பெண்கள் முன்னின்று நடத்திய மரண இறுதிச்சடங்கு


தமிழீழ விடுதலைப்போராளிகளுக்கு ஆரம்ப காலகட்டத்தில் அடைக்கலம் தந்த கொளத்தூரில் போராளிகளுக்கு தங்க இடமும் , உணவும் கொடுத்தவர்களில் ஒருவரான திருமதி சி.மாதம்மாள் நேற்று மரணமடைந்துள்ளார். அவரது இறுதி நிகழ்வினை பெண்களே முன்னின்று நடத்தியுள்ளனர்.

நேற்று (20.03.2010) சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு பெரியார் திராவிடர் கழகத்தின் சேலம் மாவட்ட அமைப்பாளர் கொளத்தூர் டைகர் பாலன் அவர்களின் தாயார் திருமதி சி.மாதம்மாள் அவர்கள் மரணமடைந்துள்ளார். பேரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் பொதுமக்கள் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளனர்.

இறுதி ஊர்வலம் 21.03.10 ஞாயிறு காலை 11.30 மணிக்கு நடைபெற்றது. இறுதி ஊர்வலத்தில் பெரியார் திராவிடர்கழகத்தின் மகளிரணி தோழியர்கள் கொளத்தூர் தா.செ.பழனிச்சாமி அவர்கள் தலைமையில் மறைந்த திருமதி மாதம்மாள் அவர்களின் உடலை ஊர்வலமாக எடுத்துச்சென்று இடுகாட்டில் அடக்கம் செய்தனர்.

இந்நிகழ்வுகளை கண்ட ஏராளமான பொதுமக்கள் வியப்படைந்தனர். இதுவே இப்பகுதியின் முதல் நிகழ்வாகும். இந்நிகழ்வை தோழியர் கனகரத்தினம் அவர்கள் முன்னின்று நடத்தியுள்ளார்.

Comments