2010 இல் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களை வைத்து மட்டுமே ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றது
இது உண்மையிலே தமிழர்கள் இத் தேர்தலைப் புறக்கணித்திருக்கின்றார்களா ?
என்று ஆராயவே இத் தரவுகளை உபயோகித்திருக்கின்றோம்
இரண்டு தேர்தல்களிலும் தரவுகளிலும் கள்ள ஓட்டுக்கள் பற்றிய தரவுகள் கணக்கெடுக்கப்படாததால் அது மாற்றத்தை உண்டு பண்ணாது என்றே எண்ணுகின்றேன் அது போல் தமிழ் மாவட்டங்களிலுள்ள வேற்று இனத்தவரின் பங்கும் கணக்கெடுக்கப்படவில்லை
தவிர சரத்பொன்சேகாவிற்கு கள்ள ஓட்டுக்களுக்குரிய சாத்தியம் மிக அரிதாகவே காண்ப்படுவதால் அவருக்கு அளிக்கப்பட்ட வாக்குக்கள் உண்மையிலே இடப்பட்டதாகவே இருக்கும்
வாக்களிக்காதவர்கள் எல்லாம் தேர்தலைப் புறக்கணித்ததாக எடுக்கமுடியாது
அது உண்மையிலே ஒரு புறக்கணிப்பாகவே எடுக்கப்படவேண்டும்
படங்களின் மேல் அழுத்திப் பெரிதாகப் பார்க்கலாம்
ஆனால் இம்முறை 55 % க்கு குறைவானவர்களே வாக்களிக்கவில்லை
அதில் யாழில் தேர்தலைப் புறக்கணிக்கச் சொல்லி புலிகளின் பெயரிலிலும் ததேகூ பெயரிலிலும் மகிந்த ஒட்டுக்குழுக்கள் பொய்ப்பிரச்சாரம் , குண்டு வெடிப்புக்கள் , வாகன போக்குவரத்து தடை , அது போல் தமிழ் மாவட்டங்களிலுள்ள வேற்று இனத்தவரின் பங்கும் கணக்கெடுக்கப்படவில்லை
என்பனவும் கணிசமான அளவு தாக்கத்தை ஏற்படுத்திருக்கும் என்பதும் கணக்கில் எடுக்கப்படவேண்டும்
வாக்களிக்காதவர்கள் எல்லாம் தேர்தலைப் புறக்கணித்ததாக எடுக்கமுடியாது
வேர்களுக்கு விழுதொன்றின் உள்ளம் நெகிழ்ந்த மடல்! ஆய்விலிருந்து
சிங்கள தேசத்தின் அதிபர் தேர்தலை 80 விழுக்காடு தமிழீழ மக்கள் புறக்கணித்தார்கள் என்ற செய்தி பரவிய பொழுது எங்கள் இதயங்களில் பட்டாம்பூச்சி சிறகுவிரித்துப் பறந்தது.
சிங்களவர்கள் 2005 இலும் பார்க்க 2010 இல் 2 % அதிகமாக
வாக்களித்திருக்கின்றார்கள்
வாக்களிக்காதவர்கள் எல்லாம் தேர்தலைப் புறக்கணித்ததாக எடுக்கமுடியாது
தோற்கடிக்கப்பட்ட தமிழர்கள்இனி வழமை போலவே தமிழ் அரசியல் ஆய்வாளர்கள் தோசையை திருப்பி போடுவார்கள் . சரத் பொன்சேகா எமது பிரதிநிதி அல்ல, இந்த தேர்தல் சிங்கள மக்களது தேர்தல், அப்படி இப்படி என அதிமேதாவி வியாக்கியானங்கள் தூள் பறக்கும். மகிந்தவை தமிழர்கள் தோற்கடிக்க வேண்டும், அதற்கு சரத்பொன்சேகாவிற்கு வாக்கு போட வேண்டும் என எழுதியதை அவர்கள் இப்போதே மறந்து விட்டிருப்பார்கள்.
எது எப்படியோ மீண்டுமொருமுறை சிங்களவர்கள் சிங்கள தேசிய உணர்வுடன் தமிழர்களை தோற்கடித்து உள்ளனர் என்பது வெளிப்படையானதாகும். ஒரு வகையில் சிங்களவர்கள் இந்த சிங்கள தேசிய உணர்வை தேர்தலில் காட்ட தமிழர்களின் போராட்டமும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
எல்லாவற்றுக்கும் மேலாக இனிமேல் தமிழ் முஸ்லிம் சிறுபான்மை இனத்தவர்களது ஆதரவு இல்லாமல் ஜனாதிபதி தேர்தலில்வெல்ல முடியும் என்பதை மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஒருமுறை நிருபித்துள்ளார்.
என்ற ஆய்வு ஒரு விதத்தில் சரியென எடுத்துக் கொண்டாலும்
வேறு தெரிவு இல்லாத நிலையில் சரத்தை ஆதரிப்பது என்பது தமிழர்களின் , ததேகூ இன் முடிவாக எடுத்துக் கொள்ளப்பட்டது .
சரத்தை ஏக மனதாக யாரும் ஏற்கவில்லை இது தமிழர்களுக்கு ஒரு ஏமாற்றமே மீண்டும் சிங்களதேசியம் சிங்கள இனவாதத்தைக் காட்டி தமிழர்களை வென்றிருக்கின்றது
மகிந்தா 16 இலட்சம் வாக்குகளால் வென்றிருக்கின்றார் ஆனால் தமிழர்களின் மொத்தவாக்கே அண்னளவாக இது தான் வரும்
இனி தமிழர்களின் வாக்கு சிங்களவர்களுக்கு தேவையில்லை என்பதும் எனற ஒரு உண்மையும் இங்கே சிங்களவர்களால் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றது.
சிறுபான்மை இனத்தின் தேவையில்லாமல் சிங்களவர்கள் ஆட்சி அமைக்க முடியும் என்பது தான் அது
மீண்டும் சிறுபான்மை இனம் , குறிப்பாக தமிழர்கள் அரசியல் வழியில் உரிமைகளைப் பெற முடியாது என்பதும் தேர்தல் உணர்த்தியிப்பதாகவே தெரிகின்றது
இனி வரும் காலத்தில் மகிந்த குடும்பத்தை அகற்ற சிங்களவர்கள் ஆயுதம் எந்த வேண்டி வந்தாலும் சொல்வதற்கில்லை, காலம் தான் பதில் சொல்லவேண்டும்
Comments