98.2% டென்மார்க் தமிழர்கள் தமிழீழ தனியரசை வலியுறுத்தி வாக்களித்துள்ளனர்

தமிழீழ தனியரசை வலியுறுத்தி வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கான டென்மார்க் தழுவிய மீள் வாக்கெடுப்பில் கலந்துகொண்ட 4147 தமிழ் மக்களில் 98,2 வீதமானவர்கள் ஆம் என வாக்களித்துள்ளதாக வாக்கெடுப்பை நடாத்திய பிரபல்ய டென்மார்க் நிறுவனமான தனது தற்காலிக பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டென்மார்க்கில் தமிழ் பேசும் மக்கள் என ஒரு ஆவண பதிவு இல்லாததால் இலங்கைத்தீவை சேர்ந்தவர்கள் என்ற பதிவையே வாக்கெடுப்பின் மூலமாக வாக்கெடுப்பை நடாத்திய நிறுவனம் பாவனை செய்திருந்தது. ஆனால் இலங்கை தீவை சேர்ந்த சிங்கள மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் இந்த வாக்கெடுப்பில் வாக்குரிமை பெற்றிருக்கவில்லை.

டென்மார்க்கில் வாழும் இலங்கை தீவை சேர்ந்தவர்களான 7147 மக்களில் 4147 மக்கள் இந்த வாக்கெடுப்பில் பங்களித்திருந்தனர். டென்மார்க்கில் வாழும் தமிழீழ மக்கள் தமது அரசியல் அபிலாசையான இறைமையுள்ள சுதந்திரமான மதசார்பற்ற தனித்தமிழீழ அரசு மீள் நிறுவுவதை பல்வேறு பொய் பிரச்சாரங்கள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் சனநாயக வழியில் எடுத்துரைத்துள்ளனர்.

Comments