தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.தங்கேஸ்வரி உள்ளிட்ட சிலர் நேற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்பின் போது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் மற்றும் அமைச்சர் கருணா ஆகியோரும் உடனிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பின்போது தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஏற்பட்ட முறுகல் நிலை தொடர்பிலும், எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வ சாதாரணமாக இந்த முன் நாள் எம்.பிக்கள் மகிந்தவுடன் கைகோத்து நிற்க யார் தைரியம் கொடுத்தார்கள். சிங்களவனுடன் கூட்டுச் சேரும் எவருக்கும் தமிழர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்ற தெளிவான நிலை இலங்கையில் காணப்பட்டல் இவர்கள் இவ்வாறு செய்வார்களா ?
இவர்கள் போட்டியிட்டு தற்சமயம் ஜெயித்தால் நிலை எவ்வாறு இருக்கும் என்பதை தமிழர்கள் நன்கு புரிதல் நல்லது. இவர்கள் போன்ற பச்சோந்திகளை தமிழர்கள் அடையாளம் கண்டு செயல்படுதல் நல்லது.
புலம்பெயர் தமிழர்கள் இது குறித்து ஊரில் உள்ள தமது உறவுகளுக்கு இதுகுறித்து தெளிவுபடுத்தவேண்டும்.
அதிர்வு
Comments