தமிழ் ஊடகங்களின் உதவாத [ ஊடக ] தர்மமும் பிண்ணனியும்


இது பற்றி நாம் பல தடைவைகள் விவாதித்திருந்தாலும் மீண்டும் இது குறித்த ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டிய புறச்சூழல்களினால் இது பலரை சங்கடப்படுத்தும் என்பதால் பல தடவைகள் எழுத முற்பட்டு எழுதாமல் விட்டதை எழுதலாம் என்றிருக்கின்றேன். அண்மையில் தேசிகன் என்பவர் மின்னஞ்சலில் கடுமையாக சாடியிருந்தார் அவருக்கும் இது பதிலாக அமையும்

பொதுவாகவே எல்லா ஊடகங்களும் தத்தம் நலன், இனம் சார்ந்ததாகவே இயங்குகின்றன இது சர்வதேச ஊடகங்களிலிருந்து உலக வல்லரசுகளினது ஊடகங்கள் வரை பொருந்தும்

இது தான் உலக நியதியாக இருந்தும் உலகத்தால் கைவிடப்பட்ட , புறக்கணிக்கப்பட்ட , பயங்கரவாதிகளாக்கப்பட்ட எமது ஊடகங்கள் மட்டும் ஊடக தர்மம் என்னும் உதவாத தர்மத்தைக் கட்டிக் கொண்டு அழுகின்றன. அது ஏன் என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை ?

மின்னஞ்சல்கள், பின்னூட்டங்கள் புறக்கணிப்பு , கருத்துக்களங்களில் சர்வதிகார தணிக்கைகள் , திணிப்புக்கள் எதுவும் பயன் அளிக்காத பட்சத்தில்

நாம் சுத்துமாத்துக்கள் என்று வலைப்பூவை ஆரம்பித்தோம் இந்த ஊடகங்களினது இருட்டடிப்புக்களை அம்பலப்படுத்த வேறு வழியிருக்கவில்லை

இந்த வலைப்பூவினால் அம்பலப்படுத்தப்பட்ட பச்சோந்தித்தனங்கள் பெரியளவு மாற்றத்தைக் கொண்டு வந்தது என்று சொல்லாவிட்டாலும் பலரது மறுபக்கத்தையும், பச்சோந்தித் தனங்களையும் வெளிச்சம் போட்டுக்காட்டியிருந்தோம். அது இனி தமிழ்த்தேசியத்தில் தொடரும்

இதற்கு எமக்கெதிரான எதிரான பின்னூட்டல்கள் மட்டும் பகிரங்கமாக வந்தன மாறாக ஆதரவானவை பகிரங்கப்படுத்த வேண்டாம் என்று மின்னஞ்சல்களாக வந்தன

இது ஒன்றைத் தெளிவாகக் காட்டுகின்றது ஒருவரும் எதிர்வினையாற்ற பகிரங்கத்தில் விரும்பவில்லை என்பது தான்

பட்டும் படாமல் எழுதுவதை மட்டும் சொந்தப் பெயரிலும் , முகம் அறிந்த பெயரிலும் எழுதுவது இப்போது வழக்கமாகிவிட்டது

எதிர்மறையான கட்டுரைகளை ஆய்வுகளை முகம் அறியாத பெயர்களிலேயே எழுதுகின்றார்கள். இதற்கு புதிது புதிதாக வரும் பெயர்களைக் கொண்டு அறிந்து கொள்ளலாம் ஆனால் இவர்கள் ஒன்றும் புதிய ஆய்வாளர்கள் இல்லை அதே குட்டையில் ஊறிய மட்டைகளே ஆனால் வேறு பெயர்களில்

அதை விடக் கேவலம் என்னவென்றால் முன்னாள் புலிகளின் கூட்டம் செய்வது தான் யாரையாவது திட்டுவதென்றால் இவர்களுக்கு பெயர் அறிந்த இணையங்கள் இருந்தாலும் வலைப்பூக்களில் தான் திட்டுவார்கள் தாம் யாரென்று தெரிந்தால் நாளை தமிழர்களிடம் பிச்சை கேட்க முடியாது அல்லவா

தமிழ் ஊடகங்களில் முகம் அறிந்த ஆய்வுகள் செய்பவர்கள் நிச்சயமாக இவற்றுக்கு கட்டணம் அறவிடுவார்கள் இந்த ஆய்வாளர்களைப் பொறுத்தமட்டில் தமது பெயர் கேட்டுப்போகாத வகையிலேயே இவர்களின் ஆய்வுகளும் இருந்து வருகின்றன. ஆனாலும் இவர்கள் எவரிலும் தூரநோக்கு இருப்பதாகத் தெரியவில்லை பெரும்பாலான ஆய்வுகள் பிசுபிசுத்துப் போய்விட்டன

அதனால் தான் இவர்களே வேறு பெயர்களில் ஆய்வுகளை எழுதிவருக்கின்றார்கள் போலும்

ஆனால் ஒரு துர்ப்பாக்கியம் என்வென்றால் தமிழர்களின் ஏகோபித்த ஆதரவுடன் இயங்கிய 30 வருட ஆயுதப்போராட்டத்தின் பிரச்சாரத்தை 30 வருடமாக அந்த இனத்திற்கே பிரச்சாரம் செய்து வந்திருக்கின்றோம் என்பது தான். ஆனால் போராட்டம் அழிக்கப்பட்டும் இன்னும் பிரச்சாரம் மட்டும் ஓயவில்லை

ஆனால் முன்னெப்போது இல்லாத முரண்பாடுகளும் , துரோகங்களும் , விலை போவதும் , ஊடுருவல்களும் , சதிகளும் இப்போது அரங்கேறி வருகின்றது

தமிழர்களின் தலைமையின் பிரசன்னம் இன்மை, உறுதிப்படுத்தக் கூடிய தலைமையகம் இன்மையால் ஏற்பட்ட வெற்றிடத்தால் முன்னேப்போதும் இல்லாத பிரச்சாரம் இப்போது தேவைப்படுகின்றது. முரண்பட்ட ஆய்வுகளை தெரிந்தும் உறுதிப்படுத்த முடியாமையால் பிரசுரித்து வந்திருக்கின்றோம் இப்படியான வெறுமையைத் தொடர வேண்டுமா ? இதனைத் தெளிவு படுத்தும் வகையில் நமது ஊடகங்களும் , அமைப்பாளர்களும் செயற்படுகின்றனவா ?

அது குறித்த ஒரு பதிவாகவே இதனை இடுகின்றோம்

இதுவரை வந்த ஆய்வுகள், பின்னணிகள், சம்பவங்களை வைத்து முடிந்தவரை எல்லா ஊடகங்களையும் அதற்கு நீண்ட தேடல்கள் தேவையாக இருப்பதால் முடிந்தவரை அம்பலபடுத்த முயற்சிக்கின்றோம்

தற்போதுள்ள வெறுமை நிலையில் தமிழ் ஊடகங்கள் பெரும் வரலாற்றுத் தவறிழைப்பதாகவே படுகின்றது

கடந்த காலத்தினை திரும்பிப் பார்த்தால்

1. புலிகளின் உண்மை நிலவரத்தை மக்களுக்கு தெளிவு படுத்தாமல் உசுப்பேத்தி மக்களை வெற்றி மாயைக்குள் வைத்திருந்து தோற்கடித்தது

2. மே 2009 இல் ஏற்பட்ட தமிழர்களுக்கு ஏற்பட்ட பேரழிவுக்கும் அதன் பின்னரான உளவியல் ஊடக யுத்தத்திலும் சிதைக்கப்பட்ட தமிழர்கள்


3.கேபி இன் வரவும் அதன் பின்னணியில் நடந்த சதிகளும், துரோகங்களும் , ஊடுருவல்களும், விலைபோனவைகளும் மூடி மறைக்கப்பட்டதும் , மெளனமாக இன்று வரை இருப்பதும்

4. நாடுகடந்த அரசின் உருவாக்கமும் அதன் பின்னணியும் பற்றி மக்களுக்கு தெளிவு படுத்தாமை

5.வட்டுகோட்டை மீள் வாக்கெடுப்பில் நடாத்தப்பட்ட துரோகங்களின் பின்னணிகளை அம்பலப்படுத்தாமை


6.இலங்கைத் தேர்தலில் ஒருமித்த, தூரநோக்கில்லாமல் , தெளிவில்லாமல் எல்லோரையும் குழப்பியமை

7.இலங்கைத் தேர்தல் முடிவுகளை வைத்து மீண்டும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற வகையில் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதை தொடர்வது


8. இவை எல்லாவற்றுக்கும் மேலாக புலிகளின் பெயரில் வெளிவரும் அறிக்கைகளையோ, அல்லது புதிது புதிதாக வரும் இணையம் ,தலைமைச்செயலகம் பற்றிய செய்திகளை உறுதிப்படுத்தாமை , அல்லது மெளனம் காப்பது

இந்த முண்ணனி ஊடகங்கள் எல்லாமே புலம் அமைப்பாளர்களுடனும் புலிகளுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்பு பட்டவர்கள் நேரடியாகச் சம்பந்தப்பட்ட இணையங்களும், அமைப்பாளர்களும் அப்படி ஒன்று நடந்ததாக அலட்டிக்கொள்ளக் கூட இல்லை
ஆனால் உறுதிப்படுத்துவதற்கு தலைமைச் செயலகம் இல்லையே என்றால் இது குறித்த செய்திகளை விகடனும், நக்கீரனும் இந்தியாவிலிருந்து ஆய்வு செய்கின்றார்கள் எப்படி ?

இது என்ன எப்படி இருக்கின்றது என்றால் கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வைகுண்டம் போய் சிவனை காட்டப்போவது போல் இருக்கின்றது

இதை பாணியிலே தான் எமது தமிழ் ஊடகங்கள் ஆய்வுகளும் செய்கின்றன இவர்களின் ஆய்வுகளும் செய்திகளும் இந்த வகையில் தான் பார்க்கவேண்டியிருக்கின்றது

வலைப்பதிவர்களாகிய நாங்கள் இந்த ஊடகங்களை பிரதி பண்ணுவர்களே அவை இவை மீதுள்ள அபிமானத்தை நம்பிக்கையை வைத்துத் தான் உறுதிப்படுத்தி அல்ல

எல்லாளன்

-உதவாத தர்மம் -தொடரும்

Comments