தந்தை செல்வாவின் மகனும் நீண்ட காலமாக இந்தியாவில் அரசியல் அஞ்ஞாதவாசம் புரிந்தவருமான திரு சந்திரகாசன் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக கொழும்பு வட்டாரங்களிலிருந்து செய்திகள் கசிந்துள்ளன.
தமிழர் விடுதலைக் கூட்டணியில் தலைவர் திரு ஆனந்தசங்கரியுடன் இணைந்து இவர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தியாவில் தமிழர்புனர்வாழ்வுக்கழகம் என்ற போர்வையில் ரோ, வெளிநாட்டு , நிறுவனத்தின் நிதியில் வயிறு வளர்த்து வந்தவரும் , இந்திய உளவுப் பிரிவுடன் இணைந்து செயற்பட்டு வந்தவரும் , நீண்ட காலத்திற்குப் பின்னர் இவரது அரசியல் மீள்பிரவேசம் பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
பொருத்தமானவர்களிடம் தலைமைப் பொறுப்புளை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக அண்மையில் கூட்டணியின் தலைவர் திரு ஆனந்தசங்கரி அறிவித்துள்ள நிலையில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பை குறிவைத்து திரு சந்திரகாசன் காய்களை நகர்த்தி வருவதாக பலரும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
Comments