சிறீலங்கா பொருட்களை புறக்கணியுங்கள்: மூன்றாவது காணொளி



சிறீலங்கா பொருட்களை புறக்கணிக்கும் போராட்டத்தை மேற்கொண்டு வரும் புலம்பெயர் தமிழ் அமைப்பு “உள்ளாடைகளுக்கு சிந்தப்பட்ட குருதி” என்ற தனது காணொளி வெளியீட்டின் மூன்றாவது பகுதியை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

சிறீலங்கா பொருட்களை வெளிநாடுகளில் புறக்கணிக்கும் போராட்டங்களை மேற்கொண்டுவரும் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் வெசிங்டனை தளமாக கொண்ட பிரிவு “உள்ளாடடைகளுக்கு சிந்தப்பட்ட குருதி” என்ற தனது காணொளி வெளியீட்டின் மூன்றாவது பகுதியை வெளியிட்டுள்ளது.

ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக சிறீலங்கா அரசின் ஆதரவுடன் மேற்கொள்ளப்டும் வன்முறைகள் குறித்து அனைத்துலக மக்களுக்கு விளக்கமளிப்பதற்காக இந்த காணோளி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த காணொளி காட்சிகள் மிக அழகாக வந்துள்ளதாகவும் சிறீலங்கா தமிழ் மக்களின் பிரச்சனைகளை விக்ரோறியா தற்போது உணர்ந்துள்ளதாகவும் இந்த புறக்கணிப்பு பேராட்டத்தின் பிரதிநிதியான கலாநிதி எலியன் சான்டர் தெரிவித்துள்ளார்.

எமது நடவடிக்கைகள் சிறீலங்காவில் துன்பப்படும் தமிழ் மக்களுக்கு சிறிது அறுதலாக இருக்கும் என நம்புகிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு எதிராக சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் இனப்பாகுபாடு மற்றும் வன்முறைகள் தொடர்பில் பொருட்களை கொள்வனவு செய்பவர்களுக்கு விளக்க வேண்டியது சிறிலங்கா பொருட்களை புறக்கணிக்கும் போராட்டத்திற்கு அவசியமானது என இந்த காணொளி குறும்படத்தை இயக்கிய இயக்குநர் மைக்கேல் ஒறவூர்கே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை பின்வரும் இணையத்தளம் ஊடகா வாசகர்கள் அறிந்து கொள்ளலாம்.





"Therapy": Boycott Garments made in Sri Lanka from Boycott Srilanka on Vimeo.


Comments