நாடு கடந்த தமிழீழ அரசு கனடா அலுவலகம் திறப்பு

IMG_0271-w55510-02-2010, புதன் மாலை 6 மணியளவில், 2607 எக்லின்ரன் வீதியில்(Eglinton & Midland)

அமைந்துள்ள இரா சுப்ப மார்க்கட் மேல் மாடியில் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது.

பெருந்திரளான மக்கள் ச10ழ்ந்திருக்க நா.க.த.அரசின் கனடிய இடைக்காலத் தலைவர் கலாநிதி ராம். சிவலிங்கம் அவர்கள் நாடாவை வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார்.

மேலும் திரு. சிவலிங்கம் அவர்கள் அங்கு உரையாற்றும் போது “கனடியத் தமிழ் மக்கள் சிங்கள இனவாத அரசிற்கு எதிராக ஒன்றுபட்டு பலமான ஒரு அமைப்பை நிறுவியுள்ளமை தமிழ் மக்களின் உரிமையை எதிர்காலத்தில் வென்றெடுப்பதற்கான போராட்டத்தின் ஒரு முக்கிய பங்காகும்.

இவ்வாறு தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்பதனையிட்டு இலங்கை அரசு மிகப் பீதி கொண்டுள்ளது” என்றும் குறிப்பிட்டார். திறப்பு விழா 9 மணியளவில இனிதே முற்றுப்பெற்றது.

----------------
எதிர்வரும் ஞாயிறு (14.02.2010) ரொரன்ரோவில் 'நாடு கடந்த தமிழீழ அரசு' தொடர்பான பொதுக்கூட்டம்


நாடு கடந்த தமிழீழ அரசாங்க உருவாக்கம் மற்றும் அதற்கான தேர்தல் தொடர்பான சிறப்பு பொதுக்கூட்டம் கனடா ரொரன்ரோவில் எதிர்வரும் ஞாயிறு (14.02.2010) இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

  • ரொரன்ரோவில் Everest banquets Convention Hall 1199 மண்டபத்தில் (Kennedy Road) மாலை 3.30 மணிக்கு பொதுக்கூட்டம் தொடங்கவுள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதற்கான கனடா ரொரன்ரோ கனடா தமிழர் இணையம் செயற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

இப்பொதுக்கூட்டத்தில், செயற்குழுவிற்கான பன்னாட்டு மதியுரைக்குழுவினால் தமிழர் திருநாளன்று வெளியிடப்பட்ட பரிந்துரை அறிக்கை அறிமுகம் செய்யப்படவுள்ளதோடு, கருத்துப்பரிமாற்றமும் இடம்பெறவுள்ளது.

அனைத்துலக சட்டமரபு நெறிகளுக்கு அமைவாக நாடுகடந்த தமிழீழ அரசினை உருவாக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தமிழீழ மக்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் ஏப்ரல் மாதம் இதற்கான பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும் தேர்தல்கள் நடாத்தப்படவுள்ளன.

பரந்துபட்ட மக்களின் பங்களிப்பை வேண்டி நிற்கும் நாடுகடந்த தமிழீழ அரசு பற்றிய முழுமையான விளக்கங்களைப் பெறவும் கருத்துக்களைப் பரிமாறவும் அனைவரையும் இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதற்கான கனடா ரொரன்ரோ (கனடா தமிழர் இணையம்) செயற்பாட்டுக்குழு ரொரன்ரோ வாழ் தமிழீழ மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

  • இப் பொதுக்கூட்டத்தில் கலாநிதி இராம் சிவலிங்கம் பங்கேற்று விளக்கங்களை வழங்கவுள்ளதோடு இந்நிகழ்வுகளில் காணொளி வழியாக திரு உருத்திரகுமாரன் சிறப்புரையாற்றுவார்.

இந் நிகழ்வுபற்றிய மேலதிக தகவல்களுக்கு தொடர்பிலக்கங்கள் வருமாறு 416 -273-8305 , 416-844-7390 , 416-209-410

இதே வேளையில், செயற்குழுவிற்கான பன்னாட்டு மதியுரைக்குழுவினால் தமிழர் திருநாளன்று வெளியிடப்பட்ட பரிந்துரை அறிக்கையின் அறிமுகம் யேர்மனி, பிரான்ஸ்,பிரித்தானியா ஆகிய நாடுகளிலும் இடம்பெற்றன.

இந்நிகழ்வுகளில் பேராசிரியர் சிறிஸ்கந்தராசா பங்கேற்று விளக்கங்களை அளித்தார்.

பின்னிணைப்பு

Comments