எம்மினத்தின் அழியாத தேவையினை உணர்வோம்-வைத்திய கலாநிதி கந்தசாமி திருலோகமூர்த்தி

போரினாலும் இடப்பெயர்வாலும் மிகவும் நொந்துபோய் குடும்ப உறவுகளையும் இழந்து நிற்கும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் மீது எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் ஒரு சுமையாகவும் திணிப்பாகவும் இருந்தபோதும் குறிப்பாக இத்தேர்தலை எதிர் கொள்ள வேண்டியது எம்மின வரலாற்றில் மிக முக்கியமான காலஅவசியமாகும்.


ஆதலால் ஈழமக்கள் அனைவரும் எம் இனத்தின் பரிணாமங்களை, தேவைகளை, நாம் எதற்காக இத்தனை காலமும் வாழ்ந்தோமோ அதன் உண்மையான விசுவாசத்தன்மையினை பிரதிபலிக்கும் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு பெரும் ஆதரவு நல்க வேண்டும். எம் இனத்திற்குரிய அடுத்த கட்ட அரசியல் தலைமையாக தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி மீது கொண்டபெரும் நம்பிக்கை காரணமாக அதனுடன் இணைந்து பணியாற்ற விரும்பினேன்.

வன்னியின் புதுமாத்தளன் பகுதியில் சிறிலங்கா அரசின் கொத்து குண்டு தாக்குதலில் நானும் எனது குடும்பத்தினரும் படுகாயங்களுக்கு உட்ப்பட்டிருந்தோம். இதேபோல் வன்னி மக்கள் அனைவரும் போரின் கொடூரத்தை உணர்ந்தவர்கள் எனவே இவர்களின் மேம்பாட்டினை கருத்தில் கொண்டு இத்தேர்தலை எதிர் கொள்கிறேன். இதன்போது எதுக்காக எம் மக்கள் இத்தனை காலமும் போராடினார்களோ அதனை தனது முழு அடையாளமாக கொண்டு செயல்ப்படும்.

தமிழ் தேசியமக்கள் முன்னணி எல்லாவித எதிர்ப்புகளையும் சந்தித்து மக்களின் ஆதரவுடன் எழுந்து பயணிக்கின்றது. மேலும் எமது மண்ணில் யுத்த வடு நீங்கவில்லை இங்கு வாழ்ந்த மக்கள் சரி வர குடியமர்த்த படவில்லை ஸ்கந்தபுரம், அக்கராயன், கிளிநொச்சி நகர், பரவிப்பாஞ்சன், வட்டக்கச்சி, இராமநாதபுரம், கண்டாவளை போன்ற பகுதிகளில் மக்கள் மீள குடியமர்த்தப்படவில்லை.

திறந்த வெளி சிறைகளில் மக்கள் துன்பத்துடன் வாழ்கின்றனர். மீள குடியேற்றப்பட்ட மக்கள் அரசினால் கைவிடப்பட்டநிலையில் மிகவும் துயரத்துடன் வாழ்வை தொடர்கின்றனர். மக்களின் வீடுகள் வர்த்தக நிலையங்கள், கல்விக்கூடங்கள் என எல்லாவற்றையும் யுத்தம் விட்டு வைக்கவில்லை. தறப்பாள் வாழ்வு தொடர்கின்றது. வெட்டவெளிகளில் கல்விக்கூடங்கள். மக்களின் காணிகளில் இன்னும் துருப்புக்கள் அவை மீள மாக்களை போய் சேரவேண்டும்.

தமிழ் மக்களின் உறுதியான வாழ்வினை நோக்கி எம் பயணம் தொடர வேண்டும். அதிகார வர்க்கத்தின் அற்ப சொற்ப சலுகைகளுக்கு நாம் விலை போக முடியாது. உலகெங்கும் ஈழத்தமிழர் எழிச்சி கொண்டுள்ள தருணம் இது எமது இன வரலாற்றில் அரசியல் பயணத்தின் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு நாம் ஒன்று படுவோம் நிச்சயம் வெல்வோம். போரின் உக்கிர தாண்டவத்தினால் பாதிப்படைந்த வன்னிப்பகுதி பலவழிகளிலும் அபிவிருத்தி அடையவேண்டும்.

இங்குள்ள மக்களின் வாழ்வு மறுமலர்ச்சி அடைய வேண்டும். எமது பிள்ளைகளின் கல்வி பாதிகப்பட்டுளது. வன்னி பல்கலைகழக மாணவர்கள் கல்வியை தொடர முடியாதவாறு நெருக்கடியில் போரின் அதிர்ச்சியில் இருந்தே அவர்கள் மீளவில்லை. மாணவர்கள், ஆசிரியர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள், உத்தியோகஸ்தர்கள், தொழிலாளர்கள் என எல்லோரும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட சுபீட்ச வாழ்வு நோக்கி ஜனநாயகவழி முறைகளில் எமது பயணம் தொடர எம் மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

ஒவ்வொருவாக்கும் பெறுமதியானது சரிவரபயன்படுத்தி தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு பெரும் ஆதரவைதரவேண்டும். எங்களை எம் மண்ணில் சுதந்திரமாக விடுங்கள் எம் மண் எங்களை பார்க்கும். நாம் யாரிடமும் கையேந்த வேண்டிய அவசியம் இல்லை. உள்முகத்தீயை மூட்டி எரி என்ற ஈழக்கவிதை தனைமுணு முணுத்தவாறு எம்முள்ளே எம்மினத்தின் அழியாத தேவையினை உணருவோம்.

வைத்திய கலாநிதி கந்தசாமி திருலோகமூர்த்தி

தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி

Comments