தமிழக போலீஸாரின் தொந்தரவால் ஈழ ஏதிலிப் பெண் தீக்குளிப்பு

http://vinavu.files.wordpress.com/2009/03/lathi-police1.jpgதமிழகத்தில் கரூர் ஈழ ஏதிலிகள் முகாமிலுள்ள பெண் ஒருவர் தமிழக காவல்துறையினர் கொடுத்த தொல்லை காரணமாக தீக்குளித்துள்ளார்.


ராயலூர் முகாமில் சுமார் 1000 ஈழ ஏதிலிகள் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர், இங்கு உள்ள மூவரை சில நாட்களுக்கு முன்பு காவல்துறையினர் கைதி செய்து , முன்று வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு கொலை வழக்கில் அவர்களை தொடர்பு படுத்தி கொலை குற்றவாளிகளாக ஒப்புக்கொள்ளும்படி மிரட்டி உள்ளனர்.

அவர்கள் மறுத்த நிலையில், அந்த முன்று ஏதிலிகளில் ஒருவரின் மனைவியை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்து சென்று தன் கணவனை கொலை குற்றத்தை ஒப்புகொள்ள சொல்லும் மாறு அந்த பெண் துன்புறுத்தப்பட்டு உயிருக்கு அச்சுறுத்தப்பட்டதால் மன உளைச்சலின் காரணமாக அந்தப் பெண் தீக்குளித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
http://www.vinavu.com/wp-content/uploads/2009/05/karunanithi.jpg
கரூர் அரசு மருதுவமையில் சிகிச்சை பெற்று வரும் தீக்குளித்த பெண்ணின் தோழி நம்மிடம் கூறியதாவது :

நான் ராயலூர் எதிலி முகாமில் இருக்கும் பெண், எனது தோழி தான் தீக்குளித்து இப்பொது உயிருக்கு போராடி கொண்டு இருக்கும் பெண்,இந்த பெண்ணின் கணவர் உட்பட முன்று ஆண்களை காவல் துறையினர் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கைது செய்து சென்றனர், பத்து நாட்களாக கணவர் வீடு திரும்பாத நிலையில் கவலையுற்று இருந்த இந்த பெண்ணை நேற்று ஐந்து காவல்துரையினர் காவல்துறையினரின் உடுப்பில் இல்லாமல் மாற்று உடுப்பில் வந்து
http://www.vinavu.com/wp-content/uploads/2009/08/muunaa29.jpg
உனது கணவர் உன்னை சந்திக்க விரும்புகிறார் நீ உடனே கிளம்பி வா என்றதும் இந்த பெண் அவர்கள் சொல்வதை நம்பி தான் கணவனை பார்க்கும ஆர்வதுடன், கால்வதுரையினர் உடன் அவர்கள் வந்து இருந்த வாகனத்தில் மதியம் சுமார் 1.30 மணி அளவில் கிளம்பி சென்றார்.

பிறகு மாலை 6.30 மணியளவில் அந்த பெண் கையில் மாதிரை, ரொட்டியுடன் வாகனத்தில் இருந்து மிகுந்த சோர்வுற்ற நிலையில் இறங்கி அழுதுகொண்டே வந்தார், அவள் இடம் சென்று நாங்கள் என் ஆனது என்று கேட்டபோது, அவளது வாழ்வு வீனாக போனதாகவும் இனி வாழ்வதில் அர்த்தம இல்லை எனவும் அழுது கொண்டே கூறினால், நாங்கள் அந்த பெண்ணுக்கு ஆறுதல் சொல்லி விட்டு வீடு திரும்பிய போது அவள் தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணை தன் மீது உற்றி தன்னை எரித்து கொண்டாள், அதை பார்த்ததும் நாங்கள் விரைந்து சென்று அவளை கரூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தோம்

இப்பொது மருத்துவர் இந்த பெண்ணை காப்பாற்ற முடியாது என்று கூறிவிட்டார், அந்த பெண்ணின் கணவர் இன்னும் சிறையில் தான் உள்ளார், அவர் தனது மனைவியை பார்க்க அனுமதிக்கவில்லை போலும், இந்த பெண்ணிற்கு ஒரு மகன் உள்ளார் அவர் பெங்களூரில் படித்து வருகிறார், அவர்க்கு செய்தியை சொல்லியுள்ளோம்

எங்களுக்கு வேண்டியது எல்லாம் இந்த பெண்ணிற்கும் அவளது மகனுக்கும் நீதி, அதேபோல் எங்களுக்கும் பாதுகாப்பு, இன்று இந்த பெண்ணிற்கு நடந்தது போல் நாளை எனக்கும் என்னை போன்ற பெண்களுக்கும் நடக்க கூடும், அப்போது நாங்களும் இதே போன்ற துன்பத்திற்கு தான் ஆளாக நேரும். என்று அவர் தெரிவித்தார் .

Comments