விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்றும், இலங்கையின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கின்றனர் என்றும் கூக்குரலிட்டு இந்தியா, மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஐரோப்பாவையும் ஏனைய உலக சக்திகளையும் ஒன்று திரட்டி புலிகளை அழிப்பதற்கு இலங்கை அரசுக்கு உதவியுள்ளன. இவ்வாறு உதவியமை விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்றும் அவர்கள் ராஜீவ்காந்தியை கொன்றார்கள் என்றும் கூறப்படும் காரணங்களுக்காக அல்ல.
மாறாக புலிகள் தனி நாட்டை உருவாக்கினால் இரண்டாகப் பிளவுபடும் இலங்கைத்தீவின் பெரும்பகுதியான சிங்கள தேசம் நிச்சயமாக சீனாவுடன் கூட்டுச் சேரும் ஆபத்துள்ளது என்பதனை நன்கு உணர்ந்தமையேயாகும். இதன் காரணமாக எப்பாடுபட்டாவது இலங்கைத்தீவு இரண்டாகப் பிளவுபடுவதனை தடுத்து இலங்கைத்தீவில் இரண்டு அதிகார மையங்கள் உருவாகுவதனை தடுக்க வேண்டிய தேவை அவர்களுக்கு எழுந்தது.
உதாரணமாக 1987 ம் ஆண்டு ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் இந்தியாவை உதவிக்காக அழைத்பொழுது சந்தற்பத்தினை சரியாகப் பயன்படுத்த எண்ணிய இந்தியா பிராந்திய ஆதிக்கததினை கருத்தில் கொண்டு இலங்கையில் கால்பதித்தது எனினும் இலங்கைத்தீவில் வடக்கிலும் தெற்கிலும் பரம வைரிகளாக இருந்த இரண்டு அதிகார மையங்களும் தமது பொது எதிரியை வெறியேற்றுவதற்காக ஒன்றிணைந்து கொண்டன. 1989ல் தெற்கில் ஆட்சிப்பீடம் ஏறிய பிறேமதாசா தலைமையிலான அதே ஐக்கிய தேசியக் கட்சி அரசு இந்தியாவை வெளியேற்றுவதற்காக புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கியது. இதனால் இந்தியா இலங்கையில் இருந்து அவமானத்துடன் வெளியேற வேண்டி ஏற்பட்டது. அது மட்டுமன்றி காலப்போக்கில் சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரிக்கவும் வழி ஏற்பட்டுப்போனது.
இந்தியா இலங்கையில் இருந்து வெளியேறிய பின்னர் மீண்டும் சிங்கள பேரினவாதம் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு போரை தீவிரப்படுத்தியது எனினும் விடுதலைப் புலிகள் அதற்கெதிராக தம்மைப் பலப்படுத்தி வடக்கு கிழக்கில் 70 வீதமான நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து அங்கு நடைமுறை அரசு ஒன்றை உருவாக்கி முப்படைப் பலம் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் பொருளாதாரஉதவிகளுடனான பலம் மிக்கதொரு அதிகார மையம் ஒன்றினை இலங்கைத்தீவின் வடக்குகிழக்கில் நிறுவினர்.
இந்நிலையில் 1999, 2000, 2001 ல் விடுதலைப் புலிகள் தொடர் தாக்குதல்கள் மூலம் சிங்கள இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களை வேகமாக கைப்பற்றி முன்னேறிய போது ஒரு கட்டத்தில் இந்தியா தலையிட்டு யாழ்குடாநாட்டின் வீழ்;சியை தடுத்ததோடு அங்கிருந்த 50000 சிங்களப் படைகளின் உயிர்களையும் காத்தது. இந்தியாவின் உதவியுடன் யாழ்ப்பாணத்தின் வீழ்ச்சியை தடுத்துவிட்ட இலங்கை சமாதான உடன்படிக்கை ஒன்றுக்கு செல்ல சர்வதேச சமூகத்தினால் நிற்பந்திக்கப்பட்டது இல்லாவிடில் விடுதலைப் புலிகளிடம் ஒட்டுமொத்த சிங்களப் படைகளும் பாரிய தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதுடன் தனித் தமிழீழ அரசு உருவாக்கத்தையும் தடுக்க முடியாமல் போகும் என்பதும் காரணமாகும். இருந்தாலும் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்த சிங்களம் ஆனையிறவை மீளவும் கைப்பற்ற அக்னிகீல என்ற பெரும் படையெடுப்பை மேற்கொண்டு முறையாக வாக்கிக்கட்டிக் கொண்டது. அதனைத் தொடர்ந்து கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையம் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலுடன் ஸ்ரீலங்கா அரசு இடுப்பு ஒடிந்து படுத்துக் கொண்டது. அதன் பின்னர் சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களுக்கு பணிந்து நோர்வே சமாதான தரகர்களின் உதவியுடன் சமாதான முயற்சிகளில் இலங்கை ஈடுபடத் தொடங்கியது.
இந்தியா எப்பொழுதும் ஈழத தமிழர் பிரச்சினையை பயன்படுத்தி சிங்களத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சிக்குமே தவிர நியாயமான அரசியல் தீர்வு ஒன்று ஏற்படுவதனை விரும்பாது என்பது மட்டுமலல் இலங்கையில் இனப்பிரச்சினை என்ற ஒன்று உள்ளது என்பதனையெ உலகின் செவிகளுக்கு எட்டாமல் மறைத்துக் கொண்டே இருக்கும் என்பதனை விடுதலைப் புலிகள் நன்றாக விளங்கிக் கொண்டிருந்தனர். இதனால் இந்திய உபகண்டத்தை தாண்டி இனப்பிரச்சினையை சர்வதேச சமூகத்தின் முற்றத்திற்கு கொண்டு செல்ல விரும்பினர். அதானலேயே நோர்வேயை சமாதான தரகு வேலைக்கு அழைத்தனர். எனினும் நோர்வே அமெரிக்காவின் ஒரு சமாதான முகம் என்பதனையும் அவர்கள் நன்கு உணர்ந்திருந்தனர்.
இந்நிலையில் சனாதிபதி சந்திரிகா பாராளுமன்றத்தை கலைத்து டிசம்பர் 5 2001 ல் பாராளுமன்ற தேர்தலை நடாத்தினார். எனினும் சனாதிபதி சந்திரிகாவின் கட்சி பாராளுமன்றில் பெரும்பான்மையை பெறத் தவறியமையினால் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்திலுள்ள சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவுடன் அரசாங்கத்தினை அமைத்தது.
அப்போது பிரதம மந்திரியாகவிருந்த ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும் இடையில் நோர்வே சமாதானத் தரகர்களின் உதவியுடன் போர் நிறுத்த உடன் படிக்கை ஒன்று கைச்சாத்தானது.
அதேவேளை ரணில்விக்கிரமசிங்க சர்வதேச சமூகத்துடன் இணைந்து பாதுகாப்பு வலைப்பின்னல்(ளயகவல நெவறழசம) என்ற சதிவலை ஒனறினை விடுதலைப் புலிகளுக்கு எதிராக பின்னத் தொடங்கினார். அதன் பிரகாரம் சமாதான காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்க கூடிய ஆயுதங்கள் உட்பட்ட சகல உதவிகளையும் கடல்வழியில் எடுத்து வருவதனை தடுத்து அழித்தல்.
வெளிநாடுகளில் விடுதலைப் புலிகளின் நிதி சேகரிப்பு கட்டமைப்பை கண்டறிந்து அதனை முடக்குதல்.
புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் நிதி சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் நிதிச் செயற்பாட்டாளர்களை கைது செய்து வழக்குப் பதிவு செய்து சிறைகளில் அடைப்பதன் மூலம் புலிகளுக்கான நிதி உதவிகளை முற்றாக முடக்குதல்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், தமிழீழ கோரிக்கைக்கு ஆதரவாகவும் ஓன்று சேரும் அனைத்து எழுச்சி நிகழ்வுகளையும் சட்டத்தின் பெயரால் தடை செய்தல்.
இவ்வாறான செயற்பாடுகள் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு தேவையான சகல வளங்களையும் (போராளிகளுக்கான உணவு மற்றும் உடைகள் உள்ளடங்கலாக ) தடைசெய்து விடுதலைப் புலிகளை இயங்க முடியாத நிலைக்கு கொண்டுவருதல்.
உருப்டியான தீர்வு எதனையும் முன்வைக்காமல் காலத்தை இழுத்தடிப்பதன் மூலம் போராட்டத்தில் இருந்து அனுபவம் மிக்க போராளிகள் வெளியேறிச் செல்லும் சூழலை உருவாக்குதல்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தினுள் பிளவுகளை உண்டுபண்ணுதல்.
இவை உட்பட பல சதித்திட்டங்கள் மூலம் இயக்க கட்டமைப்பை வலுவிழக்கச் செய்து அந்த அமைப்பை முற்றாக அழிப்பதே நோக்கமாகும்.
இதன் மூலம் தமிழீம் என்ற இலட்சியத்திற்காக இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இலட்சிப் பாதையில் இருந்து சிறிதும் விலகாது உறுதியுடன் போராடி வந்த புலிகள் இயக்கத்தினை சொந்த மக்களே நிராகரிக்க கூடிய சூழலை உருவாக்குதல்.
அதன் மூலம் இந்திய மற்றும் அமெரிக்க வல்லாதிக்கங்களின் பிராந்திய நலனுக்கு அச்சுறுத்தலான விதத்தில் இலங்கையில் வடபுலத்தில் பலம் பெற்றிருந்த அதிகார மையத்தினை இல்லாது அழித்தல்.
ஒரு புறம் சமாதானப பேச்சுக்களில் ஈடுபட்டுக் கொண்டு மறுபுறத்தில் ஆழ ஊடுருவும் படையணிகள் மூலம் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை மட்டும் இலக்கு வைத்து கொல்லுவதற்கான முயற்சிகளையும் செய்தனர்.
மேற்படி சதிவலைகள் பற்றி விடுதலைப் புலிகள் நன்கு அறிந்திருந்தனர். அதிலிருந்து மீண்டு முன்னே செல்வதற்கான அனைத்து முயற்சிகளையும் அவர்கள் மேற்கொண்டனர்.
2005 ம் ஆண்டு ரணில்விக்கிரமசிங்காவை இலங்கை அதிபராக்குவதற்கு அமெரிக்க ஐரோப்பிய தரப்புக்களுடன் விடுதலைப் புலிகள் ஒத்துழைத்திருந்தாலும் கூட இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கைத்தீவில் தனிநாடு அமைக்கும் ஆற்றலும் பலமும் பெற்றிருந்த விடுதலைப் புலிகள் இயக்கம், பிராந்திய நலன்களை கருத்தில் கொண்டு நிச்சயமாக அழிக்கப்பட்டிருப்பார்கள் என்பதுடன் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் கோரிக்கைகளும் நிச்சயமாக நிராகரிக்கப்பட்டிருக்கும்.
அவ்வாறு நடந்திருந்தால் இலங்கைத் தீவில் இன்று உருவாகியிருக்கும் சீன ஆதிக்கம் தொடர்பான பதற்றமும் தலையிடியும் இந்தியாவுக்கோ அமெரிக்காவுக்கோ இருந்திருக்காது மாறாக இந்திய மற்றும் அமெரிக்க ஆதிக்கமும் செல்வாக்கும் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி உறுதிப்படுத்தப்பட்டிருக்கும்.
சீன ஆதிக்கத்தை தடுப்பதற்காகவே அன்று ரணில்விக்கிரமசிங்க அவர்களை சனாதிபதியாக்க அமெரிக்க, ஐரோப்பிய தரப்புக்கள் முயன்றன அதற்கு விடுதலைப் புலிகள் ஒத்துழைக்கவில்லை என்ற காரணத்தினால் விடுதலைப் புலிகள் மீது தீராத ஆத்திரம் ஏற்பட்டது. தேர்தல் பகிஸ்கரிப்பினால் தமது நலன்கள் பாதிக்கப்பட்டதால், புலிகள் தேர்தலைப் பகிஸ்கரிக்க செய்துவிட்டனர் அதனால் புலிகள் கொடிய பயங்கரவாதிகள் என்றனர். இதே சர்வதேச சமூகம் அன்று வெனிசுவலா நாட்டின் சனாதிபதித் தேர்தல் நடைபெற்ற பொழுது அந்த தேர்தல் புறக்கணிப்பை செய்தவர்களின் நடவடிக்கையை மிகச் சிறந்த ஐனநாயக நடவடிக்கையாக சித்தரித்தனர். ஏனெனில் அமெரிக்கா விரும்பாத ஒருவர் சனாதிபதியாக கூடாது என்பதனால் மட்டுமே.
சர்வதேச தலையீடுகள் இல்லாத நிலையில் சிங்கள தேசத்துடன் மட்டும் யுத்தம் செய்து தமிழீழ தாயகத்தினை மீட்டு தமிழீழ தனியரசை உருவாக்குவதாயின் வடகிழக்கு என்ன முழு இலங்கையையுமே புலிகளால் ஆட்சி செய்திருக்க முடியும்.
ஆனாலும் பிராந்திய ஆதிக்க போட்டியில் சிக்கியுள்ள இலங்கைத்தீவின் மீது சீன இந்திய, அமெரிக்க தரப்புக்களின் முழுக் கவனமும் குவிந்திருப்பதும் அதனை கையகப்படுத்த மூன்று தரப்புகளும் போட்டி போடுகையில் நாங்கள் எமக்கான தேசத்தினை உருவாக்கிக் கொள்ளுவதிலுள்ள நெருக்கடிகளை நன்கு உணர்ந்து கொணட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைமையின் தீர்மானங்கள் இன்று பிராந்திய வல்லாதிக்க மோதல் ஒன்றுக்கு கால்கோள் இட்டுள்ளது.
தொடர்ந்தும் ஆட்சிப்பீடம் ஏறும் ஒவ்வொரு சிங்கள ஆட்சியாளர்களும் தமிழ் மக்களுக்கு எதிரான இனவாதத்தினை பேசியே ஆட்சி ஏறுவர் அதற்காக யாரின் காலைப் பிடித்தாவது விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தினை தொடர வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆனாலும் மகிநிதராஐபக்சவை தவிர கட்நத காலத்தில் இலங்கையில் ஆட்சிப் பீடம் ஏறிய அனைத்து தலைவர்களும் இந்தியாவை விடவும் மேற்கு நாடுகளுடன் மிக நெருக்கமான உறவுகளையே பேணிவந்துள்ளனர். இதன் காரணமாக இலங்கை மீதான சீன ஆதிக்கம் மற்றும் தலையீடு தொடர்பாக அமெரிக்கா, இந்தியாவிற்கு பெரும் தலையிடி இருக்கவில்லை. மாறாக ஸ்ரீலங்கா இரண்டாக பிளவு பட்டால் சிங்கள தேசம் சீனாவுடன் கூட்டுச் சேரும் ஆபத்து மட்டுமே இருந்தது அவ்வாறு நாடு பிளவுபடாமல் பார்த்துக் கொண்டால் போதும் என்ற நிலையே அன்று காணப்பட்டது.
ஆனாலும் மகிந்தராஐபக்ச சனாதிபதியான பின்னர் அவர் தன்னை ஓர் நவீன துட்டகெமுணுவாக கருதியதுடன் புலிகளை முழுமையாக அழிக்க வேண்டும் என்ற நோக்கில் தனக்கு உதவக் கூடிய அனைத்து தரப்பிடமும் கையேந்தினார். இதனை சீனா சரியாக பயனபடுத்திக் கொண்டது. கேட்ட உதவிகள் அனைத்தையும் தாராளமாக அள்ளி வழங்கியது. வழங்கிய ஆயுதங்களை பயன்படுத்தி யாரை கொல்லப்போகிறாய் எத்தனைபேரை கொல்லப்போகின்றாய் சில்லறையாகவா மொத்தமாகவா கொல்லப் போகின்றாய் என்ற எந்தக் கேள்விகள் நிபந்தகைளும் இன்றி அள்ளி வழங்கியது. இலங்கையை பௌத்த சிங்கள நாடாக்க விரும்பிய மகிந்தவுக்கும் நிபந்தனையின்றிய அந்த உதவிகள் மிகவும் பிடித்துப்போனது.
மகிந்தராஐபக்ச சீனாவிடம் செல்வதனால் எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய சீன ஆதிக்கம் தொடர்பாக பதற்றம் அடைந்த அமெரிக்கா இந்திய தரப்புக்கள் முண்டியடித்துக் கொண்டு சிங்கள பௌத்த பேரினவாதம் எதிர்பார்க்கும் விதத்தில் புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் எதிரான நடவடிக்கைகளுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் வழங்கி புலிகளை அழித்து யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவருவதன் மூலம் சிங்கள அரசு சீனாவிடம் செல்வதற்கான தேவையை இல்லாமல் செய்யவும் அதன் மூலம் சீனா இலங்கையில் கால்பதிப்பதனை கட்டுப்படுத்த முடியும் என்றும் கணக்குப் போட்டனர்.
அதன் பிரகாரம் இந்திய அமெரிக்க தரப்புக்கள் தமிழ் மக்களை பாரியளவில் கொல்லப்பட்டாலும் புலிகளை அழித்து அல்லது பலவீனப்படுத்தி இலங்கையின் சகல பாகங்களையும் ஸ்ரீலங்கா அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முழுமையாக துணை புரிந்தன. இவ்வாறான நோக்கில் இந்திய அமெரிக்க தரப்புக்கள் வழங்க முன்வந்த உதவிகளையும் புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்காக பெற்றுக் கொள்ள மகிந்த அரசு முடிவு செய்தது. அந்த உதவிகளுக்கு கைமாறாக சீனாவின் ஆதிக்கத்தினை கட்டுப்படுத்த வேண்டும் என்பது அமெரிக்க இந்திய தரப்புக்களின் எதிர்பார்ப்பாக இருந்துள்ளது. அப்போதைக்கு மகிந்த அரசு அதற்கும் தலையாட்டியுள்ளது.
எனினும் யுத்தம் மூலம் புலிகளை அழித்த பின்னர் அமெரிக்க, இந்திய எதிர்பார்ப்புக்களுக்கு ஏற்ப இலங்கை அரசு செயற்படத் தவறும் நிலை ஏற்பட்டால் இலங்கை அரசாங்கத்தினை வழிக்கு கொண்டுவருவதற்காக போர்காலத்தில் இடம் பெறக் கூடிய மனித உரிமை மீறல்கள் படுகொலைகள் அனைத்தையும் ஆவணப்படுத்தி அதனை மீண்டும் இலங்கைக்கு எதிரான போர்க் குற்றச் சான்றாக அமெரிக்காவும் ஐரோப்பாவும் பயன்படுத்துவார்கள் என்ற காரணத்தில் மகிந்தராஐபக்ச அரசு தந்திராமாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாட்டு தொண்டு நிறுவனங்கள் அனைத்தையும் யுத்த வலயத்திலிருந்து வெளியேற்றியது மட்டும் அல்ல அகதிகள் அகதிகள் அடைத்து வைக்கப்பட்ட முகாம்களுக்குள் செல்லவும் அனுமதிக்கவில்லை.
இது அமெரிக்கா மற்றும் ஐரேர்பபிய நாட்டவர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தமையினால் அவர்கள் போர்க்குற்ற ஆவணங்களை திரட்ட செய்மதித் தொழினுட்பத்தினை பயன்படுத்த வேண்டியதாயிற்று. அத்துடன் வைத்தியசாலைகள் மற்றும் பிற இடங்களில் தொழில் புரிந்த வெளிநாட்டு உள்நாட்டு தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசின் மீது ஆத்திரம் கொண்ட பொது மக்கள் மற்றும் அரச அதிகாரிகளின் உதவியுடன் பெருமளவு தகவல்களை திரட்டி அரசுக்கு எதிராக ஆவணப்படுதியுள்ளனர்.
எனினும் மகிந்த அரசு இந்தியாவிற்கு ஓரளவு முக்கியத்துவத்தினை தொடர்ந்து வழங்கி வந்ததன் காரணமாக இலங்கை மீது ஐக்கிய நாடுகள் சபையில் போர்க் குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்ட பொழுது இந்தியாவின் உதவியுடன் அந்த நெருக்டிகயை சமாளித்துக் கொண்டது.
எனினும் யுத்தம் முடிந்து புலிகள் அழிக்கப்பட்ட பின்னரும் கூட மகிந்தராஐபக்ச சீனாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டு அமெரிக்க ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்தும் புறக்கணித்து வருவது மிகப் பெரும் அச்சுறுத்தலாகவே மேற்படி நாடுகள் கருதுகின்றன. அத்துடன் இந்தியாவை பொறுத்தவரை மகிந்தராஐபக்ச ஒரு புறத்தில் தங்களுக்கு ஓரளவு முக்கிய இடத்தினை தந்திருந்தாலும் அதனை விடவும் கூடுதலான முக்கியத்துவத்தினை சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கொடுத்துள்ளமையானது மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைத்தீவு பிளவுபடாத ஒரு நாடாகவும் அதே வேளையில் தமக்கு மட்டும் சார்பான ஓர் நாடாகவும் இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே உலகம் முழுவதிலும் வாழும் 70 மில்லியன் தமிழ் மக்களையும் பகைத்துக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ பலத்தை அழிக்கவும் தமிழ் மக்களை படுகொலை செய்யவும் வேண்டிய அத்தனை உதவிகளையும் அமெரிக்க இந்தியத் தரப்புக்கள் வழங்கியிருந்தன.
அத்துடன் புலிகளின் இராணுவ பலத்தை அழிக்க உதவியது மட்டுமன்றி பேரினவாதத்தினை திருப்திப்படுத்தும் வகையிலும் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும் இந்தியாவின் வேண்டுதலின் பெயரில் தமிழர்களின் ஐனநாக அரசியல் தலைமைச் சக்கதியாக தற்போது விளங்கும் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் தேசியத்தின் தனித்துவமான சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தமிழ் தேசியக் கோரிக்கைகளை கைவிட்டு ஸ்ரீலங்கா என்ற நாட்டையும் அதன் இறைமைiயும் அங்கீகரித்து அதற்குள் ஓர் தீர்வை ஏற்றுக் கொள்வதற்கு சம்மதிக்க வைத்து சிங்கள பௌத்தத்திற்கு எதிர்காலத்தில் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று நிரூபித்த பின்னரும் கூட மகிந்த அரசு சீனாவை கைவிடத் தயாராக இல்லை.
இவ்வளவும் செய்த பின்னரும் கூட சீன ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்துச் செல்வதனை அமெரிக்க ஐரோப்பிய தரப்புக்கள் அனுமதிக்க தயாராக இல்லை. இவர்களுக்கு இரண்டு பிரச்சினை ஒன்று தங்களை இலங்கையில் இருந்து ஓரங்கட்டி விட்டுள்ளமை இரண்டாவது சீனாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பது.
அதே போல இந்தியாவுக்கு சீனா மட்டுமல்ல பாகிஸ்தானும் சேர்ந்து இந்தியாவின் கோடிக்குள் நுழைந்திருப்பது பெரும் அச்சுறுத்தலாக மாறிவிட்டது.
மகிந்தராஐபக்ச மீண்டும் ஆட்சிக் கட்டில் ஏறினால் எல்லை மீறிச் செல்லும் சீன ஆதிக்கத்தினை இலங்கையில் கட்டுப்படுத்த முடியாது போனால் இந்திய அமெரிக்க தரப்புக்கள் மூன்று வழி முறைகளை கையாள நேரிடலாம்
தமிழர்களை சாட்டாக வைத்து இந்தியா இலங்கை மீது வலுக்கட்டாயமான படை நடவடிக்களை கூட மேற்கொள்ள வேண்டி ஏற்படலாம். அதற்கு அமெரிக்காவும் துணை நிற்க வேண்டி வரும் ஆனால் இந்த அணுகு முறை பிராந்தியத்தில் வல்லாதிக்க சக்திகளிடையே பெரும் பதற்றத்தினை உண்டு பண்ணும் என்பதனால் இவ்வாறான சூழ் நிலை ஏற்படுவதனை தடுக்க இந்திய அமெரிக்க தரப்புக்கள் நிச்சயம் முயலும்.
அல்லது
யுத்தகாலத்தில் இடம் பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றச் சாட்டுக்களை பூதாகாரமாக்கி மகிந்தராஐபக்சவையும் அவரது சகோதரர்களையும் போர்க் குற்றச் சாட்டில் சிக்க வைத்து இலங்கையை தமது பிடிக்கு அடிபணிய வைத்தல். இதுவும் சீனா சார்பு நாடுகளிடம் இருந்து வரக்கூடிய கடுமையான எதிப்புக்களை தாண்டி சாத்தியமாவது மிகவும் சிரமமான விடயமாகவே இருக்கும் என்பதுடன் சிங்கள மக்களின் வெறுப்பையும் ஸ்ரீலங்கா அரசுடன் இராஐதந்திர முறுகல் நிலையையும் ஏற்படுத்தும் என்பதனால் இந்த வழிமுறையை இப்போதைக்கு தவிக்கவே விரும்புவர்.
அல்லது
கொசோவாவில் அமெரிக்கா செய்தது போன்று இலங்கைத்தீவிலும் சீன ஆதிக்கத்திற்கு உட்பட்ட சிங்கள தேசத்திலிருந்து வடக்கு கிழக்கை பிரித்து தனிநாட்டுக்காக போராடும் தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கையை நிறைவேற்றுவதன் மூலம் இலங்கைத்தீவின் ஒருபகுதியையாவது தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருதல். எனினும் இலங்கைதீவை முழுமையாக தம்வசப்படுத்துவதற்கான அனைத்து வழிகளையும் கையாண்டு எதுவும் பலனளிக்காமல் போகும் நிலையிலேயே இவ்வாறான வழிமுறையை பற்றி அமெரிக்காவோ இந்தியாவோ சிந்திக்கும்.
எனவே இலங்கையில் அதிகரித்துவரும் சீன ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் விவகாரத்தினை இலகுவாக கையாள கிடைத்துள்ள அரிய சந்தற்பம் வரும் சனாதிபதித் தேர்தலில் தமக்கு சாதகமான ஒருவரை ஆட்சிக்கட்டில் ஏற்றுவதேயாகும்.
எனவே வரும் சனாதிபதித் தேர்தலை சரி;யாக பயன்படுத்த அமெரிக்க இந்தியத் தரப்புக்கள் திட்டமிட்டு செயற்பட்டுவருகின்றன. தங்களது திட்டத்தினடிப்படையில் மகிந்தராஐபக்சவுக்கு சவால் விடக் கூடிய ஒருவரை தேர்தலில் களமிறக்க வேண்டியிருந்ததால் அதற்கு பொருத்தமானவர் சிங்கள மக்கள் மத்தியில் மாவீரனாக கருதப்படும் சரத்பொன்சேகா என்பதனை நன்கு உணர்ந்து கொண்டு மகிந்தவுக்கும் சரத்திற்கும் இடையில் பிளவை உண்டு பண்ணினார்கள்.
அவ்வாறு பிளவு படுத்தப்பட்ட சரத்பொன்சேகாவை அமெரிக்கா ஒருவாறு தனது கைக்குள் போட்டுக் கொண்டுள்ளது. மகிந்தவின் எதிரியான சரத்பொன்சேகா புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் இலங்கையின் ஆட்சி அதிகாரத்தினை தான் கைப்பற்றும் கனவை நனவாக்க அமெரிக்காவின் கரங்களை நன்கு இறுகப் பற்றிக் கொண்டுள்ளார். அதே போன்று இந்தியத் தரப்பையும் திருப்திப்படுத்திக் கொண்டுள்ளார்.
சரத்திற்குத் தேவை ஆட்சி அதிகாரம், போர்க் குற்ற விசாரணைகளில் இருந்து விடுபடல் வேண்டும், தமிழர்கள் தரப்பில் இருந்து தமிழ் தேசியம் என்ற பேச்சு எழக் கூடாது, இலங்கையை சிங்களத் தீவாக மாற்றும் தனது நோக்கத்திற்கு தடை இருக்க கூடாது.
அதேபோல அமெரிக்க மற்றும் இந்தியாவிற்கு தேவையானது இலங்கையில் தமது ஆதிக்கத்தினை நிலை நிறுத்துவதன் ஊடாக இந்து சமுத்திரப் பிராந்தியத்தியத்தில் அவர்களது ஆதிக்கம் அனுமதிக்கப்படல் வேண்டும். இலங்கையில் அதிகரித்துவரும் சீனாவின் தலையீடு தடுக்கப்பட்டு படிப்படியாக சீனா வெளியேற்றப்படல் வேண்டும்.
அமெரிக்கா மற்றும் இந்தியாவின் இந்த நோக்கங்களை சரத்தை வைத்து சிரமம் இன்றி நிறைவேற்ற முடியும் என அவர்கள் கணக்குப் போட்டுள்ளதால் ஆட்சி மாற்றம் ஒன்றுக்காக முழு அளவில் அமெரிக்க, ஐரோப்பிய, இந்தியத் தரப்புக்கள் முயன்று கொண்டிருக்கின்றன.
வன்னியில் இடம் பெற்ற படுகொலைகள் மற்றும் 7 பேரை நிர்வாணமாக்கி சுட்டுக் கொல்லும் காட்சி என்பன தொடர்பில் ஐநா நடு நிலை விசாரணைகளை நடாத்தியிருந்தால் இப்போது மகிந்த, கோட்டாஅபய, சரத் ஆகியோர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு தண்டனையும் வழங்கியிருக்க முடியும். ஆனாலும் காலம் இழுத்தடிக்கப்பட்டு ஐநா அதிகாரி பிலிப் அஸ்ரன் கடந்த வாரம் கிளப்பிய படுகொலை வீடியோ காட்சி பற்றிய விடயம் கூறும் செய்தி மகிந்தராஐபக்ச சனாதிபதியானால் போர்க் குற்ற விசாரணைகள் இலங்கைக்கு எதிராக நிச்சயம் தொடரும் என்பதே கூறாமல் கூறப்படும் செய்தியாகும். அதுபோல ஐpஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையும் மகிந்தராஐபக்ச பதவிக்கு வந்தால் கிடைக்காது என்ற சமிக்கைகளும் தெளிவாக வெளிவந்து கொண்டிருப்பதுடன். சரத்பொன்சேகா ஆட்சிக்கு வந்தால் போர்க்குற்ற விசாரணைகளும் இடம் பெறப் போவதில்லை ஐPஎஸ்பி பிளஸ்அந்த வரிச்சலுகை நிச்சயம் கிடைக்கும் என்ற சமிக்கைகளும தெளிவாக விடப்பட்டு வருகின்றது.
சிவாஜிலங்கம் ஐனாதிபதியாக போட்டியிடுவதன் மூலம் தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடித்து மகிந்தராஐபக்சவை வெல்லவைக்கப் முயல்கின்றார் என்ற ஆத்திரத்தினாலேயே இந்தியா சிவாஜிலிங்கத்தினை சென்னையில் வைத்து நாடுகட்த்தியது.
சனாதிபதித் தேர்தலில் பின்னணியில் சூரிச் மகாநாடு
இலங்கையில் உள்ள தமிழ் பேசும் கட்சிகள் ஒன்று கூடும் மகாநாடு ஒன்று கடந்த நவம்பர் மாதம் சூரிச்சில் இடம் பெற்றுள்ளது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒரு சிலரை தவிர ஏனைவர்கள் இந்திய இலங்கை அரசுகளுடனும் சர்வதேச சமூகத்தினருடனும் இணைந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை அழிப்பதற்கு துணை நின்றவர்கள. துணை இராணுவக் குழுக்களாக ஆயுத ரீதியிலும் மற்றும் பிரசாரரீதியாகவும் செயற்பட்டவர்களாவர். இவர்கள் தமக்கிடையில் இருக்க கூடிய பதவி ஆசை மற்றும் போட்டி பொறாமை நீங்கி தமக்கிடையே உள்ள வேறுபாடுகளை மறந்து இனத்தின் நன்மைக்காக என்றுமே தாமாக ஒன்றிணையக் கூடியவர்கள் அல்லர். எனினும் ஒன்றிணைய வைக்கப்பட்டனர்.
போருக்குப் பின்னர் அல்லது புலிகளது இராணுவ பலத்தின் அழிவுக்குப் பின்னர் அவசரமாக தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கண்டுபிடித்தல் தொடர்பாக கட்சிகளுக்கிடையில் ஓர் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட ஓர் முயற்சியாகவே இது காட்டப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா என்ற நாட்டை அங்கீகரித்து அதன் இறைமையை ஏற்றுக் கொண்ட அடிப்படையில் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப்பரவலாக்கல் அடிப்படையிலான ஓர் அரசியல் தீர்வு ஒன்றிற்கு அனைவரையும் சம்மதிக்க வைத்து பொது இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்த ஏற்பாட்டாளர்கள் முயன்றுள்ளனர்.
அவ்வாறான ஓர் தீர்வுக்கான இணக்கப்பாடு ஒன்று ஏற்படுமிடத்து அத்தகைய தீர்வு ஒன்றினை தரக் கூடிய ஒருவரை சனாதிபதியாக்குவதற்கு ஆதரவான முடிவு ஒன்றிற்கு மேற்படி கட்சிகள் அனைத்தையும் இணங்க வைத்தல் என்பது மறைமுக நோக்கமாக இருந்துள்ளது.
ஆனாலும் எதிர்பார்த்தது போன்ற இணக்கப்பாடுகள் எதனையும் எட்ட முடியாமல் போயுள்ளது. தீர்வுத்திட்டம் பற்றிய விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்களின் கருத்துப்படி கட்சியிலுள்ள பெரும்பாலானோரின் சம்மதமின்றி சம்பந்தன் ஏற்கனவே தான் தயாரித்து வைத்திருக்கும் ஸ்ரீலங்கா என்ற நாட்டையும் அதன் இறைமையையும் ஏற்றுக் கொண்டு உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையில்(அப்படி ஒன்று நிஐத்தில் இல்லை) அதிகாரப்பரவலாக்கல் அடிப்படையிலான விடயமே அங்கு விவாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சம்பந்தனின் திட்டம் என்பதனால் சம்பந்தன் மவை சுரேஸ் ஆகியோர் அங்கு தமது முழுச் சம்மதத்தினையும் தெரிவித்ததுடன் ஏனையவர்களையும் சம்மதிக்க வைக்கும் முயற்சியில் கடுமையாக ஈடுபட்டிருந்தனர் என்றும் அறிய முடிகின்றது.
எனினும் அந்த தீர்;வுத்திட்டம் பற்றிய பொது இணக்கப்பாட்டு அறிக்கையில் ஸ்ரீலங்கா என்ற நாட்டையும் அதன் இறைமையையும் ஏற்றுக் கொண்டு அதனுள்ளான அதிகாரப்பரவலாக்கல் என்ற அடிப்படையிலான தீர்வு யோசனையில் சுயநிர்ணய உரிமை என்ற சொல்லுக்கு எந்தப் பெறுமதியும் இல்லை வெறும் வார்த்தைக்காகவே சேர்க்கப்பட்டுள்ள அந்த சொல்லை மட்டும் நீக்கினால் தான் கையொப்பம் இட முடியும் என டக்ளஸ்தேவானந்தா கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த மாவை சேனாதிராசா அவர்கள் சீசீ அதனை நாங்கள் எப்படி நீக்குவது அதனைத்தானே நாங்கள் கடந்த 60 வருடங்களாக வலியுறுத்தி வந்துள்ளோம் அந்த சொல்லை நீக்கினால் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று வியாக்கியானம் கொடுத்தாராம்.
அதே வேளை அக் கூட்டத் தொடரில் கலந்து கொண்டிருந்த கNஐந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் அடிப்படையில் ஸ்ரீலங்கா என்ற நாட்டையும் அதன் இறைமையையும் அங்கீகரிக்கும் வகையில் வரையப்பட்டுள்ள அந்த தீர்வு யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ள சுயநிர்ணய உரிமை என்ற சொல் வெறும் வெற்று வார்தையாகவே அமைந்துள்ளது எனவே தமிழ் தேசம் தனித்துவமான தேசம் என்ற அடிப்படையில் அதற்கு தனித்துவமான இறைமை உண்டு என்ற அடிப்படையிலும் தீர்வு யோசனை அமைந்தால் மட்டுமே தான் கையொப்பம் இட முடியும் என்றும் கூறியிருக்கின்றார்.
இவ்வாறான எதிரும் புதிருமான கருத்துக்கள் காரணமாக தீர்வு விடயத்தில் பொது இணக்கப்பாடு எட்டப்படவில்லை. அதே வேளை கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சித் தலைவர்களுக்கு முன்கூட்டியே வழங்கப்படாத நிகழ்சி நிரலில் சனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற வியடமும் விவாதத்திற்காக சேர்க்கப்பட்டிருந்ததாகவும் எனினும் அந்த நிகழ்ச்சி நிரல் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களிடம் வழங்கப்பட்ட போது அதனை பார்வையிட்ட கடசிகளில் டக்ளஸ்தேவானந்தா, பிள்ளையான், தொண்டமான், சந்திரசேகரன் உள்ளிட்ட மேலும் சில கட்சித் தலைவர்களின் எதிர்ப்பினால் அந்த விடயம் அதிலிருந்து நீக்கப்பட்டதாகவும் அறிய முடிகின்றது.
எனினும் அக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஒரு சிலர் தாம் தனிப்பட்ட முறையில் சனாதிபதித் தேர்தல் தொடர்பாக கலந்துரையாட விரும்புவதாக கூறி அங்கு கருத்துக்களை பரிமாறியுள்ளனர். அவர்களில் ஒருவர் மனோகணேசன் மற்றவர் ரவூப்கக்கீம்.
சூரிச் கூட்டம் நடைபெற்ற தினத்தில் சரத்பொன்சேகா தேர்தலில் களமிறங்குவார் என்ற செயதிகள் வெளிவந்து கொண்டிருந்தனவே தவிர உத்தியோக பூர்வமான அறிவிப்புக்கள் எதுவும் வெளியிட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அச்சந்தற்பத்தில் மேற்படி இருவராலும்; அங்கு கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று எதிர்வரும் சனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாரை ஆதரிப்பார்கள் என்பதாக இருந்துள்ளது. அப்போது அங்கு கூடியிருந்த அனைவரும் பொதுவாக கூறியுள்ள கருத்து இந்த தேர்தலில் தமிழ் மக்கள் ஒருவருக்கும் வாக்களிக்க மாட்டார்கள் என்பதாகவே அமைந்திருந்ததாம். டக்ளஸ்தேவானந்தா பிள்ளையான் போன்றோர் கூட இத்தகைய கருத்தினையே கூறியிருக்கின்றனர்.
அன்று கூட்டம் முடிந்த பின்னர் இந்திய மற்றும் மேற்கு நாடுகளின் விசுவாசிகளால் ஒரு வியடம் ஆராயப்பட்டிருக்கின்றது. அது என்ன வென்றால் தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்ற நிலை காணப்படுமாயின் தற்போது சனாதிபதியாக இருக்கும் மகிந்தராஐபக்ச தனது அதிகாரங்களை பயன்படுத்தி இறுதி நேரத்தில் சலுகைகளை அறிவித்தும், முகாம்களிலுள்ள மக்களை விடுவித்தும், உயர்பாதுகாப்பு வலயங்களுக்குள், மக்களை மீளக்குடியமரச் செய்வதன் மூலமும் தமிழ் மக்களின் வாக்குகளை கவர்ந்து விடுவார். எனவே அவருக்கு தமிழ் மக்களின் வாக்குகள் கிடைப்பதனை தடுக்க வேண்டும். அதற்காக அன்றய நாட்களில் தீட்டப்பட்ட திட்டம் யாதெனில்
தமிழ் கட்சிகள் சார்பாக ஓர் பொது வேட்பாளரை நிறுத்தி அவருக்கு தமிழ் மக்களின் வாக்குகளை விழச் செய்வதன் மூலம் மகிந்தவுக்கு வெற்றிகிடைப்பதனை தடு;த்து இரண்டாவது சுற்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பு வேட்பாளர் பொன்சேகாவை வெல்ல வைப்பதே நோக்கமாக இருந்துள்ளது. இந்த திட்டத்தின் பின்னணியில் சுரேஸ்பிறேமச்சந்திரன் அவர்களும் வேறு சிலரும் சம்பந்தனை களமிறக்குவதற்கு ஏனைய தரப்பபுக்களின் ஆதரவை கோரும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது. இந்தப் பின்னணியிலேயே சமபந்தன் அவர்கள் போட்டியிடுவார் என்ற வகையிலான செய்திகள் கூட வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மகிந்தராஐபக்சவுக்கு நிகர் யாருமில்லை என்றிருந்த நேரத்தில் அவருக்கு தேர்தல் களத்தில் சவால் விடக் கூடியவரான சரத்பொன்சேகா தேர்தலில் போட்டியிடப் போவதாக உத்தியோக பூர்வமாக அறிவித்த பின்னர் திட்டமிட்ட அடிப்படையில் தமிழ் ஊடகங்கள் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் சரத்பொன்சேகாவிற்கு ஆதரவாகவும் ரணிவிக்கிரமசிங்கவுக்கு ஆதரவாகவும் மேற்கொண்ட பிரசாரங்கள் காரணமாக மக்களின் மனங்களில் ஆட்சி மாற்றம் ஒன்று அவசியம் ஏற்பட்டே ஆகவேண்டும் என்ற மன உணர்வு ஏற்படுத்தப்பட்டது. இவ்வாறு ஆட்சி மாற்றம் என்ற ஒன்றுக்காக மக்கள் வாக்களிப்பார்கள் என்பது ஓரளவு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சியினை மேற்கொண்டவர்கள் அந்த முயற்சியை கைவிட்டனர். ஆனால் அதே ஆட்கள் தற்போது தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் சிவாஐpலிங்கத்தினை மகிந்தவுக்கு ஆதரவாக செயற்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த 6 தசாப்த காலமாக சிங்கள மக்கள் மத்தியில் வேரூன்றியிருந்த பழம் பெரும் சிங்கள இனவாதக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இன்று தனது சார்பில் அதன் தலைவரையோ அல்லது தனது கட்சியை சர்ந்த ஒருவரையோ ஐனாதிபதி வேட்பாளராக ஏன் நிறுத்த முடியாமல் போனது?
அதற்கு காரணம் சிங்கள மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டுள்ள இனவாதத் தீ ஆகும். கடந்த 2002 ம் ஆண்டு ரணில்விக்கிரமசிங்க விடுதலைப் புலிகளுடன் ஒப்பந்தம் ஒன்றினை செய்திருந்தார். அந்த ஒப்பந்தம் தமிழ் மக்களுக்கு நன்மை செய்யும் ஓர் ஒப்பந்தம் என்றே சிங்கள மக்கள் கருதினர். சிங்கள மக்களின் நலன்களுக்கு மாறாக சிங்களத் தீவின் ஒரு பகுதியை தமிழர்களுக்கு ரணில் கொடுக்கப் போகின்றார் என்று சிங்கள மக்கள் கருதி விட்டனர். ஆனால் அந்த சிங்கள மக்கள் ரணிலின் ஒப்பந்தத்தின் பின்னால் சர்வதேச சமூகத்துடன் இணைந்த வகையில் பின்னப்பட்டிருந்த புலிகளுக்கும் தமிழர்களுக்கும் எதிரான சதி திட்டங்களை அறிந்திருக்காத காரணத்தினால் அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சி சிங்கள பௌத்த தேசிய நலன்களுக்கு எதிரான கட்சி என்று கருதி அதனை நிராகரிக்க தொடங்கிவிட்டனர்.
சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழர்கள் மறைமுகமாகவும் ஆறுதலாகவும் வேதனையின்றி அழிக்கப்படுவதிலும் பார்க்க ராஐபக்ச போன்ற நவீன துட்டகெமுணுகளால் கதறக் கதறக அழிக்கப்படுவதனையே விரும்பினார்கள். இந்த மன உணர்வை சரியாக புரிந்து கொண்ட மகிந்தராஐபக்சவும் விபியும் மக்களின் உணர்வுகளுக்கு தீனி போட்டு 2005 ல் ராஐபக்சவை ஆட்சிக் கட்டில் ஏற்றினர்.
ஆட்சிக் கட்டில் ஏற்றப்பட்ட ராஐபக்ச தான் கூறியது போல புலிகளை அழித்து தமிழர்களை அடிமைப்படுத்தியதனால் அவரே ஒட்டுமொத்த சிங்கள தேசமும் விரும்பும் சிங்கள மாமன்னரானார். மட்டுமன்றி ஐக்கிய தேசியக் கட்சி தனது செல்வாக்கை வேகமாக இழந்து செல்லும் நிலையை எட்டியுள்ளது.
இந்த ஆபத்தை உணர்ந்துள்ள ஐ.தே.கட்சி தலைமை தமது கட்சியின் இருப்பை தக்கவைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ராஐபக்ச கம்பனிக்கும் சரத்பொன்சேகாவுக்கும் இடையில் பிளவு எற்படுத்தப்பட்டது ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. இதனை சரியான சந்தற்பமாக பயன்படுத்திக் கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி சரிந்து செல்லும் தனது செல்வாக்கை தூக்கி நிறுத்துவதற்கான துருப்புச் சீட்டாக சரத்பொன்சேகா போன்றதொரு சிங்கள மாவீரனை களமிறக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும், ஜேவிபி, ஐனநாயக மக்கள் முன்னணி, அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் என்பவற்றின் ஆதரவுடன் சரத்பொன்சேகா தேர்தல் களத்தில் குதித்துள்ளார். சிங்கள மக்கள் மத்தியில் விடுதலைப் புலிகளை அழித்து தமிழர்களை அடிமைப்படுத்திய மாவீரன் யார் என்பது தொடர்பாக மட்டுமே பிரசாரங்கள் மேற் கொள்ளப்படுகின்றது. சரத்பொன்சேகா தான் ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களுக்கு எத்தகையதொரு அரசியல் தீர்வை ஏற்படுத்தி கொடுப்பேன் என்ற எந்தக் கருத்தினையும் சிங்கள மக்கள் மத்தியில் தெரிவிக்கவில்லை. மாறாக ஸ்ரீலங்கா ஒரே நாடு ஒரே தேசம் என்ற அடிப்படையில் இனவாதத் தீயை மூட்டி வாக்குச் சேகரிக்கப்படுகின்றது.
தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் கோரிக்கையான தாயகம் தேசியம் சுயநிர்ணயம் என்ற அடிப்படையிலான தீர்வுக்கான எந்த வாக்குறுதிகளும் சரத்பொன்சேகாவினால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கபடவில்லை. ஆனால் மகிந்த கம்பனி சிங்கள மக்களின் வாக்குகளை அபகரிப்பதற்காக சரத்திற்கு எதிராக ஏதோ எல்லாம் பிரசாரம் செய்து வருகின்றது.
இவ்வாறு சிங்கள தேசிய வாதம் உச்சம் பெற்றுள்ள நிலையில் அந்த உணர்வுகளுக்கு தீனி போட்டு தமிழர்களுக்கு எதிரான இனவாத அடிப்படையில் மட்டும் சிங்கள மக்களிடம் வாக்குகளை பெறப்போகும் சரத்பொன்சேகா சம்பந்தனுக்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்ற முடியும்.
இதனிடையே மகிந்தராஐசபக்ச ஆட்சிக்காலத்தில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உணர்வுகள் சிங்கள மக்கள் மத்தியில் அதிகம் வளர்த்து விடப்பட்டுள்ளது. இறுதி நேரத்தில் விடுதலைப் புலிகளை பாதுகாக்க மேற்படி தரப்புக்கள் முனைந்ததாகவும் சனாதிபதி அவர்கள் மேற்கு நாடுகளின் அழுத்தங்களுக்கு அடிபணியாது புலிகளை அழித்து தமிழர்களை வெற்றி கொண்டார் என்ற மன உணர்வும் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக எந்த சர்வதேச சக்திக்கும் அடிபணியாத சிங்களத் தலைவராக மகிந்தராஐபக்ச அவர்கள் சிங்கள மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். அவ்வாறான ஒருவருக்கு சவால் விடக் கூடியவராக இன்று சரத்பொன்சேகா மட்டுமே விளங்குகின்றார்.
எனினும் அமெரிக்காவை அனுசரிக்காது ஆட்சிப் பீடத்தில் இருந்து ஆட்சி செய்ய முற்பட்டால் போர்க் குற்றச் சாட்டுக்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் என்பதனால் சரத்பொன்சேகா அமெரிக்காவின் எதிர்பபார்ப்புக்களுக்கு ஏற்ப செயற்பட்டே ஆகவேண்டியிருக்கும். அவ்வாறு அவர் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சக்திகளுடன் நட்புறவை வலுப்படுத்த முற்படும் பொழுது சிங்கள இனவாதிகள் அதற்கெதிராக கிளர்ந்து எழுவார்கள்.
அதாவது பல்லாயிரம் சிங்கள வீரர்களின் உயிர்களை கொடுத்து பயங்கரவாதத்தினை அழித்து மீட்டெடுக்கப்பட்ட நாட்டை சரத் மேற்குலகிடம் விற்கின்றார் என்ற குற்றச்சாட்டை எதிரணி சுமத்தும். அந்தக் குற்றச் சாட்டுக்களை முறியடித்து தான் ஓர் சிங்கள தேசியவாதி என்பதனை நிரூபித்தால் மட்டுமே சரத் அடுத்த தேர்தலில் வெல்ல முடியும். அதுவும் அடுத்த 6 ஆண்டிற்குள் வரப்போகும் சனாதிபதித் தேர்தலில் தனது வெற்றியை மட்டும் அல்ல தனது ஆட்சிக்காலத்தில் தனக்காக அவர் உருவாக்கப்போகும் அரசியல் சக்தியின் இருப்புக்காகவும் சரத்பொன்சேகா சிங்கள மக்களின் மனங்களை வென்றே ஆக வேண்டும்.
அவ்வாறு சிங்கள மக்களின் மனங்களை வெல்வதற்காக அவரால் அமெரிக்கா, ஐரோப்பிய மற்றும் இந்திய தலையீடுகளை தடுக்கும் முடிவை எடுக்கவே முடியாது அவ்வாறு எடுத்தால் போர்க் குற்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து தூக்கு மேடைக்கும் செல்ல வேண்டியும் ஏற்படலாம்.
அவ்வாறாயின் தான் ஓர் சிங்கள பௌத்த தேசியவாதி என்பதனை நிருபித்து சிங்கள மக்களின் ஆதரவினை தக்க வைத்துக் கொள்ள அவருக்குள்ள ஒரே வழி தமிழ் மக்களுக்கு எதிரான சிங்கள தேசியவாத நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதனை தவிர வேறு எந்த மார்க்கமும் இல்லை.
இன்று மகிந்தராஐபக்சவுக்கு எதிராக சரத்பொன்சேகாவை பதவியேற்ற கூட்டுச் சேர்ந்திருக்கும் ஜேவிபி அடிப்படையில் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்படுவதனை முழுமையாக எதிர்க்கும் இனவாதக் கட்சியாகும். அடிப்படையில் சரத்பொன்சேகா ஓர் சிங்கள இன வெறிபிடித்தவர். அவரது கடந்த 40 ஆண்டுகால இராணுவ சோவையில் பெருமளவு தமிழினப் படுகொலை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என்பது அனைவரும் அறிந்தது.
2001 ம் ஆண்டு சமாதானம் ஏற்பட்ட பொழுது சிங்களம் பாரிய இராணுவத் தோல்வியை சந்தித்திருந்தது, ஸ்ரீலங்கா பொருளாதாரம் படுபாதாளத்தில் இருந்தது, 70 வீதமான நிலப்பரப்பு புலிகளிடம் இருந்தது, புலிகள் முப்படைகளையும் கட்டி எழுப்பி பலம் மிக்க சக்தியாக விளங்கிய காலம், மீண்டும் யுத்தம் ஒன்று வந்தால் வடகிழக்கிலுள்ள படைகள் முற்றாக அழிவைச் சந்திக்கும் என்ற மரண அச்சம் சிங்களவர்களிடம் நிலவிய காலம், அவ்வாறான ஓர் சந்தற்பததில் கூட இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்போவதாக கூறி 2001ல் சிங்கள மக்களிடம் ஆணை கேட்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு சிங்கள மக்கள் தமது பெரும்பான்மை ஆதரவை வழங்கவில்லை.
2001ல் இருந்து விடுதலைப் புலிகள் மிகவும் பலமாக இருந்த காலத்தில் அவர்களை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்தினால் இலகுவாக அழித்துவிட முடியும் என்று மேற்கு நாடுகள் ஆலோசனை வழங்கின. புலிகள் வடகிழக்கில் இருந்த சிங்களப் படைகளுக்கும் தென்னிலங்கை பொருளாதாரத்திற்கும் மிகவும் பாரிய அச்சுறுத்தலாக விளங்கிய அந்த காலப்பகுதியில் அரசுக்கும் சிங்கள மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இருந்த ஒரே தேவை விடுதலைப் புலிகள் பலவீனப்படுத்தபபடல் வேண்டும் என்பதாகும்.
இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக அல்லாவிட்டாலும் அரசுக்கு பாரிய அச்சுறுத்தல் இருந்த காலத்தில புலிகளையும் மக்களையும் தனிமைப்படுத்தி புலிகளை பலவீனப்படுத்த வேண்டும் என்ற தேவைக்காக கூட ஓர் தீர்வுத்திட்டத்தினை முன்வைக்க விரும்பாத சிங்கள பேரினவாத தலைமைப் பீடம் தற்போதய வெற்றிக் களிப்பில் நின்றுகொண்டு தீர்வை முன்வைக்குமா.
இன்று விடுதலைப் புலிகளின் இராணுவ பலம் முற்றாக அழிக்கப்பட்டுள்ள நிலையில் விடுதலைப் புலிகளின் இராணுவ பலத்தை அழித்த இதே சரத்பொன்சேகா விரும்பினாலும் கூட தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்க சிங்கள பௌத்த பேரினவாதம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பின் பிரகாரம் அதன் தலைவர் ஒருவர் தானாக விரும்பி பதவி விலகினால் அன்றி அவரை பதவியில் இருந்து நீக்க முடியாது என்ற ஒரே காரணத்தினால் மட்டும் கட்சியின் தலைமைப் பதவியில் இருக்கும் ரணில்விக்கிரமசிங்க அவர்கள் சிங்கள மக்கள் மத்தியிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் மத்தியிலும் நம்பிக்கை இழந்துவிட்ட ஒருவராவார். அவ்வாறான ஒருவரை வலிமை மிக்க நம்பிக்கைக்கு உரிய ஒருவராக தமிழ் மக்களுக்கு காட்டி சரத்பொன்சோகவுக்கு ஆதரவு திரட்டிவருவது சுத்த மோசடித்தனமாகவே உள்ளது.
இச் சூழ்நிலைகளில் சரத்பொன்சேகா ஐனாதிபதியானாலும்
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக தமிழ் மக்களின் 62 ஆண்டுகால தமிழ் தேசியத்தின் அடிப்படையிலான கோரிக்கை நிச்சயமாக நிறைவேற்றப்படவே மாட்டாது.
சரத்பொன்சேகா உண்மையான புத்தனாக மாறினாலும் கூட அவர் தமிழர்களுக்கு தீர்வைத்தர சிங்கள பேரினவாதம் இடமளிக்கப் போவதில்லை. ஆகவே நிச்சயம் நன்மை நடக்கப் போவதில்லை.
சிங்கள மக்களின் நம்பிக்கையை பெறுவதற்காக சிங்கள குடியேற்றம் மற்றும் இராணுவமயமாக்கல், பௌத்தமயமாக்கல், சிங்கள மயமாக்கல் உள்ளிட்ட தமிழ் தேசியத்திற்கு எதிரான நடவடிக்கைகளை சரத்பொன்சேகா நிச்சயம் நிறைவேற்றியே ஆகவேண்டும். ஆகவே நிச்சயம் தீமை நடக்கத்தான் போகின்றது.
இந்நிலையில் ஆட்சி மாற்றம் என்ற பெயரால் நடைபெறப் போவது
தமிழ் மக்கள் யாரால் அழிக்கப்பட்டார்களோ அந்த கொலையாளிக்கு தாம் அழிக்கப்பட்டு 7 மாதகாலத்தினுள் தமது கைகளால் வாக்களிப்பதன் மூலம் இலங்கையில் இடம் பெற்றது இன அழிப்பு யுத்தம் அல்ல பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்று தமிழர்களே ஒப்புதல் அளித்ததான நிலை ஏற்படும்.
இந்திய நலன்களுக்கு மாறாக இலங்கையில் அதிகரித்துவரும் சீன மற்றும் பாகிஸ்தானிய ஆதிக்கம் மிக இலகுவாக கட்டுக்குள் கொண்டுவரப்படும்.
அமெரிக்க நலன்களுக்கு மாறாக இலங்கையில் அதிகரித்துவரும் சீன ஆதிக்கம் மிகவும் சுலபமாக கட்டுப்படுத்தப்படவும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் மீண்டும் தமது செல்வாக்கை இலகுவாக இலங்கையில் அதிகரித்துக் கொள்ளமுடியும்.
இதனால் நன்மை பெறப்போவது சிங்கள தேசமும், அமெரிக்க இந்திய தரப்புக்களும் மட்டுமே.
நிலைமைகள் இவ்வாறு இருக்கும் பொழுது சனாதிபதித் தேர்தலில் சரத்பொன்சேகாவை ஆதரிப்பது என்ற முடிவை எட்டுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் பல சுற்றுக்கள் கூடிக் கலைந்துள்ளது.
ஒவ்வொரு கூட்டங்களிலும் மிகக் காரசாரமான விவாதங்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்ட சனவரி 5ம் திகதி உறுப்பினர்களிடையே கைலப்பு ஏற்படும் அளவுக்கு விவாதங்கள் நடை பெற்றதாக கூட்டம் நடைபெற்ற பாராளுமன்ற உறு;ப்பினர் விடுதியில் வசிக்கும் சிலர் மூலம் தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் அவர்களின் வாக்குவாதங்கள் அ;ந்தப்பகுதி முழுவதனையும் அதிர வைத்ததாம்.
இறுதி முடிவெடுக்கப்பட்ட தினத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமூகமளித்திருந்ததாக அறிய முடிகிறது. கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், செயலாளர் மாவைசேனாதிராஐர், ஈபிஆர்எல்எவ் அமைப்பின் தலைவர் சுரேஸ்பிறேமச்சந்திரன், சிவசக்திஆனந்தன், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம், ந.ஸ்ரீகாந்தா, எம்.கே.சிவாஐpலங்கம், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சொலமன் சூ சிறில், தோமஸ், செல்வராசா கஜேந்திரன், சிவநாதன் கிசோர், தங்கேஸ்வரி கதிர்காமன், பா.அரியநேத்திரன், பத்மினி சிதம்பரநாதன், இமாம், துரைரெட்ணசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததாகவும்; மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜேயானந்தமூர்த்தி தொலைபேசி மூலம் தனது கருத்தினை தெரிவித்ததாகவும் மற்றும் சதாசிவம் கனகரத்தினம்(சிறைச்சாலையில்) சந்திரகாந்தன் சந்திரநேரு(லண்டனில்), ப.கனகசபை(இந்தியா) ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்றும் அறிய முடிந்தது.
சனவரி 4ம் திகதி நடைபெற்ற பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் சம்பந்தன் அவர்கள் சரத்பொன்சேகாவிடமும், ரணில்விக்கிரமசிங்கவிடமும் பெற்றுக் கொண்ட வாக்குறுதிகள் பற்றி விளக்கியுள்ளார். அதன் பொழுது அவர்களிடம் இருந்து எழுத்து மூலம் பெற்ப்பட்ட ஆவணம் தம்மிடம் உள்ளதாக சம்பந்தன் கூட்டமைப்பு உறுப்பினர்களிடம் தெரிவித்திருக்கின்றார். அதனைக் கேட்டதுமே சம்பந்தன் ஐயா மீது பக்தி கொண்டிருந்த ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த ஆவணத்தினை பார்க்காமலே தமது ஆதரவை சம்பந்தனுக்கு தெரிவித்துவிட்டனர்.
எனினும் அந்த ஆவணத்தினை தமக்கு காட்ட வேண்டும் என்றும் அதிலுள்ள கையொப்பத்தினை தாம் பாவையிட வேண்டும் என்றும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலர் வற்புறுத்தியதுடன் அதனைப் பார்த்த பின்னர் அதனைப் பற்றி நன்கு யோசித்த பின்னரே அவருக்கு ஆதரவளிப்பது என்பது பற்றிய முடிவை தாம் செல்ல முடியும் என சில உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக 4 ம் திகதி முடிவு எதுவும் எட்டப்படாமல் கூட்டம் 5ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 5ம் திகதி சம்பந்தன் குறித்த ஆவணத்தின் போட்டோ பிரதியை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் காண்பித்துள்ளார். அங்கு இரண்டு வகையான ஆவணங்களில் சரத்பொன்சேகாவின் கையொப்பங்கள் காணப்பட்டுள்ளது.
1.நாளந்த மனிதாபிமானப்பிரச்சினைகள் பற்றியது. அது சரத்பொன்சேகாவின் தேர்தல் அறிக்கையாக மட்டும் அமைந்திருந்ததாகவும் மாறாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் சரத்பொன்சேகாவும் கையொப்பம் இட்டு உருவாக்கிய ஓர் ஒப்பந்தம் அல்ல என்பதுடன் விசேடமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு முகவரியிடப்பட்ட ஓர் ஆவணமாக கூட அது அமைந்திருக்கவில்லை என்றும் அதில் ரணில்விக்கிரமசிங்க அவர்கள் கையொப்பம் இட்டிருக்கவில்லை என்றும் சனாதிபதி வேட்பாளரான சரத்பொன்சேகா மட்டுமே கையொப்பம் இட்டிருந்தாhகவும் அறிய முடிந்தது. இது மனிதாபிமான விடயம் சம்பந்தப்பட்டது மட்டும் என்பதனால் சரத் பொன்சேகா மட்டும் கையொப்பம் இட்டிருக்கின்றார் போலும். அவரது பெயர் கூட எழுதப்பட்டிருக்கவில்லையாம்.
2.தீர்வு யோசனை பற்றியது தீhவு யோசனை பற்றி ஓர் ஏ4 அளவு வெள்ளைத்தாளில் அதிர்காரப்பகிர்வு பற்றிய சில குறிப்புக்கள் எழுதப்பட்டிருந்தாகவும் அதில் வடகிழக்கு இணைப்பு பற்றி எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்றும் அறிய முடிகிறது. அந்த ஆவணம் யாரால் யாருக்கு எழுதப்பட்டுள்ளது என்பது பற்றி எதுவும் இல்லை என்றும் மாறாக அந்த தாளில் அதிகாரப்பகிர்வு அடிப்படையில் எழுதப்பட்டுள்ள விடயங்களின் கீழ் ஒரு நபர் கையொப்பம் இட்டுள்ளார் அவரது பெயர் அந்த ஆவணத்தில் இல்லை ஆனால் அந்த கையொப்பம் சரத்பொன்சேகாவினது என்றும் அறிய முடிந்தது. அநத ஆவணத்தில் ரணில்விக்கிரமசிங்க கையொப்பம் இட்டிருக்கவில்லை என்றும் ஆனால் அதே விடயங்கள் அடங்கிய இன்னும் ஒரு தாளில் ரணில்விக்கிரமசிங்கவின் கையொப்பம் மட்டும் இடம் பெற்றிருந்ததாகவும் அறிய முடிகின்றது. இந்த இரண்டாவது ஆவணத்தில் யாரால் யாருக்கு என்ற தெளிவான முகவரிகள் எதுவும் எழுதப்பட்டிருக்கவில்லை என்பதும் ரணிலும் சரத்பொன்சோகவும் ஏன் ஒரே ஆவணத்தில் கையொப்பம் இடாமல் தனித்தனி கையொப்பமிட்டனர் என்பதும் சந்தேகத்திகுரியதாகவே உள்ளதாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து கிடைத்த தகவல்களின் படி இறுதிநாள் விவாதத்தின் போது மேற்படி ஆவணதை பார்வையிடப்பட்ட பின்னர் மிகக் கடுமையான விவாதம் இடம் பெற்றிருக்கின்றது.
1. மேற்படி வாக்குறுதியை தாம் நம்ப முடியும் என்றும் இதுபோன்று வாக்குறுதிகளை இலங்கையின் முன்னய சனாதிபதி வேட்பாளர்கள் யாரும் வழங்கியது இல்லை என்றும் அதனால் சரத்பொன்சோகவை நம்ப முடியும் என்றும் சம்பந்தன் கூறியுள்ளார். அதன் பிரகாரம் தாம் சரத்பொன்சேகாவை நம்பி அவருக்கு வாக்களித்து ஆட்சி மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்றும் அதற்காக பொன்சேகாவை வெளிப்படையாக ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை சம்பந்தன் மற்றும் சுரேஸ் மற்றும் மாவை அகியோர் முன்வைக்க மறுகருத்தின்றி சிவசக்திஆனந்தன், அரியநேத்திரன், இமாம், தோமஸ், தங்கேஸ்வரி, சொலமன்சிறில், துரைரெட்ணசிங்கம், ஆகியோர் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்
2. இரண்டு பிரதான வேட்பாளர்களும் தமிழ் மக்களை கொலை செய்தவர்கள் இரண்டு வேட்பாளர்களையும் ஒருபோதும் ஆதரிக்க கூடாது, சரத்பொன்சேகா அல்லது ரணில்விக்கிரமசிங்க ஆகியோர் தேர்தல் காலத்தில் வழங்கும் வாக்குறுதிகளை நம்ப முடியாது என்றும் இன்றய தினம் 5ம் திகதி பாராளுமன்றத்தில் அவசரகாலச்சட்டம் மீதான விவாதம் இடம் பெற்ற பொழுது ஐக்கிய தேசியக் கட்சியினர் அதற்கெதிராக வாக்களிக்க முன்வரவில்லை இந் நிலையில் இவர்கள் எழுதிக் கொடுத்துள்ள வாக்குறுதிகள் எதனையும் நம்ப முடியாது என்றும் மாறாக இரண்டுபேரையும் ஆதரிப்பதில்லை என்ற தீர்;மானத்தினை கூட்டமைப்பு எடுக்குமாயின் தமது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்வது பற்றி சிந்திக்க முடியும் என்றும் சிவாஐpலிங்கம் தெரிவித்திருக்கின்றார். அவர் அன்றய தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றும் பொழுது தனது தேர்தல் விஞ்ஞாபனத்தினை பாராளுமன்ற பதிவேடான ஹன்சாட்டில் இணைப்பதற்காக சமர்ப்பித்து உரையாற்றியிருந்தார். அந்த விஞ்ஞாபனத்தில் இனப்பிரச்சினை தீர்;வானது தமிழர்களின் இறைமை அடிப்பிடையில் இணைப்பாட்சி முறையில் அமைய வேண்டும் என்ற அடிப்படையை கொண்டுள்ளது. இதே வேளை ஸ்ரீகாந்தா அவர்கள் சரத்பொன்சோகவின் தீர்வு யோசனை பற்றிய விபரம் ஒற்றையாட்சிக்குள் அமைகிறது என்றும் அதனை ஏற்க முடியாது என்று கூறியிருக்கின்றார் அவர் அங்கு விவாதித்த விடயங்களை செவிமடுத்த கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலரின் கருத்துக்களின் பிரகாரம் சம்பந்தன் அவர்களுக்கும் ஸ்ரீகாந்தா அவர்களுக்கும் தீர்வுத்திட்டம் தொடர்பில் ஸ்ரீலங்கா என்ற நாட்டையும் அதன் இறைமையையும் அடிப்படையில் ஏற்றுக் கொண்டு தீர்வை பெற்றுக் கொள்வது தொடர்பில் அடிப்படையில் கருத்தொருமைப்பாடு உள்ளது என்றும் ஆனால் சனாதிபதித் தேர்தலில் இரண்டு பேரையும் ஆதரிக்க கூடாது என்ற தனது வாதத்தினை நியாயப்படுத்துவதங்காகவே அவ்வாறான ஓர் கருத்தை அவர் முன்வைத்தார் என்றும் அறிய முடிகிறது. ஸ்ரீகாந்தாவின் தீர்வுத்திட்டம் தொடர்பான நிலைப்பாடு அவர் ஆதரிக்கும் சிவாஜிலிங்கம் முன்வைத்துள்ள இணைப்பாட்சி அடிப்படையிலான தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அடிப்படையில் முரணானதாக உள்ளபோதும் அவர் சிவாஐpலிங்கத்தை ஏன் ஆதரிக்கின்றார் என்பது தொடர்பில் கூட்டமைப்பினரிடமும் தமிழ் தேசிய ஆர்வலர்களிடமும் பலத்த சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது. எவ்வாறெனினும் ஸ்ரீகாந்தாவும் சிவாஜிலிங்கமும் இன்னமும் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை.
3. இரண்டு பிரதான வேட்பாளர்களும் தமிழ் மக்களை படுகொலை செய்தவர்கள் அதனால் இந்த தேர்தலில் இரண்டு வேட்பாளர்களையும் ஆதரிக்க கூடாது ஆனால் வாக்குரிமையை மக்கள் பயன்படுத்த வேண்டும் எனினும் கூட்டமைப்பின் ஒற்றுமையினை கருத்தில் கொண்டு இறுதியில் சம்பந்தன் எடுக்கும் முடிவை தாம் ஏற்றுக் கொள்வோம் என்ற கருத்தினை கிசோர், வினோநோகராதலிங்கம் ஆகியோர் தெரிவித்திருக்கின்றனர்.
4. இரண்டு பிரதான வேட்பாளர்களும் தமிழ் மக்களை படுகொலை செய்தவர்கள் அதனால் இந்த தேர்தலில் இரண்டு வேட்பாளர்களையும் ஆதரிக்க கூடாது ஆனால் வாக்குரிமையை மக்கள் பயன்படுத்த வேண்டும் எனினும் இறுதியில் கூட்டமைப்பின் ஒற்றுமையினை கருத்தில் கொண்டு கூட்டமைப்பிலுள்ள பெரும்பான்மையினர் எடுக்கும் முடிவுக்கு எதிராக தாம் செயற்பட மாட்டோம் என்ற கருத்தினை பத்மினிசிதம்பரநாதன் மற்றும் செல்வம் அடைக்;கலநாதன் ஆகியோர் தெரிவித்திருக்கின்றனர்.
5இரண்டு பிரதான வேட்பாளர்களும் தமிழ் மக்களை படுகொலை செய்தவர்கள் அதனால் இந்த தேர்தலில் இரண்டு வேட்பாளர்களையும் ஆதரிக்க கூடாது ஆனால் இந்த தேர்தலை பயன்படுத்தும் நோக்கில் இந்த தேர்தலை பயன்படுத்தி தமிழ் தேசம் இன்னமும் அதன் தமிழ் தேசியம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது என்பதனை வெளிப்படுத்தும் நோக்கில் தமிழ் தேசத்திலுள்ளவர்கள் சிங்கள தேசத்திற்கான இந்த தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்றும் அதே வேளை சிங்கள தேசத்திலுள்ள மக்கள் விக்கிரமபாகுகருணாரட்ண அவர்களுக்கு வாக்களித்து தமிழ் தேசத்தின் தனித்துவமான சுயநிர்ணய உரிமை உள்ளிட்ட அபிலாசைகளை அங்கீகரிக்கும் ஒருவரை சிங்கள தேசத்தின் சனாதிபதியாக தெரிவு செய்ய வாக்களிக்க வேண்டும் எனக் கோர வேண்டும் என்ற கருத்தினை கஜேந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் முன்வைத்துள்ளனர் எனினும் அவர்களும் இறுதியில் கூட்டமைப்பின் ஒற்றுமையினை கருத்தில் கொண்டு கூட்டமைப்பிலுள்ள பெரும்பான்மையினர் எடுக்கும் முடிவுக்கு எதிராக தாம் செயற்பட மாட்டோம் என்ற கருத்தினை தெரிவித்திருக்கின்றனர்..
இக்கருத்துப் பரிமாற்றங்களின் பின்னர் படுகொலையாளிகளை ஆதரிக்க வேண்டும் என்று யார் விடும்புகின்றீர்கள் அல்லது விரும்பவில்லை என்று வாக்கெடுப்பு நடாத்தப்படல் வேண்டும் என்று ஸ்ரீகாந்தா சிவாஜிலிங்கம் கஜேந்திரகுமார் கஜேந்திரன் ஆகியோர் வலியுறுத்திய போது பெரும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருக்கின்றது. அதனை சற்றும் எதிர்பார்க்காத சம்பந்தன் சுரேஸ்பிறேமச்சந்திரன், சிவசக்தியானந்தன் ஆகியோர் கடும் சீற்றமடைந்து உரத்த குரலில் சத்தமிட்டுள்ளனர். அவர்கள் கூறியிருக்கின்றனர் அப்படி என்றால்; ஆட்சி மாற்றம் வேண்டுமா இல்லையா என்றே வாக்கெடுப்பு நடர்த்த வேண்டும் என்று வாதிட்டுள்ளனர். இதற்கு வாக்கெடுப்பை கோரியவர்கள் மறுத்துள்ளனர் அதற்கு அவர்கள் கூறும் காரணம் அடிப்படையில் இரண்டு வேட்பாளர்களையும் நிராகரிக்கும் தாம் இவ்வாறு ஆட்சி மாற்றம் வேண்டும் என்று வாக்களித்தால் அது ஒரு கொலையாளியை ஆதரிப்பதாக அமையும் மாறாக வேண்டாம் என்று வாக்களித்தால் மகிந்தராஐபக்ச என்ற கொலையாளியை தாம் விரும்புவதாக சரத்பொன்சேகாவின் ஆதரவாளர்களால் தம் மீது சேறு பூசப்படும் ஆகவே அவ்வாறான கேள்வி அமைய முடியாது என்று வாதிட்டுள்ளனர். சிவசக்திஆனந்தன் அவர்கள் சண்டித்தனமான அணுகுமுறையை வெளிப்படுத்தியதாகவும் அறியமுடிகின்றது.
கடைசி வரையில் அவ்வாறான ஓர் வாக்கெடுப்பை நடாத்த சம்பந்தன் சுரேஸ் மாவை ஆகியோர் சம்மதிக்கவில்லை எனினும் கூட்டமைப்பு பிளவுபட்டுவிடக் கூடாது என்ற காரணத்திற்காக வாக்கெடுப்பு நடாத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் விட்டுக் கொடுப்பு செய்யப்பட்டிருக்கின்றது. அதற்காக இணங்கிக் கொண்டபடி மறுநாள் பத்திரிகையாளர் மகாநாட்டில் சம்பந்தன் தனது கருத்தை கூறும் பெழுது சரத்பொன்சோகவை ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு மாறான கருத்துக்களும் இருந்ததாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டத்தில் இடம் பெற்ற மேற்படி விடயம் தொடர்பில் கூட்டம் முடிந்த பின்னர் சிலரிடம் கருத்து தெரிவித்த சிவசக்திஆனந்தன் கூறினாராம் 1987ம் ஆண்டுக் கால்ங்களாக இருந்தால் இப்பொழுது தெரிந்திருக்கும் என்றாராம்.
இதனை செவிமடுத்த சிலர் பேசிக் கொள்கின்றனர் 1987 - 1989 வரை இந்தியப் படையினர் இலங்கையில் இருந்தகாலத்தில் ஈபிஆஎல்எவ் அமைப்பு இந்தியப்படையுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலைகளில் பெருமளிவில் ஈடுபட்டிருந்தது அக்காலத்தில் அந் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அவர்களது குழு மண்டையன் குழு என பெயரிடப்பட்டிருந்தது என்றும் புலிகள் இயக்கம் பலமாக இருந்தபோது புலிகளுக்கு அஞ்சி வாலைச் சுருட்டிக் கொண்டு திரிந்த சிவசக்திஆனந்தன் அவர்கள் இப்போ மீண்டும் பழய மண்டையன் குழு ஆளாக மாற முயற்சிக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுவதாக கூறுகின்றனர்.
மொத்தத்தில் கூட்டமைப்பினுள் இரண்டு வேட்பாளர்களையும் ஆதரிக்க கூடாது என்ற கருத்தை முன்வைத்தவர்கள், தேர்தலை பகிஸ்கரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தியவர்களும், தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் சிவாஜிலிங்கம் அவர்களும் மறைமுகமாக மகிந்தராஐபக்சவை வெல்ல வைப்பதற்காகவே அவ்வாறான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர் என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
அப்படியானால் மாவீரர்களின் தியாகங்களையும், பொது மக்களின் உயிர்த்தியாகங்களையும் மனதில் நிறுத்தி உண்மையில் இரண்டு கொலைகாரர்களுக்கும் தமது கரங்களால் வாக்களிக்க விரும்பாத தமிழ் மக்கள் எப்படி தங்களது உணர்வை இந்தத் தேர்தலில் வெளிப்படுத்துவது என்ற கேள்விக்கு ஐனாயக வாதிகளிடம் என்ன பதில் உண்டு?
பொன்சேகாவை ஆதரிப்பது என்ற முடிவை எடுத்துள்ள கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆட்சிமாற்றம் ஒன்று வேண்டும் மகிந்தவை வீட்டுக்கு அனுப்பியே ஆக வேண்டும் என்று விரும்பும் தமிழ் மக்கள் பெரும் பாலானோரின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காகவே அம் முடிவை எடுத்துள்ளதாக நியாயப்படுத்த முயல்கின்றனர். ஆனால் ஐனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் கடந்த டிசம்பர் மாதம் இறுதி வரையில் பெரும்பாலான தமிழ் மக்கள் இரண்டு கொலைகாரருக்கும் வாக்களிக்க கூடாது என்ற கருத்தையே பெருமளவில் கொண்டிருந்தனர். எனினும் பின்னரான நாட்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் சிலர் தமிழ ஊடக நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்து திட்டமிட்டு மேற்கொண்ட பிரசாரங்கள் காரணமாக மக்கள் மனதில் சரத்பொன்சேகா பற்றிய நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டு அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற முடிவை நோக்கி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
யுத்தம் முடிவடைந்து, விடுதலைப் புலிகளின் இராணுவ பலம் அழிக்கப்பட்ட பின்னர் இலங்கையில் இனி யுத்தமே இல்லை என்ற நிலையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் இயல்பாகவே நடைபெறக் கூடிய அல்லது நடைபெற வேண்டிய விடயங்களை வைத்து பொன்சேகா ஆட்சிக்கு வந்தால் மட்டும் எல்லாமே கிடைத்துவிடும் என்பது போன்றதொரு மாயை மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படுகின்றது.
போரினால் அனைத்தையும் இழந்த மக்களின் பலவீனங்களையும் எதிர்பார்ப்புக்களையும் நன்கு உணர்ந்து கொண்டு மக்களை மேற்கு நாட்டுசக்திகளின் விருப்பங்களுக்கு ஏற்ப கையாளுகின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீது வசைபாடி அவர்கள் மீது சேறு பூசுவதன் மூலம் அவர்கள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்துவதும் அவர்கள் முன்னெடுத்த கொள்கைகள் அனைத்தும் தவறானது என்ற எண்ணப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியும் வேகமாக கூட்டமைப்பினரால் மேற்கொள்ளப்படுகின்றது.
இதன் மூலம் சம்பந்தன் முன்வைக்கப்போகும் தீர்வுத்திட்டத்தினை சம்பந்தன் இந்திய மற்றும் மேற்கு நாடுகளுடன் பேசி அவர்களை சம்மதிக்க வைத்துவிட்டார் என்றும் அது அவரின் அரசியல் சாணக்கியம், அரசியல் முதிர்ச்சி மற்றும் சிறந்த இராசதந்திரம் என்றும் மக்களை நம்பவைக்கும் முயற்சியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சம்பந்தன் முன்வைக்க உள்ள தீர்வுத்திட்டம் இந்தியாவின் விருப்பத்தின் அடிப்படையிலானது என்பது மக்களுக்கு தெரிய நியாயம் இல்லை.
சம்பந்தன் மாவை, சுரேஸ் போன்றோர் இந்தியாவின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக தன்னிச்சையாக சூரிச் மகாநாட்டுக்கு முன்னரே தாங்கள் தீர்மானித்துவிட்ட சரத்பொன்சேகாவை ஆதரிப்பது என்ற முடிவை மக்கள் மீது திணிப்பதற்காக தாம் எடுத்த முடிவுக்கு காரணம் பெரும் பாலான தமிழ் மக்களின் விருப்பம் ஆட்சி மாற்றம் ஆகவே தாங்கள் மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து இத்தகைய முடிவை எடுத்துள்ளாக வார்த்தைக்கு வார்த்தை நியாயம் கற்பிக்க முயல்கின்றனர். ஆனால் 2004 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்களது தாயகம், தேசியம், சுயநிர்ணயம், இறைமை என்பவற்றின் அடிப்படையில் தீர்;வு காண்பதற்காக அற்பணிப்புடன் உழைப்போம் என்று மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நம்பி மக்கள் வழங்கிய வாக்குகளின் அடிப்படையிலேயே 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றுக்கு தெரிவானார்கள். அப்படியானால் இப்போது அந்த மக்களாணைக்கு முற்றிலும் நேரெதிராக ஸ்ரீலங்கா என்ற நாட்டையும் அதன் இறைமையையும் அங்கீகரித்து அதிகாரப்பகிர்வு அடிப்படையிலான தீர்வு ஒன்றை ஏற்றுக் கொள்ள முற்பட்டிருக்கும் சம்பந்தன், மாவை, சுரேஸ், ஆகியோர் அந்த இலட்சியத்திற்காக உயிர் கொடுத்த மக்களுக்கும் மாவீரர்களுக்கும் அந்த இலட்சியத்திற்காக, அங்கவீனர்களாகியும், சொத்துடமைகளை இழந்தும் வீதியில் நிற்கும் மக்களுக்கு என்ன பதில் சொல்லப் போகின்றார்கள்.
1976ம் ஆண்டு தந்தை செல்வா வட்டுக்கோட்டைத் தீர்மானம் இயற்றிய பொழுது அந்தக் கட்சியில் அங்கம் வகித்த சம்பந்தனுக்கு அந்த தீர்மானத்தில் துளியளவும் உடன்பாடு இருந்திருக்கவில்லை. மகாநாடு முடிந்த பின்னர் திருகோணமலைக்கு தந்தை வந்தபொழுது தனது வீட்டில் வைத்து இவ்வாறான ஓர் முடிவை நீங்கள் எடுத்திருக்க கூடாது என்று தந்தைக்கு தான் கூறியதாகவும் அதற்கு 'சாம் என்னால் இந்த முடிவை தவிர வேறு என்ன முடிவை தான் எடுக்க முடியும்' என்று தந்தை பதிலளித்தாராம் என்று சம்பந்தன் கூட்டமைப்பினரிடமும் வேறு தரப்பினரிடமும் அடிக்கடி கூறி வந்திருக்கின்றார்.
ஆக இலங்கை என்ற நாடு இரண்டாக பிளவு பட்டு தனிநாடு: ஒன்று உருவாகுவதனை தனது ஆழ் மனதால் வெறுக்கும் நிரகரிக்கும் ஒருவர் விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருந்து அந்தப் போராட்டத்தின் அங்கீகாரததிற்காக செயற்பட்டிருப்பாரா என்று நாம் சிந்தித்துப் பார்க்க முடியும்.
எப்பொழுதும் இந்தியாவின் தயவை மட்டுமே நாடும் சம்பந்தன் இந்தியா இன்றி தமிழ் மக்களுக்கு ஓர் தீர்வு கிடைக்காது என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தவர். அதனால் விடுதலைப் புலிகள் பலமாக இருந்த பொழுதிலும் கூட இந்தியாவும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளும் புலிகளை அழிப்பதற்கு மேற் கொண்ட அத்தனை முயற்சிகளை தெரிந்திருந்தும் அதனை தடுப்பதற்கு முயற்சிக்கவில்லை என்பதுடன் விமர்சிக்கவும் முயலவில்லை. ஏனெனில் அது இந்தியாவின் பிராந்திய நலன்களுக்காக மேற்கொள்ள வேண்டிய தவிர்க்க முடியாத நடவடிக்கை என்பதனை அவர் ஏற்றுக் கொண்டிருந்தமையாகும்.
அத்துடன் தமிழர் தாயகத்தின் 70 வீதமான நிலப்பரப்பு தமிழர்களின் முழுமையான ஆளுமையில் இருந்து இந்திய உதவியுடன் பறிக்கப்பட்டுக் கொண்டிருந்த பொழுது வன்னியில் இந்திய உதவியுடன் பல்லாயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது அதற்கு ஆயுதம் மற்றும் ஏனைய உதவிக்ள வழங்கிய இந்தியாவை கண்டிக்க தவறிய சம்பந்தன் போர் முடிந்து 6 மாதங்களின் பின்னர் கடந்த 2009 டிசம்பர் 8 ம் திகதி பாராளுமன்றில் ஆற்றிய உரையில் இலங்கை அரசாங்கம் சீனாவின் உதவியுடன் வன்னியில் இராணுவ முகாம்களை அமைத்துவருவதாக ஆக்ரோசமாக முழங்கியுள்ளார். ஏனெனில் சீனாவின் தலையீடு இந்திய நலன்களுக்கு ஆபத்து என்பதனால் மட்டுமேயாகும்.
கடந்த டிசம்பர் 7ம் திகதி இடம் பெற்ற கூட்டமைப்பு பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் அதற்கு முன்னய நாள் சரத்பொன்சோகவுடன் இடம் பெற்ற சந்திப்பு தொடர்பாக விளக்கினாராம். அப்பொழுது தான் சரத்பொன்சேகாவுக்கு சுட்டிக்காட்டினாராம் நீங்கள் புலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததை நான் குறை கூற மாட்டேன் அனால் மக்களை இவ்வாறு சீரழித்திருக்க கூடாது என்று. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 2004 ம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு முரணான சம்பந்தனின் இக் கூற்று எதனை வெளிப்படுத்துகின்றது.
இந்தியாவின் உத்தரவு இன்றி எந்த ஓர் முடிவையும் சம்பந்தன், மாவை, சுரேஸ் மேற்கொள்ளவே மாட்டார்கள் அமெரிக்கா சொன்னாலும் கூட இந்தியாவை கேட்டுத்தான் செய்வார்கள். மனோகணேசன் இந்தியா என்ன சொன்னாலும கூட அமெரிக்காவிடம் கேட்காமல் ஒன்றையும் செய்ய மாட்டார். கடந்த 16-1-2010 அன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களான சம்பந்தன், மாவை, சுரேஸ், செல்வம்அடைக்கலநாதன் ஆகியோர் டில்லிக்குச் சென்று நிலைமைகளை விளக்கியதாகவும் தாம் எடுதத முடிவை டில்லி நன்று செவிமடுத்த பின்னர் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் மாவை அவர்கள் ஊடகங்களுக்கு கூறியுள்ளார். ஆனால் உண்மை அப்படி அல்ல கொழுமபிலுள்ள இந்திய தூதரால் கூறப்பட்டதை செவ்வனே நிறைவேற்றிய பின்னர் மேலும் என்ன உத்தரவு என்று கேட்பதற்காகவே அங்கு சென்றிருந்தனர் என்பது தான் உண்மை இதனை காலம் உணர்த்தும்.
சரத்பொன்சேகா ஆட்சி ஏறுவதனால் தமிழ் மக்களுக்கு ஏதும் நன்மை ஏற்படுகின்றதோ இல்லையோ, வடகிழக்கு பிராந்தியங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்றதோ இல்லையோ நிச்சமாக இந்திய மற்றும் அமெரிக்க தரப்புக்களின் தலைவலி நீங்கும் என்பதுடன் இலங்கைக்கு எதிரான போர்க் குற்றப் பிரச்சினைகளும் கிடப்பில் போடப்படும் என்பதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு அமைச்சுப்பதவிகளும் கிட்டும் என்பது மட்டும் நிச்சயம்.
சரத்பொன்சேகா ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் கோரிக்கைகளை நிச்சயமாக நிறைவேற்ற மாட்டார் என்பதனை நன்றாக தெரிந்து கொண்ட பின்னரும் கூட எதிர்வரும் ஐனாதிபதித் தேர்தலில் கடந்த ஏப்பிரல் மே மாதங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் சுமார் 70000 திற்கும் அதிகமான பொது மக்களை படுகொலை செய்த படைகளை தலைமை தாங்கி நேரடியாக நெறிப்படுத்திய இலங்கைப் படைத்தளபதியும் போர்க்குற்றவாளிகளில் ஒருவரும் சனாதிபதி வேட்பாளர்களில் ஒருவருமான சரத்பொன்சேகா விற்கு ஆதரவு வழங்குவதென தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. சம்பந்தன், மாவை, சுரேஸ் ஆகியோரின் விடாப்பிடியினால் கூட்டமைப்பு இந்த வரலாற்றுத் தவறை இழைத்துள்ளது. இந்த முடிவானது நிச்சயமாக தமிழ் மக்களின் நலன்களுக்காக எடுக்கப்பட்ட முடிவு அல்ல அது இந்திய, மற்றும் அமெரிக்க தரப்புக்களினது நன்மைக்காக மட்டும் எடுக்கப்பட்ட தீர்மானமேயாகும்.
தமிழர்கள் முள்ளிவாய்காலில் மட்டுமல்ல கட்ந்த 60 ஆண்டுகளாக இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டமைக்கு சிங்கள தேசத்திற்கு தண்டனை கொடுக்கப்படல் வேண்டும். அந்த தண்டனையானது தமிழர்கள் தமது வாக்குரிமையை பயன்படுத்தி ஆட்சி மாற்றம் என்னும் பெயரால் ஆள்மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதால் கொடுக்கவே முடியாது. தன் உயிரைக் கொடுத்தேனும் சிங்கள பௌத்த தேசத்தை காப்பபேன் என்று சபதமிட்டு ஆட்சிக்கட்டில் ஏறிய மகிந்த இன்று ஆட்சியில் இருந்து இறக்கப்பட்டாலும் அவனை பௌத்த பேரினவாத நூலான மகாவமிசத்தின் தொடரும் பகுதி "பௌத்தத்தை காத்த மாவீரன்' என்றே போற்றும். மாறாக நெருக்கடியான நிலைமைகளிலும் சர்வதேச சூழலை முறையாக கையாண்டு தனிநாடு ஒன்று உருவாக்குவதே சிங்கள தேசத்திற்கு கொடுக்க கூடிய தண்டனையாகும். புலிகள் பலமிழந்து விட்ட பின்னர் தனிநாட்டை உருவாக்குவதற்கான எண்ணம் தமிழர்களுக்கு உண்டோ இல்லையோ சர்வதேச பிராந்திய சக்திகளுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாக உருவெடுக்கத் தொடங்கியுள்ளதால் தனிநாட்டுக்கான சாததியப்பாடுகள் அழி;ந்து விடவில்லை என்பதனை தமிழ் தேசியவாதிகள் நினைவில் நிறுத்த வேண்டும்.
விடுதலைப் புலிகள் தமது ஆயுத பலத்தின் மூலம் வெல்ல முடியாது போனாலும் கூட பிராந்திய போட்டி அல்லது மோதல் ஒன்றுக் ஊடாகவேனும் எதிர்காலத்தில் எமக்கொரு தேசம் மலரும் என்ற நம்பிக்கையிலேயே, ஒரு நடைமுறை அரசு அழிக்கப்பட்டு, பல்லாயிரம் தமிழ் மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டு, ஒட்டுமொத்த தமிழினமும் உயிராக நேசித்த தேசியத் தலைமை தனது குடும்பத்தை முற்றிலும் பலி கொடுத்து, ஐந்து இலட்சம் மக்களின் வாழ்வும் வளமும் சீரழிக்கப்பட்ட நிலையிலும் போராட்டத்தினை கடைசி வரையிலும் சரணாகதி என்ற நிலைக்கு கொண்டு செல்லாது இறுதிவரை உறுதியோடு போரிட்டது. ஆனால் கூட்டமைப்பினரின் இந்த முடிவு எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
இதில் இன்னமும் வேதனையான விடயம் இதுவரை காலமும் தமிழ் தேசியம் பேசிவந்த தமிழ் தேசிய ஊடகங்கள்களும் கூட்டமைப்புடன் கூட்டிணைந்து அவர்களின் பாதகச் செயலுக்கு துணை நின்று மக்கள் மீது தவறான எண்ணங்களை திணித்துவிட்டனர் என்பதாகும். அத்துடன் சில புத்தியீவிகளை வற்புறுத்தி அவர்களையும் தமது எண்ணங்களுக்கு ஆதரவாக கருத்துக் கூறவும் வைத்துள்ளனர்.
இது மட்டுமன்றி சரத்பொன்சேகா வென்ற பின்னர் சம்பந்தன் தயாரித்து வைத்துள்ள தமிழரது தேசிய அபிலாசைகளுக்கு எதிராக இந்திய நலன் சார்ந்து தயாரிக்கப்பட்டுள்ள தீர்;வுத்திட்டத்தினை சிறந்த தீர்வுத்திட்டம் என்றும் புகழ்பாடுவதற்கும் அதற்கு மக்களது ஆதரவு பெற்றுக் கொடுப்பதற்கும் இந்த ஊடகங்கள் தயாராகிவிட்டதாகவும் நம்பகமான தகவல்கள் கிடைக்கின்றன.
அதேவேளை மகிந்தராஐபக்ச ஐனாதிபதியானால் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் வெளியேறியுள்ள இடங்களிலுள்ள அனைத்து காணிகளும் மற்றும் நிரந்தர காணி உரிமம் இல்லாத காணிகளும் உடனடியாக அரச காணிகளாக்கப்படும்.
மீண்டும் சிங்களம் மட்டும் சட்டம் கூட அமுலாகலாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தடைசெய்யப்படலாம் வடகிழக்கு இராணுவ மயமாக்கல் தீவிரமாகலாம்
பௌத்த மற்றும் சிங்கள மயமாக்கல் குடியேற்றங்கள் தீவிரமாகலாம்.
வன்னி மக்கள் மீண்டும் முகாம்களுக்குள் கொண்டு சென்று அடைக்கப்படவும் கூடும்.
படுகொலைகள் கடத்தல்கள் தொடரலாம்.
மொத்தத்தில் மகிந்த வென்றால் அடுத்த 6 ஆண்டுக்குள் இலங்கை தூய பௌத்த நாடாக்கப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை.
மகிந்த, சரத் ஆகிய இருவரில் யார் சனாதிபதியானாலும் தமிழர் விரோத நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் என்பது நன்றாகவே தெரிந்துள்ள நிலையிலும் கூட பிராந்திய வல்லாதிக்க போட்டியை தமக்கு சாதகமாக கையாளும் வகையிலான துணிச்சல் மிக்க இராசதந்திரம்மிக்க முடிவுகளை எடுக்க திராணியற்ற கூட்டமைப்பின் தலைமைப் பீடம் இந்திய, அமெரிக்க வல்லாதிக்க சக்திகளின் கைப்பொம்மைகிவிட்டது. தமிழ் கூட்டமைப்பு தமிழ் தேசத்தின் தனித்துவமான உரிமைக் கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையிலான தீர்மானங்களை எடுத்திருக்க வேண்டும். அதுவே எதிர்காலத்தில் தமிழர்களுக்கு விமோசனத்தை தேடித் தரும் ஒன்றாக இருந்திருக்க முடியும்.
நன்றி
ஈழத்திலிருந்து ஒருவன்

Comments