இயக்குநர் சீமானின் நாம் தமிழர் இயக்க அரசியல் கட்சிக் கொடி அறிவிப்பு, பேரணி மற்றும் பொதுக்கூட்டம் வரும் ஏப்ரல் 10-ஆம் திகதி தஞ்சாவூரில் நடைபெறவுள்ளதாக நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சாகுல் ஹமீது தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்தது:
ஈழத் தமிழர்களுக்கு பேரழிவு நடைபெற்றபோது இங்குள்ள பெரும்பாலான தமிழர்கள் அதைத் தடுக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று உணர்வுடன் இருந்தனர். ஆனால், இங்குள்ள ஆளும், எதிர்க் கட்சிகள் தமது சொந்த நலனுக்காக நம்மை நம்பவைத்துக் கழுத்தறுத்து விட்டன.
உலகம் முழுவதும் தமிழர்களுக்கு இன்னல் ஏற்படும்போதெல்லாம், அதைத் தட்டிக் கேட்பதற்கு வலிமையான ஒரு இயக்கம் இல்லாத நிலை தமிழ்நாட்டில் உள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இந்த நிலை இல்லை.
நாதியற்ற தமிழர்கள் என்ற குறையைப் போக்க தமிழ்நாட்டிலும், ஐரோப்பிய நாடுகள், கனடா மற்றும் உலக நாடுகளில் உள்ள தமிழர்கள் அனைவரையும் நாம் தமிழர் இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் இயக்கமாக அறிவிக்கும் மாநாடு மதுரையில் மே. 18-ல் நடைபெறவுள்ளது. அதன் முன்னோட்டமாக, சீமான் தலைமையில் தஞ்சாவூரில் ஏப்ரல் 10-ல் இயக்கத்தின் கொடி அறிமுகம், பேரணி- பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இயக்கத்தின் கொடியாக இந்தியாவிலும், கடல்கடந்தும் பெருவெற்றியீட்டிய சோழப் பேரரசின் சின்னமான புலிக் கொடி, அவர்களின் தலைநகராக இருந்த தஞ்சாவூரில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
எதிர்காலத்தில் தேர்தலில் நிச்சயமாகப் பங்கெடுப்போம். ஆனால், வரும் தேர்தலில் போட்டிய எண்ணம் இல்லை. தமிழகம் முழுவதும் கட்சியின் அடித்தளத்தைப் பலமாக்கிய பின்னர், தேர்தலில் போட்டியிடுவோம்.
சாதிக் கட்சிகளிடம் பிரிந்து கிடக்கும் தமிழர்களை ஒண்றிணைக்கும் விடியலாக இவ் இயக்கம் இயங்கும் என்றார் சாகுல் ஹமீது.
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வழக்குரைஞர் ஏ. நல்லதுரை, மணி செந்தில்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வழக்குரைஞர்கள் வீரக்குமார், கருணாநிதி, கும்பகோணம் வட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்வேந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Comments