சிறி லங்காவைப் புறக்கணியுங்கள்" - உலகத் தமிழர் பேரவை

புறக்கணி சிறிலங்கா
பிரித்தானிய தமிழர் பேரவையின் மூத்த உறுப்பினரும் உலகத் தமிழர் பேரவையின் உத்தியோகப் பேச்சாளருமாவார். இதில் உள்ளவை அவரின் தனிக் கருத்துக்களாகும்.. !

'மனித உரிமைகள் என்பது மேற்கத்தைய விழுமியங்கள் எனக் கோரி அவைபற்றிய கண்டனங்களிலிருந்து தப்பிக்கொள்ளச் சில அரசுகள் முயற்சிக்கின்றன. ஆனால்- கண்டனங்களில் பங்குபற்றியதால் இரானில் சிறையிடப்பட்டவர்களாயினும் சரிஇ இரஸ்சியாவிற் கொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளாராயினும் சரிஇ சிறீ லங்காவிலோ காசாவிலோ முரண்பாடுகளில் அகப்பட்ட பொதுமக்களாயினும் சரி- உலகெங்கணும் பரந்து வாழும் மக்கள் தமது மனித உரிமைகளைக் கோரியும் அவற்றிற்காக வேதனைகளை அனுபவித்தும் அந்த அரசுகளின் கருத்து தவறானதென்பதை நிரூபித்து வருகின்றனர். உலகம் முழுவதும் மனித உரிமைகளைக் கோரும் மக்களுக்கு நாம் தொடர்ந்தும் ஆதரவு வழங்கவேண்டும்.' – திசம்பர் 10 2009 அன்று அனைத்துலக மனித உரிமைகள் நாளையொட்டி டேவிட் மிலிபான்ட் அவர்கள் விட்ட அறிக்கை. http://ukinsrilanka.fco.gov.uk/en/news/?view=News&id=21415559

கடந்த சனவரியில்இ தான் வெற்றிபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் நடந்த முறைகேடுகள் பற்றிய குற்றச்சாட்டுகள்இ நாடு எதிர்நோக்குகின்ற பொருளாதார நெருக்கடிகள் ஆகியவற்றிற்கு நடுவில் மனித உரிமைகளை ஈவிரக்கமின்றி மீறுதல்இ தவறான அரசாளும் முறைஇ 62 ஆண்டுகள் நீடித்துள்ள முரண்பாட்டைத் தீர்க்க அரசியல் முனைப்பு இல்லாமை ஆகியன பற்றிய அனைத்துலக விமர்சனங்களை அடியோடு கவனத்திற்கொள்ளாது ஏப்பிரல் 8இ 2010 இல் நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்த சிறீ லங்கா குடியரசுத் தலைவர் முனைப்பாகச் செயற்பட்டு வருகின்றார்.



ஐக்கிய அமெரிக்க அரசு அதன் 2009ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் பற்றிய ஆண்டறிக்கையில் சிறீலங்கா அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளது. உரிய விசாரணைகளற்ற கொலைகள் ஆட்காணாமற்போதல் ஆகியவற்றில் அரசோ அதன் ஒட்டுப்படைகளோ சம்பந்தப்பட்டுள்ளன எனவும் சட்டத்தரணிகளும் ஊடகவியலாளரும் கொடுமைப்படுத்தப்பட்டும் பழிவாங்கப்பட்டுமுள்ளனர் எனவும் அவ்வறிக்கையிற் கூறப்பட்டுள்ளது. போரினாற் பாதிக்கப்பட்ட பகுதிகளிலேயே ஆகக்கூடிய அளவில் அரசியற் காரணங்களுக்காக ஆட்காணாமற்போதல் நடைபெற்றுள்ளதெனவும் இத்தொகை நூற்றுக்கணக்கில் இருக்குமெனக் கணிக்கப் பட்டுள்ளதெனவும் அதிற் கூறப்பட்டுள்ளது.


வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய நாட்டு அலுவலகத்தின் அண்மைய மனித உரிமைகள் அறிக்கை--2009இல்இ சிறீ லங்காவை 'கவலைக்குரிய நாடு' எனப் பிரித்தானியாவும் குறிப்பிட்டுள்ளது. அதில் 'முரண்பாட்டின்போது இழைத்த பாரதூரமான குற்றச்செயல்கள்இ சட்டச் சீரழிவுஇ கருத்துப் பகிர்வுச் சுதந்திரச் சீரழிவு ஆகியவற்றில் எம் கடும் கவலையை இது காட்டுகின்றது' எனக் கூறப்பட்டுள்ளது. United Kingdom Foreign & Commonwealth Office Annual Report on Human Rights 2009

மார்ச்சு 8இ 2010 அன்று ஐ.நா. மன்றச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்கள் 'சிறீலங்காவில் அரசியல் மீளிணக்கத்திலும்இ நாட்டினுள் இடம் பெயர்ந்தோரைப் பராமரிக்கும் முறைஇ செய்கைகளுக்குப் பொறுப்புக் கூறும் வழிமுறை ஒன்றை வகுத்தல் ஆகியவற்றிலும் உள்ள முன்னேற்றமின்மை' பற்றிக் கவலை தெரிவித்துள்ளார்.


சிறீலங்கா சம்பந்தமாக அதன் செய்கைகளுக்குப் பொறுப்புக் கூறும் விடயங்களில் செயலாளர் நாயகத்துக்கு அறிவுரை வழங்குவதற்கென நிபுணர்கள் குழு ஒன்றை அமைப்பதற்கான முயற்ச்சியை விரும்பாத குடியரசுத் தலைவர் இராசபக்சஇ அது 'வேண்டத்தகாததும் தேவையற்தும்'; எனக் கூறியுள்ளார். Colombopage, 20 Mar 2010

மனித உரிமைகளில் ஏற்பட்டுள்ள சரிவுநிலை காரணமாக பொதுநலவாய நாட்டுத் தலைவர்களின் மாநாட்டை சிறீலங்காவில் நடத்தும் முன்னெடுப்பை பொதுநல நாடுகள் அமைப்பு தடைசெய்துள்ளது.


'சிறீ லங்கா அரசு அதன் இராணுவத்துக்குக் கூடுதலாக ரூபா 39.6 பிலியன்களை ($345 மிலியன்) கோரியுள்ளது. விடுதலைப் புலிகளுடனான 25 ஆண்டுப் போர் மே மாதத்தில் முடிவுக்கு வந்தும் வரவுசெலவுத்திட்டத்தில் முதலில் அறிவிக்கப்பட்ட தொகையிலும் இது 20 சதவீத உயர்வாக உள்ளது. http://www.reuters.com/article/idUSCOL452057

'சிறீ லங்காவில் மொத்தக் குடித்தொகையில் 6 சதவீதம் வரையானோர் அரச பணித்துறையில் உள்ளனர். சீரமைப்பு ஏதுமின்றி நட்டத்தில் செயற்படும் பொதுத்துறை அமைப்புகள்இ வாருவாயை உருவாக்காத உயர் மானியங்கள்இ 100க்கு மேற்பட்ட அமைச்சர்களைக் கொண்ட அரசுஇ பொருளாதார நோக்கிலல்லாது அரசியல் நோக்கில் நடக்கும் செலவீனங்கள் ஆகியன துண்டுவீழ்ச்சிக்குக்கான பிற காரணிகளாக அமைகின்றன.' -

சிறீ லங்கா அரசானது வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையை அதன் மொத்த உள்நாட்டு வருவாயின் 7 சத வீதமாகக் குறைக்கத் தவறியுள்ளதைத் தொடர்ந்து அனைத்துலக நிதி நிறுவனம் தான் வழங்கிய கூ2.6 பிலியன் கடனுதவியின் மூன்றாம் கட்டக் கொடுப்பனவை பின்போட்டுள்ளமை வியப்புக்குரியதல்ல.


ஏப்பிரல் மாதத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல்கள் நடந்தேறும்வரை தங்கள் மீழாய்வை 'முடிக்க' முடியாதுள்ளது என பெப்புரவரியில் சிறீ லங்கா சென்ற பன்னாட்டு நாணய நிதியக் (ஐ.எம்.எவ்.) குழுவினர் தீர்மானித்துள்ளனர். சீறீ லங்காவிற்கான பன்னாட்டு நாணய நிதியத்தின் கடந்த இரண்டு செயல் திட்டங்களுக்கான குழுக்களும் 'மீளாய்வை முடிக்க' முடியாத நிலையில் அதாவது கைவிடப்பட்ட நிலையில் முடிவுற்றன என்பதைக் கவனத்திற் கொள்ளல் வேண்டும்.

பன்னாட்டு நாணய நிதியக் கடன் நிறுத்தப்படுவதனால் ஏற்படும் தாக்கத்தைத் தாங்கிக்கொள்ள முடியுமென சிறீ லங்கா கூறினாலும் ஆகஸ்து 2010இல் நடைமுறைக்கு வரவுள்ள புளுP10 எனப்படும் பொதுச் சலுகைத் திட்ட இடைநிறுத்தத்தால் ஏற்படக்கூடிய விளைவுகளையிட்டு ஏற்கனவே நாடு அச்சம்கொண்டுள்ளதைக் காணலாம்.


'போரின் இறுதியில் நிகழ்ந்த ஆயிரக்கணக்கான குடிமக்களின் இறப்புகளுக்கு ஏதொவொரு வகையில் பதில்சொல்லியாக வேண்டுமென மேற்கத்தைய நாடுகளும் புலம்பெயர்ந்த தமிழரிடையேயுள்ள குழுக்களும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் சிறீ லங்காவோ அதன் இராணுவம் அனைத்துலகச் சட்டவிதிகளை மீறவில்லையென விடாப்பிடியாக உள்ளது. இந்நிலைப்பாட்டால் தற்பொழுது ஆண்டுக்கு கூ136 மிலியன் பெறுமதியுள்ள ஐரொப்பிய ஐக்கியத்தின் புளுP10 எனப்படும் வாணிகச் சலுகை பாதிக்கப்பட்டுள்ளது.'-

இராசபக்ச அரசானது அதன் அதிகாரத்தைத் தப்ப வைப்பதற்காக மனிதத்தின் அழிவைக்கூடப் பொருட்படுத்தாது சிறீ லங்கா நாட்டைப் பொருளாதாரச் சீரழிவை நோக்கி எடுத்துச் செல்லுகின்றது என்ற எனது வாதத்திற்கு மேலே தரப்பட்டுள்ள சில கூற்றுகளும் இணைப்புகளும்இ நம்பகமான பக்கசார்பற்ற ஊடக அமைப்புகள்இ நிறுவனங்கள்இ வெளிநாட்டு அரசுகள்இ ஆகியன சிறீ லங்கா அரசினை வெளிச்சமிட்டுக் காட்டியமையும் ஆதாரமாக அமைகின்றன.


ஐக்கிய இராச்சியம்இ ஐக்கிய அமெரிக்கா ஆகியன காட்டியுள்ள முன்மாதிரியைப் பின்பற்றிச் சீனாஇ சப்பான்இ இந்தியா உட்பட அனைத்து உதவி வழங்கும் நாடுகளும் மனித உரிமைகளைச் சீர்ப்படுத்தச் சிறீ லங்காவை வற்புறுத்துமென நம்புவோமாக.


இந்தப் பின்னணியில் சிறீ லங்காவில் நிலவுகின்ற உண்மையான மனித உரிமை நிலை பற்றிய உலகளாவிய புரிந்துணர்வை ஏற்படுத்துமுகமாகவே சிறீ லங்காவின் பொருள்களையும் சேவைகளையும் உலகளாவிய அளவில் புறக்கணிக்கும்படி உலகத் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.


Comments