நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான செயற்குழு விடுத்துள்ள விசேட செய்தி



நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான செயற்குழு இச் சந்தர்ப்பத்தில் பின்வரும் விடயங்களையும் மக்களின் கவனத்திற்கு அறியத் தருகிறது

* நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்படும் நடைமுறை தொடர்பாக மக்களுடன் தொடர்ச்சியான தொடர்பாடலை நடத்தி வருவது அவசியமானதாக எம்மால் உணரப்படுகிறது. இதற்கென விசேட கேள்வி– பதில் பகுதியொன்றினை எமது உத்தியோகபூர்வ இணையத்தளமாகிய www.govtamileelam.org இல் மார்ச் 15 முதல் ஆரம்பிக்கவுள்ளோம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பாக உங்கள் மனங்களில் உள்ள கேள்விகளை info@govtamileelam.org எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு தங்களை வேண்டிக் கொள்கிறோம். இக் கேள்விகளுக்கான பதில்களை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளர் திரு விசுவநாதன் உருத்ரகுமாரன் அவர்கள் வழங்குவார்.

இனி,

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான செயற்குழு இன்று உலகம் பூராகவும் நினைவுகூரப்படும் சர்வதேச மகளிர் தினத்தை நினைவுகூர்ந்து விடுத்துள்ள விசேட செய்தி வருமாறு

விசேட முகாம்களில் சிறைப்பட்டிருக்கும் தமிழ்ப் பெண்களுக்கு நியாயம் கிடைக்க வகை செய்க!

* அனைத்துலகப் பெண்கள் தினமாகிய இன்றைய நாளில் கடந்த 40 வருடங்களாக தமிழ்ப் பெண்களும் யுவதிகளும் சிறிலங்காவின் ஆயுதப்படையினரதும் சிறிலங்கா அரசின் ஆதரவுடனியங்கும் சிங்கள இனவெறியர்களினதும் கொடுங் கரங்களில் சிக்கிப் பட்ட பெருந்துயரை நாம் மிகுந்த வேதனையுடன் நினைவு கூருகிறோம்.

கடந்த 40 வருடங்களாக தமிழ்ப் பெண்களும், யுவதிகளும் சிறிலங்காவின் ஆயுதப் படையினரதும், சிறிலங்கா அரசின் ஆதரவுடனியங்கும் சிங்கள இனவெறியர்களினதும் கொடும் கரங்களில் சிக்கிப் பட்ட பெருந்துயரை அனைத்துலகப் பெண்கள் தினமாகிய இன்று தாம் மிகுந்த வேதனையுடன் நினைவு கூர்வதாக நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் போராட்டத்தில் தமிழ்ப் பெண்களின் அளப்பரிய வீரமும் நிகரற்ற தியாகமும் இன்று நினைவு கூரப்படுகிறது - விசேட முகாம்களில் சிறைப்பட்டிருக்கும் தமிழ்ப் பெண்களுக்கு நியாயம் கிடைக்க வகை செய்க எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையை நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளர் விசுவநாதன் உருத்ரகுமாரன் வெளியிட்டுள்ளார்.

இன்று வெளியிடப்பட்டுள்ள இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

விடுதலைப் போராட்டத்தில் தமிழ்ப் பெண்களின் அளப்பரிய வீரமும் நிகரற்ற தியாகமும் இன்று நினைவு கூரப்படுகிறது

விசேட முகாம்களில் சிறைப்பட்டிருக்கும் தமிழ்ப் பெண்களுக்கு நியாயம் கிடைக்க வகை செய்க!

அனைத்துலகப் பெண்கள் தினமாகிய இன்றைய நாளில் கடந்த 40 வருடங்களாக தமிழ்ப் பெண்களும் யுவதிகளும் சிறிலங்காவின் ஆயுதப்படையினரதும் சிறிலங்கா அரசின் ஆதரவுடனியங்கும் சிங்கள இனவெறியர்களினதும் கொடுங் கரங்களில் சிக்கிப் பட்ட பெருந்துயரை நாம் மிகுந்த வேதனையுடன் நினைவு கூருகிறோம்.

தமிழ்ப் பெண்களும் யுவதிகளும் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டும், நிர்வாணமாக்கப்பட்டும், வீதிக்கிழுத்துச் செல்லப்பட்டும், கடத்திச் செல்லப்பட்டும், காணாமல் தொலைந்தும் போன நிகழ்வுகள் ஏராளம். பல்லாயிரக்கணக்கான தமிழ்த் தாய்மார்கள் தமது நாளாந்த வாழ்விற்காய் போராடிய வண்ணம் இன்றும் காணாமற்போன தமது புதல்விகளையும், புதல்வர்களையும், கணவர்களையும் தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். இன்றும் ஆயிரக் கணக்கான பெண்கள் சிறிலங்கா இராணுவத்தின் விசேட முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தமிழர் தேசத்தினைச் சேர்ந்தவர்களென்ற ஒரே காரணத்துக்காக எமது பெண்களும் யுவதிகளும் இப் பெரும்விலையைச் செலுத்த வேண்டியிருந்துள்ளது. விசேட முகாம்களில் சிறைப்பட்டிருக்கும் தமிழ்ப் பெண்களுக்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்யுமாறு அனைத்துலக சமூகத்தை நாம் கோருகிறோம்.

தமிழ்ப் பெண்கள் பட்டுவரும் துயரங்களையும் அவமதிப்புக்களையும் நினைவுகூரும் இதே வேளையில், விடுதலைப்போராட்டத்தில் எமது பெண்கள் காட்டிய வீரத்திறனையும் அவர்களது ஒப்புவமையற்ற அர்ப்பணிப்புக்களையும் நாம் பெருமையுடன் நினைவு கூருகிறோம். அன்னை பூபதி, மாலதி ஆகியோர் வரிசையில் ஆயிரக்கணக்கான பெண்கள் நமது சுதந்திரத்தினையும் இறைமையினையும் கௌரவத்தினையும் மீள வென்றெடுப்பதற்காகத் தம்முயிரை ஈகம் செய்தார்கள். நமது விடுதலைப் போராட்டத்தில் பெண்கள் சமபங்கு வகித்து வந்தமை நாம் அறிந்ததே. இப் பெண்கள் குறித்து தமிழர் தேசம் நெஞ்சு நிமிர்த்தி பெருமை கொள்கிறது. இவ் வீரப்பெண்களுக்கு நாம் மிகுந்த மரியாதையுணர்வோடு தலை வணங்குகிறோம்.

விரைவில் அமைக்கப்படவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினூடாக எமது விடுதலைப் போராட்டத்தில் தமிழ்ப் பெண்கள் தமது தலைமைப் பாத்திரத்தை தொடர்ந்தும் வகிக்கும் நிலை உருவாகும் என்பது எமது நம்பிக்கை. தமிழீழ விடுதலைப் போராட்டத்தினூடாக எட்டப்பட்டிருந்த பெண்கள் சமத்துவத்தினையும் உரிமைகளையும் பேணிப் பாதுகாப்பதில் நாம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். இதன் அடிப்படையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வழிகாட்டிக் கோட்பாடுகள் தமிழ்ப் பெண்கள் நலன்களைப் பேணும் அம்சங்களை முக்கியமாக உள்ளடக்கிய வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான செயற்குழு இச் சந்தர்ப்பத்தில் பின்வரும் விடயங்களையும் மக்களின் கவனத்திற்கு அறியத் தருகிறது

1. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பது தொடர்பான மதியுரைக்குழுவின் ஆய்வின் அடிப்படையில் உருவான அறிக்கை குறித்த மக்கள் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு அறிக்கை மீளமைப்புச் செய்யப்பட்டு வருவதாகவும் இவ்வாறு மீளமைப்புச் செய்யப்படும் அறிக்கை மார்ச் மாதம் 8 ஆம் திகதி வெளியிடப்படும் எனவும் ஏற்கெனவே அறிவித்திருந்தோம்.

மதியுரைக்குழுவின் ஆலோசனைகளின் படி இவ் அறிக்கையினைச் செழுமைப்படுத்துவதற்கு சற்றுக் கூடுதலான காலம் தேவைப்படுகின்றமையால் மீளமைப்புச் செய்யப்படும் அறிக்கை மார்ச் மாதம் 15 ஆம் திகதி வெளியாகும் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

2. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான செயற்பாடுகளை ஓழுங்கமைத்து மேற்கொள்வதற்காக நாடுவாரியான செயற்பாட்டுக்குழுக்களின் விபரங்களை பிரித்தானியா, கனடா, அமெரிக்கா, நோர்வே, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளுக்கு ஏற்கனவே அறிவித்திருந்தோம். மேலும் மூன்று நாடுகளுக்கான விபரங்களை இன்றைய தினம் வெளிப்படுத்துகிறோம். ஏனைய நாடுகளின் விபரங்களும் விரைவில் அறியத் தரப்படும்

நாடுவாரியான செயற்பாட்டுக்குழு – பிரான்ஸ்

V. மனோகரன் V. அமலதாஸ்
S. மைந்தன். S. கணேசராசா
K. கமலநாதன் A. அருணகிரிநாதன்
G. பவுஸ்ரின் R. சாந்திகுமார்
S. மையூரன் T. நடராசா
S. சின்னப்பொடி S. ரமணன்
T. சம்புகுமார்


நாடுவாரியான செயற்பாட்டுக்குழு . நியுசிலாந்து

சிங்கவரோதயம் சுந்தரராஜன்
மகாசிவம் ஜெயபாலன்
சிவா நகுலேஸ்வரன்

நாடுவாரியான செயற்பாட்டுக்குழு – அவுஸ்திரேலியா

சண்குமார் ஏட்ரியன் சின்னப்பு
ஜனனி பாலச்சந்திரன் டொமினிக் சந்தியாபிள்ளை
ஜோர்ஜ் பரணி

அவுஸ்திரேலியாவுக்கான நாடுவாரியான செயற்பாட்டுக்குழுவின் பட்டியலில் மேலும் பெயர்கள் சேர்க்கப்படவுள்ளன

3. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்படும் நடைமுறை தொடர்பாக மக்களுடன் தொடர்ச்சியான தொடர்பாடலை நடத்தி வருவது அவசியமானதாக எம்மால் உணரப்படுகிறது. இதற்கென விசேட கேள்வி– பதில் பகுதியொன்றினை எமது உத்தியோகபூர்வ இணையத்தளமாகிய

www.govtamileelam.org

இல் மார்ச் 15 முதல் ஆரம்பிக்கவுள்ளோம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பாக உங்கள் மனங்களில் உள்ள கேள்விகளை info@govtamileelam.org
எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு தங்களை வேண்டிக் கொள்கிறோம்.

இக் கேள்விகளுக்கான பதில்களை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளர் திரு விசுவநாதன் ருத்ரகுமாரன் அவர்கள் வழங்குவார்.

Comments