தமிழர்கள் ஒன்றுபட்டு வாக்களிப்பதன் மூலம் சரத்பொன்சேகாவின் வெற்றியை தீர்மானிக்கலாம்

தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வாக்களிப்பதன் மூலம் சரத்பொன்சேகாவின் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக மாறலாம் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதனை இந்த நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் எடுத்துக்காட்டுவதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

தமிழர்களது விடுதலை போராட்டம் ஆயுதங்களுடன் ஆரம்பிக்கப்படவில்லையெனவும், ஆயுதப்போராட்டம் முடிவடைந்தவுடன் தமிழர்களின் போராட்டம் முற்றுப்பெறவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்குப் பகுதிகளில் தமிழர்கள் இல்லாமல் முஸ்லிம்களும், முஸ்லிம்கள் இல்லாமல் தமிழர்களும் வாழமுடியாது என்ற யதார்த்தத்தை இன்று தமிழ் பேசும் மக்கள் உணர்ந்துள்ளனர் என்றார்.

Comments