்னும் இரண்டு பகுதியாகவே உள்ளது. இவர்கள் தங்களைத் தாங்களாகவே நாடு கடந்த அரசின் செயற்பாட்டாளர்கள் என்று கூறிக்கொண்டு தாங்கள் ‘அதி
யுச்ச அதிகார மையத்தில் இருந்து’ நியமிக்கப்பட்டதாகக் கூறிக்கொள்கின்றனர். இவர்களின் நியமனங்கள் மக்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை.

தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பதுபோல் நாடு கடந்த அரசின் பெயர் சொல்லி மக்கள் மத்தியில் இவர்கள் ஏற்படுத்தும் குழப்பங்கள் எமது தேசிய விடுதலையை புறந்தள்ளுவ
தாகவே உள்ளது. செயற்பாட்டில் இருந்து முன்பு நீக்கப்பட்டவர்கள் எல்லாம் மக்கள் பிரதிநிதிகளாக உலா வரத் தொடங்கியுள்ளனர். கேள்வி என்னவெனில் இந்த நாடுகடந்த அரசு தமி
ழர்களின் விடுதலை உணர்வை முற்றாக மழுங்கடித்து சுந்திரதாகத்தை அற்றுப் போகச்செய்து மாபெரும் இந்தப் புலம்பெயர் தமிழர் சக்தியை சர்வதேசத்தின் கைகளில் வழங்கி அவர்களின் புவிசார் அரசியல் இலாபங்களுக்கு எம்மைப் பலியாக்கப் போகின்றனரா? இதற்கு உதாரண
மாக திபேத்திய புகலிட அரசை சர்வதேசத்தின் கைகளில் சிக்கவைத்து வெறும் அங்கீகாரம் மட்டும் வழங்கிவிட்டு அரை நூற்றாண்டாக எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் அப்படியே அவர்களது விடுதலை கிட்டத்தட்ட மறக்கடிக்கப்பட்டு சர்வதேச சமூகம் தன் புவிசார் இலாபங்களைப் பெற்றுவருகின்றது.

இதே நிலைக்கு நாமும் தள்ளப்படப்போகின்றோமா..? எமது விடுதலையானது தள்ளிப்போடப்
படுமானால் புலம்பெயர் தமிழ் சமூகம் சுயம் துலைத்த சமூகமாக மறுக்கடிக்கப்பட்டுவிடும். இதுவே இன்றைய சர்வதேச ஒழுங்கில் தேவையாகவும் உள்ளது. இதற்கு நம்மை பலியாக்கப் போகின்றோமா? இதனை முறியடிக்க தமிழர்கள் தாங்களே தங்கள் உரிமைகளை சர்வதேசத்
தின் முன் வெளிக்கொணர வேண்டும். நாடுகடந்த அரசினால் மறுதலிக்கப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையிலான தமிழீழ தனியரசின் மீள் வலியுறுத்தல் இன்று நாடு கடந்த அரசால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. நாடு கடந்த அரசு மக்கள் மத்தியில் தம் இருப்பைக் காத்
துக்கொள்ளவே வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் தம் கைகோர்க்க உள்ளனர்.

இந்த இடத்தில் நாம் மிகவும் விழிப்பாக இருப்பது அவசியம். ஒன்றுபட்ட இலங்கைக்
குள்ளான தீர்வொன்று ஏற்கப்பட வேண்டிய நிலையில், தெரிவுகளற்ற நிலைக்கு இன்று தாய் நிலத்தில் தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு இனிப்புத் தடவிய கசப்பாக ஒன்றுபட்ட சிறீலங்கா புலத்தில் நாடு கடந்த அரசாங்கம். எனவே, இந்த அரசின் செயற்பாட்டாளர்களும் உருவாக்கக் குழுக்களும் தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை அடகு வைப்பதை விட்டு விட்டு மக்கள் அவாவான தனித் தமிழீழ சுதந்திர அரசை நிறுவ முன்வர
வேண்டும். ஜனநாயகத்தை முறையே செயற்படுத்த வேண்டும். தங்கள் நிர்வாகச் செயற்பாட்டுக் குழுக்களுக்குள்ளேயே களையெடுக்கத் தொடங்கவேண்டும். தேசிய விடுதலையை மட்டுமே கொள்கையாக்க வேண்டும்.

சர்வதேசத்திற்கு அடங்கிப்போய் அல்லது அவர்களுக்கு ஏவல் செய்வதை விட்டுவிட்டு தேசியத் தலைவரின் ஆணையில் சுதந்திர தமிழீழ அரசை உருவாக்க வேண்டும். இவை எதுவும் மாற்றப்படாமல் சர்வதேசத்தின் கைகளில் தமிழ் இனத்தை ஒப்படைக்க நினைத்தால் மக்களின் தீர்ப்பு மிகவும் கடுமையானதாக இருக்கும். மக்கள் ஆதரவு இழக்கும் அமைப்புக்கள் காணாமல் போய்விடும் என்பது வரலாறு எமக்குத் தந்த பாடம்.

-சோழ.கரிகாலன்

நன்றி:ஈழமுரசு

Comments