சுனாமியாக அவரின் வீடியோக்களும் செய்திகளும் எல்லோரையும் தாக்கியது. அவரின் வீடியோவை விட அதிசயமானது “நான் சட்ட விரோதமாக எதனையும் செய்யவில்லை” என்று அவர் பதில் அறிக்கை விட்டதுதான்.
இந்தியாவில் சாமியார்கள் இப்படித் தவறுதல், இது ஒன்றும் முதல் தடவையில்லை. எனினும் எத்தனை முறை எத்தனை சாமியார்கள் இப்படித் தவறு செய்வது என்பது ஒன்றும் முதல் தடவையல்ல. எனினும் எத்தனை முறை எத்தனை சாமியார்கள் இப்படித் தவறு செய்தாலும் உடனே கோபப் படுவதும் பின்னர் அது மறைக்கப்பட்டு, வேறு சாமியார் உருவாகி பின்னர் அவர் பிரபலமாகி அவர் தவறு விட மீண்டும் உணர்ச்சிவசப்பட்டு, அடித்த உடைத்து காலத்தால் மீண்டும் மறக்கப்படுவது என்;னமோ வளமையான விடயம் தான். ஆனாலும் இது மீண்டும் மீண்டும் நடைபெறாமல் இருக்க நாம் என்ன செய்வோம் என்பதே ஆக்கபூர்வமான விடயம்.
இந்தியா ஒரு ஆன்மீக நாடு என்றாலும் இப்படியான சாமியார்கள் கவனிக்கப்பட வேண்டியவர்கள் என்பது கட்டாயமான விடயம். அவர்களின் வருமானங்களும் கவனிக்கப்பட வேண்டிய விடயங்கள். இந்தக் கவனிப்புகள் சட்ட சம்பந்தமானவை. நாம் என்ன செய்ய முடியும் என்று பலரும் கேட்கலாம். ஆனால் இந்தியா போன்ற நாட்டில் எங்கும் கோயில்கள் இருக்க இப்படியான ஆச்சிரமங்கள் தேவைதானா என்பதே சிந்திக்க வேண்டிய விடயம்.
அதையும் தாண்டி நம் வீட்டுக் காரர்களும் ஏன் ஆச்சிரமங்களையே தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் சிந்திக்க வேண்டும்.
நமது விடயங்கள் பிரச்சினைகள் அனைத்தையும் சாமியார்கள் எப்படித் தீர்க்க முடியும் என்பதையும் சிந்திக்க வேண்டும்.
இப்படி, எமது வீட்டை நாம் தான், பிரச்சினைகள் அற்ற இடமாக மாற்ற வேண்டும் வீடுகள் மாறினால் நாடு மாறும் என்பது நடக்கக் கூடிய விடயம். இந்த மாதிரி சுவாமிகள், இப்படி மூட நம்பிக்கையை வளர்க்க நாட்டில் இடம் கொடுத்தல் ஆகாது.
இது இந்தியாவில் உள்ள நிலை என்றால், தமிழ் மக்கள் இடம் பெயர்ந்து வாழும் ஐரோப்பிய, கனேடிய நாடுகளிலும் இந்த சாமியார்கள் வலம் வர ஆரம்பித்துள்ளார்கள்.
இதற்குத் துணையாக இங்குள்ள தொல்லைக் காட்சிகளிலும் இவர்கள் சம்மந்தமான விளம்பரங்கள் வெளிவருகின்றன.
இவற்றை இங்குள்ள மக்கள்!!
விஞ்ஞான தொழில் நுட்பத்தோடு இணைந்து இரவு பகலாக வேலை செய்யும் மக்களும், இவற்றை நம்பி, குளிரிலும் மழையிலும் துன்பப் பட்டு உழைக்கும் பணத்தை இவர்களை நம்பிக் காணிக்கை செலுத்தி தமது பிரச்சினைகள் தீரும் என்று நம்பி ஏமாந்து போகிறார்கள்.
இந்த வகை சாமியார்களை சில வர்த்தகர்களே இந்தியாவிலிருந்து அழைத்து வருகிறார்கள். இவர்களுக்கு விசா எப்படிக் கிடைக்கிறது என்பது ஆராயப்பட வேண்டிய விடயம்.
அத்தோடு இப்படி வர்த்தகர்களால் அழைத்து வரப்படும் சாமியார்கள், வருமானத்தில் பெரும்பங்கு இந்த வர்த்தகர்களுக்கே என்பதும் அறியப்பட வேண்டிய விடயம்.
மக்களே! சிந்தியுங்கள்.
உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டியது நீங்களே தான். இந்தியாவில் இருந்து வரும் சாமியார்கள் அல்ல.
உங்களின் எதிர் காலம் - அதன் பயன்கள் எல்லாம் உங்கள் கைகளில் தான் உள்ளது. சாமியார்கள் கைகளில் இல்லை.
உங்களுக்கு நிம்மதி வேண்டும் என்றால் பிறரை மகிழ்ச்சிப்படுத்துங்கள். ஏழைகளுக்கு உதவுங்கள். ஏழைச்சிறுவர்களுக்கு கல்வி கற்க ஏற்பாடு செய்யுங்கள். அறியாமை அற்ற சமூகமாக நம் சமூகம் மாற அது உதவும்.
உங்கள் பிரச்சினை தீர உங்கள் குடும்ப அங்கத்தவர்களுடன் மனம் விட்டு பேசுங்கள். சாமியார்களுடன் அல்ல!
நமது சமயத்தில் உருவ வழிபாடு வந்ததின் காரணங்களில் ஒன்று என்ன வெனில் நமது பிரச்சினைகளை எதிரில் இருக்கும் தெய்வத்திடம் கூறுவதற்காகவே!
இடம் பெயர்ந்து வாழும் மக்களே உங்கள் பணத்தையும் நேரத்தையும் இப்படியான விவகாரங்களில் வீண் விரயம் ஆக்காதீர்கள். நிம்மதி தேடப் போய் இருப்தையும் இழந்து விடாதீர்கள்.
இங்கேயே வளரும் சந்ததியினருக்கும் இப்படியான மூட நம்பிக்கை வளர வாய்ப்பாகாதீர்கள்.
ஆக்கம்-ரத்தினா.
Comments