தமிழ்பெண்களின் கண்ணீர் வலி புரிகின்றதா சிங்களத்திகளுக்கு ?


வன்னிப் போர் முடித்தபோது, சரத்பொன்சேகா , இப்படியொரு நிலை தனக்காகுமென எண்ணிப் பார்த்திருக்கமாட்டார். கைதும், கலகமும், கண்ணீர் புகையும், காணத் தொடங்கியிருக்கும் சிங்களமும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டாது. அவசரகாலச்சட்டடப் பிரேரணைகளின் போது, ஆக்ரோசமாகப் பேசி ஆதரித்த சோமவன்ச, அதே அவசரகாலச்சட்டத்தின் பேரில் கைதாகலாம் என கதிகலங்கிப் போவதைப் பற்றி கனவும் கண்டிருக்கமாட்டார்.

கட்டிய கணவனை, பெற்றமகனை, கைதின் பேரில் இராணுவம் கடத்திச்சென்ற போது, மண் அள்ளித் தூவி, திட்டி அழுத தமிழச்சிகள் கூட நினைத்துப் பார்திருக்கமாட்டார்கள், தங்கள் கண்ணீரின் வலிமை இத்தகையது என்று. இது தொடக்கம் மட்டுமே என்று சொல்லத் தோன்றுகின்றது.

அனுபவப்பட்டவர்கள் என்ற வகையில், சிங்களருக்குத் தமிழர்கள் சொல்லக் கூடிய அறிவுரை ஒன்று மட்டுமே உள்ளது. " அமைதி காக்கவும்" என ஐ.நா செயலர் சொல்வதைக் கேளுங்கள். ஏனென்றால் முன்பு அவர் எங்களுக்கும் அதையே சொல்லி நின்றார்.

Comments