தமிழ்த் தேசியத்திற்குப் பொறி வைக்கும் சிறிலங்கா புலனாய்வுத்துறை

சிறிலங்கா இராணுவக் கட்டமைப்பு குழு மோதல்களால் பலம் இழந்துள்ளது. ஆனால் புலனாய்வுத்துறை மாத்திரம் விடாப்பிடியாக செயற்பட்டு வருகின்றது. தமிழ்த் தேசியம் நன்றாக வேர்விட்டு ஒங்கி வளர்வதைக் கண்டு சிறிலங்கா அரசு அச்சம் அடைந்துள்ளது. எதுவிதப்பட்டாயினும் தமிழீழத்தில் தேசிய எழுச்சி மீண்டும் தோன்றாமல் தடுப்பது அரசின் அண்மைக்காலத் திட்டமாக இருக்கிறது. இதற்க்காக அது பெருமளவு பணத்ததை புலானாய்வுத்துறைக்கு வழங்கி ஈழத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.

சிறிலங்கா புலனாய்வுத்துறை வகுத்துள்ள செயற் திட்டங்களை மூன்று தலைப்பின் கீழ் கொண்டு வரலாம்
1) தமிழீழத் தாயகத்தில் விடுதலைப் புலிகள் தலை தூக்காமல் தடுப்பது.
2) தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கட்டமைப்புக்களைச் சிதைப்பது. 3) புலம்பெயர் உறவுகளின் அரசியல் மற்றும் இராசதந்திரச் செயற்பாடுகளைச் சீர்குலைப்பது.

இன்றும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் செட்டிக்குளம் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். புலிப் போராளிகளும் புலிகளின் நிர்வாகத்தில் பணியாற்றியவர்களும் பிறிதோர் தடுப்பு முகாமில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விட வெலிக்கடைச் சிறைச்சாலையிலும் இராணுவத்தின் இரகசிய தடுப்பு முகாம்களிலும் நீதி மன்றங்களுக்குக் கொண்டு வரப்படாத அரசியற் கைதிகள் அடைத்து வைக்கப்;பட்டுள்ளனர். முள்ளை முள்ளால் எடுப்பது போல் மேற் கூறியவர்களிலிருந்து தமக்குத் தேவையான முகவர்களை சிறிலங்கா புலனாய்வுத்துறையினர் தெரிவு செய்துள்ளனர். இந்த முகவர்களை அடிபணிய வைப்பதற்காக எதிரி மிகக்கொடிய வழிமுறைகளைக் கைக்கொண்டுள்ளான்.

குடும்பத்தினரை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டு மிரட்டி பணிய வைக்கப்பட்ட தமிழர்களை அவன் வெளிநாடுகளுக்கு அனுப்புகிறான். தமது உறவுகளின் உயிரைப் பாதுகாப்பதற்காக இவர்கள் புலனாய்வுத்துறையின்; முகவர்களாக மாறி தமிழினத் துரோகிகளாகச் செயற்படுகின்றனர். பல நாடுகளில் இது போன்ற நிகழ்ச்சி நாளாந்திரம் நடக்கின்றது. இதுவொன்றும் புதியதல்ல. கணவன்மார், மனைவிமார், பிள்ளைகள், பெற்றோர்கள், சகோதரங்கள் ஆகியவர்களை பணயக் கைதிகளாக சிறிலங்கா புலனாய்வுத்துறை பிடித்து வைத்திருக்கிறது. இந்த வழிமுறைப்படி வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆண். பெண் முகவர்கள் புலம்பெயர் நாடுகளில் அதிகரித்துள்ளனர். இப்படி அனுப்பப்பட்ட முகவர்களில் பெரும்பாலானோர் முன்னாள் போராளிகளாவர். இவர்கள் புலம்பெயர் நாடுகளில் தளம் அமைத்துச் செயற்படும் அளவுக்குப் பலம் பெற்றுள்ளனர்.

இப்படிப் புலம்பெயர் நாடுகளில் செயற்படும் முகவர்கள் தம்மை இயக்கத் தலைமை அனுப்பி வைத்ததாகக் கதை விடுகின்றனர் தமக்கு அவரைத் தெரியும் இவரைத் தெரியும் என்று இவர்கள் கூறுவதை நம்பி ஏமாறாதீர்கள் இவர்கள் தகவல் சேகரிப்பதையும் எமது கட்டமைப்புக்கள் பற்றிய ஆதாரங்களைத் தேடுவதையும் தமது தொழிலாகக் கொண்டுள்ளனர் புலனாய்வுத்துறையினர் இடும் கட்டளைப் படி இவர்கள் செயற்படுகிறார்கள் புலம்பெயர் நாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் புலனாய்வுத்துறை அதிகாரிகள் நிலை கொண்டுள்ளனர் இவர்களைப் பற்றி விழிப்பாக இருத்தல் வேண்டும் அடிக்கடி சிறிலங்கா தூதரகத்திற்கு செல்லும் தமிழர்கள் பற்றி மிகவும் விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம்.

சிறிலங்கா தூதரக அதிகாரிகள் சிலர் புலம்பெயர் தமிழர்களை மிரட்டத் தொடங்கியுள்ளனர். தூதரகத்தில் பணியாற்றுபவர்கள் தமிழர்கள் பற்றிய தகவல்களையும் தாயகத்தில் வாழும் அவர்களுடைய உறவுகள் பற்றிய தகவல்களையும் சேகரித்து வருகிறார்கள். இதன் நோக்கம் மிரட்டி பணியவைப்பதற்கும் புதிய முகவர்களை உருவாக்ககுவதற்கும் இரகசியத் தகவல் சேகரிப்பதற்குமாகும் ஒவ்வொரு சிறிலங்கா தூதரகத்திலும் இப்படியானவர்கள் பணியாற்றுகிறார்கள் புலனாய்வுத்துறை அதிகாரிகளே தூதுவர்களாக நியமிக்கப்படுகிறார்கள் மலேசியாவுக்கான சிறிலங்கா தூதுவர் ஒரு புலனாய்வுத்துறை அதிகாரி என்பது நாடறிந்த இரகசியம்.

புலிகள் வன்னியில் தோல்வி அடைந்தாலும் புலம்பெயர் நாடுகளில் பலமாக இருக்கிறார்கள் என்ற உண்மையை சிறிலங்கா அரசு நன்கு உணர்ந்துள்ளது வெளிநாடுகளில் புலிகள் பலமாக இருக்கும் வரை புலிகளின் மீள் வருகையைத் தடுக்க முடியாது என்ற உண்மையையும் சிறிலங்கா அரசு நன்கு அறியும் புலிகளுக்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை என்று சிறிலங்காவின் இப்போதைய இராணுவத் தளபதி எதற்காக கூறினார் என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

புpற நாடுகளுடன் உருவாக்கப்பட்ட அரசியல் மற்றும் இராசதந்திர தொடர்புகள் மூலம் புலிகளுக்கு எதிரான போரை சிறிலங்கா அரசு சர்வதேச மட்டத்தில் நடத்துகின்றது பிற நாடுகளின் புலனாய்வுத் துறையினரின் ஒத்துழைப்பும் அதற்குக் கிடைத்துள்ளது குறிப்பாக ஆசிய நாடுகளில் சிறிலங்கா அரசு புலிகளின் செயற்பாடுகளை கணிசமான அளவுக்குக் கட்டுப்படுத்தியுள்ளது சில குறிப்பிட்ட நபர்களைக் கைது செய்து சிறிலங்காவிக்கு கடத்தும் அளவுக்கு அது வெற்றி அடைந்துள்ளது.

பிரித்தானியா, ஐரோப்பியா நாடுகள், கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் சிறிலங்கா தூதரகங்கள் இராசதந்திர வலயத்தின் மூலம் புலிகளின் வெளிநாட்டுக் கட்டமைப்புக்களை உடைக்க முயற்சிக்கின்றன. இதற்கான முயற்சிகள் மிகத் தீவிரமாக நடக்கின்றன பெரும் தமிழின அழிப்பை நடத்தி ருசி கண்ட ராஜபக்ச அரசு இப்போது எம்மை வெளிநாடுகளிலும் உடைக்கலாம் என்ற நப்பாசையுடன் செயற்படுகிறது எமது தேசியத் தலைவர் பிரபாகரன் முன்யோசனையுடன் மிக உறுதியாக வடிவமைத்த கட்டமைப்புக்களைப் பேணுவது எமது தலையாய கடனாகும் எமது இராசதந்திரத் தொடர்புகளையும் எமது ஒருமைப்பாட்டையும் சீர்குலைப்பது அரசின் நாசகாரத் திட்டத்தின் இலக்கு என்பதை நாம் நன்கு உணர்ந்து செயற்படவேண்டும.;

எமது தேசிய எழுச்சி சர்வதேச அரங்கில் ஒரு முக்கிய வரலாற்று நிகழ்ச்சியாகும் தமிழுணர்வு தன்னுணர்வு உலகத் தமிழன் தழிழ்மொழித் தொன்மை போன்ற பெருமைக்குறிய குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன உலகத் தழிழன் யாரென்றால் அது ஈழத்தமிழன் தான் என்று அண்மையில் ஒரு அறிஞர் கூறியுள்ளார் அது எப்படி இருப்பினும் எமக்கு தட்டிக்கழிக்க முடியாத பொறுப்பு இருக்கின்றது தாயகத்தில் எமது தலைமை இயங்கிய போது எமது வெளிநாட்டுக் கட்டமைப்புக்கள் எவ்வாறு செயற்பட்டனவோ அதிலும் பன்மடங்கான பலத்துடன் குறைவிலாது நாம் செயற்படுத்த வேண்டும் ராசபக்ச அரசு ஒரு பலமான புலனாய்வுக் கட்டமைப்பை உருவாக்கி எமக்கு எதிராகச் செயற்பட வைத்துள்ளதை நாம் ஒரு போதும் மறக்கக்கூடாது.

கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் இரட்டை முகவராகச் செயற்பட்டு அதன் காரணமாக ஒரு இராசதந்திரப் பொறியில் சிக்கித் தன்னையும் எமது இனத்தையும் ஏமாற்றிய வெட்கக் கேடான செய்தியை நீங்கள் அறிவீர்கள் அவர் இப்போது சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கொத்தபாயா ராஜபக்சவின் நேரடிக் கண்காணிப்பில் செயற்படுகிறார் புலத்திலுள்ள சில அரசியல் கட்டமைப்புக்களுடன் அவர் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளார் அவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் எமது உறுப்பினர்களைச் சிறிலங்கா அரசு தேடுகின்றது புலிகளின் மூத்த போராளியான இராஜன் மலேசியாவில் கைது செய்யப்படுவதற்கும் சிறிலங்கா கொண்டு செல்லப்படுவதற்கும் கே.பி தான் காரணம். 22 இலட்சம் தமிழர்கள் வாழும் மலேசியாவில் இராஜனின் கைது நடைபெற்றுள்ளது.
அம்பாறை மாவட்டக் கட்டளைத் தளபதியாகச் செயற்பட்ட ராம் புலனாய்வுத்துறை வைத்த பொறியில் சிக்கியுள்ளார் சிறிலங்கா புலனாய்வுத்துறையின் இரட்டை முகவர்கள் வைத்த பொறியில் அவர் வீழ்ந்தார் ராமின் கைதுக்குப்பின் தளபதி நகுலன் பிடிபட்டார் ஒரு சந்திப்பை ஒழுங்கு செய்த புலனாய்வுத்துறையினர் நகுலனைப் பிடித்தனர் ராம், நகுலன் ஆகியோரின் கைதை சிறிலங்கா அரசு வெளியிடாமல் இரகசியமாக வைத்திருந்தது இவர்கள் இருவர் மூலம் வெளிநாட்டுக் கட்டமைப்புக்களுடன் தொடர்பை ஏற்படுத்தி சீர்குலைப்பை மேற்கொள்ள அரசு முயற்சித்தது.

ஆனால் ராம் வெளியிட்ட 2009 ஆம் ஆண்டிற்கான மாவீரர் உரை மூலம் அவர் இனங்காணப்பட்டதால் அவருடைய வேடம் கலைந்தது. இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் நடக்கலாம் விழிப்பாக இருப்பது எமது கடமை.

அண்மையில் நடந்து முடிந்த வாக்களிப்புக்கள் எழுச்சி நிகழ்வுகள் புலம்பெயர் தமிழர்களின் ஒன்றிணைந்த செயற்பாடுகள் சிறிலங்கா அரசிற்குப் பெரும் சவாலாக அமைகின்றன வெறிபிடித்த அரசு எதையும் செய்யத் தயங்கமாட்டாது கணவன், மனைவி, குழந்தை, வயோதிபர் என்று அது ஒருவரையும் விட்டு வைக்கப் போவதில்லை யாரைப் பணயம் வைத்தாயினும் அது எமக்கு எதிரான நடவடிக்கையை முன்னெடுக்கும் என்பது திண்ணம் இது எமது சோக வரலாற்றின் இன்னுமோர் அங்கம் மனித உரிமை தனி மனித சுதந்திரம் ஜனநாயகம் பற்றி ஓயாது பேசும் உலக நாடுகளும் ஐ.நாவும் எமது அவலத்தைப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை நாமே எமக்கு உதவவேண்டும்.

எமக்கு எதிராக வதந்திகளையும் பரப்புரைகளையும் எமது எதிரி பரப்புகிறான் எமது ஒற்றுமையைச் சீர்குலைக்க எமக்குள் பிளவுகளை ஏற்படுத்த தனது முகவர்களை ஏவியுள்ளான் மக்களை எம்மிடமிருந்து பிரித்து அந்நியப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளான் கொத்தபாயாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் புலனாய்வுக் கட்டமைப்பு குமரன் பத்மநாதன் ராம் ஆகியோருக்கு சொகுசு வாழ்வு பண வசதி ஆகியவற்றை வழங்கியுள்ளது இன்னும் எத்தனை இனத்துரோகிகள் தலைமறைவாக உள்ளனரோ தெரியவில்லை தேசியத் தலைவர் மரணித்தார் என்றும் தாமே இப்போது தலைமை என்றும் கூறித்திரியும் பொய்யர்களை நம்பாதீர்கள் இவர்களே திடீர் என்று தலைவர் இருக்கிறார் என்று கூறக் கூடும். சுயப்புத்தியைப் புலனாய்வுத்துறைக்கு அடைவு வைத்தவர்களிடம் வேறு என்னத்தை நாம் எதிர்பார்க்க முடியும்.

புலம்பெயர் இனிய உறவுகளே!

வரலாறு எனது வழிகாட்டி என்று சொன்ன தலைவனின் பிள்ளைகளாகிய நாம் சில வரலாற்று உண்மைகளை மறக்கலாகாது எம்முடைய எதிரி எமது மண்ணில் எமது இனத்தில் பிறக்கிறான் அவனை இனங்காண்பதும் இனத்தை சரியான பாதையில் இட்டுச் செல்வதும் எமது பொறுப்பு விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி என்ற தேசியத்தலைவரின் வாக்கு முக்காலத்திற்கும் உண்மை.

- - க.வீமன்-

Comments