தமிழீழத்தை நாம் மீளுறுதிப்படுத்துவோம்: தமிழ் இளையோர் அமைப்பு - யேர்மனி

http://tamiljugend.ch/ta/images/stories/wkr.jpg

ஈழத்தமிழரின் அரசியல் அபிலாசை சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசு என்பதை புலம்பெயர் சூழலில் ஜனநாயக முறையில் மீளுறுதி செய்வோம்!

http://www.tamilmandate.org/index.html

அறிமுகம்:

இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய தமிழர் தாயகத்தின் சுதந்திரத்தையும் இறைமையையும்; ஒரு தேசிய இனமாக எமது அரசியல் இலக்கை நாமே தீர்மானித்துக் கொள்ளும் தன்னாட்சி (சுயநிர்ணய) உரிமை ஈழத் தமிழர்களுக்கு உண்டு என்பதையும்,
அதற்காக முழுமூச்சான பயணத்தை அஞ்சாத அர்ப்பணிப்புக்களோடு நாம் முன்னெடுக்கவேண்டும் என்பதையும் 33 வருடங்களுக்கு முன்னரே தந்தை செல்வா அவர்களின் தலைமையில் அன்றைய அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து வட்டுக்கோட்டைத் தேர்தல் தொகுதியில் பிரகடனம் செய்தனர்.

இந்தப் பிரகடனம் 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஈழத்தமிழர்களின் பெருவாரியான வாக்குகளைப் பெற்று மக்கள் ஆணையாக நிறுவப்பட்டது.

இந்த ஆணையை அடிப்படையாகக் கொண்டே தமிழீழ அரசைக் கட்டியெழுப்பும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்று தமிழ் இறைமைக்காகக் கட்டியெழுப்பப்பட்ட நடைமுறைத் தமிழீழ அரசு சிறிலங்காவின் இராணுவ ஆக்கிரமிப்பால் அழிக்கப்பட்டுள்ள நிலையில்,
ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு சர்வதேசரீதியிலான ஜனநாயக முன்னெடுப்புகளில் நாம் ஈடுபடுகின்ற இந்த வேளையில் இந்த ஆணையை சர்வதேச சமுகத்தின் முன் மீளவும் எடுத்துரைக்கவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் புலம்பெயர் தமிழ்ச்சமுகம் நிற்கின்றது.

2009ம் ஆண்டு மே மாதம் 10ம் திகதியன்று இதற்கான முன்னுதாரணத்தை நோர்வே வாழ் ஈழத் தமிழர் மேற்கொண்டிருந்தனர்.

தற்போது பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா, பிரான்சு, டென்மார்க், ஜேர்மனி போன்ற பல நாடுகளிலும் இந்த வாக்கெடுப்பை சுயாதீனமான முறையில் மேற்கொள்ளுவதற்கான ஆரம்ப முயற்சிகளை அந்தந்த நாட்டிலுள்ள அமைப்புக்கள் முன்னெடுத்துவருகின்றன.

இம் முயற்சிகள் வெற்றிபெற நாம் அனைவரும் ஈழத்தமிழர் என்ற ஒரே தளத்தில் நின்று ஒன்றிணைந்து பங்களிப்போம்!

இந்த முயற்சிக்குத் தேவையான தகவற் திரட்டை தொகுத்துக் கொடுக்கும் இணையத் தளமாக இந்த இணையத் தளம் விளங்கும்.

இந்தத் தளம் மிக விரைவில் மீள்வடிவமைக்கப்பட்டு புதுப்பொலிவுடனும் வீடியோ ஆவணங்களுடனும் வெளிவரும்.

மேலதிக விளக்கம், விபரங்கள் மற்றும் கட்டுரைகளுக்கான இணைப்புகள்:

  1. வாக்கெடுப்பின் நோக்கம்: மேலதிக விளக்கம்
  2. Addressing ambiguity of Right to Self-Determination (TamilNet)
  3. Vaddukkoaddai and Thimphu (TamilNet)
  4. Background: Events and factors that led Tamils to resolve Vaddukkoaddai Resolution in 1976
  5. வட்டுக்கோட்டைத் தீர்மானம் (தமிழில்)
  6. Vaddukkoaddai Resolution (in English)
  7. நோர்வேயில் பயன்பட்டுத்திய வாக்குச் சீட்டு (Ballot Sheet used in Norway)
  8. Documentation of Norwegian Tamil mandate released (TamilNet)
  9. 99 percent Norway Tamils aspire for Tamil Eelam (TamilNet)

தொடர்புகட்கு: info@tamilmandate.org

Comments