தவறான செய்திகளால் மக்களை குழப்ப தொலைக்காட்சி ஊடகம் முயற்சி
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு கடந்த இரு தினங்களாக பிரித்தானியாவில் நடைபெற்று, மக்களின் கருத்து முடிவுகள் குறித்து அறிவிக்கப்பட்டது.
இரண்டு நாட்கள் நடைபெற்ற கருத்துக் கணிப்பு மீள் வாக்கெடுப்பில் 64,692 தமிழ் மக்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை வாக்குகளாக அளித்திருந்தனர். இதில் 99.33 வீதமானவர்கள் தனித் தமிழீழமே தமது அரசியல் உரிமைக்கான இறுதித் தீர்வு எனவும் தெரிவித்திருந்தனர்.
ஆனால், பிரித்தானியாவில் இருந்து ஒளிபரப்பாகும் தமிழ்த் தொலைக்காட்சி “GTV” அந்த எண்ணிக்கையை அரைவாசியாகக் குறைத்து தனது செய்தியை வெளியிட்டிருந்தது.
ஊடகங்கள் அனைத்தும் வாக்களிப்பில் அறிவிக்கப்பட்ட முடிவை வெளியிட்டிருந்த நிலையில், தமிழ் மக்களின் பணத்தில் இயங்குவதாகக் கூறும் அந்த “GTV” தொலைக்காட்சி “GTV”, பொய்யான செய்தியை வெளியிட முனைந்தது ஏன் என்ற கேள்வியை தமிழ் மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளதுடன், பெரும் விசனத்தையும் இது ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது இந்தத் “GTV” தொலைக்காட்சியை தமிழ் மக்கள் புறக்கணிக்கவேண்டும் என வலியுறுத்தி பரவலாக குறுந் தகவல்கள் செல்பேசி மற்றும் தொலைநகல், மின்னஞ்சல்கள் (ஈ-மெயில்) ஊடாக அனுப்பப்பட்டு வருவதாக தெரியவருகின்றது.

இந்த தொல்லைக்காட்சியை ஈழநேசன் இணையம் விளம்பரப்படுத்துகின்றது
Comments