பிரித்தானியத் தலைநகரில் உலகத் தமிழர் பேரவையின் தமிழீழ விடுதலை நோக்கிய பயணம்.

பிரித்தானிய பாராளுமன்றத்தில் இன்று (24.02.2010) புதன்கிழமை உலகத்தமிழர் பேரவையின் தமிழீழ விடுதலை நோக்கிய பயணம் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.

http://globaltamilforum.org/gtf/



இந்த நிகழ்வை பிரித்தானிய வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சர் டேவிட் மலிபான்ட் (David Miliband) அவர்கள் தொடக்கிவைத்து உரையாற்றுகையில், தமிழ் மக்கள் அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒன்று பட்டு, ஓர் அணியில் செயற்பட வேண்டும் எனவும் இன்றைய சூழலில் புலம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்கள் தொடர்ந்தும் தங்களது கோரிக்கைகளை சர்வதேச சமூகத்திடம் எடுத்துரைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.


இதே வேளை உலகத்தமிழர் பேரவையின் குழுவினர் பிரித்தானியப் பிரதமமந்திரி அவர்களுடனும் சந்திப்பை மேற்கொண்டிருந்ததுடன் லண்டனில் நடைபெறுகின்ற இந் நிகழ்வானது தொடர்ந்து நான்கு நாட்கள் வரை நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களை ஒன்றிணைத்து தாம் ஓர் அணியில் திரள வேண்டும் என்று தீர்மானித்து ஓகஸ்ட் 2009 இல் பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் உருவாகியதே உலகத் தமிழர் பேரவை.
அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, பிரான்சு, டென்மார்க், நோர்வே, சுவிடன், செருமனி, ஒல்லாந்து, சுவிஸ், இத்தாலி, மொறிசியஸ், மலேசியா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து ஆகிய 15 நாடுகளின் தமிழ் அமைப்புக்களின் ( தமிழீழ மக்கள் பேரவை-பிரான்சு, ஐரோப்பியத் தமிழர் ஒன்றியம், பிரித்தானிய தமிழர் பேரவை, நோர்வே தமிழர் பேரவை, டென்மார்க் தமிழர் பேரவை, சுவிடன் தமிழர் பேரவை, இத்தாலி தமிழர் பேரவை, தமிழினப் படுகொலைகெதிரான அமைப்பு-மொறியஸ், நியூசிலாந்து தமிழ்ச் சங்கம், அவுஸ்ரேலியன் தமிழர் காங்கிரஸ், கனடா தமிழர் காங்கிரஸ், Malaysia Tamil Relief fund & Malaysian Tamil Forum, அமெரிக்க தமிழர்களின் அரசியல் செயல் அவை, வெலிங்டன் தமிழர் அமைப்பு, சுவிஸ் தமிழர் அமைப்பு, செருமனி தமிழர் அமைப்பு, பெல்ஜியம் தமிழர் அமைப்பு, ஒல்லாந்து தமிழர் அமைப்பு, அவுஸ்திரேலியா தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு ) பிரதிநிதிகளும் உலகத்தமிழர் பேரவையின் உருவாக்கத்திற்கு அடிக்கற்களாக இருந்து ஓர் அணியாக தமது வேலைத்திட்டங்களை ஒருங்கிணைத்து சமகால அரசியல் சூழலுக்கு அமைய தமிழீழத்தை நோக்கிய பயணத்தில் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

இந்த அமைப்புக்களின் கூட்டு முயற்சிகளின் முதல் வேலைத்திட்டங்களாக சிறீலங்காவுக்கெதிரான பொருளாதாரத்தடையை உருவாக்குவதோடு அதன் அடிப்படையில் சிறீலங்காவுக்கெதிரான வரிச்சலுகைகளை நிறுத்தக்கோரி அரசியல் மட்டங்களில் அழுத்தங்களைக் கொடுப்பதாகவும் இருக்கிறது. அத்துடன் தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், உறுப்புக்களை இழந்தோருக்கும் உதவவும், பெற்றோர், உறவினர்களிடம் இருந்து பிரிக்கப் பட்ட குழந்தைகளுக்கு உதவவும், தடுத்து வைக்கப் பட்டிருப்போருக்கு உதவவும் நாட்டில் உள்ள மானிடநேய அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து செயற்திட்டங்களை உருவாக்கும் முயற்சிகளை பல தடைகளையும் மீறி செய்து வருகிறது.

இதன் முக்கிய வேலைத்திட்டமாக

1. ) சிறீலங்காவில் சிறைகளிலும், முகாம்களிலும், சட்டரீதியான எந்தவித நடிவடிக்கையும் எடுக்காமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்மக்களை விடுவிக்க வழிவகைகளை தேடுவதற்கும், அதற்கான துரித செயற்பாட்டை மேற்கொள்ளவும் உலக சட்டவாளர்களுடன் இணைந்து பணியாற்றுதல்.

2. ) போர்க்குற்றங்கள், மானிடநேயத்திற்கெதிரான குற்றங்களை இழைத்த சிறீலங்கா அரசை உலக நீதி மன்றம் முன்னால் நிறுத்துதல்.

3. ) அந்நிய நாடுகளின் துணையுடன், தமிழ் மக்களின் வாழ்வுரிமைக்கான வழிவகைகளை தேடுவது போன்ற பல திட்டங்களை ஒரு ஒருங்கிணைந்த வேலைத்திட்டமாக செயல்படுத்தும் முகமாக பெப்ரவரி 24ம் திகதி முதல் லண்டன் நகரில் அரசியல் பிரமுகர்களுடன் பல்லின மக்களின் முன் உலகத் தமிழர் பேரவை தனது அமர்வை நடாத்தவுள்ளது.

காலனித்துவ ஆட்சிகளால் எம் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு, பல அழிவுகளை சந்தித்து இன்று உரிமைகளற்ற மக்களாக வாழும் எமக்கு இன்றைய உலக சூழலில் எமது உரிமைகளை எப்படி மீண்டும் பெற்றுக் கொள்வது என்ற விடயம் பற்றியும் அதற்கான செயற்திட்டம் பற்றியும் பல வெளிநாட்டு அமைப்புக்கள், சிந்தனையாளர்கள் மற்றும் அரசியல் வல்லுனர்கள் மத்தியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு செயல் வடிவம் கொடுக்கப்பட இருக்கிறது.

ஒற்றுமைக்கு வழிகாட்டியாகவும் போராட்டத்திற்கு மறு வடிவம் கொடுக்கவும் ஓரணியில் நின்று செயற்பட முன்வந்திருக்கும் 15 நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஓரணியில் நின்று எமது உரிமைகளை வலியுறுத்த முன் வந்திருக்கும் இவ் வேளையில்,

இந்த அமைப்புக்களைப் பலபடுத்தி அதற்கு பக்கபலமாக இருக்க வேண்டியது உலகம் வாழ் தமிழ்மக்களே!
Congregation of Tamil Diaspora Organisations

Australian Tamil Congress - Australia British Tamils Forum - United Kingdom Canadian Tamil Congress - Canada Danish Federation of Tamil Associations - Denmark
Australian Tamil Congress British Tamils Forum Canadian Tamil Congress Danish Federation of Tamil Associations
House  of Eelam Tamils - France NCET -  Norway New  Zealand Tamil Society - New Zealand Swedish Tamil Forum - Sweden
House of Eelam Tamils Norwegian Council of Eelam Tamils New Zealand Tamil Society Swedish Tamil Forum
Tamils Relief Fund - Malaysia United  States Tamil Political Action Council - United States European Tamil Union Wellington Tamil Society - New Zealand
Tamils Relief Fund United States Tamil Political Action Council European Tamil Union Wellington Tamil Society

Comments